Saturday, August 13, 2011

சிம்மன் - சிம்மகிரி சிம்மன்






குளிர் அருவிபாயும் வேங்கட மாமலையில் திருமகளை திருமார்பில் தாங்கி திருத்தக்க செல்வமும் யாமருள்வோம் என கருணையுடன் காட்சியளிக்கும் திருவேங்கடவனை வணங்குவோம்.

குன்றுதோராடி குவலயம் காக்கும் குமரனை தமிழ்க்கடவுளாகப் போற்றுவோம்.

மலையினையோ, குன்றினையோ தங்களது இருப்பிடமாக வைத்துக் கொண்டு அதிக அளவில் அருளாட்சி புரியும் தெய்வங்கள்ஒருவர் திருமாலும், மால் மருகனாகிய முருகனும்.. 

திருமால் திருவேங்கடவனாக அருள்புரியும் திருப்பதி உலகப் பிரசித்தி பெற்றது. 

தமிழக வைணவத் தலங்களில், "ஸ்ரீநிவாசன்' என்ற திருநாமத்துடனோ அல்லது "வெங்கடேசன்' என்ற திருப்பெயருடனோ பல ஆலயங்களில் திருமால் வீற்றிருந்து அருள்புரியும்  தலங்களை  திருப்பதியை நினைவு கூறும் வகையில்  "தென்திருப்பதி' என்று பக்திப்பரவசத்துடன் அழைத்துப் பெருமையடைகிறோம். 

அவ்வகையில் மதுராந்தகத்தின் வட கிழக்குப் பகுதியில், சூணாம்பேட் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ள சித்திரவாடி கிராமத்தில்
ஒரு வைணவத் தலத்தை உருவாக்கி, அதற்குப் புதுமையாக "நயா திருப்பதி' என்று பெயர் சூட்டியுள்ளது, "ஸ்ரீ வேணுகோபாலப் பெருமாள் அறக்கட்டளை' என்ற அமைப்பு.

 தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஆலயத்தின் அருகில் உள்ள மலையில் (சுமார் 1500 அடி உயரம்) ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலையும் தற்போது கட்டியுள்ளனர். 

மலையின் அடிவாரத்தில் ஏற்கனவே "பிரசன்ன வெங்கடேச பெருமாள்' கோயிலை இந்த அறக்கட்டளை கட்டியுள்ளது. 

நூதன நரசிம்மர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ள மலைக்கு "சிம்மகிரி' மலை என்று பெயர் சூட்டியுள்ளனர்.

 Sri Lakshmi Narasimha Swamy Temple at Simhagiri

பூரிஜெகந்நாதர் ஆலயத்தை நினைவுபடுத்தும் விதமாக பெருமாளின் கர்ப்பகிரக விமானம் ஒரிசா (ஒடியா) கட்டிடப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. 

அதற்கு ஏற்றாற்போல் இங்கு இறை மூர்த்தங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்பவர்களும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சமஸ்கிருதம் அறிந்த பண்டிதர்களே! 

சுமார் 51/2 அடி உயரத்தில் அருளும் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருமார்பை நேபாள மன்னர் அளித்த 108 எண்ணிக்கையில் உள்ள சாளக்கிராம மாலை அலங்கரிக்கிறது. 

தாயார் சிலையும், பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையும் வடிக்கப்பட்டுள்ளன கண்களை கவரும் விதமாக.

சுமார் 255 படிகளைக் கடந்து சென்றால் ""பேழ்வாய்'' என்று திருமங்கை ஆழ்வார் திவ்வியப் பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அகன்ற பெரிய வாயுடன் நரசிம்மரின் திருமுகமே ஆலய நுழைவு வாயிலாக கட்டப்பட்டுள்ளது. 

நரசிம்மர் முக வாயிலில் கிரீடம் போன்ற அமைப்பு பொருத்தப்பட்டு வண்ணத்துடன் மிளிர்கிறது. 

இந்த கிரீடம் திருப்பதியில் வேங்கடவனின் திருமுடியை அலங்கரிக்கும் கிரீடம் போலவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நுழைவு வாயிலின் அருகே ஒருபுறம் பெரிய திருவடியும், மறுபுறம் சிறிய திருவடியும் கைகூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றனர். 

கல்லினால் செய்யப்பட்ட இந்த நரசிம்ம வாயிலுக்கு சூரிய சந்திரனாய் இரண்டு கண்களும், சிங்கத்தைப் போல் பிடரி ரோமங்களும் நேர்த்தியாய் அமைத்துள்ளனர்.



அழகான வேலைப்பாடுகளுடன் அமைந்த மரக்கதவுகளில் நரசிம்மரை நின்ற கோலத்தில் செதுக்கியுள்ளனர்.

துவாரபாலகரை அடுத்து கருவறையில் மூலவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் 7 அடி உயரத்தில் தாயாரை இடதுபக்கத்தில் அணைத்த நிலையில் வடக்கு முகமாக அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார்.

உள் பிரகாரம் ஒரு சதுர குகை வடிவில் (30 அடிக்கு 30 அடி) அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் அகோபில மடத்தில் காணப்படுவதைப் போல நவ நரசிம்மர் உருவச்சிலை சிமெண்டினால் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.
 
ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கான சிறிய சந்நிதி ஒன்றும் கீழே உள்ள வெங்கடாசலபதி ஆலயத்தில் அமைந்திருக்கின்றது.

மேலும் விவரங்களுக்கு:
 ஸ்ரீவேணுகோபாலப் பெருமாள் அறக்கட்டளை,
சித்திரவாடி கிராமம், பொலம்பாக்கம் அஞ்சல்,
மதுராந்தகம் தாலுக்கா, காஞ்சி மாவட்டம்}603309

என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி தொடர்புக்கு : 9443240074)

சித்திரவாடி கிராமம் செல்ல மதுராந்தகத்திலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.

                                        Padmavathy Thaayar












36 comments:

  1. சனிக்கிழமைக்கு திரு வேண்கோபாலனின் தரிசனம்
    கிடைக்கச் செய்தமைக்கு நன்றி
    கோவில் முழுவதையும் நேரடியாகச் சென்று
    தரிசிப்பதைப் போலவே மிக அருமையான படங்கள்
    விளக்கங்களும் மிக மிக அருமை
    நன்றி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கம்ப்யூட்டர் ஆன் பண்ணீனதும் நான்
    முதலில் வருவது உங்க பக்கம்தான்.
    மன நிறைவும் சந்தோஷமும் நிறைய
    கிடைக்கும். நல்ல பதிவுகள், பகிர்வுகள்.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு... எத்தனை எத்தனை கோவில்கள்... அவற்றின் தகவல்கள்.... புகைப்படங்கள்....

    அசத்தறீங்க போங்க...

    தொடர்ந்து வரும் நல்ல பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. இதுவரை கேள்விப்பட்டிராத இத்தலம் பற்றிய விபரங்களை அழகாக அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி

    ReplyDelete
  5. நான் முதன் முதலில் இப்போதுதான் கேள்விப் படுகிறேன்..

    ReplyDelete
  6. பார்த்த, படித்த, அனைவரையும் வாயைப்பிளக்கச் செய்துவிட்டீர்கள் முதல் படத்திலேயே. அருமை. அனைத்தும் அருமை.

    சனிக்கிழமை நரசிம்ஹ பெருமாள் தரிஸனம், உங்களால் கிடைக்கப் பெற்றோம்.

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றிகள். vgk

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அம்மனின் அழகான படங்களுடன் பதிவு பக்திமணம் கமழ்கிறது!!
    உங்கள் பணி தொடரட்டும்!!

    ReplyDelete
  9. //சுமார் 255 படிகளைக் கடந்து சென்றால் ""பேழ்வாய்'' என்று திருமங்கை ஆழ்வார் திவ்வியப் பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அகன்ற பெரிய வாயுடன் நரசிம்மரின் திருமுகமே ஆலய நுழைவு வாயிலாக கட்டப்பட்டுள்ளது. //

    கோயிலின் நுழைவு வாயிலை பார்க்கும்போதே... நரசிம்மரை ஞாபகபடுத்தும் விதமாக கட்டிடமைப்பு அமைத்திருப்பது அருமை... கோயில் என்பது இப்படி மலையோரத்தில் இருப்பது மனதுக்கு அமைதியையும் பக்தியும் அதிகப்படுத்தும்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. பக்திரசம் சொட்டும் பதிவு
    ரொம்ப பிரமாதம் !

    ReplyDelete
  11. கோவில் நுழைவாசலே பிரமாதமாக இருக்கிறதே!எப்படித்தான் இப்படி புதுப்புது இடமாகத் தேடிப் பிடிக்கிறீர்களோ!

    ReplyDelete
  12. படங்கள் மிகவும் அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  13. Ramani said...
    சனிக்கிழமைக்கு திரு வேண்கோபாலனின் தரிசனம்
    கிடைக்கச் செய்தமைக்கு நன்றி
    கோவில் முழுவதையும் நேரடியாகச் சென்று
    தரிசிப்பதைப் போலவே மிக அருமையான படங்கள்
    விளக்கங்களும் மிக மிக அருமை
    நன்றி தொடர வாழ்த்துக்கள்//

    அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. @ Lakshmi said...
    கம்ப்யூட்டர் ஆன் பண்ணீனதும் நான்
    முதலில் வருவது உங்க பக்கம்தான்.
    மன நிறைவும் சந்தோஷமும் நிறைய
    கிடைக்கும். நல்ல பதிவுகள், பகிர்வுகள்.//

    சந்தோஷம். நன்றி அம்மா.

    ReplyDelete
  15. @ வெங்கட் நாகராஜ் said...
    நல்ல பகிர்வு... எத்தனை எத்தனை கோவில்கள்... அவற்றின் தகவல்கள்.... புகைப்படங்கள்....

    அசத்தறீங்க போங்க...

    தொடர்ந்து வரும் நல்ல பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.//

    அசத்தலான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  16. @பிரகாசம் said...
    இதுவரை கேள்விப்பட்டிராத இத்தலம் பற்றிய விபரங்களை அழகாக அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  17. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    நான் முதன் முதலில் இப்போதுதான் கேள்விப் படுகிறேன்..//

    நன்றி.

    ReplyDelete
  18. @
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    பார்த்த, படித்த, அனைவரையும் வாயைப்பிளக்கச் செய்துவிட்டீர்கள் முதல் படத்திலேயே. அருமை. அனைத்தும் அருமை.

    சனிக்கிழமை நரசிம்ஹ பெருமாள் தரிஸனம், உங்களால் கிடைக்கப் பெற்றோம்.

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றிகள். vgk//

    பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  19. @ Rathnavel said...
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.//

    நன்றி ஐயா.

    ReplyDelete
  20. @ கார்த்தி said...
    அம்மனின் அழகான படங்களுடன் பதிவு பக்திமணம் கமழ்கிறது!!
    உங்கள் பணி தொடரட்டும்!!//

    நன்றி.

    ReplyDelete
  21. @ மாய உலகம் said...
    //சுமார் 255 படிகளைக் கடந்து சென்றால் ""பேழ்வாய்'' என்று திருமங்கை ஆழ்வார் திவ்வியப் பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அகன்ற பெரிய வாயுடன் நரசிம்மரின் திருமுகமே ஆலய நுழைவு வாயிலாக கட்டப்பட்டுள்ளது. //

    கோயிலின் நுழைவு வாயிலை பார்க்கும்போதே... நரசிம்மரை ஞாபகபடுத்தும் விதமாக கட்டிடமைப்பு அமைத்திருப்பது அருமை... கோயில் என்பது இப்படி மலையோரத்தில் இருப்பது மனதுக்கு அமைதியையும் பக்தியும் அதிகப்படுத்தும்.. பகிர்வுக்கு நன்றி//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  22. @கவி அழகன் said...
    பக்திரசம் சொட்டும் பதிவு
    ரொம்ப பிரமாதம் !

    August 13, 2011 4:34 PM//

    நன்றி.

    ReplyDelete
  23. @சென்னை பித்தன் said...
    கோவில் நுழைவாசலே பிரமாதமாக இருக்கிறதே!எப்படித்தான் இப்படி புதுப்புது இடமாகத் தேடிப் பிடிக்கிறீர்களோ!//

    கேள்விப்பட்டு சென்று வந்தோம்.
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  24. @ FOOD said...
    அற்புதமான படங்களுடன்,மிக அருமையான இடங்களின் பதிவு.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  25. @ நிலாரசிகன் said...
    படங்கள் மிகவும் அருமை வாழ்த்துகள்/

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  26. //குளிர் அருவிபாயும் வேங்கட மாமலையில் திருமகளை திருமார்பில் தாங்கி திருத்தக்க செல்வமும் யாமருள்வோம் என கருணையுடன் காட்சியளிக்கும் திருவேங்கடவனை வணங்குவோம்.//

    ReplyDelete
  27. அட்டகாசமான ஆலயம் கண்டிப்பா போவனும்,நன்றி!!!

    இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

    ReplyDelete
  28. ஆங்கார கோலம் கொண்ட சிம்மன் பற்றிய
    அழகு கட்டுரை.
    நன்றி சகோதரி.

    ReplyDelete
  29. பளபளனு இருக்குங்க கோவில். நுழைவாயில் கொஞ்சம் பயமா இருக்கே?

    ReplyDelete
  30. நரஸிங்க பெருமாள் கோயில் நுழைவாயில் வித்தியாசமாக உள்ளது. சாந்தமாக தெரிகிறார் பெருமாள்.

    ReplyDelete
  31. அருமையா இருக்குப்பா நரசிம்மரின் தோற்றமே நுழைவாயிலாகவும் பிரம்மாண்டமா இருக்கு....

    திருப்பதி பெருமாள் எங்க குலதெய்வம்....

    அருமையான தெய்வதரிசனம்பா..

    அசத்தலான படங்களுடன் அழகிய கட்டுரை.... அன்பு நன்றிகள்பா....

    ReplyDelete
  32. ;)
    சர்வ மங்கள மாங்கல்யே
    சிவே சர்வார்த்த சாதிகே !
    சரண்யே த்ரயம்பிகே கெளரி
    நாராயணீ நமோஸ்துதே !!

    ReplyDelete