
ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் பகவான் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.

காசிக்கு சமமாகக் கருதப்படும் சிவஸ்தலங்களில் காவிரியில்
23 புகழ்பெற்ற படித்துறைகள் உள்ள தலம் திருவையாறு.
23 புகழ்பெற்ற படித்துறைகள் உள்ள தலம் திருவையாறு.

காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும்.

திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமாகும். ஆரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணைமிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு.

காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பேராற்றல் மிக்க தென்கயிலாயமாகிய அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள புனிதமிக்க திருவையாறு திருத்தலம்.

ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால், பிரம்ம கங்கை- காவேரியில் கலக்கிறது என்பது ஐதீகம்.



ஐப்பசி மாதம் முழுவதும் காவேரியில் நீராடினால் பாவங்கள் அழியும்: புண்ணியம் சேரும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும்.


அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள்.
அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன.

துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள்.

துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டுமென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஐப்பசி மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குமுன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது.

புகைப் படங்கள் அருமை. கடந்த ஆண்டு ஜனவரியில் திருவையாறு சென்றோம். ஐயாரப்பனை தரிசித்தோம் .காவிரியில் கால் நனைத்து மகிழ்ந்தோம்
ReplyDeleteதிருவையாறு என்து சொந்த ஊர் சகோதரியாரே
ReplyDeleteஅரிய பல செய்திகள் கண்டு மகிழ்ந்தேன்
நன்றி சகோதரியாரே
படங்கள் கருத்துகளுடன்
ReplyDeleteசிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்
இந்த இடத்தில் நீராடினால் சகல துன்பங்களும் தீர்ந்து நமக்கும் சுற்றி இருப்போர்க்கும் நன்மை பயக்கும்.....!?
ReplyDeleteதிருவையாற்றுத் திருத்தலப் பெருமை கண்டே
ReplyDeleteமனம் குளிர்ந்தேன் சகோதரி! அரிய தகவல்கள் பல!
நன்றியுடன் வாழ்த்துக்களும்!
திருவையாற்றின் பெருமைகளையும், காவிரி ஆறு, துலாமாதத்தின் சிறப்புகளையும் கொண்ட சிறப்பான பகிர்வு. அழகான படங்கள் கூடவே. நன்றி.
ReplyDeleteபடங்கள் அருமை அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
படங்கள் அருமை.
ReplyDeleteதுலா மாத காவிரி நீராடல் - திருப்பராய்த்துறையில் சில முறை கிடைத்திருக்கிறது.....
அறிய தகவல்
ReplyDeleteதிருவையாறு
ReplyDeleteஅரிய பல செய்திகள் படங்கள் அருமை
வாழ்த்துக்கள்.