


அந்தினி ருந்தினி ஜம்பினி சர்வ வசீகரி வாராஹி
தண்டினி சத்ருவாக் ஸ்தம்பினி நீசங்கேதா வார்த்தாளி
வந்துனை வணங்கிடச் சமயேஸ்வரி நீ பூமிதானேஸ்வரியே
வந்தனம் மங்களம் தரும் ப்ரத்யங்கிரா உடனுறை வாராஹி
பாங்குடை வலிதையின் ஸ்ரீபுரரக்ஷிணி போத்ரிணி வாராஹி
சிங்கமாம் வஜ்ரகோஷத்தில் அமர்ந்தே துன்பங்கள் களைபவளே
சங்கு சக்கரம் அபயவரம் ஏர் உலக்கை கரங்களிலே
இங்கு பஞ்ச பஞ்சிகா பீடத்திலே என்றும் வாழ்பவள் பஞ்சமியே
நாடிதினம் தொழ ஓடியே வருவாள் அன்னை வாராஹி
பாடிப்பரவசம் கொண்டிடும் அன்பர் வாக்கினிலே வருவாள்
வீடுகொடுப்பவள் வேண்டும் வரந்தரும் ப்ருஹத் வாராஹியளே
நவராத்திரி பூஜையில் பூரிக்கும் பூரணியே

தங்கும் மரகதமாடம் உறைபவள் கிரிசக்ர ரதம் அமர்வாள்
தங்க நிறத்தினள் செம்பட்டுடுத்திச் சந்திரகலை சூடி
மங்காப் புகழுடன் ப்ரயங்கிராவுடன் சேர்ந்தே அருள்புரிவாள்
சங்கடம்தீர் சதுராள் வாராஹியென் வார்த்தைக்கு பலம் சேர்ப்பாள்.
ஏராளமாய்ச் செல்வம் தன்மடியில் ஏற்றவளாம்
வாராஹி வாராஹி என்றே உன்னை
சீரான அன்புடன் மனமுருகி நான் அழைத்தால்
வாராது இருப்பாளோ வாராஹி எனும் என் தாய்.

அன்னை லலிதையால் - அம்பிகையின் உடலில் இருந்து பண்டாசுர வதத்தின் போது தோற்றுவிக்கப்பட்ட சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் வராஹி..
வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள் பஞ்சமி தாய்,
கந்த கடவுள் சிவபெருமானிடம் இருந்து தோன்றியது போன்று அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி.
மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலும் , ஆதரவிலும் மழைக்கு நிகரானவள்.
லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்.கிரி சக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்கிருதா என லலிதா சகஸ்ரநாமம் போற்றும் பெருமை உடையவள்.!
சேனநாதா , தண்டநாதா, வராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி , வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி( நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா ,ஸங்கேதா , ஸமயேஸ்வரி ,மகாசேனா , அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ.



தஞ்சையில் பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்
ஆனைக்காவின் அம்பிகை ஜம்புகேஸ்வரி - அகிலாண்டேஸ்வரி வராஹி ஸ்வரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்..







மகா வராகி வந்தணம் அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDelete
ReplyDelete‘நாடி தினம் தொழ ஓடி வரும்’ அன்னை வராஹியை தரிசிக்கும் பாக்கியத்தை தந்த தங்களுக்கு நன்றி!
தரிசித்தேன்
ReplyDeleteஅறியாதன அறிந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வழ்த்துக்கள்
வராஹி அம்மனைப் பற்றிய தகவல்கள் அருமை!
ReplyDeleteநன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!
தரிசணம் செய்தேன் வராஹி அம்மனை மிக்க மகைழ்ச்சி ..
ReplyDeleteநன்றி சகோதரி....
படங்களுடன் அற்புதமான பதிவு.
ReplyDeleteமிக்க நன்றி.
சிறந்த பக்திப் பதிவு
ReplyDeleteதொடருங்கள்
மிக மிக அருமை. எனக்கு வாராஹி அம்மனை ரொம்பப் பிடிக்கும்.
ReplyDeleteமகா வாராஜி அம்மன் பற்றி அழகிய படங்களுடன் அருமையான பகிர்வு அம்மா வாழ்த்துக்கள்.
ReplyDeletevery nice.i thank u for ur valuable work
ReplyDeleteதகவல்களும் படங்களும் நன்று. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete