Saturday, January 29, 2011

இந்திரனின் வஜ்ராயுதம்




இந்திரனின் வஜ்ராயுதம் மிகவும் பலம் வாய்ந்தது 
என்பது நமக்குத் தெரியும்
 
வஜ்ராயுதத்திற்கு அவ்வளவு சிறப்பு, மற்ற ஆயுதங்களுக்கு 
இல்லாத வலிமை எப்படி வந்தது தெரியுமா?



ததீசி முனிவர், பேராசையோ பொறாமையோ துளியும் இல்லாதவர். 

பாற்கடலைக் கடையும் பணி நடந்தபோது அவ்வளவு தேவர்களும், அஷ்டதிக் பாலர்களும், சகல தேவதைகளும் தாங்களது விசேஷமான சக்திகள் அடங்கிய ஆயுதங்களை ததீசி முனிவரிடம் தான் ஒப்படைத்தனர்.

ததீசி முனிவர் மிகசிறந்த ஆசாரசீலர். தன்னை நம்பி , பிறகு வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறி ஒப்படைத்த ஆயுதங்களைக் கண்போல் காக்க விரும்பினார்  ஆனால் பாற்கடல் கடையப்பட்டு அமுதமும் கிடைத்து விட்ட நிலையில் தேவர்களுக்கு இனி அந்த ஆயுதங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றிவிட்டது.

ததீசிமுனிவரிடம் வந்து ஆயுதங்களைத்திரும்பக் கேட்கவே இல்லை. வெகு நாள்வரை பாதுகாத்து வைத்து இருந்த முனிவர் யாரும் வந்து கேட்காத நிலையில், அவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல், அவ்வளவு ஆயுதங்களையும் பொடியாக்கி, அதை ஒரு உருண்டையாகச் சுருக்கி விழுங்கி, அந்த சக்திகள் அனைத்தும் தனது முதுகெலும்பில் உருக்கொள்ளுமாறு செய்து கொண்டார்.

இதனால் தான் அவரது முதுகெலும்பு உலகில் அவ்வளவு ஆயுதங்களாலும் ஏதும் செய்ய இயலாத ஒரு சிறப்பு கொண்டதாக மாறி இருந்தது.


அனைத்து ஆயுதங்களும் உருத்திரண்ட ததீசி முனிவரின் முதுகெலும்பால் ஒரு ஆயுதம் செய்தால், அந்த ஆயுதமே விருத்திகாசுரனை அழிக்கும் என்று விஷ்ணுமூர்த்தி இந்திரனுக்குக் கூறினார்.

தமிழ் திரைப்படம் பாபாவிலும் நமது சூப்பர் ஸ்டாரின் முதுகெலும்பு வேணும் என்று வில்லன் கொக்கரிப்பது ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!


தேவலோக சிற்பி விஸ்வகர்மா ததிசி முனிவர் உயிர் தியாகத்திற்கு பிறகு அவரது முதுகெலும்பிலிருந்து சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தை வடிவமைத்து இந்திரனுக்குக் கொடுத்தார்.


இந்திரன், ஐராவதம், வஜ்ராயுதம்

5 comments:

  1. Great Going Raji. kalakareenga!!!

    ReplyDelete
  2. அருமையான புராணம்.

    ReplyDelete
  3. //தேவலோக சிற்பி விஸ்வகர்மா ததிசி முனிவர் உயிர் தியாகத்திற்கு பிறகு அவரது முதுகெலும்பிலிருந்து சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தை வடிவமைத்து இந்திரனுக்குக் கொடுத்தார்.//

    வியப்பூட்டும் தகவல்.

    பாபா படத்தில் வரும் ஒரு காட்சியையும் நினைவுபடுத்தி, ஞாபகம் வருதே என்று சொல்லி [மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் இணைப்புக் கொடுத்ததுபோல] நடுவில் இணைத்துள்ளது, தங்களின் நல்லதொரு நகைச்சுவை உணர்வைக் காட்டுகிறது.

    ReplyDelete
  4. அருமையான் பகிர்வுகள்.. பாரட்டுக்கள்.

    ReplyDelete