Saturday, September 29, 2012

மாணிக்க விநாயகர்




மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே

மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், 
மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், 
மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று சிவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி மனங்கனிந்து வணங்கினோர்களுக்கு விரும்பிய வரங்களைத்தரும்  முக்கண்ணனின் மூத்த புதல்வர் விநாயகர்... எல்லாவற்றிற்கும் மூலமாய் விளங்குவதால் விநாயகரே முழு முதற் கடவுள் 

எந்த கோயிலாக இருந்தாலும்  முகப்பில் பிள்ளையார் பெற்ற 
வரத்தின் படி பிள்ளையார் கோயில் இருக்கும்  முறை 
பிள்ளையார் கோவிலிலேயும் இருக்கிறது.

 மலையடிவாரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் மாணிக்க விநாயகரை தரிசித்து மலையேறலாம்...

 மலைக்கோயில் நுழைவாயிலில் சித்தி விநாயகர் எனும் பெயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர். மாணிக்கம் பிள்ளை எனும் பக்தர் நித்ய பூஜைகள் நடத்த தேவையான உதவிகளை செய்ததோடு வழிபாடு தொடர்ந்து நடக்கவும் ஆவன செய்த நினைவாக சித்தி விநாயகர் மாணிக்க விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்....

 ஒருநாளுக்கு இருமுறை அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

அனைத்து சதுர்த்தி தினங்களிலும் திருவீதியுலா நடைப்பெறுகிறது.

விபீஷணர் இராமரிடம் பெற்று வந்த அரங்கநாதர் விக்ரகத்தை விநாயகரிடம் அந்தண சிறுவன் வடிவிலிருந்த விநாயகரிடம் கொடுத்ததும் அதை அவர் பூமியில் வைத்து விட்டு மலை உச்சிக்கு ஓடி வந்து உட்கார்ந்து கொண்டாராம். காவிரியில் நீராடி முடித்த விபீஷ்ணன் விக்ரகத்தை எடுத்துப் பார்த்து முடியாமற் போகவே கோபம் கொண்டு சிறுவனை தேடிப் பார்த்தும் கிடைக்காமற்போகவே விநாயகர் தலையில் ஓங்கி குட்டியதாகவும், அரங்கநாதன் திருவரங்கத்திலேயே தங்கி விட்டதாகவும் ஒரு கதை உண்டு.உச்சி விநாயகரின் தலையில் குட்டு விழுந்ததற்கான பள்ளம் இன்றும் உள்ளது ஆச்சரியப்படுத்துகிறது.


  • விநாயகர் சதுர்த்தி அன்று மாணிக்க விநாயகர் மற்றும் உச்சி பிள்ளையாருக்கு 50 கிலோ பச்சரிசி, 50 கிலோ உருண்டை வெல்லம், 2 கிலோ எள், 1 கிலோ ஏலக்காய், சாதிக்காய், 6 கிலோ நெய், 100 தேங்காய் ஆகியவற்றை கொண்டு 150 கிலோ எடையில் ஒரே கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு நைவேத்தியமாக படைக்கப்படுகிறத
படிமம்:ROCK FORT.jpg





 

17 comments:

  1. எந்த கோயிலாக இருந்தாலும் முகப்பில் பிள்ளையார் கோயில் இருக்கும். அதனால் உச்சிப் பிள்ளையாருக்கும் அடிவாரத்தில் மாணிக்க விநாயகராக இருக்கிறார் என்ற கருத்து அருமை. எங்கள் ஊர் திருச்சியில் இருக்கும் பிள்ளையாரைப் பற்றி பதிவு செய்தமைக்கு நன்றி! பெரும்பாலும் கோயில் பற்றிய உங்கள் பதிவுகளில் கோயில் யானையின் படமும் வருகின்றது. நல்லது.

    ReplyDelete
  2. 2
    -

    இந்த் ஆண்டின்

    வெற்றிகரமான

    3 0 0 ஆவது

    பதிவுக்கு

    இனிய

    நல்

    வாழ்த்துகள் !

    -oOo-

    ReplyDelete

  3. இரண்டு படங்கள் திறக்கவில்லை. மலைக் கோட்டை உச்சி பிள்ளையாரை தரிசிக்க, மலை ஏறவேண்டும். முடியாதவர்கள், அடிவாரத்தில் மாணிக்க விநாயகரை தரிசனம் செய்து, திருப்தி அடைவதுண்டு. இரண்டுக்கும் இடையே தாயுமானவர் சந்நதியும் மட்டுவார் குழலம்மை சந்நதியும் பிரசித்தம். அங்குள்ள மேல் விதானத்தில் வரையப்பட்டு இருக்கும் ஓவியங்கள் அழகானவை. யாளியின் வாயில் உருளும் பந்து, கல் சங்கிலி எப்பொழுது போனாலும் கவனத்தை ஈர்க்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக அழகிய பகிர்வு .மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. உச்சிப் பிள்ளையாரை வணங்குவோம்.

    ReplyDelete
  6. சிறப்பான பகிர்வு...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  7. ரொம்ப நாளாக வர முடியல்லே படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மாணிக்க விநாயகரை சமீபத்தில் தான் தரிசனம் செய்து வந்தேன்.

    ReplyDelete
  9. மாணிக்க விநாயகரை , தாயுமானவர், உச்சிபுள்ளையார் எல்லாம் தரிசனம் செய்து வெகு நாளாகிறது உங்கள் பதிவு பார்க்க ஆவலை ஏற்படுத்துகிறது.
    சில படங்கள் வரவில்லை, மீதி படங்கள் அழகு.

    ReplyDelete
  10. மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் திருத்தலம் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி! இரண்டாம் படம் செம அழகு & சில படங்கள் திறக்கவில்லை அக்கா! என்னவென்று கவனியுங்கள்!

    ReplyDelete
  11. உச்சி வருவோருக்கெல்லாம் - உனைச்
    சுத்தி வருவோருக்கெலாம்
    புத்தியும் முத்தியும் அளித்திடும் வினாயகா ! உனை யான்
    நித்தமும் வலம் வருவேன்.
    நிம்மதி பெற்றிடுவேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  12. 2
    -

    இந்த் ஆண்டின் வெற்றிகரமான

    3 0 0 ஆவது பதிவுக்கு இனிய

    நல்வாழ்த்துகள் !

    >>>>

    ReplyDelete
  13. திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாய்கர் பற்றிய செய்திகளைப்படிக்க மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

    உச்சிப்பிள்ளையார் தன் தலையில் குட்டு வாங்கியுள்ள கதையும் மிகச் சுவையாகவே சொல்லியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  14. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    மலைக்கோட்டை + உச்சிப்பிள்ளையார் பற்றிய படங்கள் பிரமிக்க வைக்கின்றன.

    யானைப்படங்களும் சூப்பரோ சூப்பர்.

    >>>>>>

    ReplyDelete
  15. 50 கிலோ பச்சரிசி
    50 கிலோ உருண்டை வெல்லம்
    02 கிலோ எள்ளு
    01 கிலோ ஏலக்காய்+ஜாதிக்கய்
    06 கிலோ நெய்
    100 தேங்காய்களின் துருவல்

    ஆகமொத்தம் 150 கிலோ எடையில் ஒரே கொழுக்கட்டை ... என்னே ஒரு இன்பகரமான அளவுக்கணக்கு.

    பிள்ளையார் சதுர்த்தி என்றால் சும்மாவா பின்னே?

    அந்தக்கொழுக்கட்டையை கீழேயுள்ள மாணிக்க விநாயகர் சந்நதியிலிருந்து தான் மேலே எடுத்துச்செல்வார்கள்.

    தூளியில் குழந்தையைப்போடுவது போல அந்த மிகப்பெரிய கொழுக்கட்டையைப்போட்டு, ஓர் மிகப்பெரிய மூங்கில் கழியில் அந்த தூளி போன்ற துணியை அப்படியே இணைத்து நிறைய பேர்களாகச் சேர்ந்து தூக்கிச்செல்வார்கள்.

    >>>>


    ReplyDelete
  16. ”மாணிக்க விநாயகர்”

    மிகச்சிறப்பான பதிவு.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான் இனிய நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    -oOo-

    [மின் தடை போன்ற பல தடைகள் நெருங்க உள்ளன ... அதனால் இப்போது என் செல்லப் பிள்ளையாருக்கு இத்துடன் Bye Bye ]

    ReplyDelete
  17. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (16/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete