Sunday, September 9, 2012

கிருஷ்ண லீலை







புராண காலத்தில் ட்சிண துவாரகை என்று பெயர் பெற்ற ராஜமன்னார்குடி திருத்தலத்தில் கோபில, கோபிரலய என்ற இரு முனிவர்கள் பகவான் கிருஷ்ணன் அவதரித்த காலத்தில் நடத்திய லீலா விநோதங்களை நேரிடையாகத் த் தரிசிக்க வேண்டும்'' என்று தவமிருந்தார்கள்.

முனிவர்களின் ஆசை தீர 32 விதமான திருக்கோலங்களுடன் கிருஷ்ணலீலைகளைப் புரிந்து காட்டி அருள்பாலித்தார் பகவான். 

இதில் 32-ஆவது திருக்கோலமாக- ருக்மணி, சத்யபாமா சமேதராக மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் மன்னார்குடியில் இருந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று முனிவர்கள் வேண்டினர். 

அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கிய பகவான் மன்னார்குடியில் உற்சவப் பெருமாளாக- மாடுமேய்க்கும் திருக்கோலத்தில் ராஜகோபால சுவாமியாக இன்றும் சேவை சாதிப்பதனாலேயே தட்சிண துவாரகை என்று போற்றப்படுகிறது.

மதுராவில் அவதரித்த கண்ணன், ஆலிலையில் தோன்றி, அரச மரத்தடியில் நிறைவுற்றார்.

கேரளா மாநிலம் குருவாயூரில், குழந்தை வரத்திற்கான பூஜையில் சிவப்பு, கருப்பு வண்ணங்களுடன், சிறிய உருண்டை வடிவில் குண்டுமணிக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

 பாத்திரத்தில் குண்டுமணிகளை நிரப்பி வைத்து இரு கைகளும் சேர்த்து முடிந்தளவு குண்டுமணிகளை அள்ளியபின், குழந்தை வரம் குறித்த கோரிக்கையை மனம் உருகி வேண்டிய பின்னர் அதே பாத்திரத்தில் விட்டு விடுவர். 

கோயில் மட்டுமின்றி கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) நாட்களில், வீடுகளிலும் இதுபோன்ற பூஜைகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 தமிழகத்திலும் சில பகுதிகளில், இந்த அர்ச்சனை முறை காணப்படுகிறது. 




கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகு - இறுக்கி அமைத்த திறத்திலே 

கான மயிலாடும் மோனக்குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலே 
குழல் முதல் எழிலிசை, குழைய வரும் இசையில் - 
குழலொடு மிளிர் இளங் கரத்திலே 
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு - நளினமான சலனத்திலே 



காளிங்கன் சிரத்திலே பதித்த பதத்திலே 
என் மனத்தை இருத்திக் கனவு நனவினொடு 
பிறவி பிறவி தொறும் கனிந்துருக வரம்தருக பரங்கருணை.... 

பால் வடியும் முகம்  நினைந்து நினைந்தென் உள்ளம் 
பரவசம் மிக வாகுதே - கண்ணா! 

14 comments:

  1. கண்ணன் என்றாலே அழகுதான். மயிலிறகில் கண்ணன் ஜொலிக்கும் காட்சி பார்க்க கண்கொள்ளா காட்சி.

    ReplyDelete
  2. கேரளா மாநிலம் குருவாயூரில், குழந்தை வரத்திற்கான பூஜையில் சிவப்பு, கருப்பு வண்ணங்களுடன், சிறிய உருண்டை வடிவில் குண்டுமணிக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

    பாத்திரத்தில் குண்டுமணிகளை நிரப்பி வைத்து இரு கைகளும் சேர்த்து முடிந்தளவு குண்டுமணிகளை அள்ளியபின், குழந்தை வரம் குறித்த கோரிக்கையை மனம் உருகி வேண்டிய பின்னர் அதே பாத்திரத்தில் விட்டு விடுவர்.

    வணக்கம் சகோ அருமையான தகவல்களுடன் அழகிய படங்கள் .
    மேலே உள்ள தகவலை நான் இப்போதுதான் அறிந்தேன் .மிகவும்
    ரசித்தேன் !..மிக்க நன்றி பகிர்வுக்கு மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. இரண்டு பவுர்ணமி போல சைவர்களுக்கு சென்ற மாதமும் வைணவர்களுக்கு இந்தமாதமும் "கோகுலாஷ்டமி".

    ஸ்ரீகிருஷ்ணலீலை மிக நன்று.

    ReplyDelete
  4. மயில் பீலி சூழ குழந்தை கண்ணன்--அருமை

    ReplyDelete
  5. முதல் படம் சிலிர்க்க வைக்கிறது.
    கண்ணன் ஆடை ஆபரணத்திற்குள் நீரோட்டம்!

    ReplyDelete
  6. வெண்ணை திருடியவன் கண்ணையும் கவருகிறார்

    ReplyDelete
  7. க‌ருத்த‌ குழ‌லொடு நிறுத்த‌ ம‌யில் சிற‌ கிறுக்கி அமைத்த‌ திற‌த்திலே...

    பாட‌ல் வ‌ரிக‌ள் க‌ண்ண‌ன் க‌வின‌ழ‌கை க‌ண்முன் நிறுத்திய‌தோடு ம‌ட்டுமின்றி இப்பாட‌லைத் த‌ன் அபிமான‌ப் பாட‌லாக‌ எப்போது கேட்டாலும் குயில்குர‌லில் பாடும் என‌த‌ன்புத் தோழி சுகுணாவின் நினைவையும் கிள‌றி விட்ட‌து தோழி!

    அவ‌ள் குர‌ல் நிலைத்திருக்கிற‌து ம‌ன‌த்த‌ட‌த்தில்... அவ‌ளில்லா இவ்வுல‌கில்.

    ReplyDelete
  8. மனத்தினை கொள்ளையடிக்கும் பதிவு! கள்ளன் கண்ணன் மனதினை மட்டுமல்ல சிந்தையையும் சேர்த்து கொள்ளையடித்து விட்டான். கண்ணனைப் போல சகோதரி நீங்களும் மனதினை கொள்ளையடிக்கின்றீர்கள் கண்ணைக் கவரும் அழகுப் படங்களுடன், சிந்தைக் கவரும் பதிவுகளுடன். நன்றி தங்களுக்கு!

    ReplyDelete
  9. படங்களும் தகவல்களும் அருமை! ராஜ மன்னார்குடி என் சொந்த ஊர். அதனால் பெருமை சற்று கூடுதல்!

    ReplyDelete
  10. கண்ணன் அழகுள்ளவர்...

    பதிவும் அழகாய் உள்ளது.

    ReplyDelete
  11. " கண்ணன் ஒரு கைக் குழந்தை கண்கள் இரண்டும் பூங்கவிதை" என்று பாடத் தோன்றுகிறது.


    ReplyDelete
  12. kannan with flute is very beautiful

    ReplyDelete
  13. ”கிருஷ்ண லீலை” என்ற இந்தப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

    ஆலிலையில் தோன்றி அரசமரத்தடியில் நிறைவு ;)

    கடைசி படம் நல்ல கவரேஜ். கீழிருந்து நாலாவது படம் சூப்பர்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ ந்ன்றிகள்.


    ReplyDelete