
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
காரணவிநாயகர் கோயில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் ஏதோ காரணத்தால் விநாயகர் அமர்ந்த காரணத்தால் இவரை காரண விநாயகர் என்றே அழைக்கின்றனர்.
விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.
மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோயிலும் கட்டினர்..
ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ் வழியே ரோடு அமைப்பதற்காக கோயிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோயிலை அகற்ற ஏற்பாடு செய்தனர்.
அன்று இரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது. இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோயில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது காணலாம் ..
ஊட்டி போன்ற மலைவாசஸ்தலத்துக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள காரணவிநாயகர் ஆலயத்தில் வாகனத்தை நிறுத்தி ஆலயத்துக்குள் சென்று வணங்கி வாகனத்துக்கு சற்று ஓய்வு கொடுத்தபின்பே மலைப்பாதையில் வாகனத்தை செலுத்துவது எப்போதும் வழக்கமாக கொண்டிருக்கிறோம்..
ஒரு முறை இந்த வழியில் பயணம் செய்து மலைப்பாதையில் சென்றபோது காரின் டயர் பஞ்சராகிவிட்டது .. அருகில் இருந்த ஒர்க்ஷாப்பில் கணவர் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருப்பதை மேற்பார்வையிட்டு உதவிக்கொண்டிருந்தார்..
நான் குழந்தைகளுடன் அருகில் இருந்த பாறைமீது அமர்ந்து இருந்தேன் .. அங்கிருக்கும் மின்மின்ப்பூச்சிகளைப்பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மகன்கள் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்..
அந்த ஆளரவமற்ற கல்லட்டி மலைச்சாலையில் பறை ஒலி முழக்கிக்கொண்டு ஆதிவாசிகள் ஊர்வலம் ஒன்று பொன்னியின் செல்வன் கதையில் படித்த மாதிரி சுளுந்துகளையும் தீப்பந்தங்களையும் கைகளில் பிடித்தவாறு வந்த கூட்டம் .வட்டமாக நின்று நடுவில் தீப்பந்தகளை சுற்றி நடனமாடினார்கள்.. வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தோம்..
சற்று நேரத்தில் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்..
ஒர்க்ஷாப்காரரை விசாரித்தோம் . சுற்றியுள்ள மலைஜாதி மக்கள் திருமணச்சடங்கு என்று தெரிவித்தார்கள்..இந்தக்கண்கொள்ளாக்காட்சிகளைக் காணத்தான் வழிதவறி வந்து டயர் பஞ்சராகி நின்றதோ..!
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T1_285.jpg)

இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தவர்களின் . ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.
ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர்.
தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது.
உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை.
எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது.
பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.
விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T3_285.jpg)
காரணமுருகன், ஆஞ்சநேயர் சன்னதிகள் உண்டு..

![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T5_285.jpg)

![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T7_285.jpg)

![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T9_285.jpg)

