வைணவத்தில் கூறப்படும் திருமால் ஆலயங்களான 108 திவ்ய தேசங்களுள், மக்கள் தங்கள் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாதவை இரண்டு. ஒன்று 107-வது திவ்ய தேசமான "ஸ்ரீவைகுண்டம்' எனும் திருப்பாற்கடல், மற்றொன்று 108-வது திவ்ய தேசமான திருப்பரமபதம். இவ்விரண்டு திவ்ய தேசங்களும் சாதாரணர்கள் காணுவதற்கு அரியது என்று கூறப்படுகிறது.
ஆனால் எம்பெருமான், புண்டரீக மகரிஷிக்கு அருளும் பொருட்டும், சரஸ்வதியின் வேகத்தைத் தடுக்கும் பொருட்டும், பூலோக மக்களுக்குக் கருணை புரியவும், பூலோகத்தில் ஒரு திருப்பாற்கடலை நமக்காகக் காட்டி, அங்கு நின்றும் (நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணுவும், சிவபெருமானும் இணைந்த வடிவம்), கிடந்தும் (ஸ்ரீரங்கநாதர்-மகாவிஷ்ணு-பிரம்மா) அருள் பாலிக்கிறார்.
காஞ்சியை அடுத்து உள்ள வேலூர் வழி-காவேரிப்பாக்கத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது "திருப்பாற்கடல்'. இதை "நாராயண சதுர்வேதி மங்கலம்' என்று கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.
இங்கு, சிவலிங்கத்துக்குரிய ஆவுடையார் மேல் பிரசன்ன வேங்கடேசப்பெருமானும், அத்தி மரத்தினால் சுயம்புவாக எழுந்தருள ஸ்ரீரங்கநாதரும் அருகருகில் உள்ள இவ்விரண்டு ஆலயங்களில் காணக்கிடைக்காத மூர்த்தியாகக் காட்சி தருகின்றனர்.
சிவனருள் பொழியும் பெருமாள்!
திருப்பாற்கடல் தலபுராணம்:
கடிகாசல க்ஷேத்திரம்' என்று சொல்லக்கூடிய சோளிங்கபுரத்தில் நரசிம்மனை நோக்கி சப்த மகரிஷிகள் தவம் செய்தனர். அவர்களில் புண்டரீக மகரிஷியும் ஒருவர். ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திருநாள் வந்தது. அன்று வேறு ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலை தரிசிக்கும் ஆவலுடன் புறப்பட்டார் புண்டரீக முனிவர்.
ஆனால் வழியில் ஒரு பெருமாள் சந்நிதிகூடக் காணக் கிடைக்காததால் மிகவும் வருத்தப்பட்டார்.
அன்று வைகுண்ட ஏகாதசி தினமானதால், இன்று எப்படியேனும் ஒரு பெருமாளையாவது தரிசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வருகையில், சற்று தொலைவில் ஒரு வனம் தெரிந்தது. அங்கு சிறிய சந்நிதியும், புஷ்கரணியும் இருப்பதை முனிவர் கண்டார்.
அன்று வைகுண்ட ஏகாதசி தினமானதால், இன்று எப்படியேனும் ஒரு பெருமாளையாவது தரிசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வருகையில், சற்று தொலைவில் ஒரு வனம் தெரிந்தது. அங்கு சிறிய சந்நிதியும், புஷ்கரணியும் இருப்பதை முனிவர் கண்டார்.
ஏதோ ஒரு பெருமாள் கோயில் தென்படுகிறது என்று எண்ணியவர், எதிரில் இருந்த புஷ்கரணியில் நீராடிவிட்டு கோயிலுக்குள்ளே பெருமாளை சேவிக்கச் சென்றார்.
ஆனால் அக்கோயிலின் கருவறையில் ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கம் இருக்கக் கண்டார் புண்டரீக மகரிஷி.
உடனே, "இன்று பெருமாளை சேவிக்கலாம் என்று வந்தால், இது சிவன் கோயிலாக இருக்கிறதே' என்று சிந்தித்தார்.
புண்டரீக மகரிஷியின் மனக்குறையை நிவர்த்தி செய்ய திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், ஒரு வயோதிகராக அவர் முன்னே வந்தார். ""மகரிஷி! தாங்கள் பார்த்தது பெருமாள் சந்நிதிதான்'' என்று கூறினார்.
மகரிஷியோ, ""கிடையாது, நான் முதலில் சேவித்தது சிவன் கோயில்தான்'' என்றார்.
மகரிஷியோ, ""கிடையாது, நான் முதலில் சேவித்தது சிவன் கோயில்தான்'' என்றார்.
""இல்லை! இது மகாவிஷ்ணு சந்நிதிதான். நீங்கள் வேண்டுமானால் என்னுடன் உள்ளே வந்து பாருங்கள்'' என்று புண்டரீக மகரிஷியை கோயிலுக்குள்ளே அழைத்துச் சென்றார் வயோதிகர்.
மகரிஷிக்காக ஆவுடையாரின் மேல் எம்பெருமான் பிரசன்னமாக எழுந்தருளி சேவை சாதித்தார்.
மேலும், ""இன்று முதல் நீங்கள் புகுந்த இந்த இடம் பெருமாள் சந்நிதியாகட்டும்'' என்றும் திருவாய் மலர்ந்தருளினார்.
சுயம்புவாக வைகுண்ட ஏகாதசி தினத்தன்று புண்டரீக மகரிஷிக்கு பெருமாள் சேவை சாதித்தது, திருப்பாற்கடல் என்னும் இந்த க்ஷேத்திரத்தில்தான்.
ஆலய மகிமை:மேலும், ""இன்று முதல் நீங்கள் புகுந்த இந்த இடம் பெருமாள் சந்நிதியாகட்டும்'' என்றும் திருவாய் மலர்ந்தருளினார்.
சுயம்புவாக வைகுண்ட ஏகாதசி தினத்தன்று புண்டரீக மகரிஷிக்கு பெருமாள் சேவை சாதித்தது, திருப்பாற்கடல் என்னும் இந்த க்ஷேத்திரத்தில்தான்.
சக்தி வாய்ந்த "புண்டரீக விமானம்' என்ற ஆனந்த விமானம் இத்திருக்கோயிலில் உள்ளது.
இங்கு மூலவரான ஸ்ரீஅலர்மேல்மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கர்ப்பகிரகத்தில், ஆவுடையாரின் மேல் சேவை சாதிப்பது கண்கொள்ளாக் காட்சி.
இங்கு மூலவரான ஸ்ரீஅலர்மேல்மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கர்ப்பகிரகத்தில், ஆவுடையாரின் மேல் சேவை சாதிப்பது கண்கொள்ளாக் காட்சி.
புண்டரீக மகரிஷிக்கு ஆவுடையார் மேல் சேவை சாதித்ததால் இவருக்குப் பிரசன்ன வேங்கடேசர் என்றும், மகரிஷி அனுஷ்டானம் செய்த புஷ்கரணி புண்டரீக புஷ்கரணி என்றும், தீர்த்தத்துக்கு புண்டரீக தீர்த்தம் என்றும், இந்த க்ஷேத்திரத்துக்கு புண்டரீக úக்ஷத்திரம் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
இத்திருக்கோயிலுக்கு அருகிலேயே அத்தி ரங்கன், பாம்பணைமேல் பள்ளிகொண்டு எழுந்தருளியுள்ளார்.
அத்தி ரங்கன் நிகழ்த்திய அதிசயம்:
திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய நாபிக்கமலத்தில் அவதரித்த பிரம்மா, எம்பெருமானின் பெருமையை முழுமையாக அறிந்துகொள்ள முடியாததால், பூலோகத்துக்கு வந்து காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய எண்ணி சரஸ்வதியை உடன் அழைத்தார்.
பிரணய கலஹத்தால் சரஸ்வதி தேவி யாகத்துக்கு உடன்வர மறுத்ததால், தன் மற்ற பத்தினிகளான சாவித்ரி, காயத்திரியரோடு யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா.
அதனால் கோபங்கொண்ட சரஸ்வதி "வேகவதி' என்ற நதியாக மாறி, யாகத்தை அழிக்க சீறிப்பாய்ந்தாள்.
பிரணய கலஹத்தால் சரஸ்வதி தேவி யாகத்துக்கு உடன்வர மறுத்ததால், தன் மற்ற பத்தினிகளான சாவித்ரி, காயத்திரியரோடு யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா.
அதனால் கோபங்கொண்ட சரஸ்வதி "வேகவதி' என்ற நதியாக மாறி, யாகத்தை அழிக்க சீறிப்பாய்ந்தாள்.
பிரம்மாவின் மேல் உள்ள கருணையால், எம்பெருமான் ஆதிசேஷன் மேல் சயனித்த கோலத்துடன் சீறிப்பாய்ந்து வரும் வேகவதி நதியை, அணைபோல் தடுத்தார்.
எம்பெருமான் அருளால் சரஸ்வதி தேவி கோபம் தணிந்து ஒதுங்கினாள். யாகமும் பூர்த்தியடைந்தது.
பிரம்மாவின் பிரார்த்தனைக்கு இணங்கி, பக்தர்களுக்கு நிரந்தரமாய் சேவை சாதிக்கத் திருவுள்ளம் கொண்டு க்ஷீராப்தியில் பாற்கடலில் இருக்கும் திருக்கோலத்துடன் இத்தலத்தில் கோயில் கொண்டதால், இவ்வூருக்கு "திருப்பாற்கடல்' என்ற பெயரும், வேகவதி என்ற பாலாற்றின் நடுவில் சயனித்துக் கொண்டிருப்பதால் ஸ்ரீரங்கநாதர் என்ற திருநாமமும் ஏற்பட்டது என இத்தலபுராணம் கூறுகிறது.
மிகவும் தொன்மையான ஆலயமான இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள மூலவரான ஸ்ரீரங்கநாதர் அத்தி மரத்தாலான வடிவில் ரங்கநாயகித் தாயாருடன் சேவை சாதிக்கிறார்.
மூலஸ்தானத்தில் படுக்கைக்கு பாம்பணையும், தலைக்கு மரக்காலையும் வைத்துக்கொண்டு அனந்தசயனத்தில் சேவை சாதிக்கிறார்.
மங்களாசாஸனம்:
மூலஸ்தானத்தில் படுக்கைக்கு பாம்பணையும், தலைக்கு மரக்காலையும் வைத்துக்கொண்டு அனந்தசயனத்தில் சேவை சாதிக்கிறார்.
மங்களாசாஸனம்:
இங்கு எழுந்தருளியுள்ள இவ்விரு பெருமாளையும் வழிபட்டால் சித்ரகுப்தன் எழுதி வைத்த பாவக்கணக்கு முழுவதும் நீங்கப் பெறுவதாக ஸ்ரீநிகமாந்த மகா தேசிகர் அருளிய "மெய்விரத மான்மியம்' என்னும் மங்களாசாஸன பாசுரங்கள் கூறுகின்றன.
வைகுண்டத்தில் - திருப்பாற்கடலில் உள்ள க்ஷீரம் எனும் அமிர்தப் பாற்கடல் சக்தியானது, பூமிக்கடியில் நீரோட்டமாய் பொங்கும் அற்புதத் தலங்களில் காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தத் திருப்பாற்கடலும் ஒன்று என்பது அற்புதத்திலும் அற்புதமல்லவா?
அதாவது இந்தத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இவ்விரண்டு பெருமாளையும் ஒருசேர சேவிப்பதால், மும்மூர்த்திகளை சேவித்த பலனும், யாராலும் பூத உடலுடன் சென்று சேவிக்க முடியாத 107-வது திவ்ய தேசமான திருப்பாற்கடலை சேவித்த பலனும், சித்திரகுப்தன் எழுதும் பாவக்கணக்கு கணிசமாகக் குறையும் பலனும் ஒருங்கே கிடைக்கிறதாம்!
அதி அற்புதத் திருப்பாற்கடலைக் கண்டுவிட்டு, ஓடி வாரேன்!
ReplyDeleteசுயம்புவாக வைகுண்ட ஏகாதசி தினத்தன்று புண்டரீக மகரிஷிக்கு பெருமாள் சேவை சாதித்தது, திருப்பாற்கடல் என்னும் இந்தச் க்ஷேத்திரத்தில் தான், என்ற அருமையான விளக்கம் அறிந்தோம், மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஹரியும் சிவனும் ஒன்றே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதே!
ஆவுடையார் மேல் சேவை சாதித்த
ReplyDeleteபிரசன்ன வேங்கடேசர், புண்டரீக புஷ்கரணி, புண்டரீக தீர்த்தம்,புண்டரீகச் க்ஷேத்ரம் ... ஆஹா பல புதிய அழகான செய்திகள் ..கேட்கவே காதுக்கு இனிமையாக உள்ளன.
க்ஷீராப்தியில் (பாற்கடலில்) இருக்கும் திருக்கோலத்துடன் இங்கு கோயில் கொண்டு இருப்பதால், இவ்வூருக்கு ”திருப்பாற்கடல்” என்ற பெயர் வந்துள்ளது.
ReplyDeleteதடுக்கப்பட்ட வேகவதி என்ற பாலாற்றில் சயனம் கொண்டிருப்பதால் ஸ்ரீரங்கநாதர்.
அருமையான விளக்கங்கள்.
அத்திமரத்தினால் தாயார்+பெருமாள் அமைப்பு, படுக்கைக்குப் பாம்பணை, தலைக்கு மரக்கால், அனந்தசயனக்கோலத்தில் சேவை சாதிப்பது அழகோ அழகு.
ReplyDeleteஅதன் மேல் காட்டப்பட்டுள்ள பெருமாள் கூட மாக்கல்லால் செய்யப்பட்டது போல நல்ல அழகாக கலை அம்சமாக சங்கு, சக்ரம், நாமம் முதலியவற்றுடன் பெரியதாகக் காட்டப்பட்டுள்ளதே! ;))))
மெய்விரத மான்மியம் என்ற மங்களாசாஸனத்தகவல்கள் வெகு அருமையாகக் கூறியுள்ளீர்கள். ;))))
ReplyDeleteபூத உடலுடன் 107 ஆவது திவ்ய க்ஷேத்ர தரிஸனம் + பாவக்கணக்கு குறைதல்.
டூ இன் ஒன் இலாபம் .... ஆஹா! அருமை. ;))))
ஜொலிக்கும் கோபுரங்கள், அழகான குளக்கரைகள், படிக்கட்டுகள் என போட்டோ கவரேஜ் வெகு அருமை.
ReplyDeleteமிகச்சாதாரணர்களாகிய என்னைப்போன்றவர்களை இன்று 107 ஆவது திவ்ய க்ஷேத்ரமாகிய திருப்பாற்கடலில் க்ஷீராப்தியில் ஒரே முக்காக முக்கி எடுத்து, 108 ஆவது திவ்ய க்ஷேத்ரமாகிய பரமபதத்திற்கே இன்று இந்த்த்தங்களின் தங்கமான பதிவின் மூலம் அழைத்துச் சென்று விட்டீர்களே!
அனைத்துப் புண்ணியங்களும், புகழும் உங்களுக்கே சேரும். பூவோடு சேர்ந்த நாராக எங்களுக்கும் ஏதோ எத்கிஞ்சுது புண்ணியம் கிடைத்தாலும் இலாபமே! அதை வைத்து உங்களின் ஆதரவாளர்கள் என்ற முறையில் நாங்களும் பிழைத்துப்போவோம்,
அழகிய படங்களுடன் அற்புதமாக விளக்கங்களுடன் இந்த தங்களின் இந்த ஆண்டுக்க்கன 370 ஆவது பதிவைத் தந்துள்ளதற்கு, என் நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் தரணியிலே என பொங்கல் பானையுடன், கரும்புடன் இனிப்பான ஓர் பதிவை எதிர் பார்த்து, வழி மேல் விழி வைத்துக்காத்திருந்தேன் வெகு நேரமாக. தை பிறக்க இன்னும் பல நாட்கள் இருக்கிறது. மார்கழியிலேயே பரமபதத்திற்குக் கூட்டிச்செல்கிறேன் ..... ஏற்றுச்கொள்வார் ..... கூட்டிச்செல்வேன் .... என்னுடன் ஓடி வா நீ ..... என்றல்லாவா, சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள்! ;))))) நன்றி! நன்றி!! நன்றி!!!
முழுமையான புராணம்.படங்கள் கலக்கல்.
ReplyDeleteஅந்த முதல் படத்தில் சூர்யன் சந்திரன் சுழலும் பூமி முதலான அனைத்துமே
ReplyDelete“நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே; இதை அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?”
என பெருமாளே நேரில் கேட்பது போல மிகச் சிறப்பாகவே காட்டியுள்ளீர்களே ; )))))) சபாஷ்!
பூத உடலுடன் பார்க்க மட்டுமல்ல.பூத உடலுள்ளே இருக்கும் திருப்பாற்கடலையும்,ஸ்ரீ வைகுண்டத்தையும் நம் முடலுள்ளேயே காட்டுவார், யாரோ அவரே குரு ஆவார்.இதை அகத்தியரின் அடுக்கு நிலைப் போதம் என்னும் நூல் விளக்குகிறது.இந்த இணைப்பை பார்வையிடுங்கள்
ReplyDeletehttp://machamuni.blogspot.com/2010/12/11.html
அதில் மூன்றாவது வரியைப் பாருங்கள்.வைகுந்தமெங்கே.
ஆண்டாள் பாசுரத்தைப் பாருங்கள்,///வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ,பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி,///நம்முள்தான் இருக்கிறது பாற்கடல்!!!!அறிய வாருங்கள் மச்ச முனிவரின் சித்த ஞான சபைக்கு!!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteக்ஷீராப்தியில் (பாற்கடலில்) இருக்கும் திருக்கோலத்துடன் இங்கு கோயில் கொண்டு இருப்பதால், இவ்வூருக்கு ”திருப்பாற்கடல்” என்ற பெயர் வந்துள்ளது.
தடுக்கப்பட்ட வேகவதி என்ற பாலாற்றில் சயனம் கொண்டிருப்பதால் ஸ்ரீரங்கநாதர்.
அருமையான விளக்கங்கள்./
அத்தனையும் முத்தான அருமையான கருத்துரைகள்..
பதிவினைப் பொலிவாக்கியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
சாமீ அழகப்பன் said...
ReplyDeleteபூத உடலுடன் பார்க்க மட்டுமல்ல.பூத உடலுள்ளே இருக்கும் திருப்பாற்கடலையும்,ஸ்ரீ வைகுண்டத்தையும் நம் முடலுள்ளேயே காட்டுவார், யாரோ அவரே குரு ஆவார்.இதை அகத்தியரின் அடுக்கு நிலைப் போதம் என்னும் நூல் விளக்குகிறது.இந்த இணைப்பை பார்வையிடுங்கள்/
இருளை அகற்றும் அருமையான ஒளிமயமான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.
shanmugavel said...
ReplyDeleteமுழுமையான புராணம்.படங்கள் கலக்கல்.
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - கண்டேன் மகிழ்ந்தேன் - அனைத்துப் படங்களும் தல வரலாறும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் வை.கோ - வழக்கம் போல கலக்கி இருக்கீங்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅருமையான படங்கள்.
வாழ்த்துகள்.
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - கண்டேன் மகிழ்ந்தேன் - அனைத்துப் படங்களும் தல வரலாறும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் வை.கோ - வழக்கம் போல கலக்கி இருக்கீங்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//
நட்புடன் நல்வாழ்த்துகள் நல்கி ஊக்குவித்து நனி சிறபித்தமைக்கு இனிய நன்றிகள் ஐயா..
வாழ்க வளமுடன்..
Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
அருமையான படங்கள்.
வாழ்த்துகள்./
அருமையான வாழ்த்துரைக்கு
இனிய நன்றிகள் ஐயா..
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்தக் கோவிலுக்குப் போயிருக்கிறேன் என்று நினைக்கிறேன். விவரம் இப்போது தான் தெரிகிறது :) சுவாரசியமானக் கதை.
ReplyDeleteபடங்களும் பதிவும் சுவாரசியம். நன்றி
ReplyDeleteதிருபாற்கடல் மிக அத்புதமான ஷேத்திரம். அழகிய படங்களுடன் திருபாற்கடல் பற்றிய சிறப்பான தகவல்களுடன்,அருமையான பதிவு.
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteஎங்கெல்லாமோ இருக்கும் அரிய கோவில்களைத் தேடி,அருமையான படங்களுடன் அழகிய பதிவாகத் தருவதற்கு நன்றி.
ReplyDeleteஎவ்வளவு முக்கியமான திருக்கோவில். எனக்கு வேலூர் பக்கம் அத்தனை பரிட்சயமில்லை. இந்த பதிவு மிகவும் உதவும் என்று நினைக்கிறேன். தலபுராணம் படிக்கவே சிறப்பாக உள்ளது.
ReplyDeletehttp://jayarajanpr.blogspot.com/2011/12/32.html
ReplyDeleteஎப்படி பார்க்காமல் விட்டுவிட்டேன்...இப்படி ஒரு அற்புதமான படங்களையும் தொகுப்பும்.
ReplyDelete"கண்ணன் என் காதலன்" அவனைக் கண்ட பரவசத்தில் எல்லாமே மறந்துவிட்டது. எத்தனை அற்புதமான படங்கள்.....
மெய்சிலிர்க்கிறேன்.....
;) மஹா கணேசா! மங்கள மூர்த்தி!!
ReplyDeleteஅருமை!
ReplyDeleteஇன்றுதான் கண்ணில் பட்டது! ஆடிப்பூரம் ஆண்டாளின் அனுக்ரஹம்!
இனிய பாராட்டுகள்!
1684+9+1=1694 ;)
ReplyDeleteஏதோ ஒரு ஆறுதல் அளிக்கும் பதில் தந்துள்ளதற்கு நன்றிகள்.
என் கலக்கலைக்கண்டு ரஸித்துப்பாராட்டியுள்ள அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.