




ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்
ஒருவந்தம் கைத்துடை யார்
என்பது வள்ளுவர் வாக்கு ....
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
கடுமையாக முயற்சி செய்தால் இந்த உலகில் முடியாத காரியம் எதுவுமில்லை.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் பலன்கள் கிடைக்கும் என்பதைக்கூட எண்ணிப்பார்க்காமல் உழைப்பு உழைப்பு என்று இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருந்தால் வெற்றித் திருமகள் தேடிவந்து குடி புகுவாள் இல்லத்தில்..

தளராத முயற்சி வெற்றி பெறுகின்றது.
‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தால் உழைப்பால் உயர்ந்த இயற்கை வாழ்த்தும்
‘எவ்வளவு சோதனைகள் வந்தாலும் வெற்றி பெறுவேன்’ என்றமன உறுதியோடு இடைவிடாமல் உழைத்தால் இந்த உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் ஒளிக்கு ஒளிகொடுக்கலாம்..
இந்த உலகத்திற்குக் குளிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலாவோடு கைகோர்த்துக் கொண்டு உலா வரலாம்.
மலையளவு உயர்ந்த மலையையே மடியில் வைத்துக் கொஞ்சலாம்.
உழைப்பின் உயர்வைக் கண்டு, நெடுங்கடல் கூடத் தன் அலைக்கரங்களை நீட்டியபடியே அன்போடு அழைப்பதற்குப் பாய்ந்துவரும்.
உழைத்து உழைத்து வானளவுக்கு உயர்ந்துவிட்டவர்களை ஆகாயம் கூடக்குளிர்ந்து போய் மழையைப் பெய்து ஆசிர்வதிக்கும்.

தன்னம்பிக்கை ஒன்று இருந்தாலே போதும். முயற்சி, உழைப்பு, ஊக்கம், ஆக்கம் என்று எல்லாமே இருந்தும் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அதனால் என்ன பயன்? சில பேர் மாடுபோல் உழைப்பார்கள். கடுமையான முயற்சிகள் செய்வார்கள். எவராவது தூண்டிவிட்டால் ஊக்கத்துடன் பணியாற்றுவார்கள். ஆனால் தன்னைப்பற்றி ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருக்காது.

தன்னம்பிக்கை என்பது ஆணிவேரைப் போன்றது. இது ஆட்டம் கண்டுவிட்டால்,முன்னேற்றத்திலும் வாட்டம் வந்துவிடும்.

விதியைக்கூட நீங்கள் வென்றுவிடலாம்
தொடர்ந்து முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தால், எதையும் சாதிக்க முடியும்.
முயற்சியில் தளர்வு வந்தால் மலராதே முன்னேற்றம்.
தளராத முயற்சிகளைச் செய்து கொண்டே இருங்கள். உங்களுக்குக் கடுமையான முயற்சி இருக்குமேயானால், விதியைக் கூட வென்றுவிடலாம்.
முயற்சியில் தளர்வு வந்தால் மலராதே முன்னேற்றம்.
தளராத முயற்சிகளைச் செய்து கொண்டே இருங்கள். உங்களுக்குக் கடுமையான முயற்சி இருக்குமேயானால், விதியைக் கூட வென்றுவிடலாம்.


வெற்றிக்குத் தேவையான ஊக்கம், உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை குறித்து படிப்பவருக்கு உற்சாகம் ஊட்டும் கட்டுரை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎவராவது தூண்டிவிட்டால் ஊக்கத்துடன் பணியாற்றுவார்கள்.
ReplyDeleteஇந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டுள்ளது!!!!
அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி
ReplyDeleteஎடுத்த கருமங்களாகா- தொடுத்த உருவத்தால்
நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தா லன்றிப் பழா 5.
என்னதான் அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் ஒவ்வொன்றும் நிறைவேறக்கூடிய சமய சந்தர்ப்பம் வாய்த்தாலன்றிக் கைக்கொண்ட எந்தக் காரியமும் முடிவதில்லை! தொடர்பான கிளைகள் விட்டு நெடிது உயரும் எத்தனையோ மரங்கள் உருவத்தில் எவ்வளவே பெரிதாக விளங்கினாலும் அவையெல்லாம் காய்க்கும் பருவம் வந்தாலன்றிப் பழுப்பதில்ல்லை.
தன்னம்பிக்கை ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அழகாக சொல்லிடிங்க.
ReplyDeleteஊக்கம் தரும் லேகியம்
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteதன்னம்பிக்கைப் பகிர்வு....உற்சாகப்பகிர்வு..
ReplyDeleteதன்னம்பிக்கை என்பது ஆணிவேரைப் போன்றது. இது ஆட்டம் கண்டுவிட்டால்,முன்னேற்றத்திலும் வாட்டம் வந்துவிடும்.
ReplyDelete//அருமை//
ஊக்கஅளிக்கும் பதிவுக்கு நன்றி!
என்னுடைய வலைப்பக்கத்தில் பாசமழை மற்றும் நம்பிக்கைக் கீற்று கவிதைகள் பகிர்ந்துள்ளேன்!
காரஞ்சன்(சேஷ்)
ஊக்கமே உயிர்ப்பு. உற்சாகமூட்டும் பதிவு!
ReplyDeleteதன்னம்பிக்கை கண்டிப்பாய் வேண்டும் வெற்றிக்கு.
ReplyDeleteஆக்கம், ஊக்கம், முயற்சியுடன், தன்னம்பிக்கையும் வேண்டும். நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
’தன்னம்பிக்கை’ தந்த தங்கமான பதிவு.
ReplyDelete’தன்னம்பிக்கையே’ தன்னம்பிக்கையைப்பற்றி எழுதியது போல மிகச்சிறப்பான பகிர்வு.
இதை இப்போ படித்ததும் தான், எனக்குத் தன்னம்பிக்கையே துளிர்க்க ஆரம்பித்துள்ளது போல உள்ளது.
’தன்னம்பிக்கை’ தந்துள்ள தங்களுக்கு என் நன்றியோ நன்றிகள்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.