


இயற்கை தன்னுள் எத்தனை ஆச்சரியங்களைப் பொக்கிஷங்களாகப் பொதிந்து வைத்திருக்கிறது என்று எண்ணும் தோறும் வியப்பளிக்கிறது..
விந்தைகள் சிந்தும் விண்மீன்கள் கூட்டத்தில் விளையாடும் வெண்ணிலவாய் எண்ணிறந்த உயிரினங்கள் தாவரங்களாய் மாறுவேடம் தரித்து எளிதில் கண்களுக்கு சிக்காமல் உயிர்வாழ்கின்றன..
தாவரங்களைப்பார்த்து உயிரினங்கள்
தங்களைத் தகவமைத்துக்கொண்டதோ
என விசித்திர உருவ ஒற்றுமை வியக்கவைக்கிறது,,




ஆர்கிட் மலர் பூச்சி (orchid flower mantis). ஆர்கிட் மலர்களை அச்சு அசலாக ஒத்திருக்கும். வெள்ளை, இளஞ் சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். கால்கள் ஆர்கிட் மலர்களின் இதழ்களைப் போல இருக்கும்.


இரையைக் கண்டதும் தாவரங்கள் மீது மெதுவாக ஏறி, பூக்களுக்கு அருகே வரும். இரையாகும் உயிரினம் இது பூவா, பூச்சியா என்று குழப்பம் அடையும். அப்போது இரையைப் பிடித்துச் சாப்பிட்டுவிடும்.




மலேசியா, இந்தோனேசியாவில் ஆர்கிட் மலர் பூச்சி காணப்படுகிறது.



வட அமெரிக்காவில் நிறையக் காணப்படுகின்ற "வீனஸ் ஃப்ளை ட்ராப்' என்ற செடியின் இலைகள் எப்போதும் திறந்த வாய் போல இருக்கும்.
இவை, தங்கள் மீது வந்து உட்காரும் பூச்சிகளை சில நொடிகூட தாமதிக்காமல் கவ்விப் பிடித்து, வாயை மூடுவது போல மூடிக் கொள்கின்றன.

ஒரு முறை கவ்விய பூச்சியை ஜீரணிக்க அதிகபட்சமாக
12 நாட்கள் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன.
அதன்பிறகு மூடப்பட்ட இலை திறந்து, செரிமாணம் ஆகாத பூச்சிகளின் மிச்சசொச்ச ஓடுகள் வெளியே துப்பிவிடப்படுகின்றன
"வீனஸ் ஃப்ளை ட்ராப்'

இலைப் பூச்சியை (leaf insect) ‘நடக்கும் இலை’ என்றே அழைக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற் போல இலையைப் போலவே இருக்கிறது இந்தப் பூச்சி. இப்பூச்சியால் பறக்க முடியாது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளைத் தின்று வளரும்போது பச்சை நிறத்துக்கு மாறிவிடும்.


2.3 அங்குலமே இருக்கும் இந்த இலைப் பூச்சிகள் இலைகளுடன் சேர்ந்திருந்தால் சுலபத்தில் கண்டுபிடிக்கவே முடியாது.
இந்தியா, ஃபிஜி தீவுகளில் இலைப் பூச்சிகள் வாழ்கின்றன.
இவற்றின் நெருங்கிய உறவினர்தான் குச்சிப் பூச்சிகள்.
இலைப் பூச்சிகள்









180 டிகிரிக்கு இப்பூச்சித் தலையைத் திருப்பி, சுற்றுப்புறத்தைக் கவனிக்க முடியும்.
பச்சை, பழுப்பு வண்ணங்களில் காணப்படும் இந்தப் பூச்சியும் எளிதில் நம் கண்களுக்குத் தெரியாது.
இதே நிறத்தில் உள்ள வெட்டுக்கிளி, விட்டில் பூச்சி, ஈக்கள்தான் இதன் உணவு.
தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியக் கண்டங்களில் இந்தப் பூச்சிகள் காணப்படுகின்றன.
கும்பிடு பூச்சி (praying mantis)





நடக்கும் குச்சி அல்லது குச்சிப் பூச்சிகள் (stick insect) நீண்ட உடலைப் பெற்றவை. அசையும்போதுதான் அது குச்சிப் பூச்சி என்றே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
குச்சிப்பூச்சிக்கு நீண்ட ஆண்டெனாக்கள் உண்டு. ஒரு அங்குலத்தில் இருந்து ஒரு அடி வரை பல சைஸ்களில் குச்சிப் பூச்சிகள் உள்ளன.
பூச்சிகளிலேயே மிகவும் நீளமானது இதுதான்!
பார்ப்பதற்குச் சட்டெனத் தெரியாது.
துர்நாற்றத்தைவெளியிட்டு,எதிரியிடமிருந்து
தன்னைப்பாதுகாத்துக்கொள்ளும்.
ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கக் கண்டங்களில் .
பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றன.


காய்ந்த இலைகளைப் போன்ற தோற்றமுடைய இலை வால் பல்லி
(leaf tailed gecko) ஆப்பிரிக்காவில் உள்ள
மடகாஸ்கர் தீவில் காணப்படுகிறது.
மரப்பட்டை, காய்ந்த இலைகளுடன் இருக்கும்
இலை வால்பல்லியை கண்டுபிடிக்கவே முடியாது.
10 முதல் 30 செ.மீ. நீளம் வரையே இது இருக்கும்.
இலை வால் பல்லியில் எட்டு வகைகள் இருக்கின்றன.
ஒவ்வொன்றும் உருவம், நிறங்களில்
சிறிய மாற்றங்களுடன் காட்சியளிக்கின்றன.
பகல் நேரங்களில் மரப்பட்டை, கிளைகளில் ஓய்வெடுத்துவிட்டு,
இரவு நேரங்களில் உணவு தேடிக் கிளம்பும்.
பூச்சிகள், கொறிக்கும் சிறு விலங்குகள் இவற்றின் உணவு.
இலை வால் பல்லி















அசையும் படங்கள் அழகுப் படங்கள்
ReplyDeleteஎல்லாமே உள்ளுணர
அழகான விளக்கம்
சிறந்த பதிவு
தொடருங்கள்
ஓ சூப்பர் காய்ந்த இலைப்பூச்சி,பல்லி நான் பார்த்ததே இல்லை..இயற்கையின் அதிசயங்கள்..இவற்றை ரசிக்க மனிதனுக்கு மனமில்லையேம்மா..சூப்பர்
ReplyDeleteமலைக்க வைக்கும் கலைக் கண்காட்சி
ReplyDelete(மலர்க் கண்காட்சி + பூச்சிகளின் புகைப் பட காட்சி)
பார்த்தால் பரவசம்.
பார்ப்பதற்கோ இலவசம்!
மிக்க நன்றி!
புதுவை வேலு
இவற்றில் பலவற்றை அறிவியல் தாவரவியல், விலங்கியலில் படித்ததுண்டு. ஆனால் இப்படிப்பட்ட படங்கள் பார்த்ததே இல்லை. இயற்கையே அறுபுதங்களும், அதிசயங்களும் நிறைந்தவை! இறைவனின் படைப்பின் ரகசியங்கள்! ஆனால் மனிதன் இந்த ரகசியங்களை ரசிக்காமல், அதை அறிய முற்படாமல் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான்....கொண்டிருக்கின்றோம். தினமும், வீட்டு ஜன்னலில் வரும் காக்கையைக் கூட ரசிக்க நேரமில்லாமல்.....கடமைக்காக ஏதோ உணவு இட்டு ஓடுகின்றோம்....
ReplyDeleteமிகவும் ரசித்தோம் நிதானமாக......அத்தனை அழகு! என்ன செய்ய இயற்கையை நேரில் ரசிக்க முடியாமல் புகைப்படத்தில் ரசிக்கின்றோம்....ரசிக்கும்படி ஆகிவிட்டதோ?!!!
அமெரிக்காவில் சொல்வார்களாம்...எதிர்கால சந்ததியினர் ஆப்பிள் என்றால் அதை கணினியில் பார்த்துத்தான் அறியவேண்டிவரும் என்று...அதைப் போல் ஆகிவிடுமோ...ம்ம்ம்ம்
ஒவ்வொன்றாக நிதானமாக அந்த அழகில் மயங்கி ரசித்துக் கொண்டிருக்கின்றோம்...பகிர்வுக்கு மிக்க நன்றி!
அதிசயப் பதிவு, ஆநந்தப் பதிவு, அறிவூட்டும் பதிவு. அருமை படங்களும் பதிவும். ஆன்மீகப் பதிவுகளிலிருந்து இந்த மாற்றம் ரசிக்க வைக்கிறது.வாழ்த்துக்கள்
ReplyDeleteவித்தியாசமான பூச்சிகள்! விரிவான தகவல்கள்! துல்லியமான அழகான படங்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDelete
ReplyDeleteவித்தியாசமான பூச்சிகள்! விரிவான தகவல்கள்! துல்லியமான அழகான படங்கள்! சிறப்பான பகிர்வு!
இறைவனின் படைப்பில் எவ்வளவு அற்புதங்கள்,வித்தியாசமான ,விநோதமான இயற்கை ஒன்றி படைக்கப்டடிருக்கும் பூச்சிகள் பற்றிய பதிவு அருமை. அழகான படங்கள்.வீனஸ்ஃப்ளை ட்ராப் இங்கும் இருக்கு.
ReplyDeleteநன்றி.
இறைவனின் படைப்பில் தான் எத்தனை எத்தனை வகைகள்....
ReplyDeleteபல புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்....
தன் மேல் வந்தமரும் பூச்சிகளை அப்படியே 'லபக்' செய்யும் இலைகள் அதிசயம்! இலைப்பூச்சி இதனை தூக்கி சாப்பிட்டுவிடுகிறதே!
ReplyDelete