Saturday, August 27, 2011

அஞ்சுவது யாதொன்று மில்லை;






ஒரு பதிவருக்குப் பைத்தியம் பிடித்தால்-.....!
(எந்த நேரமும் கணிணி முன் உட்கார்ந்து பதிவிட்டும் பின்னூட்டம் இட்டும் கொண்டிருந்தால் வேறு என்ன ஆகும் என்கிறீர்களா??)) -


என்ன செய்வார்? தொடர் பதிவுக்குக் கூப்பிடுவாரா ? சாட் செய்வாரா?
மின்சாரம் தடைப்பட்டாலும் பழக்க தோஷத்தில் கணிணி திரையை பார்த்துக்கொண்டிருப்பாரா!!
Animated Gif School (13)Animated Gif School (16)Animated Gif School (1)Animated Gif School (15)
வக்கீலுக்கு பைத்தியம் பிடித்தால் யுவர் ஆனர் என்று தனியாக வாதாடிக்கொண்டிருப்பார்.
வாத்தியாருக்குப் பித்துப்பிடிதால் பாடம் நடதுவார்.
ஓட்டுநர் ஸ்டியரிங் பிடித்து வண்டி ஓட்டி ஓடுவார்.
நடத்துநர் பேப்பரைக்கிழித்து டிக்கெட் கொடுப்பார்.. இப்படி அவரவர் ஆழ்மனதில் பதிந்திருப்பதே செயலாகவும் பேச்சாகவும் வெளிப்படும்.

“பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாது என்நா”
என உறுதி மொழிகிறார் அருளாளர் பித்தொடு மயங்கியபோதும்
பிறைசூடிய பித்தனை மறவாத பீடுடைப் பெருந்தகை
ஞானசம்பந்தப் பெருமான்.  
அஞ்சுவது யாதொன்று மில்லை; அஞ்ச வருவது மில்லை”
என்ற ஞான வீரர்களில் ஒருவராகிய ஸ்ரீமத் அப்பைய தீட்சிதேந்திரர் நூற்றுநான்கு நூல்கள் இயற்றிய மேதை. கவிச்சக்கரவர்த்தி.

நனவிலும் கனவினும் நம்பா வுன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்”
என்று ஆளுடைய பிள்ளையார் அருளிச் செய்தபடி நனவு கனவு ஆகிய இரு நிலைகளிலும் சிவசிந்தனை அவருக்கு நீங்காமல் இருந்தாலும் சாகுங் காலத்தில்,உண்டாகும் வேதனைகளால் அறிவு அழியுமே, அலமரலுறுமே!உயிர் போகும் வேதனை என்று சொல்வார்களே!அப்போதும் தன் சிந்தையாகிய வண்டு, சிவனடித் தியானத் தேனில் திளைக்குமோ?

நோய், கவலை, கலக்கம் முதலியவற்றிற்பட்டு இளைக்குமோ? என்பதுதான் அவர் கொண்ட ஐயம்.

சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளக் கருதினார்.

நம்பிக்கையுள்ள மாணவர்களிடம், ‘ ஊமத்தங்காயைத் தின்று அதனால் அறிவு கலங்கிப் பித்துறும் போது அது தெளியும்வரை அவர் செய்யும் செயல்களைக் குறித்துக் கொள்வதோடு, அவ்வாற் பிதற்றுவனவற்றையும் எழுதி வைக்குமாறு பணித்தபின் ஊமத்தங்காயைத் தின்றார்.


பித்தும் பிடித்தது. பிதற்றலும் தொடங்கியது. 

அப்பிதற்றலில் வெளிப்பட்டவையே ‘ஆன்மார்ப்பணத் துதி சுலோகங்கள்’ ஐம்பதும்.இக்காரணத்தால் இந்நூலுக்கு, உன்மத்த பஞ்சாசத்’ எனவும்,
  உன்மத்தப் பிரலாபம்எனவும் வேறு பெயர்களும் ஏற்பட்டன.
இந்நூல் அரிய கருத்துக்களை கொண்டது.

மாற்று மருந்தால் பித்தம் மாறித் தெளிந்தபின், தம் மாணாக்கர்கள் காட்டிய சுலோகங்களைக் கண்ட பின்னர், தீட்சிதர், தாம் கொண்டிருந்த ஐயம் அகலப் பெற்றார்.
“உண்டியிற் பட்டினி நோயிலுறக்கத்தில்ஐவர் கொண்டியில்” பட்டபோதும், சாம் அன்றும் சங்கரனை நம் மனம் மறவாது எனத் தைரியம் கொண்டார்.
Shivling Graphics Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs

தீட்சிதர் அருளிய ஆன்மார்ப்பணத் துதி சுலோகங்கள்,,
“அன்பினால் ஆவியோடியாக்கை ஆனந்தமாய்க் கசிந்து உருகி”ப் பாடியவை. உடலவிழ உயிரவிழ உணர்வவிழ உளமவிழ 
உண்மைப் பொருளை உணர்ந்து பாடியவை.

பரமசிவ பத்தர் உள்ளந் தித்திக்கும் அன்புச் சுவை ததும்பியவை.
Shiva Shakti Photos Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs
முழுமுதலாகிய சிவபரம்பொருளின் உரைத்தற்கரிய பெருமையை உரைக்கத் துணிந்த தம்முடைய சாகசத்தை’ப் பொறுக்கும்படி வேண்டி, யாராலும் சொல்லுதற்கு அரிதாகிய அந்த அளப்பரும் பெருமையைச் சொல்லும் ஆற்றலும் அவனிடத்து மெய்யன்பு உடையவருக்கே எய்தும் என்கின்றார்.
Neelkanth Pictures Shiva Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs

52 comments:

  1. உங்களுக்கு நகைச்சுவையும் வருமென்று நிரூபித்து விட்டீர்கள். அனிமேஷன் படங்கள் அருமை!

    ReplyDelete
  2. உங்க பதிவில் இடப்படும் படங்களும் உங்க தெளிவாக்கமும் அருமை!

    என்ன இருந்தாலும் இப்படி கும்மிட்டீங்களே மேடம்....மீ பாவம் மை நண்பர்ஸ் பாவம் இல்லீங்களா ஹிஹி!

    ReplyDelete
  3. சிந்தை கலங்கினாலும் சிவனை மறக்காமல் இருந்த ஸ்ரீமதி அப்பைய தீக்ஷதர் சரித்திரம் பற்றியும், அவ்ர் அவ்வாறு இருந்த காலத்தில் இயற்றிய ‘உன்மத்த பஞ்சாசத்’ என்ற நூல் பற்றியும் அழகான, வேடிக்கையான தங்கள் விளக்கங்கள் அருமையோ அருமை. நன்றி கலந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.vgk

    ReplyDelete
  4. வித்தியாசமான அசத்தல் ஆரம்பம
    நான் கூட பொதுவான விஷயம் குறித்த பதிவோ
    என எண்ணித் தொடர்ந்தேன்
    மிகச் சரியாக கொண்டுவந்து பொருத்தியது அருமை
    படங்களும் பதிவும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உங்கள் பதிவுகளில் வித்தியாசமான ஆரம்பம்...
    புது தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  6. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
    சிந்தை கலங்கினாலும் சிவனை மறக்காமல் இருந்த ஸ்ரீமதி அப்பைய தீக்ஷதர் சரித்திரம் பற்றியும், அவ்ர் அவ்வாறு இருந்த காலத்தில் இயற்றிய ‘உன்மத்த பஞ்சாசத்’ என்ற நூல் பற்றியும் அழகான, வேடிக்கையான தங்கள் விளக்கங்கள் அருமையோ அருமை. நன்றி கலந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.vgk//

    அருமையான பாராட்டுக்களுக்கும், கருத்துரைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  7. Ramani said...
    வித்தியாசமான அசத்தல் ஆரம்பம
    நான் கூட பொதுவான விஷயம் குறித்த பதிவோ
    என எண்ணித் தொடர்ந்தேன்
    மிகச் சரியாக கொண்டுவந்து பொருத்தியது அருமை
    படங்களும் பதிவும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்//

    வித்தியாசமான அருமையான பாராட்டுக்களுக்கும், கருத்துரைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  8. @ மூன்றாம் கோணம் வலை பத்திரிக்கை said...
    உங்களுக்கு நகைச்சுவையும் வருமென்று நிரூபித்து விட்டீர்கள். அனிமேஷன் படங்கள் அருமை!//

    அருமையான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  9. @ middleclassmadhavi said...
    உங்கள் பதிவுகளில் வித்தியாசமான ஆரம்பம்...
    புது தகவல்களுக்கு நன்றி!//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  10. உண்மை தான் ,கணிணி கீ போர்டு தட்டி கொண்டே இருப்பான் ,ஹா ஹா ஹா

    ReplyDelete
  11. அட!மேடம் இன்று வேற டாபிக் போய்டாங்க போலனு நினச்சு மேலும் என்ன சொல்லியிருக்கீங்கனு பாக்க வந்தேன் கலக்கி கொண்டு போய் ஆன்மீகத்தில் சேத்துபுட்டீங்க.உங்க தளம் பயபக்தியாவே இருக்கிறது மேடம்.வழக்கம் போல படங்கள் அருமை.

    ReplyDelete
  12. @M.R said...
    உண்மை தான் ,கணிணி கீ போர்டு தட்டி கொண்டே இருப்பான் ,ஹா ஹா ஹா//

    உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  13. @ thirumathi bs sridhar said...
    அட!மேடம் இன்று வேற டாபிக் போய்டாங்க போலனு நினச்சு மேலும் என்ன சொல்லியிருக்கீங்கனு பாக்க வந்தேன் கலக்கி கொண்டு போய் ஆன்மீகத்தில் சேத்துபுட்டீங்க.உங்க தளம் பயபக்தியாவே இருக்கிறது மேடம்.வழக்கம் போல படங்கள் அருமை.//

    பயபக்தியான அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  14. முக்கண்ணன் பற்றிய
    பதிவு சிறிது நகைச் சுவையுடன்.....
    நல்லா இருக்கு சகோதரி.

    ReplyDelete
  15. வித்யாசமான ஆரம்பத்துடன்,ஒரு அருமையான ஆன்மிக பதிவு..
    படங்கள் அழகாக இருக்கு.

    ReplyDelete
  16. சித்தம் கலங்கி சிந்தை தெளியவைக்கும் மிக அருமையான கட்டுரைப்பகிர்வு....

    ஆரம்பமோ ஒரு வித்தியாச முயற்சி... அதிலும் வெற்றி, ஏன்னா நான் சிவன் படம் பார்த்துட்டு உங்க வரிகளை படிக்க ஆரம்பித்தால் வேற மாதிரி ஆரம்பிக்கிறதே என்று படித்தேன்.... மனம் ரசிக்க முடித்தேன்....

    ரசித்து படிக்கவைக்கும் அருமையான முயற்சி இராஜராஜேஸ்வர்....

    க்ரியேட்டிவிட்டி இருந்தால் போதுமே...அழகு சிந்தனைகளை தெளித்து மிக அருமையான அனிமேஷன் படங்கள் தந்து சிவனைப்பற்றி ஆழ்ந்து அறிய தந்திருக்கீங்க...

    ரசித்தேன்....
    ரசித்தேன்....
    மகிழ்ந்தேன்.....

    அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி அருமையான பகிர்வுக்கும் படங்களுக்கும்....

    ReplyDelete
  17. அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

    "தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

    தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  18. புதிய கோணத்தில் இந்தி இடுகை முதலில் நல்ல நகைசுவையோடு துவங்குகிறீர்கள் பினார் வழக்கம் போல சிறப்பான பாங்களுடன் அசத்துகிறீர் கண்ணைக்கவரும் வண்ண படங்கள் வாழ்க வளமுடன் தொடர்க

    ReplyDelete
  19. FOOD said...
    //வாத்தியாருக்குப் பித்துப்பிடிதால் பாடம் நடதுவார்.
    ஓட்டுநர் ஸ்டியரிங் பிடித்து வண்டி ஓட்டி ஓடுவார்.
    நடத்துநர் பேப்பரைக்கிழித்து டிக்கெட் கொடுப்பார்.. இப்படி அவரவர் ஆழ்மனதில் பதிந்திருப்பதே செயலாகவும் பேச்சாகவும் வெளிப்படும்//
    ஆன்மீகப்பதிவில் அருமையான ஆரம்பம்.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  20. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. மகேந்திரன் said...
    முக்கண்ணன் பற்றிய
    பதிவு சிறிது நகைச் சுவையுடன்.....
    நல்லா இருக்கு சகோதரி.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  22. RAMVI said...
    வித்யாசமான ஆரம்பத்துடன்,ஒரு அருமையான ஆன்மிக பதிவு..
    படங்கள் அழகாக இருக்கு.//

    அழகான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  23. மஞ்சுபாஷிணி said...
    சித்தம் கலங்கி சிந்தை தெளியவைக்கும் மிக அருமையான கட்டுரைப்பகிர்வு....//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  24. போளூர் தயாநிதி said...
    புதிய கோணத்தில் இந்தி இடுகை முதலில் நல்ல நகைசுவையோடு துவங்குகிறீர்கள் பினார் வழக்கம் போல சிறப்பான பாங்களுடன் அசத்துகிறீர் கண்ணைக்கவரும் வண்ண படங்கள் வாழ்க வளமுடன் தொடர்க//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  25. Rathnavel said...
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  26. பகிர்வுக்கு நன்றி தோழி..

    ReplyDelete
  27. வித்தியாசமான கோணத்தில் வந்திருக்கிக்கீறீர்கள்...


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  28. பிலாக் பைத்தியம் என்றால் என்னவென்று சொன்னீர்கள். நன்றி.
    உன்மத்தப் பிரலாபம் கேள்விப்பட்டதில்லை. படிக்க வேண்டும் போலிருக்கிறது.

    படங்களுக்காக எத்தனை நேரம் செலவழிக்கிறீர்கள், எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்கள் கணிணித்திரை தூசியாக இருந்து கவனிக்க ஆசை.

    ReplyDelete
  29. உங்கள் பதிவுகள் மூலம் அறியாத பல விஷயங்கள் தெரிய வருகின்றன.படங்களுடன் பதிவும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  30. # கவிதை வீதி # சௌந்தர் said...
    வித்தியாசமான கோணத்தில் வந்திருக்கிக்கீறீர்கள்...


    வாழ்த்துக்கள்...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  31. அப்பாதுரை said...
    பிலாக் பைத்தியம் என்றால் என்னவென்று சொன்னீர்கள். நன்றி.
    உன்மத்தப் பிரலாபம் கேள்விப்பட்டதில்லை. படிக்க வேண்டும் போலிருக்கிறது.

    படங்களுக்காக எத்தனை நேரம் செலவழிக்கிறீர்கள், எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்கள் கணிணித்திரை தூசியாக இருந்து கவனிக்க ஆசை.//

    உன்மத்தப்பிரலாபம் அருமையான ஸ்துதிகள். எங்கள் பாகவத வகுப்பில் சொலிக்கொடுத்தார்கள்.
    பகிர்ந்தால் படிப்பார்களோ மாட்டார்களோ !

    தலைப்பு, சப்ஜெக்ட் ஒட்டி தேடுவதால் விரைவில் படங்கள் சேர்க்கமுடிகிறது.
    கடைசி மூன்று படங்கள் பதிவு வெளியிடும் கடைசி அவசரத்தில் சேர்க்கப்பட்டவை தாம்.

    ReplyDelete
  32. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருமை//

    நன்றி.

    ReplyDelete
  33. G.M Balasubramaniam said...
    உங்கள் பதிவுகள் மூலம் அறியாத பல விஷயங்கள் தெரிய வருகின்றன.படங்களுடன் பதிவும் அருமை. பாராட்டுக்கள்.//

    அருமையான பாராட்டுக்களுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  34. சென்னை பித்தன் said...
    ஓம் நமச்சிவாய!//

    சிவாய நம ஓம்!
    ஓம் நமச்சிவாய!!

    ReplyDelete
  35. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    பகிர்வுக்கு நன்றி தோழி..//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  36. நன்று.இலக்கிய வளமும் சேர்ந்துவிட்டது.

    ReplyDelete
  37. வித்தியாசமான பகிர்வு...

    ReplyDelete
  38. அனிமேஷன் படங்கள் அருமை...
    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  39. வெங்கட் நாகராஜ் said...
    வித்தியாசமான பகிர்வு...//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  40. shanmugavel said...
    நன்று.இலக்கிய வளமும் சேர்ந்துவிட்டது.//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  41. ரெவெரி said...
    அனிமேஷன் படங்கள் அருமை...
    பாராட்டுக்கள்...//

    Thank you..

    ReplyDelete
  42. படங்களெல்லாம் ரொம்ப அருமையாயிருக்கு.

    ReplyDelete
  43. படங்கள் உங்கள் பதிவுகளின் தனிச் சிறப்பு..
    அப்படியே கண்ணைக் கட்டி நிறுத்தி விடுகிறது..

    ReplyDelete
  44. 945+2+1=948

    பதிலுக்கு நன்றி. [என்னை மீண்டும் படிக்கச்சொல்லி வற்புருத்திய பதிவல்லவா! மறக்க முடியாத நினைவலைகளே !! வாழ்க !!! ]

    ReplyDelete
  45. வித்தியாசமான முறையில் உங்கள் பதிவு. எங்கோ தொடங்கி பக்தியில் இணைத்து விட்டீர்கள். அருமை.

    ReplyDelete