பூமாதேவி ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமாக பெரியாழ்வாரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தனர்.
விஷ்ணுசித்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நந்தவனத்தை பராமரித்து, வடபத்ரசாயி பெருமாளுக்கு மாலை கைங்கர்யம் செய்து வந்தார்.
ஒரு ஆடிப்பூரத்தன்று கோயில் அருகில் இருந்த துளசித்தோட்டத்தில் ஒரு குழந்தையைக் கண்டெடுத்தார். அவளுக்கு "கோதை' என பெயர் சூட்டி வளர்த்தார்.
பெருமாள் மீது அதீத பக்தி கொண்ட ஆண்டாள் அவரையே திருமணம் செய்வதென முடிவெடுத்தாள்.
தன் தந்தை சுவாமிக்கு அனுப்பும் மாலைகளைத் தன் கழுத்தில் போட்டு அழகுபார்த்து அனுப்புவாள்.
ஒருமுறை, அவளது அழகுக்கூந்தலில் இருந்த முடி ஒன்று மாலையில் மாட்டிக் கொள்ளவே, ஆண்டாள் தந்தையிடம் மாட்டிக் கொண்டாள்.
பெருமாளுக்கு இப்படி அபச்சாரம் செய்யலாமா என அவளைக் கண்டித்தார். ஆனால், அன்று அவர் அணிவித்த மாலையை பெருமாள் ஏற்க மறுத்தார்.
தன் பக்தை அணிந்த மாலையே தனக்கு வேண்டுமெனக் கேட்ட பெருமாள், அவளை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படியும், அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்தார்.
பின், சுவாமியுடன் ஜோதி வடிவில் ஐக்கியமானாள் ஆண்டாள்.
ஒருமுறை, அவளது அழகுக்கூந்தலில் இருந்த முடி ஒன்று மாலையில் மாட்டிக் கொள்ளவே, ஆண்டாள் தந்தையிடம் மாட்டிக் கொண்டாள்.
பெருமாளுக்கு இப்படி அபச்சாரம் செய்யலாமா என அவளைக் கண்டித்தார். ஆனால், அன்று அவர் அணிவித்த மாலையை பெருமாள் ஏற்க மறுத்தார்.
தன் பக்தை அணிந்த மாலையே தனக்கு வேண்டுமெனக் கேட்ட பெருமாள், அவளை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படியும், அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்தார்.
பின், சுவாமியுடன் ஜோதி வடிவில் ஐக்கியமானாள் ஆண்டாள்.
ராஜாங்க கோலம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உற்சவர் ரங்கமன்னார், வலதுகையில் பெந்துகோல் (தற்காப்புக்குரிய கம்பு), இடக்கையில் செங்கோல் ஏந்தி, இடுப்பில் உடைவாள் செருகி, காலணி அணிந்து ராஜகோலத்தில் இருக்கிறார்.
ஏகாதசி, அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் மட்டுமே, விரதம் அனுஷ்டிக்கும் பொருட்டு இவர் வேஷ்டி அணிந்திருப்பார்.
மற்ற நாட்களில் நித்ய மணக்கோலம் என்பதால்
ராஜாங்க கால உடை அணிவிப்பர்.
மற்ற நாட்களில் நித்ய மணக்கோலம் என்பதால்
ராஜாங்க கால உடை அணிவிப்பர்.
ஆண்டாள், திருமாலின் அம்சமான கண்ணனையே விரும்பினாள்.
எனவே, இத்தலத்தில் பெருமாள், ஆண்டாளுக்கு கிருஷ்ணராக காட்சி தந்து அருள்புரிந்தார்.
எனவே, இங்குள்ள ரங்கமன்னார் கிருஷ்ணராகவும், ஆண்டாள் ருக்மணியாகவும், கருடாழ்வார் சத்தியபாமாவாகவும் அருளுவதாக ஐதீகம் உண்டு.
எனவே, இத்தலத்தில் பெருமாள், ஆண்டாளுக்கு கிருஷ்ணராக காட்சி தந்து அருள்புரிந்தார்.
எனவே, இங்குள்ள ரங்கமன்னார் கிருஷ்ணராகவும், ஆண்டாள் ருக்மணியாகவும், கருடாழ்வார் சத்தியபாமாவாகவும் அருளுவதாக ஐதீகம் உண்டு.
சிறப்பம்சம்: ஆண்டாள் கோயிலில் நடை திறக்கும் அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளை பார்ப்பதில்லை.
கதவை திறந்ததும் ஆண்டாளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியை பார்க்கின்றனர்.
பின் ஆண்டாள் முன் தீபம் ஏற்றுகின்றனர்.
திரையை விலக்கி, பக்தர்கள் ஆண்டாளைப் பார்த்த
பின்னரே அர்ச்சகர்கள் ஆண்டாளை பார்க்கின்றனர்.
கதவை திறந்ததும் ஆண்டாளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியை பார்க்கின்றனர்.
பின் ஆண்டாள் முன் தீபம் ஏற்றுகின்றனர்.
திரையை விலக்கி, பக்தர்கள் ஆண்டாளைப் பார்த்த
பின்னரே அர்ச்சகர்கள் ஆண்டாளை பார்க்கின்றனர்.
திருப்பதியிலும் ஆண்டாள் மாலை: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அவரது பிரம்மோற்ஸவ மாதமான புரட்டாசி கருடசேவை விழாவுக்கும், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அவருக்கு அணிவிக்கவும் கொண்டு செல்லப்படுகிறது.
ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலை, மஞ்சள் செவ்வந்தி, விருட்சி என்னும் சிவப்பு நிற இட்லிப்பூ, வெள்ளை சம்பங்கி, பச்சை மருள், கதிர்பச்சைப்பூ ஆகிய பூக்களாலும், துளசி இலையாலும் தொடுக்கப்படுகிறது.
இப்பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய
நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது.
மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர்.
‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது.
இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.
முப்பது நாள் கடுமையான நோன்பிருந்தாள். எண்ணியபடியே இறைவனையும் துணைவனாக அடைந்து விட்டாள்.
பூமியில் பிறந்தவர்கள், ஹரிநாமம் சொல்வதன் மூலம், நிச்சயம் அவனை அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள்.
பூமியில் பிறந்தவர்கள், ஹரிநாமம் சொல்வதன் மூலம், நிச்சயம் அவனை அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள்.
அவள் தியாகச் செம்மலும் கூட. திருமாலின் துணைவியான பூமாதேவியே, ஆண்டாளாக அவதரித்தாள்.
கலியுகத்தில், இறைவனை அடைய, நாமசங்கீர்த்தனமே உயர்ந்தது என்பதை உலகத்தாருக்கு எடுத்துரைக்க, பூலோகத்துக்கு செல்லும்படி லட்சுமியிடம் சொன்னார் திருமால்;
அவள் மறுத்து விட்டாள். “ஏற்கனவே சீதையாக பிறந்து, என் மேல் சந்தேகப்பட்டு, என்னைப் படுத்தியது போதாதா? இன்னொரு முறை பூலோகம் செல்லவே மாட்டேன்…’ என்றாள்.
பூமாதேவியை திரும்பிப் பார்த்தார் திருமால். பூலோகம் சென்றால் கஷ்டப்படுவோம் என்று தெரிந்தே, உலக நன்மைக்காக அவள் இங்கு வர சம்மதித்தாள்.
ஆண்டாள் எனும் பெயருடன், ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற புண்ணிய ஷேத்திரத்தில், பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள். இறைவனை அடையும் வழியை எடுத்துக்காட்டிய பிறகு, அவரோடு கலந்தாள்.
“இறைவா… என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து…’ என வணங்கினால்; இறைவன் நல்லருள் தருவான்.
தமிழக அரசின் சின்னம்: ஸ்ரீவில்லி புத்தூர் கோயில் கோபுரம் 11 நிலைகளுடன் 196 அடி உயரம் உடையது. சிற்பங்கள் இல்லாத இந்தக் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக உள்ளது. இங் குள்ள தேரும் மிகப்பெரியது.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 85 கி.மீ., தொலைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளது.
போன்: 04563- 260 254.
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!
கெளரி கல்யாண வைபோகமே லக்ஷ்மி கல்யாண வைபோகமே
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!
எங்கள் ஆண்டாளும் ரங்க மன்னாரை மணந்தாளே.
கொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி
மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் -
மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பில
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஸ்ரீ ரங்க மன்னா மணமகன் ஆனாரே நம்ம ஆண்டாளும் மணமகள் ஆனாளே
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்
கோதைக்கும் ரங்கனுக்கும் ஆனந்தம்
கோதைக்கும் ரங்கனுக்கும் ஆனந்தம்
நாம் செய்த பூஜா பலமும் இன்று பலித்ததம்மா - ஆனந்தம்
புனிதமான பொருட்களின் வடிவங்களை கோலத்தில் வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம். படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும்.
வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம்.
ஏறு முகமான பலனை இது தரும்.கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஜக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது. சகல நன்மையும் தரும்.
ஆஹா!
ReplyDeleteஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!
தலைப்பே ஒரே ஆனந்தம் தான்.
ஆனந்தமாகப் படித்து விட்டு வருவேன்.
படங்களும் பதிவும் அற்புதம்....
ReplyDeleteஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்று பாடத் தோன்றுகிறது.....
அருமையான பதிவு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
முதல் படத்தில் அந்த கஜலக்ஷ்மி நல்ல லக்ஷணமாக இருக்கிறாங்க!
ReplyDeleteதாமரைத்தடாகத்தில், பெரியதொரு செந்தாமரையில் அமர்ந்து, இரண்டு கரங்களில் இரண்டு செந்தாமரைகளைப் பிடித்துக்கொண்டு, இரு காதுகளின் அருகிலும் 2 மலர்ந்த செந்தாமரைகள் போல தலையில் சொருகிக்கொண்டு, சகல ஐஸ்வர்யத்தை மற்ற இரு கைகளாலும் அள்ளித்தரும் தனலக்ஷ்மியாக, பச்சைப்புடவை, அரக்கு ரவிக்கையில், சர்வ லக்ஷணங்களுடன் காட்டியுள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
மாலைகளைத்தூக்கிப்பிடித்து இரண்டு யானைகள், அவைகளும் அழகு தான்.
இரண்டாவது படமும் ரொம்ப டாப். வைரம் வைடூர்யம், தங்கம்,
ReplyDeleteமாணிக்கம், மரகதம், நீலம் போன்ற நவரத்தினக் கற்கள் ஜொலிக்க ஜொலிக்க, அந்த அம்மன் சர்வ அலங்கார பூஷிதயாய் அருமையாகக் காட்சி தருகிறாள்.
நாலாவது படத்தில் அந்த ஆண்டாள் எவ்ளோ அழகாக அம்சமாக அடக்கமாக அசத்தலாக, சிரித்த முகத்திலும் உடற்கட்டிலும் நல்ல தேஜஸுடன், அழகிய கொண்டையுடனும், நீண்ட மாலையுடனும், தோளில் கிளியுடனும், கிளிகொஞ்சுவதாக உள்ளது அந்தப்படம்.
ReplyDeleteசாமுத்ரிகா லக்ஷணங்கள் அனைத்துமே அமைந்துள்ளன. அதிலும் உங்களின் செந்தாமரைப்பூக்களே அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன.
படத்தை வரைந்தவர் நல்ல தேர்ச்சி பெற்ற ஓவியராகவே இருக்க வேண்டும். அவருக்கு என் பாராட்டுக்கள். தேடிப்பிடித்து அதைப் பகிர்ந்த உங்களுக்கும் தான்.
ஆண்டாளின் கண்ணாடி சேவையும், அதிலும் தான் மாலை போட்டுக்கொண்டு நிற்கும் பிம்பம் அவளுக்கு கண்ணனே மாலை போட்டுக்கொண்டு நிற்பதாக அவளின் கற்பனையில் தோன்றுவது போலக் காட்டியுள்ளது அருமை.
ReplyDeleteஇந்த ஆண்டாள் கதை எனக்கென்னவோ வேறு ஏதேதோ கதைகளை என் கற்பனையில், அடிக்கடிக் கொண்டு வந்து விடுவது உண்டு.
தூய்மையான மனப்பூர்வமான, மனம் முழுவதும் நிரம்பி வழியும் பக்தியும் அன்புமே இதன் பிண்ணனியில். ஒருவ்ரிடம் மற்றவர் டோட்டல் சரண்டர் - அதுதான் அன்பின் உச்சக்கட்ட பரமானந்த நிலை. அந்த நிலையில், அந்த சரணாகதியில் தான் பகவானை நாம் உணர முடியும், கண்ணால் காணவும் முடியும், அவனுடன் ஐக்யமாகவும் ’முடி’யும்.
ஆண்டாளுக்கு சாத்தப்படும் சில பூக்களை பார்த்ததில்லை.படங்கள் அருமை.
ReplyDeleteஆஹா, ஆண்டாளும் ரங்கமன்னாரும் திருமணக்கோலத்தில்
ReplyDelete[ஏனோ நம் பதிவர் மதுரகவி திருமதி ரமாரவி அவர்கள் இந்த இடத்தில் என் ஞாபகத்துக்கு வந்து போனார்]
இவர்களைத் திருமணக்கோலத்தில் கண்ட அந்த பச்சைக்கிளி படு விரைப்பாக ஒருவித கர்வத்துடன் பரவஸமாகப் பார்ப்பது போல காட்டியுள்ளதை கவனித்தீர்களா!
ஜோர் ஜோர் !
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
இந்த இடத்திற்கும் நன்கு பொருந்தும்.
’இறைவனை அடையும் வழியை எடுத்துக்காட்டிய பிறகு, அவரோடு கலந்தாள்’
ReplyDeleteஎன்பதற்குக்கீழே காட்டியுள்ள ஆண்டாள் படும் சூப்பரோ சூப்பர்.
இரண்டு அருக்கஞ்சட்டிகளைக்கவித்தது போல சூப்பர் கொண்டை, மஹா முரடான மாலை, அதன் மேல் கிளி, மிகப்பெரிய காசு மாலை, அழகான திருவாசி என அனைத்துமே ப்டு ஜோராக உள்ளன. அழகோ அழகு.;))))
நடுவில் பச்சைக்கல்லில் மார்பினில் காட்டியுள்ள மாணிக்கக்கல்லும் பளிச்.
//திரையை விளக்கி பக்தர்கள் ஆண்டாளைப் பார்த்த பின்னரே அர்ச்சகர்கள் பார்க்க முடியும்//
ReplyDeleteவியப்பான தகவல்..
வழக்கம் போல் படங்கள் தேர்வு அருமை...
ReplyDelete2011 எப்படி எப்படியெல்லாமோ சென்று விட்டது.. இனிவரும் 2012 ஆனந்தம்.. ஆனந்தம்... ஆனந்தமாக... இருக்கட்டும்..
ReplyDeleteஸ்ரீவில்லிப்பத்தூர் கோபுரமும், ஸ்வாமி அம்பாளும், தேரும் வெகு ஜோராகவே கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்களே!
ReplyDeleteசபாஷ். அதுவும் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. அதே ’கோபு+ரம்’ தானே தமிழக அரசு முத்திரைகளில் இன்றுவரைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது! அச்சா...பஹூத் அச்சா ஹை!
கடைசியில் எழுதியுள்ள விவாஹ ஊஞ்சல் நேர பாடல்கள் வெகு அருமை. தாங்களே நேரில் பாடுவது போல கற்பனை செய்துகொண்டேன்.
ReplyDeleteகொத்தோடு வாழைமரம்....
மாலை மாற்றினாள் கோதை .....
கெளரிக்கல்யான வைபோவமே ....
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ....
எவ்வளவு அழகான பாடல்கள் அவை!
எவ்ளோ மகிழ்ச்சிதரும் தருணங்கள் அவை!!
காத்திருக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும், அனைத்து வீடுகளிலும் இந்த மங்களமான பாடல்கள் விரைவில் ஒலிக்கட்டும்!!!
அதற்கு அந்த கோதை அருள் புரியட்டும். கல்யாண மாலைகள் நிறைய தொடுக்கப்படட்டும், அவை நன்கு வியாபாரம் ஆகட்டும்.
ஆண்டாள் விவாஹப்படங்கள் யாவும் அருமை; அதுவும் அம்மி மிதித்தல் படம் வெகு அருமை. ஆண் குனிந்து பெண்ணின் கால் கட்டை விரலைப் பிடித்து, அப்போதே டோட்டல் சரண்டர் ஆகும் கட்டமிது.
ReplyDeleteஅந்த நேரத்தில் ஆண்டாள் முகத்தில் ஏற்படும் வெட்கம் முகத்தில் சற்றே பிரதிபலிப்பது போலக் காட்டப்பட்டுள்ளதும் அருமையே.
எங்கிருந்து தான் இப்படியெல்லாம் பொருத்தமான படங்களாகப் பிடித்துத் தருகிறீர்களோ!
யானை வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு;
ReplyDeleteஅழகாக ஊர்ந்து வரும் தேர்கள்; மஹா முரடான மலைப்பாம்பு போன்ற தேர் வடக்கயிறுகள்!
அப்பா; கும்முனு இருக்கே.
கையாளவோ,அதைத் தூக்கவோ இழுக்கவோ எத்தனை மனித சக்திகள் தேவைப்படும் .... அம்மாடியோ!
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஆஹா!
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!
தலைப்பே ஒரே ஆனந்தம் தான்.
ஆனந்தமாகப் படித்து விட்டு வருவேன்.
ஆனந்தமான அமர்க்களமான
ஆரம்பத்திற்கு நன்றி ஐயா.
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteபடங்களும் பதிவும் அற்புதம்....
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்று பாடத் தோன்றுகிறது.....
அற்புதமான ஆனந்தமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்./
வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள் ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமுதல் படத்தில் அந்த கஜலக்ஷ்மி நல்ல லக்ஷணமாக இருக்கிறாங்க!
தாமரைத்தடாகத்தில், பெரியதொரு செந்தாமரையில் அமர்ந்து, இரண்டு கரங்களில் இரண்டு செந்தாமரைகளைப் பிடித்துக்கொண்டு, இரு காதுகளின் அருகிலும் 2 மலர்ந்த செந்தாமரைகள் போல தலையில் சொருகிக்கொண்டு, சகல ஐஸ்வர்யத்தை மற்ற இரு கைகளாலும் அள்ளித்தரும் தனலக்ஷ்மியாக, பச்சைப்புடவை, அரக்கு ரவிக்கையில், சர்வ லக்ஷணங்களுடன் காட்டியுள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
மாலைகளைத்தூக்கிப்பிடித்து இரண்டு யானைகள், அவைகளும் அழகு தான்./
சர்வ லக்ஷ்ணங்களுடன் இனிய கருத்துரைக்கு நன்றி ஐயா.
இதய கமலத்திலிருந்து ஆரம்பித்துக் காட்டப்பட்டுள்ள அனைத்துக்கோலங்களும் நல்ல அழகு தான்.
ReplyDeleteஇருந்தாலும் அந்த மாமிபோடும் இழை கோலம் ஜோராக உள்ளது. ஒயிட் கல்ரில் பிரைட்டாக அதுவும் தாமரைப்பூக்களுடன் நன்கு போடப்பட்டுள்ளது.
எனக்கு கோலங்களையும், மிகத்திறமையுடன் அசால்ட்டாக வேகமாக அழகாக கோலமிடுபவர்களையும் மிகவும் பிடிக்கும்.
உடனே போய் பாராட்டி விடுவேன். முடிந்தால் கோலத்தையும் அவர்களுடனேயே சேர்த்து போட்டோ பிடித்து வைத்துக்கொள்வேன்.
தொடரும்.. நடுவில் கம்ப்யூட்டரில் ஏதோ சிக்கல் .. இதையே 3 முறை அடித்தும் அனுப்ப முடியவில்லை.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஆண்டாளின் கண்ணாடி சேவையும், அதிலும் தான் மாலை போட்டுக்கொண்டு நிற்கும் பிம்பம் அவளுக்கு கண்ணனே மாலை போட்டுக்கொண்டு நிற்பதாக அவளின் கற்பனையில் தோன்றுவது போலக் காட்டியுள்ளது அருமை.
இந்த ஆண்டாள் கதை எனக்கென்னவோ வேறு ஏதேதோ கதைகளை என் கற்பனையில், அடிக்கடிக் கொண்டு வந்து விடுவது உண்டு.
தூய்மையான மனப்பூர்வமான, மனம் முழுவதும் நிரம்பி வழியும் பக்தியும் அன்புமே இதன் பிண்ணனியில். ஒருவ்ரிடம் மற்றவர் டோட்டல் சரண்டர் - அதுதான் அன்பின் உச்சக்கட்ட பரமானந்த நிலை. அந்த நிலையில், அந்த சரணாகதியில் தான் பகவானை நாம் உணர முடியும், கண்ணால் காணவும் முடியும், அவனுடன் ஐக்யமாகவும் ’முடி’யும்./
நாராயணனே நமக்கே பறைதருவான் என்று முழு நம்பிக்கையுடன்
கீதையின் சரணாகதித் தத்துவத்தை இனிமையாய் உணர்த்திய
ஆண்டாள் திருவடிகளே சர்ணம்
shanmugavel said...
ReplyDeleteஆண்டாளுக்கு சாத்தப்படும் சில பூக்களை பார்த்ததில்லை.படங்கள் அருமை./
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்.
தொந்திப்பிள்ளையாருடன் கூடிய முத்துக்கோலமும், மயில் கோலமும், அதற்கு அடுத்த கலர்பொடிக்கோலமும் [அது பூக்கோலம் போலவே உள்ளது] மிகவும் மனதைகவர்ந்தன.
ReplyDeleteமாட்டுக்கோலம் சுமார் தான்.
அடுத்ததில் அழகான கோலத்தின் மேல் எரியும் தீபம் வெகு அருமை. அமைதி, ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!
அகல்கள் ஏற்றியுள்ள ஜொலிக்கும் மயில் கோலத்தில், தோகையை நீக்கிவிட்டுப்பார்த்தால், அது பார்க்க மயில் போலவே எனக்குத் தெரியவில்லை. வேறு ஏதோ வாத்து போல உள்ளது. ஆனால் ஏதோ ஒன்று விளக்கொளியில் அதுவும் மிகவும் அழகே. கலையுணர்ச்சியுடன் செய்திருக்கிறார்களே, பாராட்டத்தான் வேண்டும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteAdvocate P.R.Jayarajan said...
ReplyDelete//திரையை விளக்கி பக்தர்கள் ஆண்டாளைப் பார்த்த பின்னரே அர்ச்சகர்கள் பார்க்க முடியும்//
வியப்பான தகவல்..
வழக்கம் போல் படங்கள் தேர்வு அருமை...
அருமையான கருத்தூரைகள் தந்து பதிவைப்பெருமைப்படுத்தியமைக்கு இனிய நன்றிகள்..
Advocate P.R.Jayarajan said...
ReplyDelete2011 எப்படி எப்படியெல்லாமோ சென்று விட்டது.. இனிவரும் 2012 ஆனந்தம்.. ஆனந்தம்... ஆனந்தமாக... இருக்கட்டும்..//
அனைவர் வாழ்விலும் ஆனந்தம் பொங்க இறைவனைப் பிரார்த்திப்போம்!
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஸ்ரீவில்லிப்பத்தூர் கோபுரமும், ஸ்வாமி அம்பாளும், தேரும் வெகு ஜோராகவே கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்களே!
சபாஷ். அதுவும் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. அதே ’கோபு+ரம்’ தானே தமிழக அரசு முத்திரைகளில் இன்றுவரைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது! அச்சா...பஹூத் அச்சா ஹை!/
தமிழக் அரசின் சின்னமான கோபுரம் தேருடன் திருநாளும் ஏழு பிறப்பிலும் எட்டும் அருமையான திருத்தலம்..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteகடைசியில் எழுதியுள்ள விவாஹ ஊஞ்சல் நேர பாடல்கள் வெகு அருமை. தாங்களே நேரில் பாடுவது போல கற்பனை செய்துகொண்டேன்.......
வேத வித்துக்களின் ஆசிகள்
மனதில் நம்பிக்கை விதைகளைதூவி வளர்க்கின்றன..
மனம் நிறைந்த நன்றிகள் அனைத்து கருத்துரைகளுக்கும் ஐயா..
கோலமிட்ட கைகளுக்கும், அதை பகிர்விட்டு பதிவாகத்தந்த தங்கள் தங்கக் கைகளுக்கும் அன்பான வணக்கங்கள்.
ReplyDeleteகடைசி படமும் நல்ல அழகான டிசைன், சூப்பராக உள்ளது.
தங்களின் இந்த 2011 ஆம் ஆண்டின் வெற்றிகரமான 375 பதிவைப் பார்த்ததும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே .....
என் என் வாய் முணுமுணுக்குது.
மிகக்கடுமையாகவே உழைக்கிறீர்கள்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்!
பிரியமுள்ள vgk
நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபதிவை படித்தபின் ஆனந்தம் ஆனந்தமே
ReplyDeleteகோதையின் அருள் பெற்றேன்
ReplyDeleteகோதையின் அருள் பெற்றேன்
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி -மற்றும் வை.கோ - இருவரும் அழகாக அற்புதமாக பதிவும் மறுமொழியுமாக படைப்பது நன்று. முதலில் பதிவினைப் படிப்பதா - படங்களைப் பார்ப்பதா - இரசிப்பதா - மறுமொழிகள் படித்து மகிழ்வதா ..... எதனைச் செய்வது முதலில் ... மூல உரையினை பொழிப்புரை பதவுரை விளக்க வுரை என மறுமொழிகள் வரும்போது - அடடா - எவ்வளவு அழகு ... எவ்வளவு நேர்த்தி - திறமை பளிச்சிடுகிறது.
ReplyDeleteஅனைத்துமே கண்டு மகிழ்ந்தேன்.
நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ
நட்புடன் சீனா
தொடர்வதற்காக
ReplyDeleteசரணாகதியே அனைத்திலும் உயர்ந்தது!
ReplyDeleteமார்கழிப் பொழுதில் ஆண்டாள் பற்றிய அதிசயங்களும், கோலப்பிரியர்களுக்கு அதையொட்டிய படங்களும் குறிப்புகளுமாக பதிவு பரிமளிக்கிறது.
நிலாமகள் said...
ReplyDeleteசரணாகதியே அனைத்திலும் உயர்ந்தது!
மார்கழிப் பொழுதில் ஆண்டாள் பற்றிய அதிசயங்களும், கோலப்பிரியர்களுக்கு அதையொட்டிய படங்களும் குறிப்புகளுமாக பதிவு பரிமளிக்கிறது./
அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇதய கமலத்திலிருந்து ஆரம்பித்துக் காட்டப்பட்டுள்ள அனைத்துக்கோலங்களும் நல்ல அழகு தான்.
இருந்தாலும் அந்த மாமிபோடும் இழை கோலம் ஜோராக உள்ளது. ஒயிட் கல்ரில் பிரைட்டாக அதுவும் தாமரைப்பூக்களுடன் நன்கு போடப்பட்டுள்ளது.
எனக்கு கோலங்களையும், மிகத்திறமையுடன் அசால்ட்டாக வேகமாக அழகாக கோலமிடுபவர்களையும் மிகவும் பிடிக்கும்.
உடனே போய் பாராட்டி விடுவேன். முடிந்தால் கோலத்தையும் அவர்களுடனேயே சேர்த்து போட்டோ பிடித்து வைத்துக்கொள்வேன்.//
என் மாமானர் அப்படித்தான்..
தீபாவளி , பொங்கல் மற்றும் விஷேச நாட்களில் பசுஞ்சாணத்தால் பச்சைப் பசேலென மெழுகி உயர்தர பச்சரிசியை கையால் அரைத்து வெள்ளை வெளேரென் ஐந்து மகள்களும், நாங்கள் நான்கு மருமகள்களுமாகப் போட்டியிட்டு போடும் கோலங்களை ரசித்து ஊக்கப்படுத்துவார்..
அதுவும் தோட்டத்தில் மிகப்பெரிய வாசலில் நான் மளமள என்ப்போடும் கோலங்களை பாராட்டி ரசித்து உற்சாகப்படுத்துவார்..
மலரும் இனிய நினைவுகள்....
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி -மற்றும் வை.கோ - இருவரும் அழகாக அற்புதமாக பதிவும் மறுமொழியுமாக படைப்பது நன்று. முதலில் பதிவினைப் படிப்பதா - படங்களைப் பார்ப்பதா - இரசிப்பதா - மறுமொழிகள் படித்து மகிழ்வதா ..... எதனைச் செய்வது முதலில் ... மூல உரையினை பொழிப்புரை பதவுரை விளக்க வுரை என மறுமொழிகள் வரும்போது - அடடா - எவ்வளவு அழகு ... எவ்வளவு நேர்த்தி - திறமை பளிச்சிடுகிறது.
அனைத்துமே கண்டு மகிழ்ந்தேன்.
நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ
நட்புடன் சீனா
cheena (சீனா) said...
தொடர்வதற்காக/
மகிழ்வதற்காக ரசித்து அளித்த அனைத்து கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள் ஐயா.
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி -மற்றும் வை.கோ - இருவரும் அழகாக அற்புதமாக பதிவும் மறுமொழியுமாக படைப்பது நன்று. முதலில் பதிவினைப் படிப்பதா - படங்களைப் பார்ப்பதா - இரசிப்பதா - மறுமொழிகள் படித்து மகிழ்வதா ..... எதனைச் செய்வது முதலில் ... மூல உரையினை பொழிப்புரை பதவுரை விளக்க வுரை என மறுமொழிகள் வரும்போது - அடடா - எவ்வளவு அழகு ... எவ்வளவு நேர்த்தி - திறமை பளிச்சிடுகிறது.
அனைத்துமே கண்டு மகிழ்ந்தேன்.
நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ
நட்புடன் சீனா
cheena (சீனா) said...
தொடர்வதற்காக/
மகிழ்வதற்காக ரசித்து அளித்த அனைத்து கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள் ஐயா.
pபடங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி
ReplyDeleteநாச்சியார் பெருமை பற்றி படித்து நிறைவடைந்தோம்! படங்களை எங்கு,எப்படி சேகரிக்கிறீர்களோ!
ReplyDeleteமார்கழி மாத சிறப்புப்பதிவு அருமை. படங்கள் அழகு.
ReplyDeleteஅம்பாளின் படங்கள் மனதுக்குள்
ReplyDeleteஆனந்தத்தை நிறுவுகிறது என்பது
உண்மையான உண்மை.
1789+15+1*+1=1806
ReplyDeleteதாங்களும் நிறைய பதில்கள் கொடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 6 தடவைகள் பதில் அளித்து கோலமிட்டுக்காட்டியுள்ளீர்கள். ;)))))))) தங்களின் மாமனார் போல தாங்கள் மளமளவென்று போட்ட கோலங்களாகிய பின்னூட்டங்களை நான் மிகவும் ரஸித்தேன்.
*இதிலும் நான் கொடுத்துள்ள ஒரேயொரு பின்னூட்டம் மட்டும் தங்களால் நீக்கப்பட்டுள்ளது. ;( ஏனோ தெரியவில்லை?
’போனதுபோக பொண்டாட்டி பிள்ளை மிச்சம்’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். எனினும் எனக்கு மனம் சமாதானம் ஆகவில்லை.
அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.