Saturday, February 25, 2012

காவல் தெய்வத்தின் கவின்மிகு திருவிழா



கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா,கோவை நகரின் தலை சிறந்த விழாவாகும். 

கோவன்புத்தூரை ஆட்சி செய்த கோவனுக்கு குலதெய்வம் கோனியம்மன் என்பது வரலாறு. 
[Image1]
கோனியம்மன் கோவில் தோற்றுவிக்கப்பட்டு, 900 ஆண்டுகள் இருக்கும் என்று சொல்கின்றன சில சரித்திரச் சான்றுகள்.

அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள், பின் பகுதியில் ஆதி கோனியம்மன், பஞ்ச முக விநாயகர், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.


உற்சவர் கோனியம்மன்

தேர் திருவிழாவின் தொடக்கமாக தேர் முகூர்த்தக்கால் , பூச்சாட்டு  நடைபெறும்..
கிராம சாந்தி, அடுத்தநாள் அக்னிசாட்டு, பல வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக இருக்கும்..



திருக்கல்யாண உற்சவம், பூதவாகனம், மஹிஷாசுர வதம் திருத்தேர் தேரோட்டம் நடைபெறும் அம்மன் திருத்தேரில் எழுந்தருளுதல், மாலையில் திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்..
p_0004
பரிவேட்டைக்காக குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு,
கவின் மிகு காட்சியாகும்.. 
p_0008
தமிழில் லட்சார்ச்சனை, தெப்பத் திருவிழா, அடுத்த நாளில் கொடியிறக்கமும், வசந்த விழாவும் வெகு சிறபான நிகழ்ச்சிகளாகும்...
festival
மிகப்பெரிய ஏழுநிலை ராஜகோபுரத் திருப்பணி வேலைகள் 
ஸ்ரீ கோனியம்மனுக்காக தயாராகி வருகிறது.
koni amman


காணக்கிடைக்காத அற்புதம் திருக்கோவில் வளாகத்தில் பஞ்சமுக விநாயகர் சன்னதி




ஸ்ரீ கோனியம் திருக்கோவில் பின்புறமுள்ள ஸ்தலமரம் நாகலிங்கமரம் அழகாய் பூத்துக் குலுங்கும் எழிற்கோலம்.மனம் நிறைகிறது...





சிறுவாச்சூர் "ஸ்ரீ மதுரகாளியம்மன்" 


Friday, February 24, 2012

தரணியாளும் தண்டுமாரியம்மன்






அம்மா தண்டு மாரியம்மாகோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே உன் அருள் நாடி வந்தோமே

கோவை நகரின் காவல் தெய்வமாக நகரின் இரு கண்களில் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கிறாள் தண்டுமாரியம்மன் .
மூலவர் தண்டு மாரியம்மன்
[Gal1]
அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். 
[Image1]
ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் விநாயகர். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் துர்க்கை, தெட்சிணாமூர்த்தி, லட்சுமி, முருகன், கருப்பராயன், முனியப்பன் ஆகியோர் அருள்புரிகின்றனர்.
மகாலட்சுமி
[Gal1]
பாலமுருகன்
[Gal1]
தட்சிணாமூர்த்தி
துர்க்கை
[Gal1]
அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.
கோவையில் தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீச்சட்டி ஊர்வலம் நடைபெறும்.
"தண்டு' என்றால் "படை வீரர்கள் தங்கும் கூடாரம்' எனப்பொருள். அங்கு கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் "தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர். 

படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில் ஒர் சமயம் பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்பாளை வணங்கி தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு அத்தீர்த்தத்தை பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை குணமான அதிசயம் நிகழ்ந்தது.

அனைத்து மதத்தினரும் வழிபடும் தெய்வமாக திகழும் தண்டுமாரியம்மன் 

வணிகம் புரிவதற்காக வந்து நாட்டைக் கைப்பற்றிய வெள்ளையர்களிடம் இருந்து போரிட்டு, நாட்டை மீட்கப் போராடிய திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். 

அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்பாளின் மீது மிகுந்த பக்தி கொண்டு அவளை தினமும் வணங்கி வந்தான்.

அப்போது,ஒருநாள் இரவில் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில் வேப்பமரங்களுக்கும், காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருந்த நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.
மூலவர் விமானம்

கனவில் அம்பாளின் அரிய திருமேனியைக் கண்ணுற்ற அவ்வீரன் மறுநாள் காலையில், அம்பாள் வீற்றிருப்பது போல் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்பமரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட தெய்வமாக அம்பாள் அங்கே வீற்றிருந்தாள்.
அங்கேயே அம்பாளை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும் கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு காலப்போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர்.
நவக்கிரக மண்டபம்
[Gal1]
தங்கரத்தில் தண்டுமாரியம்மன்

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா


விற்கோல வேதவல்லி விசாலாக்ஷி
விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி
சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே.

புவனமுழுதாளுகின்ற புவனேச்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேச்வரி
நவநவமாய் வடிவாகும் மகேச்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேச்வரி


கவலைகளைத் தீர்த்துவிடும் காளீச்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீச்வரி
உவமானப்பரம்பொருளே ஜகதீச்வரி
உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி


உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கொஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரைத் துடைத்துவிட ஓடிவாம்மா





காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
சின்னவனின் குரல்கேட்டுன் முகம் திருப்பு
சிரித்தபடி என்னைத்தினம் வழியனுப்பு
கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்


பண்ணமைக்கும் நாஉனையே பாடவேண்டும்
பக்தியொடு கையுனையே கூடவேண்டும்
என்ணமெலாம் உன்நினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்நினைவே ஆகவேண்டும்


மன்ணளக்கும் சமயபுர மாரியம்மா
மகளுடைய குறைகளையும் தீருமம்மா
நெற்றியுலும் குங்குமமே நிறையவேண்டும்
நெஞ்சினிலுன் திருநாமம் வழிய வேண்டும்
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்

கவிதையிலே உன்நாமம் வாழவேண்டும்
சுற்றமெல்லாம்நீடூழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா ?


மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா ?
அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ?
அருள்செய்ய இந்நேரம் ஆவதுண்டோ?
கண்ணுக்கு இமையன்றிக் காவலுண்டோ?
கன்றுக்குப் பசுவன்றிச் சொந்தமுண்டோ?


முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ?
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ ?
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ?


அன்புக்கே நானடிமை ஆகவேண்டும்
அறிவுக்கே என்காது கேட்கவேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்கவேண்டும்
வஞ்சத்தை என்னெஞ்சம் அறுக்கவேண்டும்

பண்புக்கே உயிர்வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்
என்பக்கம் இவையெல்லாம் இருக்கவேண்டும்
என்னோடு நீயென்றும் வாழவேண்டும்


கும்பிடவோ கையிரண்டு போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை


செம்பவழ வாயழகி உன்னெழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாளே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை


காற்றாகிக் கனலாகிக் கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகிப் பயிராகி உணவாகினாய்


தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை.



மகாலட்சுமி அலங்காரம், திருப்பூர்.