Showing posts with label ‘திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி’. Show all posts
Showing posts with label ‘திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி’. Show all posts

Sunday, July 7, 2013

காதல் கடிதம் பரிசுப் போட்டி - நவீன கடிதம்..!



 .

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு   நீங்கள் எழுத மறந்த காதல் கடிதம்
ஹைடெக் கடிதம்..!

காதல் கடிதம் தீட்டவே கணிணித்திரையே காகிதம்
கரத்தில் உருண்டிடும் மௌசே பேனாவாகிப் போனதே
ஃபேஸ்புக்கும் எஸ் எம் எஸ்ஸும் இமெயிலும் ட்வீட்டரும் வாகனம்

சேட்டிலைட்டுகளும் சூரியனும் சந்திரனும் அஞ்சல்காரர்கள்
இரவுபகல் எப்பொழுதும் நினைவுகள்  நம்மைச் சேர்த்திடும்

பளிச்சிடும் கணிணித்திரையில் ஒளிர்கிறாய்
மின்னஞ்சல்  வழியாய் வந்து  தகவல் சொல்கிறாய்


கண்ணே உன் மெயில் தன்னைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தல் ஜீவன் காயம் படுமல்லோ

மெமரியில்  தனிச் சிறை பிடித்தேன் Shutdownனே செய்யாமல் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேயத்தேய நாளும் கடிதம் தீட்டுவேன்

நீலக் கண்ணோரம் மின்சாரம் பறித்து பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் நம்மோடு
நீலப் பல்லாலே  சிரித்திடும்  நீல வானம் நாமாய் டேட்டா ட்ராஸ்பர் ஆகாதோ

இன்றோடு மின்மீன்கள் விண்ணோடு மின்னல்கள் கண்ணோடு
கூகுள்கள் காணாத தேடல்கள் நம் கடிதங்களில்..

 நம் பெயரே பாஸ்வேர்டாய் கண்களே பாசையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பல கோடி நூறாயிரம் விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி…
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கி எழுதிய கடிதம் ..!

ஃபேஸ்புக்கில் லைக்குகளாய் ட்வீட்டரில் ஸ்டேஸ்களாய் காவியங்கள் படைத்திடுவோம்...
ஜீடாக்கில் பேசி ஸ்கைப்பில் காத்திருப்போம் தினமும் தரிசனம் பெறவே

நிலாத் தட்டு நட்சத்திரச் சோறு கைக்கழுவ கடல் கைதுடைக்க மேகம்
வானவில்லாய் கனவின் விளிம்பில் கக்கத்தில் கடிதங்கள் இதுபோதும் நமக்கு

ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசம் மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்  செய்யும் விந்தை காதலுக்கு கை வந்த கலை தானே..!

விண்ணோடு மேளச் சத்தம் என்ன? மண்ணோடு சின்னத் தூறல் என்ன?
மனதை கொள்ளை அடித்த தந்திரமும் மந்திரமும் கடிதமாய் எழுதுவோம்

நம்  ஆயுள் ரேகையும்  ஆணி வேரும்  நம் கடிதங்கள் தான்
“நாம்  நிஜத்தை நேசிக்கிறோம்  நிழலையோ பூஜிக்கிறோம்
நம்  நிழல் விழுந்த கடிதத்தின்  எழுத்துக்களைக் கூட போற்றுகிறோம்...!

கண்ணே உன் செல்போனில் சிம்கார்டு ஆகமாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா

டேட்டாககள் நிரம்பி  ததும்பி வழியும்  கோப்புகளாய்
சேமித்த டெஸ்க்டாப்பில் அன்பை வார்த்து சிலிகான் சேர்த்து 

வயரூட்டி உயிரூட்டி ஹர்டிஸ்கில் நினைவூட்டி அழியாத 
உடலோடு வடியாத உயிரோடுஆறாம் அறிவை அரைத்து 
ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி..!

தீ இல்லை புகை இல்லை  காதல் வேள்வி செய்கிறோம் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை  ஒரு காதல் நெய்கிறோம் மனதிலே

பூ இல்லை மடல் இல்லை  புது தேனை பெய்கிறோம் உயிரிலே
அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்வோம்
மொத்தமாய் கோர்த்துதான்காதல் செண்டொன்று செய்திடுவோம்

ஒரு வரி ஒரு வரி நான் சொல்லஎழுந்திடும் காதல் காவியம்
அதிகாலை விடிவதெல்லாம் உன்னைப் பார்க்கும் மயக்கத்தில்தான்

அந்தி மாலை மறைவதெல்லாம் உன்னைப் பார்த்த கிறக்கத்தில்தான்
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம், உயிருக்குள் ஒலித்திடும்
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய்

ஐசக் அசிமோவின் வேலையோ  ஐசக் நியூட்டனின் லீலையோ 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ  நவீன உலகத்தில்  அதிசய கடிதம் ..

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி கடிதம்  கொண்டுதான் ருசியறியும்

கடிதத்தின் வார்த்தைகளில் வாழும் காதல் காவியம் .. பேனாவில் ஊற்றி 
வைத்தது நம் உயிரல்லோ ..குட்டி குட்டி கணிணி பட்டனில் வாழ்ந்திடும்..!

தவமின்றி வரங்கள் தருவதனால்  மின்சார கண்ணனோ?
ஆட்டோமேட்டிக்காய் ஆட்டோகிராப்பாய் கடிதம் எழுதவா..!


கையில் மிதக்கும் கனவா .. கை கால் முளைத்த காற்றா
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே... நுரையால் செய்த சிலையா ..

காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது..
 பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால். பசியோ வலியோ தெரியாது...

நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன் இருந்தாய்! இருந்தோம்!
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன

அலையெல்லாம் நாம் எங்கே எங்கே என்றது 
கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது

காதல் பாஸ்போர்ட்டில், முத்த விசாவோடு நாடு கடந்தும் 
திருமண திருநாள் இன்டர்நெட் கஃபேயில் நடக்கும் 
கடலும் கடலும் கை தட்டும்..இரவும் நிலவும் பறை கொட்டும்...


உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் 
காதல் காதல் காதல்காதல் என்றே முழங்கிடும் காதல் கடிதப்போட்டி 

காதல் உதயத்திற்குஅஸ்தமனமே இல்லை என்பதால்...
அதற்கென ஒருமேற்கும் இல்லையென்றே ஆகிறது!

காதல் வினோதமான நெருப்பு... பற்ற வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!

காதல் இல்லா விடம் சூனியமாம் புவி காதலினால் நடக்கும்.
காதலுள்ளத்தைத் தடுப்பது வாழ்வை கவிழ்க்கின்றதை நிகர்க்கும்.

என்னில் இன்று நானே இல்லை காதல் போலே ஏதும் இல்லை
ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட

பேச நினைக்கிறேன் ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ மௌனத்தின் கர்ப்பத்தில்



--------------------------------------------------------------------------------------------------------------------------

Disclaimer :
பத்தாம் வகுப்பு படிக்கும்போது பக்கத்துவீட்டுப்பெண்ணின் காதல் கதை என்று தோழி சொல்லும் போது அது அவள் கதைதான் என்று தெரியாத ட்யூப்லைட் நானாய் இருந்தேன்..

கல்லூரியில் கைரேகை பார்க்கிறேன் என்று அறிவித்ததும் என்முன் நீண்ட கரங்களில் எத்தனை காதல் கதைகள் நான் கேட்காமலே சொல்லப்பட்டன..

பளிச் எனப் புரிந்தது பக்கத்து வீட்டு கதையல்ல அவரர்களின் சொந்தக் கதையே என்று..!

நெருங்கின தோழி அறிவித்தாள் அவங்க கூட எல்லாம் பேசாதே அவர்கள் யாரையோ காதலிக்கிறார்கள் என்று.. சிரித்துக்கொண்டேன் .. 

அவள் அம்மாவும் அறியாத அவள் காதல் கதையை விளக்கமாக  
என்னிடம் எடுத்துரைத்தவள் அவள்தானே ..!

பாதகங்களை எல்லாம் எடுத்துக் கூறி காதல் ஜெயிக்காதென்பதை எடுத்துக்கூறியபோது  குமுறி அழுது சொன்னாள்.. 

சிறு வயதிலேயே சித்தர் பாடல்கள் மற்றும் பெரிய பெரிய புத்தகங்களைப் படித்து ஞானி மாதிரி ஆகிய உனக்கு காதல் மாதிரி மெல்லிய உணர்வுகள் புரியாது போனதில் வியப்பில்லை...என்றாள்.!

இருந்துவிட்டுப்போகட்டுமே .. அதனால் ஒன்றும் குறைவில்லை எதையும் இழக்கவில்லை வாழ்வில்..

பள்ளியின் நிர்வாகப்பொறுப்பில் இருந்த என் கணவரிடம் பள்ளி மாணவன் எழுதிய  காதல் கடிதம் கொடுக்கப்பட்டு  அறிவுரை சொல்ல கேட்டுக்கொள்ளப்பட்டது ..

என் கையில் கடிதத்தை கொடுத்ததும் ஒரு பக்க அளவில் இருந்த அந்தக்கடித்தில் வரிக்கு வரி இருந்த எழுத்துப்பிழைகள் கண்களை உறுத்தின..ஏதோ கட்டுரை நோட்டு திருத்துவது போல் திருத்தினோம்..! 

இப்போது காதல் கடிதப்போட்டி ....!
வாழ்க்கை ஒரு விசித்திரமான வட்டம்தான்..!