Friday, December 30, 2011

தெய்வக் கிளிகள்!


    
 



திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே

மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்


மார்கழியை ஆண்டாளைப் போல கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை.

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாள் தன் இடக்கையில் 
கிளி வைத்திருக்கிறாள்.

கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவள்ளிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;
இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி

நாகமல்லிகை இலை, நந்தியாவட்டை இலை, ஏழிலைக் கிழங்கு இலை, வெள்ளரளி, செவ்வரளி போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது ஆண்டாளின் கிளி. 

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்குச் சாத்துவதற்கு வெற்றிலையை ஓலையோடு மடக்கி தினமும் புதிதாக பச்சைக்கிளி செய்வார்கள்,
ஒவ்வொரு நாளும் ஆண்டாளின் கிளியைப் பெற கோயிலில் முன்னதாகச் சொல்லிவைத்து பக்தர்கள் அதை வாங்கிச் செல்கின்றனர். 

வெகுஅருமையாக இருக்கும், அதை எல்லோராலும் செய்துவிட முடியாது, அதற்கென தனிக்குடும்பங்கள் இருக்கின்றன, 

அக்கிளி பேரழகானது, அது தான் ஆண்டாளின் தோளில் இருக்கிறது, 

ஸ்ரீவில்லிபுத்தூரில் அக் கிளியை தத்தை என்று சொல்வார்கள்.

இக் கிளியை பூஜையறையில் வைத்துக் கொண்டால் நன்மைகள் பெருகுவதாக நம்பிக்கை. 

பக்தர்கள் தங்கள் வேண்டுதலை ஆண்டாளிடம் கூறும்போது அதைக் கேட்கும் கிளி, திரும்பத் திரும்ப அவரிடம் நினைவுறுத்துவதாக ஐதிகம். இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள்.
வியாசரின் மகனாகிய சுகப்பிரம்ம மகரிஷியே ஆண்டாளின் 
கையில் கிளியாக அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.


"சுகம்' என்றால் "கிளி'. அந்த முனிவர் கிளி முகம் கொண்டவர்.
தவ வலிமை மிக்கவர் 
ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.
 ஆண்டாள் உலா வரும்போது, ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ பாடப்படுகிறது. செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி. 
தன் பாடலின் வழியே அவள் பனியைப் படரவிடுகிறாள், குளிர்ச்சி அவளது சொல்லின் வழி கசிந்தோடுகிறது,  ஆண்டாளின் பாடல்களுக்குள் உணர்ச்சிபூர்வமான நாடகம் ஒன்று ஒளிந்திருக்கிறது,

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்
சாட்சாத் பூமிப் பிராட்டியின் அவதாரம்....
ஆண்டாளும் துளசி இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். 
ஆண்டாளின் கிளி வேறு, மீனாட்சியின் கிளி வேறு, 
இரண்டும் மாறுபட்ட அழகுகள்...

ஆண்டாளின் கிளியும் அவள் அளவிற்குத் தமிழ் பேசும் என்பார்கள், அது சொல்லிக் கொடுத்துப் பேசும் கிளியில்லை, இயல்பாகப் பேசத்தெரிந்த கிளி,  அந்தக் கிளியை குயிலுக்குத் தோழியாக்குவதாக ஒரு பாடலில் ஆண்டாள் சொல்கிறாள், எதற்காக தெரியுமா, ஏதாவது ஒரு குயில் தனக்கு விருப்பமான கண்ணனை கூவி அழைத்து வரவழைத்துவிட்டால் அந்தக் குயிலை கிளிக்கு தோழியாக்கிவிடுவாளாம் !!??
ஆண்டாள் புள்ளினங்கள் மீது பேரன்பு கொண்டவள், அதன் ஒசைகளை அவள் வெகுவாக ரசிக்கிறாள்,  ஆனைச் சாத்தன் என்னும் வலியன் குருவியின் கீச்சு கீச்சு சப்தம், அவளுக்கு மிகவும் விருப்பமானது,
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ
!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.

மதுரை மீனாட்சி அம்மனின் வலது கையிலும் கிளி இடம் பெற்றிருக்கிறது. துர்வாச மகரிஷி கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற இந்திரன் பூலோகம் வந்தபோது இத்தலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் கிளிகள் வட்டமிட்டபடி ஓம் நமசிவாய என்று சொல்லி பறந்து கொண்டிருந்தனவாம். 
இந்திரன் ஆச்சரியமுற்று கீழே நோக்க, அங்கே சுயம்பு லிங்கமாக சொக்கநாதர் எழுந்தருளியிருந்ததைக் கண்டு மகிழ்ச்சியுற்று, அவரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.    
[babies_older_group-744875.jpg]
சொக்கநாதப் பெருமானை அடையாளம் காட்டிக் கொடுத்ததன் அடிப்படையில் மதுரையிலும் கிளி முக்கியத்துவம் பெறுகிறது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வடபத்ரசாயிக்கு, 
ஆண்டாள் சூடிய மாலை தினம் சாற்றப்படுகிறது. 


திருப்பதி வெங்கடாசலபதி கோயில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் கருட சேவையன்று, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படும் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை சாத்தப்படுகிறது.


ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜ பெருமாளுக்கு சித்திரை தேரோட்டத்தின் போதும் ஆண்டாள் மாலை, கிளி, வஸ்திரம் சாத்தபடுகின்றன.


ஆண்டு தோறும் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, வஸ்திரத்தை சூடி, மதுரையில் அழகர் வைகையற்றில் இறங்குவது வழக்கம். 

Red parrots Myspace Glitter Graphics Parrot Pics

52 comments:

  1. கிளிகள் என்றாலே ஜோர் தான். எனக்கு ஒரே குஷி தான். அதிலும் தெய்வக்கிளிகளா! OK

    ReplyDelete
  2. ஒயிலழகு அன்னை மீனாட்சி கைதவழ்
    கிளிகளின் அழகுப் படங்கள்.
    நிறைவாய் இருந்தது சகோதரி.

    ReplyDelete
  3. அருமையான புகைப்படங்களுடன் கூடிய நல்ல பகிர்வு...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. கிளிகள் மனதை கொத்திவிட்டன - அழகால். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. அன்பின் இராஜராஜேஸ்வரி - நல்லதொரு பதிவு - ஆண்டாள் கைக்கிளியும் மீனாட்சி கைக்கிளீயும் ஒப்பு நோக்கி எழுதியது நன்று. ஆண்டாள் கிளி த்னந்தினம் எப்படி எதனைக் கோண்டு செய்யப்படுகிண்ரது என்பது விளக்கியமைக்கு நன்றி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ஓ! நல்ல கிளி விவரணம். வெத்திலை ஓலையோடு செய்யும் கிளி என்ன டழகாக உள்ளது. பிளிங்கி படமும் இறுதிப் படமும் மிக அழகு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  9. முதல் படத்தில் உள்ள ஆண்டாள் மிக மிக லக்ஷணமாக அழகாக திருஷ்டி படும் போல காட்டியுள்ளீர்கள். அந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஸர்வ லக்ஷணமும், முகத்தில் சில பெண்களுக்கே உரிய ஓர் அழுந்த சமத்தும் தெரிகிறது. மிகவும் அழகோ அழகு. ;))))

    ReplyDelete
  10. அடுத்துள்ள தனிக்கிளி படத்தில் அது என்ன இடதுபுறக்கிளி சற்றே வயசானதால் குளிரில் நடுங்குகிறதோ!

    வலதுபுறத்தில் [தங்களைப்போன்ற எழுச்சியான] இளமையான அந்தக்கிளி அவர் நடுங்குவதை வேடிக்கை பார்க்கிறதோ?

    கிளிகொஞ்சும் பதிவாக இருக்கும் போலிருக்கே, பொறுமையாக இப்போத்தான் பார்க்க ஆரம்பித்துள்ளேன்.

    ReplyDelete
  11. அடுத்து பச்சைமரம் ஒன்று, இச்சைக்கிளி ரெண்டு ....
    ஏற்கனவே தாங்கள் காட்டியதே என்றாலும், ரொம்ப நாள் ஆனதால் மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது.

    கற்பனை உலகில் மிதப்பது போல உள்ளது, அவைகள் இப்படிச் சுதந்திரமாகப் பறப்பது. ;))))

    ReplyDelete
  12. ஆண்டாள் கிளியைத் தினமும் புதிதாகத் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களும், அந்தப்பொருட்கள் கிளியின் எந்தெந்த பாகங்களை அலங்கரிக்கிறது என்ற விபரங்களும், ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சம் நான் கேள்விப்பட்டுள்ளேன்.
    முழு விபரங்களும் இந்தத் தங்கள் பதிவில் அழகாக வெளியிட்டுள்ளீர்கள்.

    மேற்கண்ட பொருட்களை தாங்கள் ஒவ்வொன்றாக எடுத்துத்தர நானே கிளி செய்வது போலக் கற்பனை செய்து கொண்டேன்.

    ஒரு நாள் ஒரு கல்யாண மண்டபத்தின், வாசலில் வாழைமரம் கட்டி, தென்னை/பனை ஓலைகளில் பின்னல் போல தொங்கும் தோரணம் கட்டுபவர் அருகே அமர்ந்து எப்படிச்செய்கிறார் என்பதை ஊன்றி கவனித்து பிறகு நானே அவருக்கு ஒரு நான்கு மட்டும் செய்து உதவினேன்.

    எனக்கும் சந்தோஷம் அந்தப்பெரியவருக்கும் சந்தோஷம். என்னைப் பாராட்டினார்.

    அதுபோல இந்த வேகவேகமாகப் பூத்தொடுப்பவர்களைக்கண்டால், எனக்கு பொறாமையாக இருக்கும்.
    அதுவும் என் வீட்டருகே BHEL Quarters இல் ஒரு வைஷ்ணவா மாமி அவங்க பெயரும் ஆண்டாள் தான். ஈரப்பதம் உள்ள வாழை நாரில் அழகாக மிகவும் நெருக்கமாக பூ தொடுப்பார்கள். வியந்து போவேன்.

    மாக்கோலம் இழைகோலம் போடுவதிலிருந்து எல்லாமே ஒரு அழகிய கலை தானே! ;))))

    ReplyDelete
  13. ஸ்ரீவில்லிப்பத்தூர் ஆண்டாள் கிளிகளை வெற்றிலையை ஓட்டோடு மடித்து அழகாகச் செய்வதாக அருமையாகப் படத்தில் காட்டியுள்ளீர்கள்.

    ஆணடாள் மேல் வைத்து பூஜிக்கப்பட்ட அந்தக்கிளி கிடைத்த பாக்யசாலிகளில் நிச்சயம் தாங்களும் ஒருவராகத்தான் இருப்பீர்கள்.

    உங்களுக்கு அது கிடைத்து நீங்கள் அதைப்பற்றி இப்படிப் படம் கொடுத்து சிலாகிப்பதும், அதை நாங்கள் தரிஸிப்பதும் கூட எங்கள் பாக்யம் தான். எனவே நாங்களும் பாக்யசாலிகளே! ;)))))

    ReplyDelete
  14. படங்களுடன் அழகான விளக்கங்களுடன்
    கிளி மகாத்மியம் சொல்லிப் போகும் இப்பதிவு
    மிக மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
    நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. கிளித்தலையுடன் கூடிய சுகப்பிரும்ம ரிஷியைப்பார்த்தாலே மனதுக்கு சந்தோஷமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

    சிறுவயதில் கொலுபொம்மைகளில் இருக்கும் இதைப்பற்றி நான் பலரிடம் கேட்பேன்.

    அவர் சுகப்பிரும்ம ரிஷி என்று சொல்லியும், வியாசரின் மகன் என்று சொல்லியும் நிறுத்திக்கொள்வார்கள்.

    பிறகு தான் முழுவிபரம் நான் படித்து அறிந்து கொண்டேன்.

    ஆண்டாள் காலத்திலேயே காதலுக்கு தூது போனவர், அதனாலேயே ஆண்டாள் இடது தோளில் நிரந்தரமாக கிளியாக அமர பாக்யம் பெற்றவர்.

    தூதுபோனாலும் [குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படுவது போல] இதுபோன்ற தெய்வங்களுக்கு தூது போக வேண்டும்.

    நம்மாள் அப்படித்தான் ஒருவன் தூது போய் இரு பக்கமும் செம்ம அடி வாங்கிக் கொண்டான்.

    இதை அதாவது ’நம்மாள் அப்படித்தான் ஒருவன்’ என்பதை தென்கச்சி கோ. சுவாமிநாதன் பணியில் மெதுவாக நிறுத்தி அழகாகச் சொல்ல வேண்டும். ;)))))

    ReplyDelete
  16. துளசியின் இயற்கை நறுமணம்....
    அதன் கீழே காட்டியுள்ள ஆண்டாள் இருவரும் அழகான முரட்டு மாலைகள் ஆபரங்களுடன் ஜொலிக்கிறார்களே!

    ஆண்டாள் கிளியும் மீனாக்ஷி கிளியும் தனித்தனி அழகு, இயல்பாகவே பேசத் தெரிந்த கிளி, புள்ளினங்கள் மீது பேரன்பு கொண்டவள் என்று எல்லாமே அழகாக எழுதி அந்த பாசுரத்தையும் எழுதி அமர்க்களப்படுத்தி விட்டீர்களே!

    கிளியும் நீங்களே அந்த ஆண்டாளும் நீங்களே என எங்களுக்குத் தோன்றுகிறது. என்ன் அருமையான படங்கள், எவ்வளவு அழகான விளக்கங்கள் .... அடடா ஒவ்வொன்றும் பேரழகு இந்தப்பதிவு.

    ReplyDelete
  17. துர்வாசர் இந்திரனுக்கு இட்ட சாபம், மதுரையின் நமச்சிவாயா சொல்லி பறந்த கிளிகள், சொக்கனை அடையாளம் காட்டிய கிளி, இந்திரன் சாப விமோசனம் என்று எவ்வளவு விஷயங்களை அள்ளித்தந்துள்ளீர்கள்.
    எப்படித்தான் விஷயங்களை கஷ்டப்பட்டு சேகரித்து பதிவு செய்கிறீர்களோ!

    ReplyDelete
  18. ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயிக்கு தினமும்,

    திருப்பதி பெருமாளுக்கு புரட்டாசி பிரும்மோத்ஸவத்தின் கருட ஸேவையன்று,

    ஸ்ரீரங்கம் ரெங்கராஜாவுக்கு சித்திரைத் தேர் ஓட்டத்தின் போது (அதுவும் கிளி+வஸ்த்ரங்களுடன்)

    மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் போது ....

    ஆண்டாள் சூடிக்கொண்ட மாலை, மாலை மரியாதைகளுடன், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து அனுப்பப்படுவது கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! ;)))))

    நல்ல விஷயங்களை நயம்படச் சொல்கிறீர்கள். அதுதான் உங்களின் தனிச்சிறப்பு.

    குதிரை வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு அழகோ அழகு. அதுவும் பாயும் குதிரைபோல ஜோராகவே படத்தில் காட்டப்பட்டுள்ளது.

    ReplyDelete
  19. குதிரை வாஹனத்திற்குக் கீழ் உள்ள அந்த ஒரு ஜோடிக் கலர் கிளிகள் எவ்ளோ அழகாக உள்ளன. ஏதோ முக்கியமான தலையணி மந்திரம் ஓதப்படுகிறதே!

    அது என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

    அவங்க பதிவு போடுவதும், இவர் விடிய விடியக்கண் முழுச்சு, அதை வரிக்குவரி பாராட்டுவதுமே வேலையாப் போச்சுன்னு, எதோ சொல்வது போல எனக்குத் தோன்றியது.;)))

    இவைகளுக்குக் கூட நம் மீது பொறாமை பாருங்கள். ;(((

    எல்லாம் இன்னும் இரண்டு நாட்களுக்குத்தானே என்றும் சொல்லி என்னை மேலும் பயமுறுத்துகின்றனவே.;(((

    ஆண்டாளும் ரெங்கமன்னாரும் தான் என்னை எப்படியாவது 01.01.2012 முதல் காப்பாற்றணும்.

    ReplyDelete
  20. ஸ்ரீரங்கம் ஆண்டாள் சந்நதியில் தினமும் வைக்கும் ஒவ்வொரு பாசுரத்திற்கும் தகுந்த பொம்மைகளை காட்சியாக்கி, அதை வெகு அருமையாகப் படமாக்கி வெளியிட்டுள்ளது, பதிவை மேலும் அழகூட்டிவிட்டது. அதில் அந்த ஐந்து தலை நாகம் தத்ரூபமாக உள்ளது பாருங்கள். குட்டிக்குட்டி தோழிகளும், பசுமாடுகளும், சுற்றுப்புற கண்ணாடி சேவைகளும் எல்லாமே ஜோர் ஜோர்!
    ;))))

    ReplyDelete
  21. அழகான ஆண்டாளின் கையில் அழகுக்கிளி..

    படங்களெல்லாம் ஜூப்பரு .

    ReplyDelete
  22. அடுத்த படத்தில் உள்ள பச்சைக்காதலர்கள் இருவரும் ஃபாரினர்ஸோ.

    பஞ்சுபோன்ற கிளிப்பச்சைக்கலர் உடல், தலைகளிலும் முதுகினிலும் வரிவரியாக சூப்பர் டிஸைன்,

    கண் + மூக்கின் மேல் பகுதியில் நீலம், நெற்றியில் கொஞ்சம் வெள்ளை, ஆங்காங்கே கரும் புள்ளிகள், தாடிப்பக்கம் மஞ்சள்.

    வலதுபுறம் உள்ளவர் பெண்மணியோ! மெய்மறந்து வெட்கத்தில் கண்ணை மூடிக்கொண்டுள்ளதால் எனக்கு ஒரு சந்தேகம். ;))))

    அடுத்த படத்தில் கிளியார் டிரஸ்ஸெல்லாம் போட்டுக்கொண்டு, தலையை ஆட்டியபடி பெயிண்டை பிரஷ்ஷிலிருந்து சொட்ட விட்டுக்கொண்டே இருக்கிறாரே! ;)

    அடுத்து ரிபீட் 4 கிளியாரும் நம்மூர் ஆசாமிகள் போல்தான் உள்ளன. பச்சைக்கலரில் சிவப்பு மூக்குடன். அந்த ஃபாரினர்ஸ் போல நாம் அழகாக இல்லையே என்று நினைக்கிறார்களோ! ;)

    ReplyDelete
  23. கடைசிபடம் இயற்கைக்காட்சி அருமையாக உள்ளது.

    அதற்கு முந்தியபடம் பற்றி:

    போனாப்போகுதுன்னு கொஞ்சம் இடம் கொடுத்தால் போச்சு தலைக்கு மேலே ஏறி உட்கார்ந்து விடுவான்! என்பது சரியாகத்தான் இருக்கும் போலிருக்கு.

    கைவிரலில் ஒருவன். தலையில் ஒருவன். உச்சி மண்டையில் கொத்தி விடாதோ!!

    பலவிதக்கிளிகளுடன் இன்றைய பதிவும் கிளிகொஞ்சுவதாகவே அமைந்து விட்டது.

    நாளைக்கு இரவு அம்மாவை விட்டு உங்களை உட்கார வைத்து திருஷ்டி சுற்றிப்போடச் சொல்லுங்கோ.

    இன்று 379 ஆவது வெற்றிகரமான பதிவு. நாளை 380.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  24. பச்சை கிளிகள் கொள்ளை அழகு .உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. See Rajeswari, it is early morning 4.00 oclock. Before starting to temple i just wants to have a look of your post. From some distance illayarajas Janani janani song is singing. Here the birds. What a fentastic way of starting this day. Nice very nice. I love all the pictures dear. Thanks a lot for the post.
    Happy new year.
    Do a lot.
    viji

    ReplyDelete
  26. ஆன்மீகத் தகவல்கள் அனைத்தும் அருமை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  27. மார்கழியில் கோதைக்கிளியும், அங்கயற்கண்ணாள் கிளியும் அற்புதம்.

    ReplyDelete
  28. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், பணி தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கடைசிபடம் இயற்கைக்காட்சி அருமையாக உள்ளது........
    இன்று 379 ஆவது வெற்றிகரமான பதிவு. நாளை 380.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk//


    கம்பீரமான கருத்துரைகளால் பதிவினைப் பெருமைப்படுத்திய அத்தனை பின்னூட்டங்களுக்கும் இதயம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  30. Kailashi said...
    மார்கழியில் கோதைக்கிளியும், அங்கயற்கண்ணாள் கிளியும் அற்புதம்./

    அற்புதமாய் கருத்துரை வழங்கி பதிவினைப் பெருமைப்படுத்தியமைக்கு இனிய நன்றிகள் ஐயா,

    ReplyDelete
  31. Kailashi said...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், பணி தொடர வாழ்த்துகள்./

    வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா...

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  32. FOOD NELLAI said...
    ஆன்மீகத் தகவல்கள் அனைத்தும் அருமை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ.//

    அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    தங்கள் இல்லத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. See Rajeswari, it is early morning 4.00 oclock. Before starting to temple i just wants to have a look of your post. From some distance illayarajas Janani janani song is singing. Here the birds. What a fentastic way of starting this day. Nice very nice. I love all the pictures dear. Thanks a lot for the post.
    Happy new year.
    Do a lot.
    viji/

    ஜகத் ஜனனியின் பாடல் இசை இங்கும் கேட்கச்செய்த அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் தோழி

    ReplyDelete
  34. angelin said...
    பச்சை கிளிகள் கொள்ளை அழகு .உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    கொள்ளை அழகாய் கருத்துரை வழங்கி இனிமை சேர்த்தமைக்கு இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் இனிய இல்லத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  35. அமைதிச்சாரல் said...
    அழகான ஆண்டாளின் கையில் அழகுக்கிளி..

    படங்களெல்லாம் ஜூப்பரு .

    அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  36. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கிளி ஜோர். நம்ம ஊராச்சே.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. Ramani said...
    படங்களுடன் அழகான விளக்கங்களுடன்
    கிளி மகாத்மியம் சொல்லிப் போகும் இப்பதிவு
    மிக மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
    நல் வாழ்த்துக்கள்//

    அழகாய் அருமையாய் கருத்துரை வழங்கி இனிமை சேர்த்தமைக்கு இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் தங்கள் இனிய குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
    நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. kovaikkavi said...
    ஓ! நல்ல கிளி விவரணம். வெத்திலை ஓலையோடு செய்யும் கிளி என்ன டழகாக உள்ளது. பிளிங்கி படமும் இறுதிப் படமும் மிக அழகு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    மிக அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  39. kovaikkavi said...
    ஓ! நல்ல கிளி விவரணம். வெத்திலை ஓலையோடு செய்யும் கிளி என்ன டழகாக உள்ளது. பிளிங்கி படமும் இறுதிப் படமும் மிக அழகு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    மிக அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  40. kovaikkavi said...
    ஓ! நல்ல கிளி விவரணம். வெத்திலை ஓலையோடு செய்யும் கிளி என்ன டழகாக உள்ளது. பிளிங்கி படமும் இறுதிப் படமும் மிக அழகு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    மிக அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  41. cheena (சீனா) said...
    அன்பின் இராஜராஜேஸ்வரி - நல்லதொரு பதிவு - ஆண்டாள் கைக்கிளியும் மீனாட்சி கைக்கிளீயும் ஒப்பு நோக்கி எழுதியது நன்று. ஆண்டாள் கிளி த்னந்தினம் எப்படி எதனைக் கோண்டு செய்யப்படுகிண்ரது என்பது விளக்கியமைக்கு நன்றி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

    அருமையான கருத்துரைகள் அளித்து பெருமைப்படுதியமைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  42. Rathnavel said...
    நல்ல பதிவு.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

    நன்றி ஐயா..

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்./

    ReplyDelete
  43. மகேந்திரன் said...
    ஒயிலழகு அன்னை மீனாட்சி கைதவழ்
    கிளிகளின் அழகுப் படங்கள்.
    நிறைவாய் இருந்தது சகோதரி./


    நிறைவான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  44. வெங்கட் நாகராஜ் said...
    அருமையான புகைப்படங்களுடன் கூடிய நல்ல பகிர்வு...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்//

    அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    தங்கள் இல்லத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. தமிழ் உதயம் said...
    கிளிகள் மனதை கொத்திவிட்டன - அழகால். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.../

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. கிளிகளின் கண் கொள்லா காட்சிகள் சிறப்பானவை

    ReplyDelete
  47. பொறுமையாக படிப்பேன்பா..

    மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...

    ReplyDelete
  48. தெய்வக் கிளி அருமை.
    வெற்றிலை கிளி கண்டுகொண்டோம்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. ஆஹா ! அற்புதம் ! அற்புதம் !
    உங்கள் கிள்ளை மொழி , படங்கள் , தகவல்கள் அனைத்துமே ...
    இதுவரை அறிந்து இராத பல புதிய , அரிய செய்திகள்
    அறிந்து கொண்டேன். அந்த மார்கழி பனியைப் போல்
    மனதிற்கு வெகுக் குளிர்ச்சியாக உள்ளது.
    மிக்க நன்றி. என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !

    ReplyDelete
  50. நல்ல விளக்கம் , நன்றி அம்மா

    ReplyDelete
  51. 1847+15+1=1863

    கம்பீரமானதோர் பதிலுக்கு நன்றி.

    ReplyDelete
  52. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (18/06/2015)
    தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete