
"தரை உற்ற சக்தி, தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை
கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே."
என்று லிங்கத்தின் அருவுருவத்தை வர்ணிக்கிறார்.
திருமூலர் சிவனை நேரில்கண்டவர் .
63 நாயன்மாரிலும் ஒருத்தராகப் போற்றப்படுகிறவர்.
திருமூலருக்கும் ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு

சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி.
இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன.

நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.

ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம்.
ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது அன்னாபிஷேகத்தின் தத்துவார்த்தமாக இருக்கிறது.

எவ்வளவு பெரிய, பெரிய தான– தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது முன்னோர்களின் வாக்காகும்.

அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நித்திய அன்னாபிஷேகம் நடைபெறும். அதை செய்பவர்களும், தரிசிப்பவர்களும் அன்னத்துக்குக் கஷ்டப்படாமல் இருப்பது நிதர்சனமான உண்மை.
அந்த ஊருக்கே ‘அன்னம்பாலிக்கும் ஊர்’ என்றே பெயர் வழங்கப்படுகிறது.
அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்குக் கஷ்டப்பட மாட்டார்கள் என்றும் ஐதீகம்..
செல்வத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆனாலும் உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் உண்ண முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை அன்ன த்வேஷம் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும் ...

எது கிடைத்தாலும் முதலில் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்கிற முறைப்படி ஐப்பசியில் அறுவடையான புது நெல்லைக் கொண்டு சாதமாகச் செய்து, அதை முழுமையாக சுவாமிக்கு சாத்துவது, இந்த ஐதீகத்தின் முறை என்றும் காரண காரியம் கூறப்படுகிறது..



தரை உற்ற சக்தி திருமந்திர பாடல் விளக்கம் அருமை.
ReplyDeleteகாலையில் உங்கள் தளத்தில் தரிசனம் செய்து விட்டேன். மாலையில் கோவிலில் தரிசனம் செய்வேன்.
படங்கள் செய்திகள் அருமை.
வாழ்த்துக்கள்.
அருமை...
ReplyDeleteஇனி தொடர்கிறேன் அம்மா...
சிறந்த பக்திப் பதிவு
ReplyDeleteதொடருங்கள்
அன்னாபிஷக சிறப்பு பகிர்வு.நன்றி
ReplyDeleteதிருமந்திரப் பாடல் தொடங்கி அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவம் வரை மனதைத் தொடும் படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅற்புதமான படக்கலவையுடன் தகவல்களும் சிறப்புங்க.
ReplyDeleteஅன்னாபிஷேகம் பற்றி சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். திருமந்திரப்பாடலும், அதன் விளக்கமும் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்!
ReplyDeleteஅன்னாபிஷேகம் குறித்த அருமையான தகவல்கள்.....
ReplyDeleteபடங்கள் அனைத்துமே ரசித்தேன்.