Saturday, January 17, 2015

காணும் பொங்கல் விழாக் கொண்டாட்டங்கள்..




கோகுலத்தின் மீது கல் மழை பொழிந்த இந்திரனின் கோபத்திலிருந்து  ஏழுநாட்கள் கோவிந்தனும் , கோவர்த்தனமலையும் காத்துநிற்கவே- மழைப்பொழிவு நின்றதும் தங்கள் சேதமடைந்த இல்லங்களை கோபர்கள் புதுப்பித்து செம்மண் பூசி அழகு படுத்தினர்.
பூளைப்பூக்கள் , வேப்பிலைகள் . மங்களகரமான் மாவிலைகள் ஆவாரம்ப்பூக்கள் ஆகியவற்றை இணைத்து இல்லத்தின் நான்கு மூலைகளிலும் வைத்து நோய் அணுகாமல் பாதுகாத்துக்கொண்டனர்...
இந்திரன் கோபம் தணிந்து கோவிந்த பட்டாபிஷேகம் செய்தபின் , கதிரவனின் அருளினால் வயல்களில் செந்நெல்லும் ,கரும்பும் விளைந்து செழித்தன
வாழை ,அவரை பூசணி,கிழங்கு வகைகள், மற்றும் பல காய்கனி வர்க்கங்கள் அளவில்லாமல் பலன் கொடுத்து செழித்தன..
மகிழ்ச்சியடைந்த ஆயர்கள் அவற்றை மகிழ்ழ்சியுடன் பறித்து வந்து புதுக்கோலம் பூண்டிருந்த இல்லங்களில் சேர்ப்பித்தனர்..
கோகுலப்பெண்கள் , புத்தரிசியைப் புதுப்பானையில் பாலுடன் கலந்து , இனிப்பான பொங்கல் செய்து , ஏழுநாட்களுக்குப்பின் பிரகாசித்த சூரியனுக்கு
பொங்கல் , கரும்பு , பலவகை காய்கள் நிறைந்த குழம்பு ,கரும்பு ஆகியவற்றைப்படையலிட்டு தங்கள் நன்றியை கதிரவனுக்குத்தெரிவிக்கும் விழாவாகக்  கோண்டாடினர்..

அடுத்த நாள் தங்களுக்கு ஆச்சார்யன் போல் திகழ்ந்த மாடுகள் அவர்கள்
கவனத்தைக்கவர்ந்தன்  ..

கல் மழை பொழிய ஆரம்பித்ததும் தங்கள் கன்றுகளை பாதுகாப்பாக அரண் போல்  அமைத்து கொம்புகளைத்தாழ்த்திக்கொண்டு மாடுகள் தான்  முதலில் கோவிந்தனின் குடைக்குக்கீழ் சென்று வழிகாட்டின..
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் அவர்கள் செல்வம் ஆயிற்றே..:ஆகவே மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி,சலங்கை கட்டி, குளிப்பாட்டி, வர்ண, வர்ணமாய் அலங்கரித்து பொங்கல் ஊட்டி  மகிழ்ந்தனர்..
அடங்காத காளைகளை ஏறு தழுவி வீர விளையாட்டுகள் நிகழ்த்தினர்..
அடுத்த் நாள் தங்கள் துன்பங்களெல்லாம் தீர்ந்த மகிழ்ச்சியில் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் கண்டு  மகிழும் காணும் பொங்கலாக மலர்ந்தது..
இன்றைய , கதிரவன் பொங்கல் , மாட்டுப்பொங்கல்.காணும் பொங்கல் ஆகியவற்றின் அடிப்படை கோவர்த்தன மலை உத்தாரணமே..!


13 comments:

  1. அருமையான விளக்கம்! படங்கள் அழகு! நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. படங்கள் விளக்கம் அருமை

    ReplyDelete
  3. நல்ல விளக்கங்கள்! படங்கள் மிகவும் அழகு! எங்கிருந்து தங்களுக்கு இவ்வளவு அழகுப் படங்கள் கிடைக்கின்றன?!!!

    ReplyDelete
  4. பொங்கலின் அடிப்படை கோவர்த்தன உத்தாரணமே என்னும் விளக்கம் அருமை. அழகான படங்கள்.நன்றி.
    பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  6. மனம் கவரும் படங்கள்...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  7. மிக நல்ல விரிவான ஆக்கம் .
    இனிய நன்றி.
    இனிப்பான பிந்திய பொங்கல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. மிக நல்ல விரிவான ஆக்கம் .
    இனிய நன்றி.
    இனிப்பான பிந்திய பொங்கல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. இனிய காணும் பொங்கல் . படங்கள், விளக்கம் எல்லாம் அருமை.

    ReplyDelete

  10. "காணும் பொங்கல்" விழாக் காட்சிகள் யாவும் அழகு!அருமை!
    ரசித்தோம்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  11. அழகான காட்சிகள். அற்புதம்.

    ReplyDelete
  12. கோவிந்த பட்டாபிஷேகப் படங்கள் அருமை.

    ReplyDelete