Sunday, September 30, 2012

பிரம்மோற்சவ விழா


ஆண்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும்  சிறப்பு வாய்ந்த.பிரம்மோற்சவ விழா  நாளில் பிரம்மனே வந்து பெருமாளுக்கு விழா எடுக்கிறார் என்பது நம்பிக்கை. 
பிரம்மோற்சவ விழா நாளில் காலையும், மாலையும் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.
karuda vahanam
தினம் தினம் ஒரு அலங்காரம், புதுப் புது வாகனம் என ஊர்வலம் வரும் மலையப்பசுவாமியின் அழகைக் காண கண்கோடி வேண்டும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்மோற்சவம் கருடக் கொடியேற்றத்துடன் தொடங்குவது சிறப்பு....
 பிரம்மோற்சவ விழா எப்போதும் வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். இந்த வருடம், இரண்டு முறை வந்துள்ளது. 
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ நிறைவு விழா 9ம் நாளில்  கோயிலை ஒட்டியுள்ள "புஷ்கரணி' எனும் புனித நீர் குளத்தில் சக்ர ஸ்நானம் நடைபெறுவது கண்கொள்ளாக்காட்சி !!
 
சந்திரப் பிரபை வாகனம்.
முழுதும் நல்ல வெண் முத்துக்களால் அலங்காரம். 
தக தக என்று ஒளிர் விடும் வெள்ளிப் பிரபை. 
முத்துக் கொண்டை;
மல்லிகை மலர்களால் ஆன தண்டு மாலை;
எல்லாமே வெள்ளை, நம் வெள்ளை உள்ளத்தானுக்கு!! 
கையில் வெண்ணெய்க் குடம் கூட உண்டு.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்!"
"
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் 
 விஷ்ணு பிரம்மோற்சவ விழா 

9 comments:

  1. மலையப்ப ஸ்வாமியின் மஹோன்னத தரிசனம்...

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பிரம்மோற்சவ விழா அருமையாக பார்த்து பரவசம் ஆனேன்.
    உங்களுக்கு நன்றி.
    படங்கள் எல்லாம் திருமலையில் பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டது.

    ReplyDelete
  3. பிரம்மோற்சவம்... இம்முறை இரண்டாவது முறையாக நிகழ்கிறதா?

    ReplyDelete

  4. இன்றைய சன் தொலைக்காட்சியில் ஒன்பது நால் விழாக்களையும் திருமலையானின் ஊர்வலத்தோடு , தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் கண்டு பிறகு வந்து வலையில் பார்த்தால் உங்கள் பதிவு. நிறைவாக இருக்கிறது.

    ReplyDelete
  5. திருமலை உற்சவத்தில் நானும் கலந்துகொண்டேன். ஆமாம் பிரசாதம் எங்கே?[!]

    ReplyDelete
  6. இனிய தரிசனத்துக்கு மிகவும் நன்றி. ஆஸ்ட்ரேலிய சந்திரப்பிரபை மிக அழகு.
    நன்றிமா.

    ReplyDelete
  7. பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டது போன்ற த்ருப்தி படங்களை பார்த்ததில்.
    பகிர்வுக்கு நன்றி.

    இன்று எனது பதிவு அப்டேட் ஆகவில்லை. ”சில நேரங்களில் சில மனிதர்கள்”.

    ReplyDelete
  8. பிரம்மோற்சவ விழா

    அழகிய பதிவு.

    புஷ்கரணியில் சக்ர ஸ்நானம்

    சந்திரப்பிரபை வாகனம்

    வெண்முத்து அலங்காரம்

    வெள்ளிப்பிரபை முத்துக்கொண்டை

    மல்லிகை மலர் தண்டுமாலை

    கையில் வெண்ணெய்க்குடம்

    போன்ற வர்ணனைகளும் படங்களும் அழகோ அழகு தான்.

    பாராட்டுக்கள்,
    வாழ்த்துகள்,
    நன்றிகள்.

    ooooo

    ReplyDelete
  9. அடுத்து வரும் மாணிக்க விநாயகர் லோக்கலாக இருப்பதால் நாளைக்குப்போய் பார்க்கிறேன்.

    இன்னும் 24 பதிவுகள் மட்டுமே பாக்கியுள்ளன என நினைக்கிறேன்.

    ஏதாவது விட்டுப்போய் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கோ, ப்ளீஸ்.

    இப்போ இத்துடன் GOOD NIGHT !

    BYE FOR NOW !

    ReplyDelete