Saturday, October 27, 2012

ஜெய் அனுமன்.










ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்..

சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,வடைமாலை சாத்தி,வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி,ஆராதிக்க வேண்டும்.  
 ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.


ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.

 `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று அனுமனிடம் கூறி அகன்றவர் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால்,சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

அகிலம் போற்றும் அஞ்சனை மகனே
வானவர் போற்றும் வானரர் தலைவா
மூன்று உலகையும் உணர்வுற செய்வாய்
வெற்றிக் கனியை அனுதினம் கொய்வாய்...!


காற்றின் கன்றே கடலைக் கடந்தாய்
அன்னை சீதையின் கவலைக் களைந்தாய்
ராம தூதனை வென்றவர் இல்லை
உன் ஆற்றலை அளக்க வானமே எல்லை...!


 SRI ANJANEYA SWAMY , KONDAGATTU

காற்று ஈன்ற காவியமே காக்கும் கருணைக் கடலே போற்றி !
கருத்தில் நிறைந்தாய் சொல்லின் செல்வா கழலே போற்றி ! 

எனை நீ காத்தால் கவலை இல்லை
உன் பாதுகாவலில் நெருங்குமோ தொல்லை?
உடலை வாட்டும் நோயும் அகலும்
மனதை வாட்டும் துன்பம் விலகும்...!


Dvaathrinsatdbhuja Anjaneya swamy.

வாயு புத்திரா அஞ்சனை மைந்தா
ராம பக்தா சூரியன் சிஷ்யா
சீதா ராம லக்ஷ்மணரோடு வருவாய்
அடியவர் இதயத்தில் அன்புடன் குடிபுகுவாய்...!


உனையே துதித்தார்க்கு நீ இன்ப ஊற்று
உன் பக்தர்க்கு உனை விட்டால் ஏது மாற்று
இனிய வீரனே நீ எல்லாம் வல்லவன்
உண்மை பக்தரின் துன்பம் தீர்ப்பவன் ...!







Posted by sury Siva to மணிராஜ் at October 27, 2012 12:36 PM
YouTube - Videos from this email









18 comments:

  1. அனுமனின் தரிசனம் கிடைக்கப்பெற்றோம் படங்களுடன் பகிர்வு நல்லா இருக்கு நன்றி

    ReplyDelete
  2. “சொல்லின் செல்வன் “ என்று கம்பனால் பாராட்டப் பெற்ற அனுமனைப் பற்றி ஒரு அழகான பதிவு.

    ReplyDelete
  3. அனுமனைப் பற்றிய சிறப்பான பகிர்வு...

    படங்கள் மிகவும் அருமை...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  4. அனுமனின் அனுக்ரஹம்
    அனுமனின் ஆசி பெற்று
    அனுமனின் இராம ஈடுபாடில்
    அனைவர் மன்மும் நிறைவு காண‌
    வழி வகுக்கும் உங்கள் பதிவுக்கு
    ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும்
    வந்து சேவிப்பதே
    அனுமனது அனுக்ரஹம்

    சுப்பு ரத்தினம்.
    உங்கள் அனுமதியுடன்
    நீங்கள் எழுதிய வரிகளை
    பீம ப்ளாஸ் என்னும் ராகத்தில் பாடினேன்.
    எனது வலையில் போடுகிறேன்.
    வாருங்கள். கேளுங்கள்.

    ReplyDelete
  5. You gave a great Hanuman darshan through these pics today.I read Sundara Kaandam everyday.It sets the day positive for me. Thanks for sharing, the vadai malai pic is spectacular!

    ReplyDelete
  6. அனுமனின் சிறப்பான தரிசனம்....

    மிக்க நன்றி.

    ReplyDelete
  7. Oh ! Hanumanji
    Listen to my song !
    mera gaana sunjo ji.
    mujhe us paar le chalo
    raam ke paas le chalo

    என் பாட்டை கேள்.

    subbu rathinam
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  8. sury Siva said...
    Oh ! Hanumanji
    Listen to my song !
    mera gaana sunjo ji.
    mujhe us paar le chalo
    raam ke paas le chalo

    என் பாட்டை கேள்.

    subbu rathinam
    www.menakasury.blogspot.com //


    தங்களின் அருமையான பாட்டு கேட்க அனுக்கிரஹம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  9. முதல் படம்- அந்த ஓவியம் மிக அழகு! எத்தனை நுணுக்கமாக வரைந்திருக்கிறார்கள்!!

    ReplyDelete
  10. வழக்கம் போல் படங்கள் பிரமாதம்.
    சூரியன் சிஷ்யா என்று ஒரு பாடலில் வருகிறதே - சூரியன் அனுமனின் குருவா? என்ன கதை தெரிந்தால் எழுதுங்களேன்? நன்றி.

    ReplyDelete
  11. பக்தி மற்றும் விவேகத்திற்கு ஆஞ்சநேயர்தான்.எழில் மேவும் புகைப்படங்கள்.

    ReplyDelete

  12. அப்பாதுரை said...
    வழக்கம் போல் படங்கள் பிரமாதம்.
    சூரியன் சிஷ்யா என்று ஒரு பாடலில் வருகிறதே - சூரியன் அனுமனின் குருவா? என்ன கதை தெரிந்தால் எழுதுங்களேன்? நன்றி.//

    கருத்துரைக்கு நன்றிகள்...

    சூரியனைத் தன குருவாகக் கொண்டவர்.நவவியாகரணங்களையும்
    சூரியனின் வேகத்துக்கு ஈடுகொடுத்து குருவின் முன்னிலையில் கைகட்டி வாய்பொத்தி அடக்கத்தின் திரு உருவாக கற்றுகொண்ட கல்விமான் அனுமன் !
    Please see the Post
    http://jaghamani.blogspot.com/2012/05/blog-post_19.html

    ஸ்ரீஆஞ்சநேயர் கடாக்ஷம்

    ReplyDelete
  13. வாயுபுத்திரனின் கம்பீரமான தோற்றம் பற்றிய படம் தந்திருந்தால் [உ..ம்] நாமக்கல் ஆஞ்சனேயர், சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  14. ஆன்மிகம் பற்றிய தகவலுக்கு உங்கள் தளத்தினைப் பார்க்கவேண்டும் என முன்பே நான் குறிப்பிட்டது சரிதானே.[அப்பாதுரை said...
    வழக்கம் போல் படங்கள் பிரமாதம்.
    சூரியன் சிஷ்யா என்று ஒரு பாடலில் வருகிறதே - சூரியன் அனுமனின் குருவா? என்ன கதை தெரிந்தால் எழுதுங்களேன்? நன்றி.//]

    ReplyDelete
  15. எப்பவும் ஆஞ்சநேயர் எல்லோருக்கும் பிடித்தமானவராகவே இருக்கிறார்.

    ReplyDelete


  16. அப்பாதுரை has left a new comment on your post "ஸ்ரீஆஞ்சநேயர் கடாக்ஷம்":

    சுட்டிக்கு நன்றி.
    துளசிமாலை ரகசியமும் புரிந்தது.

    நடுவில் இருக்கும் படத்தில் ஐந்து தலை அனுமான் - புதிதாக இருக்கிறதே? இதற்கு ஏதாவது பின்னணி உண்டா?//



    http://jaghamani.blogspot.com/2012/05/blog-post_25.html
    பரிபாலிக்கும் பஞ்சமுக அனுமன்

    http://jaghamani.blogspot.com/2012/04/blog-post_27.html
    பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர்

    ReplyDelete
  17. அனுமனைப்பற்றி படங்களும் பதிவும், அற்புதம.

    ReplyDelete
  18. மேலிருந்து இரண்டாவது படம் புதுமையாக ஜொலிக்கிறது.

    கீழிருந்து முதல் இரண்டு படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான அற்புதமான படங்கள்.

    இன்னும் ஒரு சின்ன வடையைக்கூட என் கண்ணில் காட்டாமல் இருக்கிறீர்களே! நியாயமா?

    நான் அடிக்கடி வடை சாப்பிட்டு வருபவன் தான்.

    இருப்பினும் உங்கள் வடை ....
    அனுமனின் பிரஸாதவடை .... அதுவும் உங்கள் கையால் கிடைத்தால் மேலும் பாக்யமாகக் கருதுகிறேன்.

    -oOo-

    ReplyDelete