

காற்றினிலே வரும் கீதம்,கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி பொங்கிடும் கீதம் காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்,
மதுர மோகன கீதம்,
நெஞ்சினிலே நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம்
நிலாமலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதி தீரம்
நீல நிறத்து பாலகனொருவன் குழல் ஊதி நின்றான்
பக்தமீரா என்ற திரைப் படத்தில் கண்ணன் குழல் ஊதுவதைப் பற்றிச்சொல்லும் பாடல் சங்கீத மேதை திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் கேட்டு மனம் ப்றிகொடுத்த நாட்கள் , மெய்மறந்த நாட்கள் , கண்கள் பனிக்கவைக்கும்....

குருவாயூரப்பன் சன்னதியில், தனது ரோகம் தீரும் பொருட்டு ”நாராயணீயம்” பாடிய பட்டத்ரி, கண்ணனுடைய வேணுகானத்தை கேட்ட கோபிகைகள் பட்ட பாட்டையெல்லாம் மிக அழகாக எடுத்துரைக் கிறார்.
வேணுகானம் கேட்ட இயற்கை
‘சிறுவிரல்கள் தடவிப் பறிமாற
செங்கண் கோட செய்யவாய் கொப்பளிப்ப
குறு வெயர்ப்புருவம் கூடலிப்ப
கோவிந்தன் குழல் கொடு ஊதின போது
செங்கண் கோட செய்யவாய் கொப்பளிப்ப
குறு வெயர்ப்புருவம் கூடலிப்ப
கோவிந்தன் குழல் கொடு ஊதின போது

இயற்கையே மாறுபாடடைகிறது. கண்ணனின் கானாமிர்தம் கிளம்பியதுமே அங்குள்ள மரங்கள் எல்லாம் மகரந்தத் தாரைகளைப் பெருக்குகின்றன.
சில மரங்கள் இந்த வேணு கானத்தைக் கேட்பதற்காகக் கிளை களைத் தாழ்த்திக் கொண்டு நிழலைத் தருகின்றன. அவை தம்மில் தாமே உருகி நிற்கின்றன.


ஓரறிவுடைய புல்லும் செடி கொடிகளும் வேணு கானத்தை இப்படி ரசித்தன என்றால் அங்கிருந்த ஆடு மாடுகள் எல்லாம் எப்படி ரசித்திருக்கும்?
”பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால்
பரப்பிட்டுக் கவிழ்ந்து இரங்கிச் செவி ஆட்டகில்லாவே

ஆடு, மாடு, கன்றுகள் எல்லாம் புல் மேய்வதை யும் மறந்து தன்னையும் மறந்து நிற்கின்றன.
அதுமட்டு மல்ல அவை தமது செவிகளயும் ஆட்ட மறந்து விடுகின்றனவாம்!
முற்றும் துறந்த முனிவர்களான நாரதரும் தும்புருவும் அல்லவா மயங்கி விட்டனர் !!
அவர்கள் இருவரும் வீணை இசைப்பதை மறந்து விட்டனர்.
கின்னர மிதுனங்களும் தங்கள் தங்கள் கின்னரம் தொடுவதில்லை என்று சபதமே செய்து விட்டார்களாம்!
.jpg)
தேவி ராஜராஜேஸ்வரி சப்த மாதர்களுடன் கொலு வீற்றிருக்கும் பொழுது வீணாதாரிணியான ஸரஸ்வதி தேவி ஈசனின் திருவிளையாடல்களை எல்லாம் வரிசையாக வீணையில் வெகு இனிமையாக வாசித்துக் கொண்டிருந்தாள்.


தேவியை ”வீணாகான தச கமக க்ரியே” என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் போற்றுவார்.

அப்படிப்பட்ட தேவியே பாராட்டினாள் என்றால் ஸரஸ்வதி தேவி மிகவும் சந்தோஷம் அடைய வேண்டு மல்லவா? ஆனால் வாக்தேவியோ தனது வீணையை உறையிலிட்டு மூடி விடுகிறாள்.
தேவியின் சபாஷ் என்ற வார்த்தையே சங்கீதம் போல அவ்வளவு மதுரமாக இருந்ததாம்.
இந்த இனிமையான வாங் மாதுர்யத்திற்கு முன்னால் நான் வீணை வாசிக்கவும் தகுதியில்லை என்று நாணி வீணையை மூடிவிடுகிறாளாம் வீணா தாரிணி.
இப்படிக் கற்பனை செய்கிறார். ஆதி சங்கரர் “சௌந்தர்யலஹரி” என்னும் ஸ்லோகத்தில்.

தேவியின் வாக்கினிமைக்கு முன்னால் தான் எப்படி வீணை வாசிக்க முடியாது என்று வாக்தேவி நாணி நின்றாளோ அது போல் கண்னன் குழலோசைக்கு முன்னால் நாம் எப்படி வாசிப்பது என்று நாரத தும்புருவும் திகைக்கிறார்களாம்.

‘அம்பரம் திரியும் கந்தர்ப்பரெல்லாம்
அமுதகீத வலையால் சுருக்குண்டு
நம்பரம் அன்றென்று நாணி மயங்கி
நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே
அமுதகீத வலையால் சுருக்குண்டு
நம்பரம் அன்றென்று நாணி மயங்கி
நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே

அம்பரம் தனிலே தும்புரு நாரதர்
அரம்பையரும் ஆடல் பாடல் மறந்திட
அச்சுதன் அனந்தன் ஆயர் குல திலகன்
அம்புஜ நாபன் ஆர்வமுடன் முரளி
கானமழை பொழிகின்றான் கண்ணன்
யமுனா தீரத்தில் யாதவர் குலம் செழிக்க
ஓரறிவுடைய புல் முதல் ஐந்தறிவுடைய பறவைகளும் மிருகங்களும் ஆறறிவுடைய கோபிகைகளும், தேவமகளிரும் முற்றும் துறந்த நாரத தும்புருவையும் மெய்மறக்கச் செய்கிறது

கண்ணனின் வேணுகானம். பிருந்தாவனத்திலே இப்பொழுதும்
கேட்பதாகச் சொல்லப்படுகிறது வேணுகானம்.......
செவியுள்ளவர் கேட்கக் கடவது !






முதல் படத்திலே நாமும் கூட அந்தமரத்தடியில் உக்காந்து காற்றினிலே வரும் கீதத்தை ரசிக்கும் உணர்வு.
ReplyDeleteHare Rama Hare Krishna
ReplyDeleteராம நாமமும்
க்ருஷ்ண கானமும்
கேட்டுண்டே இருக்கும்பொழுது அந்த
கார்முகில வண்ணன்
கண்ணன் என்னைக்
கூப்பிடக்
காத்துகிட்டே
கிடக்கேன்.
சுப்பு தாத்தா.
http://arthamulla valaipathivugal.blogspot.com
வழக்கம் போல் படங்களும், பகிர்வும் அருமை.
ReplyDelete'குழலும் யாழிசையே கண்ணன் குழலிசைகேட்டாயோ'என ராஜேஸ்வரியின் பாட்டு நினைவிற்கு வருகிறது.
ReplyDeleteமேலே சொன்ன பாட்டு "ஜாதகம்" படத்தில் வரும்.
ReplyDeleteகண்ணன் படங்கள்,அம்பாள் படங்கள் எல்லாம் மிக அற்புதம்.பதிவு கண்ணையும்,மனதையும் கவர்கிறது.
ReplyDeleteஎங்கிருந்துதான் இத்தனை அழகான படங்களை எடுக்கின்றீர்களோ
ReplyDeleteசகோதரி !!!!.....மிக மிக அருமையனா படங்கள் .பகிர்வும் நன்று .
வாழ்த்துக்கள் .
//திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் கேட்டு மனம் ப்றிகொடுத்த நாட்கள் //
ReplyDeleteஅந்த நாளும் வந்திடாதோ?
காற்றினிலே வரும் கீதம்
ReplyDeleteதலைப்பும் படங்களும் அசத்தல்.
கடைசி படம் திறக்கப்படவில்லை.
அதற்கு மேல் உள்ள குட்டிப்படங்களுக்கும் மேல் உள்ள மகளிர் பூஜை [விளக்கு பூஜை போல ஏதோ கும்பம் வைத்து] நல்ல அருமையான கவரேஜ். ;)
>>>>
கீழிருந்து ஐந்தாவது படம் அந்த அம்பாளின் கருப்பான சிலை நல்ல தீர்க்கமாக உள்ளது.
ReplyDeleteஇரு புருவங்கள் போலவும் + மூக்குத்தி போலவும் சந்தனம் + மஞ்சள் தீட்டியுள்ளது எடுப்பாக உள்ளது.
புடவைக்கட்டு, புஷ்ப மாலைகள் எல்லாமே அழகோ அழகு.
>>>>>
தலைப்பு + கண்ணனைப்பற்றிய பாடல்கள் + விளக்கங்கள் அருமையாக இருப்பினும் ஸ்ரீ கிருஷ்ணனின் படங்கள் வழக்கமான ஒளியுடனோ பிரகாஸத்துடனோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ReplyDeleteகாரணத்தையும் என்னால் ஒரளவு யூகிக்க முடிகிறது.
மற்றபடி அருமையான பதிவு தான்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.