Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Sunday, March 23, 2014

மாங்குயிலே .. பூங்குயிலே..



படிமம்:Oriole 2.jpg
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
முத்து முத்துக் கண்ணாலே சுத்தி வந்தேன் பின்னாலே
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி


கொட்டும் மழை தெறித்துவிழும்
மயில்தோகை பூஞ்சிதறல்
மாங்குயிலின் தேன் உதிரும் குரலோ?
மழலை .....!

வீட்டுக் குருவியை விடப் பெரியது மைனா அளவில் அழகிய சிறு பறவை மாமரத்தில் காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளால் இருப்பதாலும் மாங்குயில் எனப்படுகின்றது. மாங்குயிலின்  குரல் (குயிலும் பாடுமே..) இனிமையாக இருக்கும்

தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம்,
அதன் பெயர் கருந்தலை மாங்குயில்

மாங்குயில் போலவே தோற்றம் அளிக்கும் அமெரிக்க மஞ்சக்குயில்களும் ஆங்கிலத்தில் ஓரியோல் (Oriole) என்னும் அதே பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் வேறு பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

அமெரிக்க மஞ்சக்குயில்கள் அறிவியல் வகைப்பாட்டின்படி
இக்டேரஸ் (Icterus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை

இக்டேரஸ் என்னும்  கிரேக்க மொழிச்சொல் ῖκτερος என்பதில் இருந்து உருவானது. இச்சொல்லின் பொருள் மஞ்சள் காமாலை (jaundice) என்னும் நோய் ஆகும். 

மஞ்சள் காமாலைநோய் உடையவர் இப்பறவையைப் பார்த்தால் இந்நோய் தீரும் என்று நம்பினராம்- வேடிக்கைதான் ...
எனவே இப்பறவைக் குடும்பத்துக்கு இக்டேரஸ் என்று பெயர்

படிமம்:Red-faced Malkoha x.jpg
 பூங்குயில் அழகிய   தனிச் சிறப்பான பறவையினங்களில் 
பெரிய பறவையினங்களுள் ஒன்றாகும்.  முதுகு அட்ர் பச்சை நிறமாகவும் வால் இளம் பச்சையாகவும் வாலின் நுனிப் பகுதி வெண்மையாகவும் காணப்படும்.  தலையும் கழுத்துப் பகுதியும் கருமையாக இருக்கும். 
முகத்தின் கீழ்ப் பகுதி வெண்மையானதாகும். 
இதன் கண்களைச் சுற்றி முகம் முழுவதும் சிவப்பாக  காணப்படும். 
இவற்றின் ஒலி மெல்லிய சீட்டியடித்தல் போன்றிருக்கும்

IMG_9944-MOTION.gif

Monday, February 11, 2013

பேர(ழ)லகுப் பறவை




படிமம்:Keel billed toucan.jpg



சில பற்வைகளின் அலகுகள்  அநத பறவையின் உடலை 
விடப் பெரிதாக காணப்பட்டது கவனத்தை ஈர்த்தது ..

பேரலகுகள் கொண்ட பறவை இனங்களைப்பற்றி விசித்திரமான தகவல்கள் கிடைத்தன .. அவற்றை இங்கே பகிர்கிறேன் ...


Ramphastidae
தூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட 
ராம்ஃபசுட்டோசு தோக்கோ (Ramphastos toco) என்னும் பறவையை சில ஆய்வாளர்கள் அகச்சிவப்புக் கதிர்படம் எடுத்து எப்படித் தன் உடல் வெப்பத்தை அலகின் வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தனர்... 

தூக்கான் பறவைகளுக்கு வியர்வை வழியாக வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் அதிகரிக்கும்போது அலகுப்பகுதிக்கு 
இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. 

சூழ் வெப்பநிலையைப் பொறுத்தும், பறவையின் நடவடிக்கையைப் பொறுத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. 
தூக்கான் அலகுகளில் உள்ள இரத்தக் குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல இதுவரை ஆய்வுக்குள்ளான வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.


இப்பறவைகள் அதிகம் இரைச்சல் எழுப்புகின்றன. 
உறங்கும்போது தம் தலையை முதுகுப்புறம் திருப்பி, தன் பெரிய அலகை 
தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன.
பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக (தொகுதியாக) வாழ்கின்றன. நெடுந்தொலைவு வலசையாகப் போவதில்லை.



Blue-footed Boobies are distributed among the continental coasts of 
the easternPacific Ocean to the Galapagos Islands and California.