


...

தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் சந்தோஷ சாலை என்ற திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரத்தினசாமிபுரம் திவான் பகதூர் சாலையும், திரவேங்கடசாமி சாலையின் மேற்குப்ப குதியும் சந்திக்கும் இடம் சந்தோஷ சாலையாக தேர்ந்தெடுக்கப்பட்டு
ஆகஸ்டு 9ம் தேதி முதல் கோவையில் "சந்தோஷ சாலை" ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 52 வாரங்கள் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
காலை 3மணி நேரத்திற்கு இந்த சாலையில் காலை வாரா வாரம் ஒரு நாள், காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்படும்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை விளையாடலாம் ஜாலியாக சாலையில், சைக்கிள் ஓட்டுதல், யோகா நடனம் மற்றும் கால்பந்து, கிரிக்கெட், பூப்பந்து போன்ற விளையாட்டுக்கள் மிகுந்த உற்சாகத்துடன் சாலையில்
நிகழ்வுகள் நடக்கும்.
இந்த நேரத்தில் குறிப்பிட்ட இந்த சாலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் எல்லாம் தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
மாசில்லாத பகுதி போக்குவரத்து அறவே இல்லாத சாலையாக மாற்றப்பட்டு மாசு இல்லாத பகுதியாக மூன்று மணி நேரம் மட்டும் செயல்படும்.

கோயம்புத்தூர் காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துணை ஆணையாளர்களால் இந்த முயற்சிக்கான முதல்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஆர்யா
கலந்து கொண்டார்.
ஞாயிறு தோறும் இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்வுகள் நடக்கும்.
இந்த நேரத்தில் குறிப்பிட்ட இந்த சாலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் எல்லாம் தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.


