













சர்வதேச யானைகள் திருவிழாவில் யானனைகளுக்கான ஓட்டப்பந்தயம், அழகுப்போட்டி, ரேக்ளா வண்டி போட்டி குதிரை வண்டிப்போட்டி ஆகியவை நட்த்தப்படுவது கண்கொள்ளாக்காட்சியாகத்திகழ்கிறது...


நேபாள நாட்டு வனத்துறையினர் யானைகளையும் கால்பந்து விளையாட பயிற்சி அளித்துள்ளனர்.
அங்குள்ள சவ்ரஹா நகரில் சர்வதேச யானைகள் திருவிழாவை முன்னிட்டு யானைகளுக்கான கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெறுகிறது...
யானைகள் கால்பந்தாட்டத்தில் பாகன்களை சுமந்தவாறு யானைகள் பந்தை லாவகமாக தட்டிச்சென்று கோல் அடிக்க முயன்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.
போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேபாள கிஸ்ட் வங்கி யானைகள் அணி சங்கர் வளர்ச்சி வங்கி யானைகள் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வென்று பரிசை தட்டிச்சென்றது.!!
வருடந்தோறும் நேபாள், சிட்வான் தேசிய பூங்காவில் யானைகளுக்கான விழா நிகழ்வில் அழகு யானை போட்டி நடத்தப்பட்டுள்ளது.




அழகுப் போட்டியில் கலந்துகொள்ளும் யானைகளின் தலை உட்பட
உடல் சிறப்பாக அலங்கரிக்கபட்டிருக்க வேண்டும்.




அத்துடன் யானைகளின் கால் விரல் நகங்கள் சிறப்பாக வர்ணமிடப்பட்டிருக்க வேண்டும் என போட்டி விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
கலந்துகொண்டிருந்த 9 யானைகளில் 'சித்வார் காலி' என்ற யானை
நேபாள அழகு யானையாக தெரிவுசெய்யப்பட்டது.!!
.jpg)
' சித்வான் காலி மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது'
அழகுப்போட்டியில் கலந்துகொள்ளும் யானைகள் தமது பாகன்களின் கட்டளைப்படி இயங்கவேண்டும் என்பது கட்டாயமானது
















