நத்தையக்கா நத்தையக்கா
அத்தைவீடு பயணமா?
அத்தை வீடி செல்ல முதுகில்
தண்ணீர் குடம் வேணுமா??
என்று சிறுவயதில் குழந்தைபாடல்கள் பாடிய அனுபவம் இனிக்கும்..
உலகில் உள்ள எத்தனையே ஜீவராசிகளில் நத்தையும் ஒன்று. வட்டவடிவமான கூட்டுக்குள் பெரும்பாலும் தங்களை சுருக்கிக் கொண்டு வாழும் இந்த நத்தைகள் மிகவும் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடிய தன்மையுடைவை.
.பிரான்ஸ் நாட்டில் வித்தியாசமாக உலக நத்தை போட்டி நடத்தப்பட்டது.
Sachin's Amazing Home.
…புதிதாக ஒரு வீட்டை அதுவும் மும்பையின் பிரபலங்கள் வசிக்கும் பாந்தரா பகுதியில் வாங்க வேண்டும் என்பது சச்சினின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்... மேற்கு பாந்தரா பகுதியில் பழைய வீடு ஒன்றை சச்சின் வாங்கியிருக்கிறாராம்.
அவ்வீட்டின் பின்புறத்தில், சச்சினின் ஆசைப்படி நத்தை வீடு ஒன்றை மெக்சிகன் கட்டட நிபுணர் சேவியர் சேனோசியாயின் வடிவமைத்துக் கட்டிக்கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மெக்சிகோ தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியரான இவருடைய வீடு சுறா போன்று வடிவமைக்கப்பட்டது.
சச்சினுக்காக இவர் கட்டிக்கொடுத்ததாகக் கூறப்படும் நத்தை வீட்டைத்தான் இந்தியர்கள் இணையத்தில் தேடித்தேடி பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவருடைய வடிவமைப்பில் சச்சின் புதிய வீட்டை கட்டியிருப்பது உண்மையோ பொய்யோ ஆனால், இந்த வடிவமைப்பு அசத்தலாக இருப்பது உண்மை.
சுவாரஸ்யமான அந்த கற்பனை வீட்டை நத்தை மாதிரியே ஊர்ந்து மெதுவாக சுற்றிப்பார்க்கலாம்..
Kitchen
வித்யாச வீட்டுக்குள் சென்று விருந்துண்டு மகிழ்ந்து வரவா?
ReplyDeleteமுதல் படத்தில் அந்த கண்ணடிக்கும் குழந்தை டபுள் ஆக்டில் நல்லாயிருக்கு.
ReplyDeleteநத்தையக்காப் பாட்டு, எப்போதோ சிறு குழந்தையாய் இருக்கும் போது கேட்டது. இப்போது படித்ததும் ஒரு குழந்தையைப் போலவே இனிமையான குரலில் நீங்கள் பாடுவது போல இருந்தது.
உங்களுக்கும் குழந்தையைப் போன்ற மழலைக் குரலே என்று ஒருவர் மூலம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
வித்தியாசமான பதிவு. நன்றாக இருக்கிறது.
ReplyDeleteப்ரான்ஸ் நாட்டில் நடைபெறும் வித்யாசமான உலக நத்தைப்போட்டி படம் படுஜோர். வலது பக்கம் தெருவில் போகும் வண்டிகளின் படு ஸ்பீடும், இடது புறம் நத்தை ஸ்பீடுக்கு அனுசரித்து ஸ்தம்பித்து நிற்கும் ஏராளமான வாகனங்களும், என படத்தில் ஒப்பிட்டுக்கு காட்டியுள்ளது வெகு அருமை.
ReplyDeleteநத்தையைப்பார்த்த நானும் நத்தை வேகத்தில் பின்னூட்டமிடுவதால் நடுவில் டாக்டர் புகுந்து விட்டார்.
ReplyDeleteஇனி அவ்வளவு தான்!
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முதலில் குழந்தைப் படம் பிரமாதம். நத்தை வீடு அழகாகவும் சில இடம் அருவருப்பாகவும் இருந்தது. நான் தாவரபட்சணி என்பதால் இது மிகைப்படத் தோன்றலாம்(மன்னிப்பு). ஆயினும் பிரமாதம். எப்படி இப்படி ஐடியா எல்லாம் வருகிறது உங்களுக்கு? வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
சச்சின் டெண்டுல்கரின் ஆசைப்படி அவருக்காக நத்தை வடிவில், வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ள அவரின் வீட்டை, தாங்கள் நத்தை வேகத்தில் மிகவும் ஸ்ரத்தையுடன் எங்களுக்குச் சுற்றிக் காட்டிய முஹூர்த்தம், சச்சினுக்கு “பாரத் ரத்னா” விருது கூட கிடைக்கலாம் என்று எனக்கென்னமோ தோன்றுகிறது.
ReplyDelete; ))))))
சச்சின் டெண்டுல்கரின் ஆசைப்படி அவருக்காக நத்தை வடிவில், வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ள அவரின் வீட்டை, தாங்கள் நத்தை வேகத்தில் மிகவும் ஸ்ரத்தையுடன் எங்களுக்குச் சுற்றிக் காட்டிய முஹூர்த்தம், சச்சினுக்கு “பாரத் ரத்னா” விருது கூட கிடைக்கலாம் என்று எனக்கென்னமோ தோன்றுகிறது.
ReplyDelete; ))))))
நான் நாலாவது படிக்கும் போது, தோட்டங்கள் நிறைந்த ஒரு வீட்டின் முன்பக்கம் குடியிருந்தோம். மரவட்டைகளும், இந்த நத்தைகளும் ஏராளமாக ஆங்காங்கே நடை பாதைகளிலெல்லாம் ஜாலியாக ஊர்ந்து போய்க்கொண்டே இருக்கும். நத்தைகள் போகும் வழியெல்லாம் ஏதொவொரு பிசுபிசுப்பான திரவம் வேறு தெளித்துக்கொண்டே செல்லும். எனக்கு அதைப்பார்க்கவே பிடிக்காது. ஒரே அருவருப்பாக இருக்கும்.
ReplyDeleteதெரியாமல் அதன் மேல் காலை வைத்து விடுவோமோ என்றும் கவலையாக இருக்கும்.
இப்போது நான் நத்தைகளைப் நேரில் பார்த்து 4 மாமாகங்கள் ஆகிவிட்டன.
இப்போது தான் உங்கள் பதிவினில் பார்க்கிறேன். இப்போது எனக்கு எந்தவிதமான பயமோ, அருவருப்போ இல்லை. அது ஏனோ தெரியவில்லை.
ஒரு வேளை பதிவு உங்களால் கொடுக்கப்பட்டதனால் இருக்குமோ! அல்லது ”யாம் இருக்க பயமேன்” என்று நீங்கள் அடிக்கடி என் கற்பனையில் வந்து சொல்வதனால் இருக்குமோ! ;)))))
எல்லா படங்களும் சூப்பர்.வரும் நூற்றாண்டில் சாதாரண வீடுகள் இல்லாமல் இப்படி வித்தியாசமான வீடுகளில் மக்கள் வாழத்தொடங்குவார்களென நினைக்கிறேன்.
ReplyDeleteகிட்சனில் குக்கருக்கு மேல் என்ன? நத்தை வாயைப்பிளக்கிறதோ எனத் தோன்றிடுமாறு அமைந்த புகைபோக்கியாக இருக்குமோ?
ReplyDeleteஇதுதான் சச்சினூட வீடா .அழகிய படங்களுடன் வித்தியாசமான பதிவு .தானே முதுகில் வீட்டை சுமந்து செல்லும் நத்தையக்காவை பார்க்கும்போது எனக்கு பாவமா இருக்கும் .
ReplyDeleteஅதனாலேயே தோட்டத்தில் தடையின்றி உலாவ விடுவேன் ..
நத்தைக்கும் உப்புக்கும் ஆகாது பட்டாலே இறந்துவிடும் due to dehydration/osmosis .
தீவுபோல சமுத்திரத்தின் நடுவே கட்டப்பட்டுள்ள காட்டப்பட்டுள்ள வீடு நன்றாக படத்தில் காட்டப்பட்டுள்ளது.
ReplyDeleteநாய்குடைக்கும் நத்தைக்கும் ஏதும் சம்பந்தம் உண்டோ? அதைவேறு அழகாகக் காட்டியுள்ளீர்களே நடுவில்!
GAS பலூன்கள்களை மலைபோலக் காட்டி, அவை வீட்டையே அலாக்காகத் தூக்கிச் செல்வது போலக் காட்டியுள்ளது வெகு ஜோர்.
எங்கள் வீட்டையும் அது போல அலாக்காகத்தூக்கி கோயம்பத்தூரிலுள்ள உங்க வீட்டுக்கு அருகே வைத்துவிட மாட்டார்களா என்று எண்ணவல்லவா வைக்கிறது அந்தப்படம்! ;))))))
அதனால் எனக்கு என்ன பயன் என்கிறீர்களா? பலவிஷயங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளதே!
முக்கியமாக TIME MANAGEMENT நீங்கள் எப்படிச்செய்கிறீர்கள் என்பது தான் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. தினமும் ஏராளமான படங்களுடன் ஒரு பதிவு. மற்ற எல்லோருடைய பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம்.
24 மணி நேரத்தில் 108 மணி நேரம் கணினியில் செலவு செய்கிறீர்களே, அது எப்படி என்று அறிய ஆவல் - எனக்கு மட்டுமல்ல பலருக்கும்.;))))
கடைசியில் பூக்களாலும், இலைகளாலும் மட்டுமே காட்டப்பட்டுள்ள பெண்ணின் உருவம் (Triple Act) கலைக்கண்களோடு ரசிக்க வேண்டியவை. சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteமூன்றாவது படத்தில் தவளையார் ஏதோ ஸ்வாரஸ்யமாக வாசிக்க, நத்தையார் வாயைப்பிளந்து பிளந்து பிறகு மூடி மூடி, கண்ணை உருட்டி ஏதோ வெகு ஸ்வாரஸ்யமாகக் கேட்கிறாரே!
ReplyDeleteஎங்கே தான் இப்படிப்பட்ட படங்களைத்தேடிப் பிடித்துப்போட்டு அசத்துகிறீர்களோ!
இதையும் எப்படி? என்று Time Management Class க்கு வரும்போது தான் நான் கவனிக்க வேண்டும்.
வரவர உங்கள் பதிவென்றாலே ஒரே ஜாலியாகத்தான் உள்ளது.
வாழ்க வாழ்கவே!
பிரியமுள்ள vgk
இன்று தான் உங்கள் வலைப்பதிவை காணும் வாய்ப்பு கிடைக்க பெற்றேன் அருமையாக உள்ளது :)) பதிவுகளும் படங்களும் மிக அருமை நன்றி
ReplyDeleteபடங்கள் பரவசம்.நத்தை பாம்புக்கு தண்ணீர் எடுத்துப்போகிறது என்று சிறுவயதில் சொல்லிக்கேள்வி.உண்மையா?
ReplyDeleteநத்தை படங்களும் , பதிவும் நச் ... நன்றி ...!
ReplyDeleteநத்தை வீட்டின் படங்கள்
ReplyDeleteஅதிசயம்.
நத்தையை இரண்டாவது படத்தில்
படம் வரைந்து பாகம் குறித்துவிட்டீர்கள்.
அருமை.
சொல்லி மாளாது.உங்கள் படங்கள்தான் கிறங்க வைக்கிறது.வீட்டை வீடே சுமக்கிறதே.அற்புதம் அழகு !
ReplyDeleteதன் இயல்புக்கு எதிரான விஷயங்களில்
ReplyDeleteஅனைவருக்கும் அதிக ஆர்வமிருக்கும் என்பார்கள்
அதி வேகமாகவும் அதிக ஓட்டங்களும் எடுத்த சச்சினுக்கு
நத்தையின் மேல் ஆர்வம் வந்தது அந்த வகையாகத்தான்
இருக்குமோ ?
மிக மிக அருமையான பதிவு
அரிதான படங்களை அழகுற கொடுத்து அசத்திவிட்டீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
சச்சின் வீடு நல்லா இருக்கிறது.
ReplyDeleteநத்தையக்கா பாட்டு அருமை.
படங்கள் எல்லாம் அழகு.
இன்னிக்கு வித்யாசமான ஒரு பதிவா. இதுகூட நல்லாதான் இருக்கு.
ReplyDeleteதேவைக்கு மிஞ்சிய பணத்தை மனிதன் எப்படியெல்லாம் செலவழிக்கிறான்...!!
ReplyDeleteஇருந்தாலும் கண்ணுக்கு விருந்தாய் பதிவின் படங்கள்... தேர்வுக்கும் தேடலுக்கும் நன்றி!
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - என்ன இது வழக்கத்திற்கு மாறாக ஆன்மீகத்தில் இருந்து விலகி இயல்பான் இல்லற வாழ்க்கை பற்றி எழுத ஆர்ம்பித்தாயிற்றா - பரவாய் இல்லை - மார்கழி மாதம் என்பதாலா ? - இதுவும் முந்தைய இடுகைகலுக்குச் சளைக்க விலை - படங்களும் விளக்கங்களும் அருமை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteமாறுபட்ட வகையிலான ந்த்தைவீடு மிகவும் சிறப்பு பாராட்டுகள் படங்கள் கண்ணைகவரும் விதத்தில் மிகவும் நளினமாக பாராட்டும் படியாக சிறப்பு சிறப்பு ... தொடர்க தமிழ் வேதம் பாராட்டோ பாராட்டுகள் சிறந்த படங்கள் வணக்கங்கள் ...
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
நத்தைவீடு கவர்கின்றது.
ReplyDeleteசெண்பகக் குருவியால் கவ்வமுடியுமா இவ்வீட்டை :))))
செண்பகக் குருவி சாப்பிடுமாமே சிறிய நத்தையாரை.
Nice
ReplyDelete;) மஹா கணேசா! மங்கள மூர்த்தி!!
ReplyDelete1642+12+1=1655
ReplyDeleteஒரு பதிலையும் காணோம். ;(
தாமரையே பூக்காத வறண்ட பூமி.
ஏப்ரில் மேயிலே பசுமையே இல்லே .... பாட்டு போல