

ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியும்,
மூவுலகத்துக்கு தாயுமான மகாலட்சுமியை ஸ்தோத்திரங்களினால் துதிப்பவர்கள் இவ்வுலகில் எல்லாக் குணங்களாலும் நிறைந்தவர்களாகவும்,மிகுந்த பாக்கியசாலிகளாகவும்,வித்வான்கள் கொண்டாடும் புத்தி சக்தி உள்ளவர்களாகவும் ஆகின்றனர்.
மூவுலகத்துக்கு தாயுமான மகாலட்சுமியை ஸ்தோத்திரங்களினால் துதிப்பவர்கள் இவ்வுலகில் எல்லாக் குணங்களாலும் நிறைந்தவர்களாகவும்,மிகுந்த பாக்கியசாலிகளாகவும்,வித்வான்கள் கொண்டாடும் புத்தி சக்தி உள்ளவர்களாகவும் ஆகின்றனர்.

ஸ்ரீ மகாலட்சுமி தேவியை ஐஸ்வர்யத்தின் வடிவாக வழிபட்டு அஷ்ட ஐஸ்வர்யங்கள் என்கிற எட்டு வாழ்க்கை நலன்களையும் பெறலாம்...

"செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன்'' என்று பாரதியார் தன் பாடலில்அலைமகளாம் திருமகளை போற்றிப் பாடியுள்ளார் ...


அஷ்ட லஷ்மியும் நவநிதியும் பெற்று பத்துத்திக்கும் வசமாகி வளமுடன் வாழ செல்வத்திருமகள் அருள்பொழிகிறாள்..
என்றும் எங்கும் தன் அருட்பார்வையை வீசும் அன்னை மகாலட்சுமியான ஸ்ரீதேவியே அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தேவதை;
விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள்.

விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.
அஷ்ட லட்சுமிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவரை லட்சுமிபதி என்று வணங்குகிறோம்...

மக்கள் வணங்கும் மகாலட்சுமி; விஷ்ணுவுக்குப் பிரியமானவள்;
ஸ்ரீயப் பதி, ஸ்ரீநிவாசன் என்றெல்லாம் பெருமானுக்குப் பெயர் வரக் காரணம் ஸ்ரீதேவியே..
ஸ்ரீயப் பதி, ஸ்ரீநிவாசன் என்றெல்லாம் பெருமானுக்குப் பெயர் வரக் காரணம் ஸ்ரீதேவியே..
தாயாரின் அழகுக் கோலம் மனத்துக்கு இனிமை சேர்க்கிறது.

நல்ல நண்பர்கள்,கல்விச்செல்வம் அனைத்தும் குறைவின்றி பெற்றவர்களே லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள் ...
வெண்ணை காப்பு. மகாலட்சுமி



படங்களும் தகவல்களும் அருமை. அனைவருக்கும் லக்ஷ்மிகடாக்ஷம் கிடைக்கட்டும்...
ReplyDeleteஐஸ்வர்யம் வர்ஷிக்கும் அன்னையின் தரிசனம் கிடைக்கபெற்றோம் நன்றி
ReplyDeleteநல்ல படங்கள்... நன்றி..
ReplyDeleteThe Laxmi idol on chariot drawn by elephant is very cute
ReplyDeleteஅனைத்து படங்களும் மிகவும் அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
காணக்கிடைக்காத ஒரு படம் வெண்ணைக்காப்பு மகாலக்ஷ்மி. நல்லதொரு விளக்கத்துடன்,படங்களும் நன்றாக இருக்கு. நன்றிகள்.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை...
ReplyDeleteவெண்ணை காப்பு மகாலட்சுமி படம் மிகவும் அருமை...
நன்றி...
மஹா லட்சுமியை பற்றிய தகவல்களும் படங்களும் அருமை! நன்றி!
ReplyDeleteஅருமையான படங்கள்! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteஅருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteஆலயத்திற்கு சென்று வந்த ஓர் உணர்வைத் தருகின்றது - தங்கள் வலைக்கு வந்து சென்றவுடன். நன்றி
ReplyDeleteவைபோக லஷ்மியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
ReplyDeleteஐஸ்வர்யம் வர்ஷிக்கும் அன்னைக்கு
ReplyDeleteஅடியேனின் அன்பான வந்தனங்கள்.
மேலிருந்து கீழ் இரண்டாவது படமும்
அதுபோலவே
கீழிருந்து மேல் இரண்டாவது படமும்
கொள்ளை அழகு.
மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மற்றபடி அனைத்துப்படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல அருமை தான்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
-oOo-