Thursday, August 27, 2015

ஸ்ரீ மகாலக்ஷ்மி விரதம்






நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுர பூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மகா மாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.


சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும், எல்லோருக்கும் விரும்பிய வரங்களைத்தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும், அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.

சித்தி புத்தி பிரதே தேவி புத்தி முக்தி பிரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

சிந்தனை, புத்தி, அறிவு, போகம் இவற்றைத் தருபவளும், 
மந்திர வடிவானவளும், எப்போதும் ஒளிமயமாகத் திகழ்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதி சக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக சம்பூதே மஹாலஷ்மி நமோஸ்துதே

தொடக்கமும், முடிவும் அற்றவளும், முதல் சக்தியும், மஹேஸ்வரியும், யோகத்தினால் தோன்றியவளும், யோகத்தினால் அவதரித்தவளும், யோகத்துக்கும் பலமானவளான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்

ஸ்தூல சூக்ஷ்ம மகா ரௌத்ரே மகாசக்தி மகோதரே
மகாபாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

கண்களுக்கு தெரிபவளும், புலப்படாதவளும், மிகுந்த ஆற்றல் உடையவளும், மகா பாவங்களைப் போக்குகிறவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

பத்மாஸன ஸ்திதே தேவி பரபிரம்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலஷ்மி நமோஸ்துதே
பத்மாசனத்தில் அமர்ந்தவளும் பரம் பொருள் ஆனவளும், பரமேஸ்வரியும், அகில உலகத்திற்கும் அன்னையுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா  மஹாலஷ்மி நமோஸ்துதே
வெண்ணிற ஆடை தரித்தவளும், பல வித அலங்கரங்களால் 
சிங்கரிக்கப் பட்டவளும்,  உலகம் முழுதும் பரவியிருப்பவளும் உலகங்களுக்கெல்லாம் தாயுமான மகாலக்ஷ்மி தேவியே 
உன்னை வணங்குகிறேன்.

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமந் நர:
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா

மகாலக்ஷ்மி தேவியே உன்னைப் போற்றும் இந்த எட்டுத் துதிகளையும் மனப்பூர்வமாக தினமும் சொல்பவர் யாவும் வெல்பாராகவும்
 ராஜ்யங்களை அடைந்தாராகவும் இருப்பார்

ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாஸநம்
த்விகாலம் ய: படேந் நித்யம் தனதான்ய ஸமந்வித:
 ஒரு நாளில் ஒரு முறை இத்துதியைச் சொன்னால் சகல பாவங்களும் நீங்கும். இரு முறை சொல்வோர் இல்லத்தில் தன தான்யங்கள் சேரும். 

த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாஸத்ரு விநாஸநம்
மஹாலக்ஷ்மி பவேந் நித்யம் ப்ரஸந்ந வரதா ஸுபா

மூன்று முறை சொல்வோர் உன் அருளை முழுமையாகப் பெற்று  
தன் எதிரிகளை வெல்வார்.. அந்த இடத்தில் அன்னையே 
நிலைத்து நிற்பார்..
.



11 comments:

  1. வரி வரியாக விளக்கங்களும்,

    .மகாலட்சுமி நமோஸ்துதே...

    ReplyDelete
  2. மகாலட்சுமி விரதம் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. ஆஹா.. இப்பத்தான் வரலட்சுமி விரதம் பற்றி மூசுயில கும்மியடிச்சோம்.. அதுக்குள்ளாற வந்துடுச்சா?
    நடுவில் இருக்கும் நீரலைப் படம் அருமை.

    ReplyDelete
  4. உங்களுடன் சேர்ந்து நாங்களும் வணங்குகிறோம்.

    ReplyDelete
  5. Mahalakshmi Mantra

    Om Shreem Hreem Shreem
    Kamale Kamalaleyi Praseed Praseed
    Om Shreem Hreem Shreem
    Mahalaxmiyei Namaha

    ReplyDelete
  6. மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம் பொருளுடன் பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.. நன்றி.

    ReplyDelete
  8. சிறப்பான விளக்கங்கள். உங்கள் புதிய பதிவு வந்ததகாத் தெரிந்தது ஆனால் வந்தால் காணவில்லை...

    ஓணாம்ஷதங்கள்! சகோதரி!

    ReplyDelete
  9. வழக்கம் போல அருமை.

    மஹாலெஷ்மி நமோஸ்துதே!

    ReplyDelete