Sunday, August 30, 2015

கோவை சந்தோஷ சாலை


images-6


 ...

தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் சந்தோஷ சாலை என்ற திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரத்தினசாமிபுரம் திவான் பகதூர் சாலையும், திரவேங்கடசாமி சாலையின் மேற்குப்ப குதியும் சந்திக்கும் இடம் சந்தோஷ சாலையாக தேர்ந்தெடுக்கப்பட்டு
ஆகஸ்டு 9ம் தேதி முதல் கோவையில்   "சந்தோஷ சாலை" ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 52 வாரங்கள் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Displaying IMG_20150823_083427.jpgDisplaying IMG_20150823_083857.jpgDisplaying IMG_20150823_083429.jpg
காலை 3மணி நேரத்திற்கு இந்த சாலையில் காலை வாரா வாரம் ஒரு நாள், காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்படும்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை விளையாடலாம் ஜாலியாக சாலையில், சைக்கிள் ஓட்டுதல், யோகா நடனம் மற்றும் கால்பந்து, கிரிக்கெட், பூப்பந்து போன்ற விளையாட்டுக்கள் மிகுந்த உற்சாகத்துடன் சாலையில்
நிகழ்வுகள் நடக்கும்.

இந்த நேரத்தில் குறிப்பிட்ட இந்த சாலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் எல்லாம் தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.

மாசில்லாத பகுதி போக்குவரத்து அறவே இல்லாத சாலையாக மாற்றப்பட்டு மாசு இல்லாத பகுதியாக மூன்று மணி நேரம் மட்டும் செயல்படும்.
 
 கோயம்புத்தூர் காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துணை ஆணையாளர்களால் இந்த முயற்சிக்கான முதல்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஆர்யா
கலந்து கொண்டார்.

ஞாயிறு தோறும் இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை  நிகழ்வுகள் நடக்கும்.

இந்த நேரத்தில் குறிப்பிட்ட இந்த சாலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் எல்லாம் தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.


13 comments:

  1. கோவையில் சந்தோஷ சாலை!..

    சந்தோஷமான செய்தி..

    இப்படியே எல்லா நகர்களிலும் சந்தோஷ சாலை அமையட்டும்..

    ReplyDelete
  2. நல்லா இருக்கே! கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
    சந்தோஷம் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல திட்டம்... காவல்துறைக்கும் அமைப்பு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்... தொடரட்டும்

    ReplyDelete
  4. நீங்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்... நன்றி....

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

    ReplyDelete
  5. சாலையில் அரை நாள் செயல்பாடு என்பதை விட அருகில் இருக்கும் ஒரு பகுதியை சொல்லப் பட்டகார்ணங்களுக்காக உபயோகிக்கலாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  6. அருமையான திட்டம்
    மகிழ்சிசாலை தொடரட்டும்

    ReplyDelete
  7. மிக மகிழ்ச்சியான செய்தி. சென்னையிலும் வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  8. இதனால் என்ன பலன் என்று சரியாக விளங்கவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. நானும் நிறையப்பேரிடம் கேட்டுப்பார்த்தேன்.. எல்லோரும் புன்னகையுடன் கடந்து போய் திருவிழாக்கூட்டத்தில் கலந்துவிட்டார்கள்...!

      அதிகாலை நடைப்பயிற்சிக்கு பந்தய சாலை -ரேஸ்கோர்ஸ் சென்றால் கூட்டமான கூட்டம்.. இடிபாடுகளில் நடக்கப்பிடிக்காமல் திரும்பிவந்துவிடுவது உண்டு..

      வனக்கல்லூரி -பாரஸ்ட் காலேஜ் சென்றால் அதைவிட கூட்டம்..
      அங்கு நடைப்பயிற்சிக்கு குறிப்பிட்ட தொகை கட்டி அடையாள அட்டை வாங்கவேண்டும்.. வருடாவருடம் தொகை கட்டி புதுப்பிக்க வேண்டும்..
      நடைபயிற்சியின் போது மறக்காமல் அந்த அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும்..

      நம் தெருவில் மைக் போட்டு அழைத்து , ஹெல்ப் டெஸ்க் ஏற்பாடுசெய்து, சைக்கிள்கள், புஷ் பைக்குகள் கொடுத்து, மேடை அமைத்து அதில் நடனம், கராத்தே , சிலம்பம் ஏரோபிக் டான்ஸ் எல்லாம் திருவிழாக்கொண்டாட்டமாக நம் இல்லத்து வாசற்படியில் நடக்கும் போது உற்சாகத்தை உணரமுடிகிறதே..!
      52 வாரங்களுக்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்..மக்களும் வரவேற்கிறார்கள்..!

      Delete
    2. வரவேற்க வேண்டியது தான். இதனால் போக்குவரத்து நெரிசல் இன்னொரு இடத்தில் கூடுமென்ற சாத்தியத்தை முன்னிறுத்திப் பார்த்தால் இது அனாவசியமாக உணரப்படலாம். ஒரு குறிக்கோளுடன் செயல்படுத்தப் படாத எந்தப் பொதுக்கொள்கையும் சரியான பலனளிப்பதில்லை.

      ஒரு சமூக உணர்வை ஏற்படுத்த வேண்டுமானால் இது போன்ற நிகழ்வுகள் பயன்படலாம். உண்மையான பலன் என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அறுபது வாரங்கள் காத்திருக்க வேண்டுமா?!

      Delete
    3. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரைதானே கொண்டாட்டம்..!
      அன்று அந்த நேரத்தில் அதிகம் போக்குவரத்து இருப்பதில்லையே..!!

      Delete
  9. நல்ல தகவல் சகோதரி.
    மிக்க நன்றி...

    ReplyDelete
  10. நல்ல செய்தி அம்மா...
    சில படங்கள் திறக்கவில்லை...
    எனக்கு மட்டுந்தானா தெரியவில்லை...

    ReplyDelete