Monday, December 12, 2011

சுகம் தரும் சிம்ம சுதர்சனர்





ஸ்ரீ சுதர்சன ஹோமத்தில் ஸ்ரீ சுதர்சன மஹா மந்திரம்:

ஓம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய 
கோபீ ஜனவல்லபாய , பராய பரம புருஷாய, 
பரமாத்மனே பரகர்ம , மந்த்ர , யந்த்ர தந்த்ர 
ஔஷத அஸ்த்ர சஸ்த்ராணி ஸம்ஹர ஸமஹர 
ம்ருத்யோர் மோசய மோசய 
ஓம் நமோ பகவதே மஹா ஸூதர்சனாய தீப்த்ரே 
ஜ்வாலாபரிதாய ஸர்வ திக் க்ஷோபண கராய 
ஹூம் பட் பரப்ரஹ்மணே பரஞ்ஜோதிஷே ஸ்வாஹா //


இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சுதர்சனரை (சக்கரத்தாழ்வார்)  திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோயிலில் தரிசிக்கலாம். 

தல வரலாறு: குருக்ஷத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக, தாமிரபரணியில் நீராடி பாவம் போக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். 

அவர் இத்தலம் அருகே வந்தபோது, ஒரு மருதமரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது, மகாவிஷ்ணு அவனது கனவில் தோன்றி, ""தான்  மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி, அங்கு வந்து தன்னை வணங்கினால், பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும்'' என்றார்.

விழித்தெழுந்த அர்ஜுனன், மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு சென்றபோது, பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டான். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.

கறிவேப்பிலை சாதம்: கருவறையில் நீலமணி நாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியை போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் சுவாமிக்கு "கறிவேப்பிலை சாதம்', திருவோண நட்சத்திர தினத்தில் "பாயாசம்' நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, "அர்ஜுனபுரி ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு.

சிம்ம வாகனத்தில் சுதர்சனர் : இக்கோயிலில் உள்ள சுதர்சனர் தனிசன்னதியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சுவாமியையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் இருப்பது மற்ற இடங்களில் இல்லாத அதிசயம். இங்கு சுதர்சன ஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.


ஸ்ரீ சுதர்சன காயத்ரி:


ஸூதர்சனாய வித்மஹே 
ஜ்வாலா சக்ராய தீமஹி 
தன்ன சக்ர ப்ரசோதயாத்   


சிறப்பம்சம்: பெருமாள் கோயிலாக இருந்தாலும், சிவ அம்சமான தட்சிணாமூர்த்தியும் இங்கிருப்பது மற்றொரு சிறப்பு. சுவாமியின் கருவறை விமானத்தின் தென்புறத்தில் இருக்கும் இந்த தட்சிணாமூர்த்தி, மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் இரண்டே சீடர்களுடன் இருக்கிறார். இவரது அமைப்பும் வித்தியாசமானது. மற்ற கோயில்களில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டு முயலகனை மிதித்தது போல் இருப்பார். இங்கோ இடது கையை தரையில் ஊன்றி, ஒரு காலை ஐயப்பனுக்குரியது போல், மடக்கி காட்சி தருகிறார். 

முன்மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயரும், அருகிலுள்ள ஒரு தூணில் வலது கையை மேலே தூக்கியும், இடது கையை மார்பில் வைத்தபடியுமான கோலத்தில் மற்றொரு ஆஞ்சநேயரும் உள்ளனர்.இந்த இரட்டை ஆஞ்சநேயர்களை வணங்கினால், வேண்டியது நிறைவேறும் என்கிறார்கள்.

திறக்கும் நேரம்: காலை 7.30 - 10 மணி, மாலை 5.30 - 8.30 மணி.
திருவிழா: சித்திரையில் பிரம்மோற்ஸவம்


இருப்பிடம்: மதுரையில் இருந்து தென்காசி செல்லும் ரோட்டில் 135 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது.
போன்: 99657 61050



LORD SUDARSHANAR - Proddatur - KADAPPA DISTRICT, AP, INDIA.






26 comments:

  1. சுகம் தருவார் என்ற நம்பிக்கையுடன் சிம்ம சுதர்சனரை தரிஸித்து விட்டு பிறகு மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  2. முதல் படத்தில் கோபியர் கொஞ்சும் ரமணனாகிய கோபாலகிருஷ்ணனை அழகான ஆபரணங்களுடனும் புல்லாங்குழலுடனும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் ஒளியுடனும், வெற்றி மாலையுடனும் ஜொலிக்கச் செய்துள்ளீர்கள். அவர் அழகோ அழகல்லவா!;)))))

    ReplyDelete
  3. சிம்ஹ வாஹணங்களின் மேல் காட்டியுள்ள சக்ரத்தாழ்வார் மிகவும் இயற்கையாக ஜோராக உள்ளது.

    ReplyDelete
  4. அனைத்து நரசிம்ஹர் படங்களும் வெகு அருமை தான்.

    அந்த ஹனுமார் வடை+வெற்றிலை மாலையுடன், அழகான ரோஸ் கலர் மாலையில் ஜொலிக்கிறாரே!

    அது A1 படம். குரங்குசாமியையே மிக அழகாகக் காட்ட உங்களால் மட்டுமே முடியும்! ;))))))

    ReplyDelete
  5. கடைசி படத்தில் பக்தப் பிரகலாத ஆழ்வார், குழந்தையாக, குட்டையாக பஞ்சக்கச்சத்துடன், நரசிம்ஹரின் அருளாசி பெறுவதை, விநாயகர் முதல் பிரும்மா சிவன் முதலிய அனைத்து முப்பத்து முக்கோடி தேவதைகளும் கண்டுகளிப்பது ரொம்ப ஜோர்!; )))))

    ReplyDelete
  6. ஆந்திர மாநிலம் கடப்பா ஜில்லா புரட்டாட்டூர் சுதர்சனர் திவ்ய தரிஸனமாகத் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  7. அனைத்துப்படங்களும் பட விளக்கங்களும் வழக்கம் போல் அருமையாக உள்ளன.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் said...
    முதல் படத்தில் கோபியர் கொஞ்சும் ரமணனாகிய கோபாலகிருஷ்ணனை அழகான ஆபரணங்களுடனும் புல்லாங்குழலுடனும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் ஒளியுடனும், வெற்றி மாலையுடனும் ஜொலிக்கச் செய்துள்ளீர்கள். அவர் அழகோ அழகல்லவா!;))))/

    அழகான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அனைத்து நரசிம்ஹர் படங்களும் வெகு அருமை தான்.

    அந்த ஹனுமார் வடை+வெற்றிலை மாலையுடன், அழகான ரோஸ் கலர் மாலையில் ஜொலிக்கிறாரே!

    அது A1 படம். குரங்குசாமியையே மிக அழகாகக் காட்ட உங்களால் மட்டுமே முடியும்! ;))))))/

    அவரது பெயரே சுந்தரன்...

    அனுமனின் அழ்கைக்கண்டு அவரது தாயார் சுந்தரா என்றுதான் அழைப்பாராம்..

    சுந்தரகாண்டத்தின் கதாநாயகன் அனுமன் ஆயிற்றே!

    அவர் அழகிற்குக் கேட்கவேண்டுமா!

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கடைசி படத்தில் பக்தப் பிரகலாத ஆழ்வார், குழந்தையாக, குட்டையாக பஞ்சக்கச்சத்துடன், நரசிம்ஹரின் அருளாசி பெறுவதை, விநாயகர் முதல் பிரும்மா சிவன் முதலிய அனைத்து முப்பத்து முக்கோடி தேவதைகளும் கண்டுகளிப்பது ரொம்ப ஜோர்!; )))))/

    ஜோரான கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  11. ஹனுமனைப்பற்றி சுந்தரமான (அழகான) விளக்கம் தங்களால் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தான் அவ்வாறு எழுதினேன்.

    அஞ்சனை மைந்தன், வாயு புத்ரன், சுந்தர காண்டத்தின் கதாநாயகன், சுந்தரன் தான்.

    அவன் அழகன், அடக்கமானவன், ராமபக்தன், வீரன், சூரன், மஹா பண்டிதன், சிரஞ்சீவிகளில் ஒருவன் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

    தாங்கள் விளக்கம் கொடுத்ததால் பலரும் மேலும் பல விஷ்யங்கள் அறிய முடிகிறதல்லவா!

    இந்த இன்றைய பதிவோ சற்று சின்னதாக அமைந்து விட்டது. அதனால் கொஞ்சம் அதை ஹனுமார் வால் போல நாம் தானே நீட்டிவிட வேண்டுமே!;))))) vgk

    ReplyDelete
  12. அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ

    வழக்கம் போல் அருமையான ப்டங்கள் - அழகான விளக்கம் - அரிய தகவல்கள் - ஒவ்வொரு நாளும் புதுப் புதுத் தகவல்கள் - புதுப் புதுப் படங்கள் - பகிர வேண்டும் என்ற சிறந்த எண்ணம்.

    வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. தல வரலாறும்
    படங்களும்
    மிக அற்புதம் சகோதரி....

    ReplyDelete
  14. நல்ல பதிவு.
    கடையநல்லூர் செல்லும்போது தரிசனம் செய்கிறோம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. அதிக படங்களுடன் பதிவு மிக மிக அருமை
    இரவு நேரத்தில் பதிவிடுவது மிகுந்த வசதியாய் இருக்கிறது
    இரவில் ஒருமுறை தங்கள் பதிவை முழுவதும் பார்த்துவிடுகிறேன்
    காலையில் முதல் வேலையாக தரிசித்து விடுகிறேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. சாதாரணமாக எல்ல இடங்களிலும் சக்கரத்தாழ்வார் எனப்படும் சுதர்சனருக்கு பின் புறத்திலே யோக நரசிம்மர் தரிசனம் தருவார்.ஆனால் ,இத்திருத்தலத்திலே நரசிம்மரே சக்கரத்தாழ்வாராக சேவை தருவது அபூர்வமாக இருக்கு.இப்படி அபூர்வமான தகவல்களை திரட்டிக்கொடுத்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    படங்களும் ஸ்தல புராணமும் அருமை.

    ReplyDelete
  17. Aha fine post Rajeswari. All the pictures are very fine. The Hunmanjis malai!!!!!
    I had seen vadaimalai and verrelaimali. Here vadai + verrillai, really a rare one. Let me try next time to my Hunuman temple.
    Then the last picture. How santham that Narashimar is. Kilanarashimhar really very rare without his ugram.
    Nice dear.
    viji

    ReplyDelete
  18. பதிவின் துவக்கத்திலேயே குழலூதும் கண்ணன் வசீகரித்தார். சுதர்னசர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தியா? வியப்பான விஷயம்தான். அரிய தகவல்கள், அருமையான படங்களுடன் வழக்கம் போல் ஆன்மீக மழையில் நனைய வைத்து விட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  19. அழகான படங்களுடன் தெளிவான விளக்கமும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  20. தெய்வீக மணம் கமழும் தங்கள் பதிவுகள் என் பிரபுவின் அழகான படம் (வடைமாலையுடன்).. நரசிம்மரின் அற்புத காட்சி..தகவல்கள்
    மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  21. பதிவு அருமை. பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  22. கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் தங்கள் தளம் வந்தால் போதும் ,கோவிலுக்கு சென்றது போல் மன நிறைவு தந்துவிடும் .அருமை மேடம்

    ReplyDelete
  23. கடையநல்லூர் சுதர்சனர் பற்றிய தகவல்களும் படங்களும் அருமை.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  24. ;) ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்!

    ReplyDelete
  25. 1583+9+1=1593 ;)

    தங்களின் முத்தான மூன்று பதில்களுக்கும் நன்றி.

    அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete