Friday, May 2, 2014

ஸ்ரீ ஸ்ரீ சர்வ மங்கள ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி









' மந்திரம் உரைத்தாற் போதும் - மலரடி தொழுதால் போதும்
மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திரப் பதவி கூடும் - இகத்திலும் பரங்கொண்டோடும்
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்'

மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். 

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
ஓம் பூர்: புவ: ஸுவ:தத் ஸவிதுர் வரேண்யம்
உர்வாருஹ மிவ பந்தனாத் ம்ருத்யோர் முஷீயமா ம்ருதாத் 
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்

ஸ்ரீ மகா மிருத்யுஞ்சய ஸ்தோத்திரத்தையும், 
காயத்ரி மந்திரத்தையும்  இணைத்து சொல்லப்படும் 
ஸ்ரீ மகா மிருத்யுஞ்சய காயத்ரி மந்திரம் - சஞ்சீவினி மந்திரமாக
அளவற்ற பலன்களை அளிக்கவல்லது..

மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக 
அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்

அட்சய திருதியை தினத்தன்று  விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி  புது கணக்கு தொடங்குவது விஷேசம்...



சங்கரர், வித்யாரண்யர், நிகமாந்த தேசிகர், தாதாச்சாரியார் ஆகிய நால்வருக்காகவும் ஸ்ரீலட்சுமி பொன்னை மழையாகக் கொட்டச் செய்தாள்

அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை' என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ëறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை' எனும் பெயர் அமைந்தது. 

அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும். 

அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம' என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுவது விஷேசம்... 

 தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை.

கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைïர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
[Gal1]Photo: Sivaya nama
அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து
 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். 
கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். 

இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.


அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்க மேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால்  எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

புனித கங்கைத் தாய் பூமியில் இறங்கி நீர்ப் பெருக்கெடுத்தது அக்‌ஷய திருதியை அன்றுதான் ..

வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.

அன்னபூரணியின் பெருமையை உலகறியச் செய்யவும் திருவுளம் கொண்ட ஈசன் பிட்சாடனர் வேடம் பூண்டு மனைவியின் மாளிகைக்குப் போய் தன் பசியைத் தீர்க்கும்படி வேண்டினார்.

 உணவு அனைத்தும் தீரும் நிலையிலும் ஈசன் கை கபாலமே கபளீகாரம் செய்த இக்கட்டான நிலையில்  உடனே காசியில் பிந்து மாதவன் என்ற பெயரில் சேவை சாதிக்கும் தன் அண்ணனாம் திருமாலை நினைத்து வழி கேட்டாள். 
தங்கையின் துயர் தீர்க்க தயாபரன் தானும் ஒரு பிச்சாண்டி போல உருக்கொண்டு மகாலட்சுமியின் அருளால் கிடைத்த பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்

 மகாவிஷ்ணு ‘அட்சய” என்ற வார்த்தையைக் கூறி அப்பாத்திரத்தைத் தொட்டார் அன்றுமுதல் அதிலிருந்து குறைவின்றி பலவகையான உணவுப்பொருட்கள் தோன்றின. முதல் முதல் அட்சய பாத்திரம் தோன்றிய நாள் அட்சய திருதியை. 
பிட்சாடனாக வந்த சிவனின் பசியையும் தீர்த்தது அட்சய பாத்திரம். உடனே தன் சுயரூபத்தில் தோன்றி அன்னபூரணியின் பணி தடையின்றி நடக்கவும் அவள் புகழ் திக்கெட்டும் பரவவும் வரம் அளித்தார் ஈசன்.
மகாவிஷ்ணுவும் அட்சய பாத்திரத்தை தங்கையின் கையில் கொடுத்து “ உமா இதுதான் அட்சய பாத்திரம் இதிலிருந்து வரும் பொருட்கள் என்றுமே குறையாது. இதைக் கொண்டு நீ உன் பணியைச் செவ்வனே நிறைவேற்றுவாயாக இதன் தேவை தீர்ந்தபின் இப்பாத்திரம் தானே வைகுண்டம் வந்து சேர்ந்துவிடும்” என்று கூறி மறைந்தார். 

அதன் பிறகு பஞ்சம் தீரும் வரை அட்சயபாத்திரத்தைக் கொண்டு 
அன்னை அன்னபூரணி மக்களின் துயர் தீர்த்தாள். 

பஞ்சம் தீர்ந்து அன்னபூரணி விசாலாட்சியாக மறியதும் 
அட்சயப் பாத்திரம் மகாலட்சுமியைச் சென்று சேர்ந்து விட்டது.




தொடர்புடைய பதிவுகள்

அற்புதத்திருநாள் அட்சய திருதியை

ஐஸ்வர்யம் திகழும் திருநாள்..

அற்புதத் திருநாள்


சுவர்ண ஆகர்ஷண பைரவர்

ஸ்ரீலட்சுமி குபேர பூஜை.












21 comments:

  1. ஐஸ்வர்ய மகாலட்சமி மகிமை அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. வாழ்க வளமுடன்..

      இனிய கருத்துரைகளுக்கு நன்றிகள்..

      Delete
  2. வழக்கம் போல மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் படைப்புக்கள்.
    நன்றி :))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. வாழ்க வளமுடன்..

      இனிய கருத்துரைகளுக்கு நன்றிகள்..

      Delete
  3. அட்சய திருதியை பெயர் காரணம் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. வாழ்க வளமுடன்..

      இனிய கருத்துரைக்கு நன்றிகள்..

      Delete
  4. அட்சய திருதியை தின நல்வாழ்த்துக்கள் மேடம். தங்களுக்கும் தங்கள் அன்பைப் பெற்றவர்களுக்கும் செல்வகங்கள் அனைத்தும் செவ்வனே சேர ஸ்ரீசீதாராமரைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. வாழ்க வளமுடன்..

      இனிய கருத்துரைகளுக்கும் , மன நிறைவான பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள்..

      Delete
  5. ஸ்ரீ ஸ்ரீ சர்வ மங்கள ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மிக்கு அடியேனின் வந்தனங்கள் / நமஸ்காரங்கள்.

    அழகழகான படங்களுடன்

    அற்புதமான பல புதிய தகவல்களுடன்

    அதிசயிக்கத்தகுந்த பல காணொளிகளுடன்

    அசல் தங்கமென ஜொலிக்கும் பதிவும் பகிர்வும்

    பார்க்கப்பார்க்க ஆச்சர்யமாகவும்
    பொறாமையாகவும் உள்ளது.

    மேலும் என் கருத்துக்களைக்காண

    தொடர்புடைய பதிவுகளுக்குச் செல்லுங்கோ !

    கடைசியில் காட்டியுள்ள சொரக்கொன்னை மரமும் மஞ்சள் நிறப் பூக்களும் சமீபத்திய தேர்தலில் தாங்கள் வாக்களிக்கச் சென்றபோது எடுக்கப்பட்டதோ என சந்தேகிக்க வைக்கிறதே !!

    ReplyDelete
  6. ஸ்ரீ ஸ்ரீ சர்வ மங்கள ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மிக்கு அடியேனின் வந்தனங்கள் / நமஸ்காரங்கள்.

    அழகழகான படங்களுடன்

    அற்புதமான பல புதிய தகவல்களுடன்

    அதிசயிக்கத்தகுந்த பல காணொளிகளுடன்

    அசல் தங்கமென ஜொலிக்கும் பதிவும் பகிர்வும்

    பார்க்கப்பார்க்க ஆச்சர்யமாகவும்
    பொறாமையாகவும் உள்ளது.

    மேலும் என் கருத்துக்களைக்காண

    தொடர்புடைய பதிவுகளுக்குச் செல்லுங்கோ !

    கடைசியில் காட்டியுள்ள சொரக்கொன்னை மரமும் மஞ்சள் நிறப் பூக்களும் சமீபத்திய தேர்தலில் தாங்கள் வாக்களிக்கச் சென்றபோது படமாக எடுக்கப்பட்டதோ என சந்தேகிக்க வைக்கிறதே !!

    அதை எனக்கு உடனடியாக CONFIRM பண்ணுங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் .. தொடர்புடைய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      வாக்களிக்கச்செல்லும்போது பூத் ஸ்லிப்பை மறந்துவிட்டு சென்றுவிட்டோம் ..

      அங்கிருந்த சரக்கொன்றை மரத்தடியில் என்னை அமரவைத்துவிட்டு இல்லத்தில் சென்று எடுத்துவரும் வரை ரசித்து படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன்..

      Delete
    2. //அதை எனக்கு உடனடியாக CONFIRM பண்ணுங்கோ, ப்ளீஸ்.//

      அடியேன் CONFIRM பண்ணச்சொன்னது இதை அல்ல.
      அதை .... அதை .... அதை .... அதை மட்டுமே !

      Delete
    3. தேவி உபாசனையால் சகல சௌபாக்கியங்களைப் பெற்ற குபேரன் யோக சாதனை செய்ய நேரமில்லாதிருப்பவர்.

      சாதாரண பணக்காரர்களுக்கே காயத்ரி செய்யவோ அனுஷ்டானங்கள் செய்யவோ நேரமில்லாமல் பிஸியோ பிஸியாக இருக்கும் போது நவநிதிகளையும் கட்டிக்காக்கும் உயர்ந்த பொறுப்பிலுள்ள குபேரனுக்கு பாம்பாக உருவகிக்கப்படும் குண்டலினி சாதனை செய்ய ஏது நேரம்??

      அதனால் குண்டலினி சக்தியை உயர்த்த அவன் எந்த யோகமும் செய்வதில்லை.

      பாம்பு, கீரியைக் கண்டால் படமெடுக்கும்.

      எனவே, குபேரனின் கையில் உள்ள கீரியைப் பார்த்து குபேரனின் குண்டலினி சக்தி படிப்படியாக உயரும் என்பதை உணர்த்தவே குபேரன் கையில் கீரிப்பிள்ளை.

      Delete
    4. //தேவி உபாசனையால் சகல சௌபாக்கியங்களைப் பெற்ற குபேரன் யோக சாதனை செய்ய நேரமில்லாதிருப்பவர். //

      ஆஹா ! நல்லாவே புரிகிறது !! தினமும் விடிந்தால் ஒரு பதிவு கொடுத்தாக வேண்டுமே !!! எப்படி நேரம் இருக்கும்?

      நவநிதிகளையும் கட்டிக்காக்கும் உயர்ந்த பொறுப்பிலுள்ள தங்களைப்போன்ற குபேரன் வாழ்க !

      //குண்டலினி சாதனை செய்ய ஏது நேரம்??//

      ’சுண்டைக்காய்’ விஷயத்திற்குப்போய் குண்டலினி போன்ற கஷ்டமான செயல்களைச் செய்யவே வேண்டாம். விட்டுடுங்கோ.

      //பாம்பு, கீரியைக் கண்டால் படமெடுக்கும். //

      படமெடுக்கும் பாம்பையும் கீரி கடித்துக் குதறிவிடும் என்பார்கள். கேள்விப்பட்டுள்ளேன்.

      //எனவே, குபேரனின் கையில் உள்ள கீரியைப் பார்த்து குபேரனின் குண்டலினி சக்தி படிப்படியாக உயரும் என்பதை உணர்த்தவே குபேரன் கையில் கீரிப்பிள்ளை. //

      எவன் கையில் எதை வைத்திருந்தால் எனக்கென்ன ? நான் ஏதோ கேட்கப்போய் ஏதேதோ விளக்கங்கள் ............. ஆனால் அனைத்தும் அருமையோ அருமை ..... நன்றியோ நன்றிகள்.

      Delete
    5. ஓர் சிறிய திருத்தம்:

      //நவநிதிகளையும் கட்டிக்காக்கும் உயர்ந்த பொறுப்பிலுள்ள தங்களைப்போன்ற குபேரன் வாழ்க !//

      என்பதை

      நவநிதிகளையும் கட்டிக்காக்கும் உயர்ந்த பொறுப்பிலுள்ள குபேரனைப்போன்ற ’தா-ங்-க-ள்’ வாழ்க !

      என மாற்றிப்படிக்க வேண்டுமாய் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  7. இன்றைய வலைச்சரத்தில் [02 05 2014] தங்களின் முத்திரை பதித்த பதிவு ஒன்று என் அன்புத்தங்கச்சி நிர்மலா அவர்களால் அடையாளம் காட்டி பாராட்டிப் பேசப்பட்டுள்ளது. அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ஸ்ரீசூக்தம், மகாலக்ஷ்மி அஷ்டகம், குபேர மந்திரம் என்று இன்றைய வெள்ளிக்கிழமையை விசேஷமாகச் செய்துவிட்டீர்கள்!

    ReplyDelete
  9. அக்ஷய திரிதியை அன்று மங்கலகரமான பதிவு.
    மேலும் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம்.. மகிழ்ச்சி...

    ReplyDelete
  10. ஐஸ்வர்ய மகாலட்சுமி பற்றிய பதிவு இன்றைய தினதில் சிறப்பு. அழகான படங்களுடன் அருமையான பதிவு.

    ReplyDelete
  11. சிறப்பான பகிர்வு அம்மா... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. அக்ஷய திருதியை பற்றிய பல தகவல்கள்.... படங்கள் அனைத்துமே மிக அருமை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete