Sunday, September 16, 2012

கருணைக் கடல் கணபதி



வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு


தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் வி - நாயகர் 


வினைகள் வேரறுப்பதால் வினாயகர்...

வினாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேற்கை தணிவிப்பான்
வினாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து
http://www.sivasiva.dk/sivasivamanagementsystem/vinayagar9.jpg
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து” அவ்வையார் வினாயகர் அகவலில் பல இடங்களிலும் வினாயகர் தன்னை ஆட்கொண்டு தனக்கு அருள் செய்த விதத்தினை கூறியுள்ளார்.

 ஓங்கார சொரூபமான விநாயகருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது. 

வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும்.
 பிடித்து வைத்தால் பிள்ளையார் - மஞ்சள் பொடி, பசும் சாணம் போன்ற பொருட்களினால் பிடித்து வைத்து பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபடலாம். 

மற்ற எல்லா வழிபாட்டிலும் மிக எளிமையாக வழிபடக் கூடியது வினாயகர் வழிபாடே. 
கயிலையில் நடனமாடிக் கொண்டிருந்த விநாயகரின் நடனத்தை பார்த்து சந்திரன் ஏளனமாக சிரித்ததால் கோபம் கொண்ட வினாயகர் சந்திரனை  நீசனாக சபித்ததால்  சந்திரன் கலையிழந்து தேய்ந்து மெலிந்தான். 

சந்திரன் தன் செய்கைக்கு மிகவும் வருந்தி  வினாயகரயே சரண் அடைந்தான். 
தன்னை சரண் அடைந்தோரிற்கு சகல நன்மைகளையும் தரும் கருணை கடலாம் மூஷிக வாகனன் எம்பெருமான் வினாயகரும் மனமிரங்கி சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் சந்திரனைக் காண்போர் வீணான சங்கடங்களிற்கு ஆளாவர்  - ஆனால் ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் விரதம் அனுட்டித்து வினாயகரை வணங்குபவர்கள் சகல சாப விமோசனமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்வர் என சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். 
அதனால்; தான் வளர்பிறையில் வரும் நாலாம் நாள் சந்தினை யாரும் இன்றும் பார்ப்பது கிடையாது.

 “நாலாம்பிறைச் சந்திரனை பார்த்தால் நாய் அலைச்சல்” என்று கூறுவர். ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியே வினாயகர் சதுர்த்தி நாளாகும்.


முழுக்க,முழுக்க சாக்லேட் மற்றும் பிஸ்கட்டுகளால் தயாரிக்கப்பட்ட  விநாயகர்

11 comments:

  1. வினாயகர் குறித்த படங்கள் அத்தனையும் மிகவும் அருமை.
    இந்த தங்களின் பதிவுகுறித்து "சூரியசிவா" தன்னுடய தளத்தினில் இணப்பு கொடுத்துள்ளார்!
    http://menakasury.blogspot.in/2012/09/vinayakan-vigneswaran-ganesa.html

    ReplyDelete
  2. படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அத்தனையும் அருமை! வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. எவ்வளவு அழகு அழகு...

    என்னுடைய ஃபேவரைட் வினாயகர்... அதுவும் விதம் விதமான வடிவில் அழகில் கொள்ளை கொள்கிறார்....

    பணத்தால் கும்பகோணம்...

    சாக்லேட், பிஸ்கெட்....

    தாழம்பூவா அது?? அதிலும் வினாயகர்...

    விதம் விதமான நர்த்தனமாடும் வினாயகர்....

    பார்த்துக்கொண்டே இருக்கலாம் அத்தனை அழகு....

    வாக்குண்டாம் நல்ல சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரலில் இந்த பாட்டு கேட்டிருக்கிறேன்... அருமையாக காலை புலரும்....

    அத்தனை சிரத்தையாக படங்களை சேகரித்து பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா...

    ReplyDelete
  5. பிள்ளையாரை மட்டும் தான் நாம் எந்த பொருளிலும் வடிவமைக்கலாம்... ரொம்ப எளிது கூட.... அருமையான இலைகளிலேயே பிள்ளையாரை வடிவமைத்திருப்பது சிறப்பு...

    ReplyDelete
  6. விதம் விதமாய் பிள்ளையார், கண்களுக்கு விருந்தளிக்கிறார், மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறார்.

    ReplyDelete
  7. சித்திதரும் விநாயகா வணங்குகின்றேன்.

    படங்கள் அத்தனையும் அருமை.

    ReplyDelete
  8. அனைத்து படங்களும் நல்ல தெளிவு! குறிப்பாக ஐந்தாவது படம் அப்பப்பா என்ன அழகு....வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்!

    ReplyDelete
  9. அனைத்து தகவல்களையும் அள்ளித்தந்து விடுவதால், ஆன்மீகப் பதிவர்கள் திகைத்து விடுகின்றனர். நண்பர் ஒருவர் என்னிடம் கூறிய தகவல். அனைவரையும் திகைக்கும் வண்ணம், அழகு படங்கள், செய்திகளை சுவைபட ஆர்வமுடன் தரும் விதம் அருமை! வாழ்த்துக்கள்! கண நாதன் பற்றிய மற்றுமொரு பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  10. நல்ல படங்கள் ,நல்ல பாடல் எல்லாம் அருமை, அழகு.

    ReplyDelete
  11. கருணைக்கடல் கணபதியே!

    சரணம் உனக்கு.

    உன் கருணை என்றும் கடல் போலவே என் மீது வற்றாமல் இருக்கணுமப்பா!!

    அனைத்துப்படங்களும். விளக்கங்களும் வழக்கம் போல் அருமையோ அருமை.

    கடைசியாகக்காட்டியுள்ள [மொட்டைத்தலை] பச்சை கணபதி மட்டும் புதுமையாக உள்ளது. ஏற்கனவே பார்த்த ஞாபகம் இல்லை.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete