
ANGALA PARAMESHWARI BANGALORE
அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

சிம்ம வாஹினி! ஜகன் மோகினி! தர்ம ரூபினி! கல்யாணி!
கமல வாசினி! மந்தஹாசினி! கால பயங்கரி! காமாக்ஷி!
மாலினி சூலினி ஜனனி ஜனனி சங்கரி ஈச்வரி மீனாக்ஷி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி சர்வத்திற்கும் இங்கு நீ சாட்சி!
சமயபுரத்தாளே சாட்சி!

சமயபுரத்து நாயகியே சமயத்தில் காக்கும் நாரணியே!
காரணியே பவ தாரணியே அன்னபூரணியே!

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி
அன்னை. நோய்களை ஓட ஓட விரட்டுபவள்.
கேட்கும் வரங்களை கேட்டவாறே தரும் தாய் .
பக்தர்களை கண்ணின் இமை போல் காக்கும் அம்பிகை
ஆதிபராசக்தியே அனைவருக்கும் தாய்.
தாயினிடத்துத் தான் தயை, கருணை, அன்பு தியாகம், சாந்தம், பொறுமை, கைமாறு கருதாக் கொடை, சுயநலமில்லா சமநோக்கு, குறிப்பறிந்து உதவும் குணம் யாவும் சிறக்கக் காண்கின்றோம்.
சக்தி தான் முழுமுதற்பொருள்.
சக்தியிலிருந்தே முத்தொழில் புரியும் மூவரும் தோன்றினர்...

“சிவம் என்பது செயலற்ற தத்துவம்
மகாமாயையாகிய சக்தி சிவத்தைத் தொட்டவுடன் ஆணவ மாயை பிறக்கிறது.
ஆணவத்திலிருந்து மனசு என்ற தத்துவம் உதயமாகிறது.
மனசிலிருந்து ஆகாசம்.
ஆகாசத்திலிருந்து காற்று.
காற்றிலிருந்து நெருப்பு
நெருப்பிலிருந்து நீர்...
நீரிலிருந்து நிலம்.
இவ்வாறாகப் பஞ்சபூத செயற்கையால் பிரபஞ்சமும் உயிர்களும் தோன்றுகின்றன.
இந்தப் பரிணாம நெறியே சக்தியின் விளையாட்டு” என்கிறார்கள் சித்தர்கள்.
“பராசக்தியின் உதவி இல்லாவிட்டால் பரமசிவனால் அசையவும் முடியாது.” என்கிறார் ஆதிசங்கரர் தமது சௌந்தர்யலகரியில்.






/// மனசிலிருந்து ஆகாசம்...
ReplyDeleteஆகாசத்திலிருந்து காற்று...
காற்றிலிருந்து நெருப்பு...
நெருப்பிலிருந்து நீர்...
நீரிலிருந்து நிலம்... ///
மிக்க நன்றி அம்மா...
ரசித்தேன்.
ReplyDeleteஆதி பராசக்தியை மனம் குளிற தரிசித்தோம் நன்றி வாழ்த்துகள்
ReplyDeleteஆதிபராசக்தியின் சொரூபம் கருவூலத்தில் எடுத்த இந்த அழகான படத்தில் இருந்து தொடங்குகிறது.... சாந்தசொரூபியாக எலுமிச்சை மாலையில் மங்களகரமான மஞ்சள் மாலையில்....
ReplyDeleteபெங்களூரின் அங்காளபரமேஸ்வரி குங்குமச்சிவப்பில்....
வெள்ளிக்கவசமிட்டு இருபுறமும் அழகிய மூக்குத்தியுடன் மலர் ஹாரமும் இட்டு....
அரக்கனை வதம் செய்யும் சக்தியாக சிம்ஹவாஹினியாக...
தங்ககோபுரத்து நாயகியாக....
தங்க கவசமிட்டு இருபுறம் அழகிய கொஞ்சும் கிளிகளை வைத்து தேர் உலா....
ஓம் சக்தி ஓம்சக்தி பராசக்தி சமயபுரத்தாளின் சிகப்பு பட்டுடுத்தி பொன்னாபரணங்கள் சூடி....
ஆஹா ஆஹா காய்களும் பழங்களும் ஒருசேர அலங்கரித்து சமயபுரத்து அம்மனை வழிப்படும் அழகோ அழகு...
சக்தியில்லையேல் சிவமில்லை என்ற ஆதிசங்கரரின் வாக்கு சௌந்தர்யலஹரியில் அம்சம்...
மாரியம்மனின் தங்கரதம்...
பளீரென ஒளிரும் தீப ஒளிகளில் அம்மன் பிரகாசமாக அருள் பாலித்திருப்பது அற்புதம்..
மஞ்சள் காப்பிட்டு... மலர் அலங்காரத்தில் மனம் மயக்கும் கோட்டை மாரியம்மன்....
எல்லா அம்மனையும் கோயிலுக்குள் சென்று தரிசித்துவிட்டு வெளியே வந்தால் ஆசிர்வதிக்க யானைப்பா நிற்கிறார்...
அற்புதமான சிரத்தையான பகிர்வு இராஜராஜேஸ்வரிம்மா... தங்களின் உழைப்பும் ஈடுபாடும் ஒவ்வொரு படம் பகிர்வதிலும் தெரிகிறது....
மனம் நிறைந்த அன்புநன்றிகள்மா பகிர்வுக்கு.
மனம் கவர்ந்த பதிவு.
ReplyDeleteom sakthi
ReplyDeleteசமயபுரத்தாளே உனக்கு
ReplyDeleteசாஷ்டாங்கமா நமஸ்காரம்
சகல வினைகளையும் அழித்து என்னை
சீக்கிரமே அழைப்பாய்.
சுப்பு தாத்தா.
பதிவும் படங்களும் அழகு..
ReplyDeleteமுதல் படம் ரொம்ப அழகாருக்கு.
அருளவேண்டும் தாயே !
ReplyDeleteஅங்கயிற் கண்ணி நீயே !
அன்னை ஆதிபராசக்திக்கு அடியேனின் அன்பான வந்தனங்கள்.
ReplyDeleteசமயபுரம் கோயில் கோபுரம், கடைவீதி, தங்கத்தேர் முதலியன பிரமிக்க வைக்கின்றன.
>>>>
கடைசி படத்தில் நம் யானையார் ;)
ReplyDeleteதுதிக்கை ரொம்ப, ரொம்ப, ரொம்பத்தான் தொங்கிக்கொண்டு தரையைத்தொட்டுக் கொண்டு, மஹா முரடாக ..... ;)))))
>>>>>
மேலிருந்து ஏழவது படத்தில் உள்ள அம்பாள் அட்டகாசம், மிகவும் ராயஸமாக அமர்ந்துள்ளார்.
ReplyDeleteமேலிருந்து நாலாவது படமும் அம்பாள் பேரெழுச்சியுடன் .... ;)))))
மேலிருந்து ஐந்தாவது படம் திறக்கவே இல்லையாக்கும்.
அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
வாழ்த்துகள், நன்றிகள்.