Showing posts with label திருவிழா. Show all posts
Showing posts with label திருவிழா. Show all posts

Tuesday, June 17, 2014

திருவிழா கொண்டாட்டங்கள்





திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர்  விசாக தேர்த் திருவிழா
 காணொளிக்காட்சிகள்  - கண்டுகளிக்க...



கோவை கோனியம்மன் ராஜகோபுரம்

கோனியம்மனுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள தங்கப் பாவாடை
கோனியம்மனுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள தங்கப் பாவாடை.
கோவை கோனியம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற விழாவில் வடம் பிடித்து தேர் இழுக்கும் பக்தர்கள்.
நவகிரகங்களில் முதன்மையான சூரியபகவான் தம்பதி சமேதராக..

கண்கவர் பொம்மைகள்...

செங்கம் கோயிலில் அம்பாள் சந்நிதியில் ராஜநாகம்.
திருவண்ணாமலை மாவட்டம்,  பழமை வாய்ந்த செங்கம் ஸ்ரீ அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோயிலில்  ஆனி மாதப் பிறப்பையொட்டி, கோயிலில் விடியற்காலை நடைபெற்ற கோ பூஜையின்போது, அம்பாள் சந்நிதியில் ராஜநாகம் அம்பாள் சிலை மீது சுமார் அரை மணிநேரம்  படம் எடுத்து விளையாடிய. ராஜநாகத்தை ஏராளமானோர்  வழிபட்டனர்.

செங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் வனத் துறையினர் வந்து ராஜ நாகத்தை உயிருடன் பிடித்து செய்யாற்றங்கரையில் விட்டனர்.
இதனால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கம் கோயிலில் அம்பாள் சந்நிதியில் ராஜநாகம்.

Sunday, March 3, 2013

பட்டத் திருவிழா




படிமம்:Kitesflying.jpg

.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகரில் ஆண்டுதோறும் பொங்கல் நாள் (மகர சங்கராந்தி) அன்று
 பட்டம் விடும் உலகத் திருநாள்  நடைபெறுகிறது.


துபாய்:சர்வதேச காற்றாடி திருவிழாஉலகம் முழுவதும் உள்ள, காற்றாடி ரசிகர்கள் பங்கேற்கும் வகையில், துபாயில், "டேம்குவெஸ்ட்' கேளிக்கை குழுவினர், பட்டம் பறக்க விடும் விழாவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்..

.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 10 ஆயிரம் பேர், விழாவில் பங்கேற்பார்கள்,
பறவைகள், விலங்கினங்கள் வடிவத்தில் பட்டங்கள் பறக்க விடுகின்றன .. சிறுவர்களுக்கான பட்டம் பறக்க விடும் பயிற்சியும் த்ருகிறார்களாம் .. காற்றாடிகளை சிறப்பாக வடிவமைத்தல் உள்ளிட்ட தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்குக்கும்  உண்டு..
திருவிழாவையொட்டி, ஒட்டக பந்தயம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறும் ..!









.

.

Kite Festival

   


Kite Festival
  




Monday, February 25, 2013

மனம் மகிழும் மாசி மகம்




மாசி மகத்தன்று கடலோர சிவாலயங்களில் உள்ள சுவாமியையும் அம்பாளையும் நன்கு அலங்கரித்து, சிவசக்தி மூர்த்தங்களுடன் பல்லக்கில் இருத்தி கடற்கரையோரம் எழுந்தருளச் செய்வார்கள். 

பெருமாள் கோவிலில் உள்ள பெருமாளையும் தாயாரையும் அலங்கரித்து, அவர்களுடன் சக்கரத்தாழ்வாரையும் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்வார்கள். 
 சிவனுக்காக அஸ்திர மூர்த்தியையும், 
பெருமாளுக்காக சக்கரத்தாழ்வாரையும் கடல் நீராடச் செய்வதற்கு தீர்த்தவாரி என்று பெயர். 
 தூப, தீப, ஆராதனை செய்து குளிர்ச்சியான பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு தந்தபின் ஆலயம் திரும்புவார்கள்.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்துகொண்டதன் மூலம் சமுத்திரராஜன் விஷ்ணுவின் மாமனார் ஆனார். 


தன் மகளை மணந்து கொண்டு மகாவிஷ்ணு வைகுந்தம் சென்றுவிட்டால் இனி நாம் அவரை எப்படி தரிசிப்பது என வருந்தினார் சமுத்திரராஜன். 
தந்தையின் மனக்குறையை லட்சுமி விஷ்ணுவிடம் கூறினாள். 

 திருமால் ஆண்டிற்கு ஒரு முறை தாம் கடற்கரைக்கு வந்து தரிசனம் தருவதாக வரம் தந்தார். அந்த புண்ணிய தினமே மாசிமகம்.
 கருணாசாகரியான அம்பிகை மீனவ குலத்தில் அவதரித்த போது. ஈசன் அம்பிகையை மணக்க காலம் கனிந்தபோது, அவர் மீனவர்போல் வேடமிட்டு அம்பிகையின் இருப்பிடம் சென்றார். 

அங்கு அவரால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை தானே அடக்கி மீனவர் தலைவனுக்குக் காட்சி கொடுத்தார். 

மீனவர் தலைவன், "தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்க அருள் புரிய வேண்டும்' என வேண்டினார்.
அதன்படி ஈசன், "மாசி மகத்தன்று கடல் நீராட வருவேன்' என்றநிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி.

மாசி மகத்தன்று ஈசன் வேடமூர்த்தியாகவும் அன்னை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்குச் செல்வர். 
அங்கு தீர்த்தவாரி நடைபெறும். கடலோர ஊர்களான மண்டபத்தூர், காளிகுப்பம், அக்கம்பேட்டை மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனுக்குச் சிறப்பு விழா நடத்தி மகிழ்வார்கள்.