Thursday, January 27, 2011

சிவனின் கோபம்

பிரம்மாவின் குமாரரான தட்சப்பிரஜாபதிக்கு 16 பெண்கள்.

அவர்களில் ஸ்வாஹாவை அக்னிதேவரும், ஸ்வதாவை பித்ருவிற்கும், சதிதேவியை பரமசிவனாரும், மற்ற பெண்களை தர்ம தேவர்களும் திருமணம் செய்து கொண்டனர்.

(நாம் ஹோம குண்டத்தில் "ஸ்வாஹா" "ஸ்வதா" என்று சொல்லி கொடுக்கும் ஆகுதி இம்மனைவிகளின் மூலமாகவே அக்னியையும் பித்ருக்களையும் சென்றடையும்)

ஒரு முறை பிரஜாபதிகள் சேர்ந்து நடத்திய யாகத்திற்கு மாமனாராகிய தடசன் வந்தபோது அங்கிருந்த பரமசிவன் , அவருக்கு எழுந்திருந்து மரியாதை செலுத்தவில்லை.

கோபமுற்ற தட்சன் பரமசிவனுக்கு இனி யாகத்தில் அவிர்பாகம் கிடைக்காது என்று சபித்து விட்டார். அன்று முதல் தட்சனும், பரமசிவனும் பகையானார்கள்.

பலநாள் கழித்து தட்சன் நடத்திய மிக உயர்ந்த யாகத்திற்கு ஸதி தேவி தனக்கு அழைப்பு இல்லாவிடிலும் செல்ல விரும்பி சிவனிடம் அனுமதி வேண்டினாள்.

அஹங்காரமுள்ள, ஆத்மஞானமில்லாத இடத்திற்குச்சென்றால் அவமானம் ஏற்படும் என்று தடுத்தார்.

ஆனாலும் கேட்காமல் சதிதேவி யாகத்திற்கு சென்று அவமானப்பட்டு உயிர் துறந்தாள்.

அதைக் கேட்ட பரமசிவனின் கோபம் கொண்டமேனியிலிருந்து ஆயிரம் கைக்கள் கொண்ட வீரபத்திரர் தோன்றி ,தட்சரையும் யாகத்தையும் அழித்தார்.

பரம்மா பொறுமையின் பெருமையை சிவனுக்கு உபதேசித்து அவரை சாந்தப்படுத்தவே, சிவனும் தட்சரை உயிர்ப்பித்தார். அங்கு திருமாலும் கருடன் மீதுதோன்றி அனுக்கிரகித்தார்.

வெட்டப்பட்ட தட்சனின் தலையில் ஆட்டின் தலை பொருத்தப்பட்டது.

ருத்ரமந்திரம் "மே மே" என்று முடியும் வகையில் இருப்பது இதனால்தான்.

5 comments:

  1. Wow! nice info. you have shared.
    we expect a lot more from you Mam!

    ReplyDelete
  2. "சிவனின் கோபம்"
    சிறப்பான பதிவு.அருமை.

    ReplyDelete
  3. //(நாம் ஹோம குண்டத்தில் "ஸ்வாஹா" "ஸ்வதா" என்று சொல்லி கொடுக்கும் ஆகுதி இம்மனைவிகளின் மூலமாகவே அக்னியையும் பித்ருக்களையும் சென்றடையும்)//

    நல்லதொரு விளக்கம். பாராட்டுக்கள்.

    //ருத்ரமந்திரம் "மே மே" என்று முடியும் வகையில் இருப்பது இதனால்தான்.//

    ருத்ரம் அல்ல சமகம் என்று நினைக்கிறேன்.

    ’ஆட்டின் குரல்’ ஆக இருப்பினும் ’மே...மே’ என்றால்
    வேண்டும், தேவை, கொடுத்தருள்வாய் என்ற பொருளில் இவ்விடம் வருகிறது என்று கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  4. அருமையான் பகிர்வுகள்.. பாரட்டுக்கள்.

    ReplyDelete