Saturday, August 8, 2015

வளம் வழங்கும் திருநாள் -ஆடிக்கிருத்திகை


[m1.jpg]
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே பாட வந்தேன்
செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்..

தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசு கின்றான்
பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான்..

செந்தூரில் கோயில் கொண்டான் சிங்கார வேலைக் கண்டான்
அழகர்மலை சோலை நின்றான் ஆடும்மயில் ஏறி வந்தான்..

பரங்குன்றில் ஆட்சி செய்தான் பாமாலை சூடிக் கொண்டான்
சாமிமலை வாசல் வந்தான் காவடிகள் கோடி கண்டான்..
கயிலையில் நடைபெற்ற சிவ பார்வதி திருமணத்தின் போது திரண்ட சுற்றத்தால் உலகம் சாய்ந்து திணறியபோது தனியொருவராக தென்னகம் வந்து உலகம் சமநிலை பெற அருளிய தமிழ் முனிவராம் அகத்தியரிடம் சிவபெருமான சிவகிரி – சக்திகிரி என்ற இரண்டு மலைகளை  அகத்தியரிடம் வழங்கி,  மருதமலையில் வைத்து விடக் கூறினார்... 
அகத்தியர்.  வழியில்  தவத்தில் இருந்த இடும்பனின் தவத்தை கலைத்து சடாசர மந்திரத்தை உபதேசித்தார் அகத்தியர். 
 நீண்டு வளர்ந்த ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி,  மரத்தின் ஒரு முனையில் ஒரு மலையையும் மறுமுனையில் இன்னொரு மலையும் கட்டி, காவடி எடுப்பது போல் சுமந்து வந்தார் இடும்பன்.  
 பழனியில் சிறிது நேரம் மலையை இறக்கி வைத்த போது வேடன் உருவத்தில் ஒரு சிறுவன் தோன்றி, அந்த இரண்டு மலைகளையும் திரும்ப எடுக்க முடியாத அளவு  பிடித்து வைத்திருந்த.  சிறுவனிடம் சண்டையிட்டார் இடுமபன்.  அவன் தந்த பதிலடியை தாங்க முடியாமல் இறந்தான் இடும்பன். 

சிறுவன் உருவத்தில் வந்தது முருகன் என்பதை அறிந்த அகத்தியமுனிவர், முருகனிடம் சென்றே நியாயம் கேள். அவர் கருனை செய்வார்.“ என்றார் இடும்பனின் மனைவி இடும்பியிடம்..
அதன்படி . இடும்பியின் வருத்ததை பார்த்து கருனை உள்ளத்துடன் இடும்பனை மீண்டும் உயிர் பெற செய்து தம்பதியினருக்கு ஆசி வழங்கினார். 

 பக்தர்கள்  காவடி எடுத்து வரும் போது, அவர்களுக்கு துணையாக இருந்து காக்க வேண்டும்.“  காவடி எடுக்கும் பக்தர்கள் வாழ்வில் இன்னல்கள் இல்லாமல் இருக்க, அவர்களுக்கு துணை இருக்க வேண்டும்.” என்றார் இடும்பனிடம் முருகப் பெருமான்!!. 

ஆடி கிருத்திகை அன்று இடும்பனை போல் காவடி எடுத்தால் 
கவலைகள் மறையும். “
முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்தில் காட்சி இருக்கிறது..!

சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். 

பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். 

முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால்,  கஷ்டத்தை அந்த முருகப்பெருமானே சுமப்பார். . 

முருகப்பெருமானுக்கு முல்லை மலர்கள்    விசேஷமானது. 

ஆடிக்கிருத்திகை பால் குட வழிபாடு..












ஆடி கிருத்திகை அன்று, முருகப்பெருமானுக்கு உகந்த ஆறுபடை வீடுகளில் இருக்கும் முருகப்பெருமானின் திருக்கோயிலுக்கு சென்று வாசனை மலர்களை தந்து வணங்கினால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சு திறன் சிறப்பாக இருக்கும்.  நலங்களும் வளங்களும் பல பெற்று வளமோடு நலமோடு கந்தன் அருளால் சிறப்பு பெறlலாம்.
தொடர்புடைய பதிவுகள்....



8 comments:

  1. மகாபாரதத்தில் வரும் இடும்பனும் இவரும் ஒன்றா.?வழக்கம் போல் அருமையான படங்களுடனும் தகவல்களுடனும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. அருமையான பதிவு அழகான புகைப்படங்களுடன்.

    ReplyDelete
  4. ஆடிக் கிருத்திகை அறிந்தேன்
    நன்றிசகோதரியாரே

    ReplyDelete
  5. அழகிய படங்களுடன் அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  7. அருமையான படங்கள் மற்றும் செய்திகள்!

    ReplyDelete
  8. படங்களும் பகிர்வும் அருமை அம்மா...

    ReplyDelete