Sunday, December 2, 2012

சுற்றுச்சூழல் பூங்கா





திருக்குற்றாலம் சித்திர சபையில் ஐயன் திரிபுர தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். 

பிரம்மன் தான் கண்ட அந்த தாண்டவத்தை தானே வரைந்ததாக ஐதீகம். 
ஆனந்த நடராஜேஸ்வரர் அம்மை சிவகாமியுடன்
பராசக்தி குற்றாலத்தில் ஸ்ரீசக்கர பீட வடிவில் காட்சி தருகிறாள்.
Kutralanathar Temple, Kutralam Kuttralam, Kuttalam, Courtallam, Western Ghats, Tamil Nadu, Tamilnadu, South India, India, Asia
குற்றாலநாதர் சித்திர சபையில் அருவியாய் அருள் பொழியும்  குற்றாலத்தில் பழத்தோட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 
சுற்றுச்சூழல் பூங்கா மனதை கொள்ளைகொள்கிறது ...



 சுமார் 40 ஏக்கரில் மூங்கில் தோட்டம், வண்ணத்துபூச்சி பூங்கா, 
நடனமாடும் நீருற்று, மலர்த்தோட்டம், சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கான சாகச பூங்கா, அருவியின் ஒசையைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட மரப்பலகை பாதை, கற்பாறை பூங்கா, பசுமை குடில், வியூ பாயின்ட் என்று  சிறப்புடன் அமைக்கப்படிருக்கிறது....



 Cm Will Inaugurate Kutralam Falls P

வண்ணத்துபூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் .....

Glittering ButterflyShinning ButterflySun ButterflyAmazing Butterfly Graphic
பூவும்                                          பூவையும்

Saturday, December 1, 2012

விஸ்வரூப ஆஞ்சநேயர்








ஹே மஹா வீரரே பாராக்கிரமரே வஜ்ரம் போன்ற உடல் பெற்றவரே துர்புத்துயை அகற்றி நற்புத்தியை பகதர்களுக்கு அளிக்கிறீர்கள் 
பொன் போன்ற உடல் காதுகளில் சுருண்ட கேசம் இவைகளுடன் தங்கள்
அழகு மிளிர்கிறது


கைகளில் வஜ்ராயுதமும் கொடியும் விளங்க
தோளில் தர்பத்தால் ஆன பூணல் அணிந்து இருக்கிறீர்கள்

சிவபெருமானின் அவதாரமே கேசரியின் மைந்தரே
உங்கள் தேஜஸும் பராக்கிரமும் சொல்லி முடியது 

உலகமே உங்களை வணங்குகிறது..

ஆழம காண முடியாத கலவிக் கடல் நற்குணங்கள் நிறைந்தவர் 
திறமை மிக்கவர் 

ஸ்ரீ ராமனுக்கு சேவையே முக்கியமாக கருதி அதில் நாட்டம் கொண்டவர்
ஸ்ரீ ராமனின் நற்குண்ங்களை கேட்டு மகிழ்ச்சி அடைகிறீர்கள் 


ஸ்ரீராம் சீதா லஷ்மண் உங்கள் இதயத்தில் எப்போதும் குடி கொண்டுள்ளார்கள், அவரகள்து இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்..
உலகத்தில் எவ்வள்வு கடினமான காரியமும் சுகமாக தங்கள்: கருணையினால் எளிதாக முடிகிறது

பதினாறு பேறுகளையும் அள்ளித்தரும் வள்ளல் ராமலிங்கேஸ்வரர் ஸ்ரீராமரால் பூஜிக்கப்பட்ட சுயம்பு மூர்த்தம் கீசரா குட்டா, ஆந்திரா தலை நகர் ஹைதராபாதிலிருந்து 35 கி.மீ தொலைவில்அருள்பாலிக்கிறார்...

இலங்கையில் இருந்து சீதையை காப்பாற்றி, அயோத்தி திரும்பும் வழியில், பிராமணனாகிய ராவணனை கொன்ற பாவத்தை தீர்க்க எண்ணிய ராமர் வழியில் பசுமை சூழ்ந்த ஒரு பெரிய மலை குன்றில் அமர்ந்து சிவபூஜை செய்ய விரும்பி லிங்கம் கொண்டு வர அனுமனைப் பணித்தது எதிர்பார்த்து தவித்துக்கொண்டிருந்த ஸ்ரீ ராமரின் தவிப்பை உணர்ந்த சிவபெருமான் தானே நேரடியாக தோன்றி ஒரு சிவலிங்கத்தை கொடுத்து பூஜை செய்யுமாறு சொல்லி மறைந்தார். மகிழ்வுடன் அதை பெற்றுக்கொண்ட ஸ்ரீராமரும் சிறப்பாக பூஜையை முடித்தார்.  

தாமதமாக  வந்த அனுமன் பூஜை முடிந்திருப்பதை கண்டு   கோபம் தணியாதவராக தான் கொண்டு வந்திருந்த 101 லிங்கங்களையும் வீசியெறிய அவை பல இடங்களில் விழுந்தன.  அதில் ஒன்றுதான் மலைப்பகுதியான கேசரி குட்டா. 
அனுமனை ஸ்ரீராமர் சாந்தப்படுத்தி, கேசரி புத்திரனான அனுமனே, இந்த மலை இனி வருங்காலத்தில் உனது பெயரால் அழைக்கப்படும் என்று கூறி அமைந்த மலைக்குன்றுதான் கேசரி குட்டா மருவி கீசர குட்டா என்று அழைக்கப்படுகிற மலையில்தான் ராமன் பூஜித்த ஈஸ்வரன் ராமலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி திருக்கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

 [Image1]

கம்பீரமாக குன்றின் மேல் காட்சியளிக்கிறது ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம். 
முதலில் நம்மை வரவேற்கும் விஸ்வரூப  ஆஞ்சநேயரின் கம்பீரத்தையும், விஸ்வரூபத்தையும் அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.   
ஆஞ்சநேயரை சுற்றிலும் அவர் வீசி எறிந்த லிங்கங்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன
எங்கு நோக்கினும் குரங்குகள் ஓடி விளையாடுகின்றன. 
File:Temple at Keesaraguda, AP W IMG 9127.jpg





விஸ்வரூப ஆஞ்சநேயர்    திருப்பதி