ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ
விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன். -
ஸ்ரீ ஸுக்தம்ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லக்ஷ்மி காயத்ரி ஸ்லோகமானது. அதிக விசேஷமானது. எங்கேயும், எப்போதும் சுத்தமாக, ஆச்சாரமாக இருந்து இதைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.)
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி
திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சம்மே
திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகத்தில் இருக்கும் பாசுரம்.
வடமொழி வேதங்கள் தன்னுடைய சொந்த முயற்சியால் பெருமாளைஅறிய முயற்சி செய்து மகரிஷிகளால் பாடப்பட்டது.
அதனால இறைவனின் முழுப் பெருமையும் பாட முடியாமல்
வேதங்கள் பின்வாங்கிவிட்டனவாம்..
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
ஆழ்வார்கள் பெருமாளாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற அருளாளர்கள்.
அதனால் பெருமாளை உள்ளது உள்ளபடி உணர்ந்து பாடல்கள் பாடியிருக்கிறார்கள்..அவர்களின் இனிமையான தமிழ்ப் பாடல்களை கேட்டு இன்புற பெருமாள் பிரபந்தம் பாடுபவர்களைத் தொட்ர்கிறார்..
பெருமாளை இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளமுடியாத வேதங்களை ஓதுகிறவர்கள் பெருமாளைத் தொடர்கிறார்கள்..
வடமொழி வேதங்களை விட ஆழ்வார் அருளிச்செயல் என்று சிறப்பு பெற்ற தமிழ் வேதங்களுக்கு மதிப்பு கூட.
அறிவால் அளக்கமுடியாத ஆண்டவன் எளிய அருமையான அன்பான பக்திக்கு கட்டுப்பட்டு பின்தொடர்வது சிலிர்க்கவைக்கும்..
நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே
வேதத்தை, அதன் சாரம் மாறாமல்,மாறன் நம்மாழ்வான், தமிழ்ப் படுத்தியதால் தான்,
"தமிழ் வேதம்" என்று இதை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார் சித்தர் கருவூரார்!
CURRENCY ALANKARAM to LORD VENKATACHALAPATHY, SALEM.!!! GOVIDA, GOVINDA!!!
வகுளாபரணன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வார் ஓதிய ஆயிரம் பாடல் கொண்ட திருவாய்மொழி வேத நெறிகளின் சாராம்சம்!
மானுடம் உய்ய வந்த அதுவே தமிழ் வேதம்!
அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே..
அற்றது பற்றெனில் உற்றது வீடு, உயிர் அற்றிறை பற்றே!!!
ஈரடிகளில் ஈர்த்து விட்டதே!
சகல வேத ஞானமும் சட்டென்று புரிந்து விட்டதே!
அதுதான் தமிழ் வேதம்!
ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டியில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது.
வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்பது ஐதீகம்
ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு
ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது.
ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு
வாழ்த்தி வணங்கி இறையருள் நாடியவள்..
பீடுடைய - பெருமையுடைய மாதமான மார்கழியில்
பக்தியினால் தூய்மையாக்கி மேன்மை பெறுவோம்.
மாஸானாம் மார்க்கசீர்ஷ: - பகவத் கீதைஸ்ரீகிருஷ்ணர் மார்கழி மாதத்தின் சிறப்பைச் சொல்வதற்காக மாதங்களில் நான் மார்கழி என்கிறார்.
பாரம்பரியமான இந்திய காலக் கணக்கீட்டில், சூரியனின் பயணப் பாதையை ஒட்டி,
உத்தராயணம் - தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உண்டு...
வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய பயணத்தைக் குறிக்க இவ்வாறு பிரிவுகள்...
தட்சிணாயணத்தின் கடைசி மாதம் மார்கழி.
உத்தராயண புண்ய காலம் தை மாதம் முதல் தொடங்குகிறது.
உத்தராயணம் என்பது தேவர்களுக்கு பகல், தட்சிணாயணம் இரவு ..
. அவ்வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் நேரம்.
எனவேதான், அந்த மாதத்தில் திருப்பள்ளியெழுச்சியுடன் ஆலய நடைமுறைகள் துவங்குகின்றன.
இருண்டு கிடக்கும் வாழ்க்கையில் விடியலைக் காண, விடியல் நேரமான மார்கழியில் இறைவனைத் துதித்து நோன்பினை கைக்கொள்ளும் பழக்கத்தை முன்னோர் ஏற்படுத்தி வைத்தனர்.
கண்ணனும் சொன்னான். "பக்தா உன் வாழ்க்கை விடியல் என்னில் துவங்குகிறது' என்று!
ஆண்டாள் மார்கழி நோன்புக்கு கண்ணனையே உபாயமாகப் பிடித்தாள்.
கண்ணனை அடைவதற்காகவே பாவை நோன்பைக் கைக்கொண்டாள் ஆண்டாள்.
"வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்' என்று கொண்டாடப்படுகிறது ஆண்டாள் அருளிய திருப்பாவை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்குப்பதிலாக திருப்பாவை பாடல்கள் பாடப்படுவது வழக்கமாக உள்ளது.
ஆஹா! கொங்கு நாட்டுக் கோவைத்தங்கம் தந்துள்ள தங்கத் தமிழில் “தமிழ் வேதம்” படித்துவிட்டு மீண்டும் வருவேன். vgk
ReplyDeleteவேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத்தமிழ் என்று கொண்டாடப்படுகிறது ஆண்டாள் அருளிய திருப்பாவை
ReplyDeleteஎன்பதற்கு அடியில் காட்டப்பட்டுள்ள படம் வெகு ஜோர்.
அப்படியே எங்களை எல்லோரையும் தாங்கள் ஸ்ரீரங்கத்திற்கு நேற்று நேரில் அழைத்துச்சென்றது போல இருக்குது.
அதற்கொரு ஸ்பெஷல் நன்றி!
//ஆண்டவனுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர் சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்யமாகும்//
ReplyDeleteஅருமையாக, எனக்கு அந்த பாக்யம் தங்களால் கிடைத்தது போல என் மனம், மகிழ்வடைகிறது, தங்களின் இந்த எளிமையான வரிகளைப்படித்ததும்.
சபாஷ், மேடம்.
//ஆண்டவனுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர் சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்யமாகும்//
ReplyDeleteஅருமையாக, எனக்கு அந்த பாக்யம் தங்களால் கிடைத்தது போல என் மனம், மகிழ்வடைகிறது, தங்களின் இந்த எளிமையான வரிகளைப்படித்ததும்.
சபாஷ், மேடம்.
வழக்கம் போல் தேர் ..... ஜோர்.
ReplyDeleteபல ’கோபு’ரங்கள்
[கோபு+ரங்கன்=கோபுரங்கள்?]
தரிஸனத்தால், இன்றும் பல கோடி புண்ணியங்கள் எங்களுக்கு.
சுப்ரபாதமும் அழகு, திருப்பாவையும் அழகு, இரண்டுமே செவிக்கு உணவு. கேட்கும் போது மனம் லயித்துப்போய் விடுகிறதே. இருப்பினும் திருப்பதியில் போய் சுப்ரபாதத்திற்கு பதில் திருப்பாவை என்பது தமிழுக்குப் பெருமை தான். மகிழ்ச்சி! “தமிழ் வேதம்” என்ற தங்களின் தலைப்பு மிகச் சரியானதே! அதற்கொரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
பக்தா ! உன் வாழ்க்கை விடியல் என்னில் துவங்குகிறது - கண்ணன் சொன்னது.
ReplyDeleteஇந்த இடத்தில் இதைக்கொண்டு வந்து சேர்த்துள்ளது தங்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.
Your IQ is is very sharp!
I appreciate you very much, for this, which I have realised many a time, in many of your Comments too.
அருமை
ReplyDeleteமிகப்பெரிய காசு மாலையுடன், முத்துக்கள் பதித்த ஆபரணங்களுடன், வெகு அழகாக, நீலப்பட்டுப்புடவை, அரக்கு ஜரிகை பார்டரில், தலையில் கொண்டையுடன், பச்சைப் பட்டு மெத்தைக் கம்பளத்தில் வீற்றிருந்து அனுக்கிரஹிக்கும் அம்பாள், எவ்ளோ அழகு! ;)))))
ReplyDeleteஅதே அம்பாளுக்கு முரட்டு புஷ்ப மாலை போடப்பட்டுள்ளது. அந்த அபய ஹஸ்தத்தில் அரக்குக்கலரில் மாணிக்க மரகதக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
ReplyDeleteபார்க்கப்பார்க்க பரவஸம் ஏற்படுத்துகிறதே!
”மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால், நீராடப்போதுவீர் நேரிழையீர் ..... பாரோர் புகழ் படிந்தேலோர் எம்பாவாய்” என்று ஆண்டாள் சிறப்பித்துக்கூறிய மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் பரமபத நாதர் சந்நதியில், ஆண்டாளுக்கு நடந்து வரும் பாவை நோன்பு விழாவின் முதல் திருநாளான நேற்று பாசுரத்தில் கூறப்பட்டவை காட்சியாய் சித்தரித்து வைத்துள்ளதை, அப்படியே, எப்படியோ தாங்களும் அழகாக பதிவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்களே!
ReplyDeleteஇன்றைய திருச்சி தினமலர் செய்தித்தாளிலும் முதல் பக்கத்தில் அந்தப்படம் இடம் பெற்றுள்ளது.
நீங்க நீங்க தான். ;))))
பாம்பின் தலையில் பாதம் வைத்து அதன் வாலைக்கையில் பிடித்து காளிங்க நர்த்தனமாடும் கிருஷ்ணரும், ருக்மிணி சத்யபாமாவும், புறப்பாட்டு அலங்காரத்தில் அருமையாக ஜொலிப்பதைக் காட்டிடும் படம் வெகு அருமை. அதன் ஒவ்வொரு அழகிலும் லயித்துப்போனேன். அவ்ளோ சிறப்பாக உள்ளது. தனிப்பாராட்டுக்கள், அதை பகிர்ந்ததற்கு.
ReplyDeleteதோளில் கிளியுடன் காட்டப்பட்டுள்ள ஆண்டாள் படத்தில்
ReplyDeleteபின்னால் பசுக்கூட்டங்கள், அழகிய கன்றுகள், மடியிலிருந்து தானாகவே சுரந்து பாத்திரத்தில் வழிந்திடும் பசும் பால், சூடிக்கொடுக்கும் சுடர்கொடியால் தன் மாலையிட்ட அழகினை, கண்ணாடியில் ஒரு முறை அழகாகப் பார்த்து மகிழும் காட்சி, முரட்டு மாலை முடியும் இடத்தில் படுத்திருக்கும் குட்டிக்குழந்தை கோபாலகிருஷ்ணன்,
புல்வெளிகள், மலை, கோபுரம், கருட வாகனத்தில் புறப்பட்டு வரும் பெருமாள், சிறிய பூக்கள் மிதக்கும் தடாகத்தில், சில அன்ன பக்ஷிகள் என பல விஷயங்கள் உள்ளன பார்த்தீர்களா? ; ))))))
மற்ற அனைத்துப் பெருமாள் படங்களும், விளக்கங்களும் வழக்கம் போல அருமையாகவே உள்ளன.
ReplyDeleteஇந்தப்பதிவை நான் நேற்றே உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ஸ்ரீ ஷோடச லக்ஷ்மி பூஜை என்ற பதிவில் நீங்கள் எழுதியுள்ள ஸ்லோகமாகிய
சரணாகத தீணார்த்த
பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி
நாராயணி நமோஸ்துதே
என்பதைப் படித்ததில் என் மேலிடத்திற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் அவள் தினமும் சொல்லும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று என்பதால்.
பகிவுக்கு மனமார்ந்த ந்னறிகள்.
பிரியமுள்ள vgk
இந்த 2011 ஆம் ஆண்டின் வெற்றிகரமான 367 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.vgk
ReplyDeleteதிருப்பதி கோவிலில் தமிழ்ப்பாட்டா? பரவாயில்லையே?
ReplyDeleteதயிர்சாத நைவேத்தியத்தின் பின்னணி ஏதாவது உண்டா?
படங்கள் பிரமாதம். அற்றது பற்றெனில் - சுற்றிச் சுற்றி வருகிறது மனதில்.
தமிழ்வேதம் பற்றிச் சிறப்பான பதிவு.அருமையான படங்கள்!
ReplyDeleteதிவ்ய பிரபந்தத்தை தமிழ் வேதம் என்கிறோம்.அதைப்பற்றிய அருமையான பதிவு.படங்கள் அற்புதம்.
ReplyDeleteஆண்டாள் கண்ணாடி அறை சேவை கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
வாழ்த்துகள்.
;) மஹா கணேசா! மங்கள மூர்த்தி!!
ReplyDelete1655+14+1=1670
ReplyDelete20க்கு 14 என் கமெண்ட்ஸ் மட்டுமே. என்ன பயன்? ;( No feedback at all.