



அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாயம்மா பேச வைத்தாய்
எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி
கற்றவரும் கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட
நின்னருளை தந்தருள்வாய்
அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் எதுவும் செய்யாது.
பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர்.
திருடர்களால் பயமில்லை.
நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும்
கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும்.
அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம்.
நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை வாசிக்கலாம்.
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.
இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. சூரியன் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.
அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை புரட்டாசி மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.
இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.
புரட்டாசியில் வரும் நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி எனப்படும்...சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு ...
கல்வியோடு செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.
அனைத்தையும் பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.
கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.
தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலையோ படமோ அலங்கரித்து வைத்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து பூஜை செய்து வணங்க வேண்டும். ஏழைகளுக்கு தானமும் செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.















சுண்டல்களை எடுத்துச் சாப்பிடலாம் போல இருக்கு.
ReplyDeleteபடங்களும் விளக்கங்களும் அருமை அம்மா...
ReplyDeleteநன்றி...
கொலு பொம்மைகள், கோலம், சுண்டல்கள் என கலந்து கொலு...
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு நன்றி.
How I wish
ReplyDeleteI stand before the
Golu sing a few songs
Oh ! Goddess Durga, Lakshmi and Saraswathi !!
Bestow Your Grace on the author Smt.Rajeswari all that she richly deserves
subbu raththinam
தைரிய துர்கா....சிம்ஹவாஹினியாக...
ReplyDeleteதாமரையில் மந்தஹாசினியாக மஹாலக்ஷ்மி.....
சாந்தசொரூபியாக கலைமகள் ஸரஸ்வதி....
அழகிய படங்களில் தொடங்கி....
எழுத்தறிவித்தவளாக... உலகத்தின் ஆதித் தோன்றலாக....
இயல் இசை நாடகமாக... ஏற்றிவைத்த தீபமாக....
வாசிப்போர் நெஞ்சம் குளிரவைக்கும் அஷ்டலக்ஷ்மியாக....
தமிழ் எழுத்துகளின் ஆத்திச்சூடி அணிவகுப்பாக...
அழகாய் தொடர்ந்து....
அம்பாளின் கதைகளை கேட்பவர்களை இந்த நவராத்திரியில் கிரக தோஷங்கள் அண்டாது என்றும்...
பிரிந்த உறவுகளும் நட்புகளும் ஒன்று சேரும் என்று மனதினில் பால்வார்க்கும் வரிகளாக....
இந்த இயந்திர உலகில் அவசர உலகில் ஏற்படும் எல்லா ஆபத்துகளில் இருந்தும் நெருப்பு, நீர், ஆயுதம் காக்கும் கவசமாக...
அம்மை நோய் தடுக்கும் சாம்பவியாக....
அழகாய் சொன்ன விதம் சிறப்பு இராஜராஜேஸ்வரி...
ஒன்பது நாட்களும் சக்தியை பூஜித்து ஒன்பது வகை நவதானியங்களால் நைவேத்யம் செய்து, ஒன்பது வகை மலர் மாலைகள் அணிவித்து.... ஏழைகளுக்கு தானம் செய்து.... அம்பிகையின் அருள் பெறுவீர் என்று நம்பிக்கை தந்த வரிகள் பகிர்வுக்கு அன்புநன்றிகள் இராஜராஜேஸ்வரி...
மதுரை மீனாக்ஷியின் வெட்கம் படர்ந்த முகமும்....கோயில் கோபுரமும்...
நவசக்திகளும் இணைந்து துர்க்கை அம்மனின் சாந்தமான அருள் பாலிக்கும் முகமும்...
ஹை... கொலுப்பா.... ஐந்து படிகள் வைத்து அம்பாள்களின் அழகிய அணிவகுப்பும்.... க்ருஷ்ணா, லக்ஷ்மி, மீரா, பெருமாள், சரஸ்வதி...சித்தர்கள், அகத்தியர், அழகு அழகு.... மூன்று குரங்குகள் தீயவைகளை தடுக்கும் பொருட்டு கண், காது வாய்ப்பொத்தியபடி, தனியாய் சுடர் விடும் வெக்காளி அம்மனின் சிலை...
கொலுகளின் அணிவகுப்பு,
மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணம்..
ஹை கோலம்.... மாக்கோலம்.... அடுக்குக்கோலம்...
ஆஹா ப்ரசாதம்... எனக்கு? எல்லாமே அற்புதமாய் பதிந்திருக்கும் அன்பு உள்ளம் இராஜராஜேஸ்வரிக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...
கலைகள் கற்கவும் கற்றவை நிற்கவும் கலைமகளை துதிப்போம்.
ReplyDeleteதெரிந்துகொண்டேன்...!
ReplyDeleteநன்றி...!!
- இப்படிக்கு அனீஷ் ஜெ...
கோலம் intricate. வரைந்தவர்(கள்) ரொம்ப டேலன்டட்.
ReplyDeleteலஞ்ச் டயத்துலே சுண்டல் படங்களைப் பார்த்து..
ReplyDeleteபடங்களும், பதிவும் சிறப்பு .மிக்க நன்றி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
”நவக்கிரஹ நாயகியர்” என்ற இந்தப் பதிவு மிகவும் பிடித்துள்ளது.
ReplyDeleteகொலு பொம்மைகளும், கோலமும் மிகவும் நல்லா இருக்கு.
சுண்டல் + வடை முதலியன நாளாகி விட்டதால் [அதுவும், 132 நாட்கள் ஆகி விட்டதால்] என்னால் ரஸித்து சாப்பிட முடியவில்லை.
எனக்கு மட்டும் ஃப்ரெஷ்ஷாக செய்து தாங்கோ, ப்ளீஸ்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.