Sunday, January 11, 2015

கடற்படை அணிவகுப்பு நிகழ்ச்சிகள்





ஆஸ்திரேலியா சென்றிருந்த போது, மகன் கடற்படை பயிற்சியில் 11 வாரங்கள்  கடினப்பயிற்சியை நிறைவு செய்தபிறகு அணிவகுப்பு நிகழ்ச்சியை காண அழைப்பு கிடைத்தது..

நாங்கள் இருந்த பிரிஸ்பேனில் இருந்து ஒன்னரை மணிநேர்ம் விமானப்பயணம் செய்து மெல்போர்ன் நகரம் சென்றோம்.

பிரிஸ்பேன்விமான நிலையத்தில் கார்களை மூன்றுநாள் நிறுத்துவதற்கு ஆன் லைனில் பதிவுசெய்து 99டாலர்கட்டணம் செலுத்தினோம்.

மெல்பேர்ன் விமான நிலையத்தில் இறங்கி வரிசையில் நின்று நாமே ஓட்டும் வகையில் வாடகை கார் புக் செய்து மூன்றுநாள் ஓட்டிக்கொள்வதற்குக் கட்டணம் 100 டாலர்கள் என்னும்  போது வேடிக்கையாக இருந்தது..

மீண்டும் மீண்டும் நம்பமுடியாமல் கேட்டு கட்டணத்தை உறுதி செய்து கொண்டேன்.
பெட்ரோல் நம் செலவாம்.. கார் கொடுக்கும் போது கழுவித்துடைத்து பெட்ரேல் நிரப்பித் தருகிறார்கள்..

காரை ஒப்படைக்கும் போது எவ்வளவு பெட்ரோல் டாங்கில் இருக்கிறதோ, அதிலிருந்து முழு டாங்குக்குமான தொகையை வசூலித்துக்கொள்கிறார்கள்..

நாங்கள் சிறிய வண்டி புக் செய்திருந்தாலும் அப்போதைக்கு அது அவர்களிடம் உபயோகத்தில் இல்லாததால் நல்ல பெரிய வண்டி , புத்தம் புதிய நியூமாடல் கார் கிடைத்தது.

குழந்தைகளை மடியிலோ கார்சீட்டிலோ அமர்த்தி பயணிக்கக்கூடாதாம் .
அவர்களுக்கான் சீட்பெல்ட்டுடன் கூடிய இருக்கையை விமானத்தில் எடுத்துச் சென்றோம்..
குழந்தை அமரும் தள்ளுவண்டியும் எடுத்துச்சென்றோம்..

மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியான கடற்படைத்தளம் நான்கு அடுக்கு கடுமையான
ராணுவப் பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கிறார்கள்.

பகல் நேரச்சேமிப்பு என்று ஒரு மணி நேரம் முன்னதாக நேரத்தைக் கூட்டி வைத்திருப்பதால் 
இரவு 9 மணி வரை அதாவது ஆஸ்திரேலிய நேரப்படி 10 மணிவரை சூரிய வெளிச்சம் இருந்தது
அணிவகுப்பு நிகழ்ச்சியைக் காண வசதியாக இருந்தது.
வெள்ளைச்சீருடையில் பல பயிற்சிகளில் சிறப்பாகத்தேறி, பல கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொண்டு நடன அசைவுகள் போன்று நடைபெற்ற அணிவகுப்பு கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது.
பூ மாதிரி  அனைவருக்கும் செல்லமாக வளர்நத பிள்ளை அல்லவா அது..
பயிற்சிக்காலம் முழுவதும் வாரம் ஒருமுறைதான் கைபேசி தருவார்கள்.. மீதிநேரங்களில் வாங்கிவைத்துக் கொள்வார்கள்..மகனிடம் இருந்து அழைப்பு வரும் வரை இருப்புக்கொள்ளாது


காஷ்மீர பனிமலையில் மகன் இருந்தான்
கருநீல மலை மீது தாய் காத்திருந்தாள்
என்ற பாடல் மனதில் ஒலிக்கும்.

நாங்கள் குழந்தையுடன் சென்றிருந்ததால் அங்கிருந்த நேவி ஆபீசர்கள்  எங்களிடம் வந்து இப்போது உண்மையான துப்பாக்கியை பயிற்சி பெறும் வீரர்கள் வெடித்துக் காட்ட இருக்கிறார்கள், குழந்தையின் காதுகளை  வெடித்து முடிக்கும் வரை மூடி வைத்துக்கொள்ளுங்கள்.. 
குழந்தை பயந்துவிடாமல் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்''
என்று எச்சரிக்கை தந்துவிட்டு , அதன்படி செய்கிறோமா என்று நிச்சயப்படுத்திக்கொண்ட பின்பே துப்பாக்கி வெடிக்கவும், வாண வேடிக்கைகள் நிகழ்த்தவும் சிக்னல் கொடுத்தார்..
கடற்படை அணிவகுப்பு முழுவதையும் ஜிம்மிஜிப் காமிராவில் முழுவதுமாக பதிவு செய்து வெப்சைட்டில் வெளியிட்டிருக்கிறார்கள்..

அவரவரவர்கள் இருக்கும் படத்தைக் குறிப்பிட்டால் வீடியோவாக பதிவு செய்து தருகிறார்கள்,

உள்ளேயே அமைத்திருக்கும் போட்டோ ஸ்டூயோவில் அவரவர் குடும்பத்தோடு போட்டோ எடுத்து பிரிண்ட் போட்டுக் கொடுக்கிறார்கள்..

காபி . டீ. ஜுஸ் வகைகள் , கேக், ஸ்நாக்ஸ்  வகைகளுடன் ஹை டீ நிகழ்ச்சியுடன் விழா இனிது நிறைவடைந்தது..

11 வாரங்கள் பிரிந்திருந்த தங்கள் பிள்ளைச்செல்வங்களை கடற்படை ராணுவ வீரர்களாக உருமாறி கண்ணுற்ற பெற்றோர் கண்களில் கண்ணீர் வழிய வழிய எதிர்கொண்ட உணர்ச்சிகளைக் கூற வார்த்தைகள் ஏது.?
HMAS   Stuart 
NAVY Serving Australia with Pride


9 comments:

  1. நல்ல உணர்ச்சகரமான நிகழ்வு.

    கடைசி பகுதியில் 11 வாரங்கள் என்று இருப்பது மாதங்கள் என்று இருக்கவேண்டுமோ? கவனியுங்கள்.

    ReplyDelete
  2. உங்கள் மனப் போராட்டம் புரிகிறது அம்மா...

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான பதிவு. உங்கள் பதிவுகளில் நீங்கள் சொல்வது போல, மகிழ்ச்சியான தருணங்கள். நேர்முக வர்ணனை போல் இருந்தது. கடைசி படம் “அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்” – என்ற ”ஆயிரத்தில் ஒருவன்” என்ற படப்பாடலை நினைவு படுத்தியது.

    ReplyDelete
  4. கடற்படை அணிவகுப்பை அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. என் சின்ன அண்ணா நேவியில் இருந்தபோது கொலாபாவில் அவரைப் பார்க்கச்சென்றேன். அவர் என்னை அவர் பணி புரிந்து வந்த போர்க் கப்பல் INS TIR உள்ளே எல்லாம் அழைத்துப் போனது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  6. மிகவும் நல்லதொரு துறையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் தங்கள் மகன். அவர் மேன்மேலும் சிறந்து விளங்கவும் வாழ்த்துக்கள்! சான்றோன் எனக் கேட்கும் தாயின் உள்ளம் பூரிப்படைந்து ஆனந்தக் கண்ணீர் என்பது போல் தங்களுக்கும் தங்கள் மகனின் கடுமையான பயிற்சி முடிந்து அணிவகுப்பைக் காணும் போது தாயுள்ளம் பூரித்துப் பெருமையடையத்தானே செய்யும் !!! மேலும் மேலும் பெருமை சேர்க்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! எல்லாம் வல்ல இறைவண் அருள் கிடைக்கப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு

    ReplyDelete
  8. ஆஹா படிக்கும்போதேஉணார்ச்சி மேலிடுகிறதுதோழி
    நேரில் பார்க்கும்போது உங்கள் உணர்வு புரிகிறது.
    மிக மிக நல்ல பதிவு.
    எந்த இடங்களுக்கு செல்லமுடியாத என் போண்டவருக்கு மிக அருமையாய் விளக்கி இருக்கிறேர்கள் நன்றி.
    விஜி

    ReplyDelete