சிவாலயத்தில் சிவன் சந்நிதிக்கு தென்புறம் எழுந்தருளியிருப்பவர், தென்முகக் கடவுள் என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தி. அவரை வழிபடும்போது வடக்குப் பார்த்து அமர்ந்து "ஓம் நமசிவாய' எனப்படும் திருவைந்தெழுத்தை தியானிக்கவேண்டும் என்பது ஆகமவிதிகளில் ஒன்று.
ஆன்மாக்கள் வடக்கு நோக்கிச் செல்வதை சரண யாத்திரை என்றும், தெற்கு நோக்கிப் போவதை மரண யாத்திரை என்றும் ஞானநூல்கள் கூறுகின்றன.
ஆன்மாக்கள் தன்னை நோக்கி சரணடைய விரும்புவதால், அவர்களை ரட்சிப்பதற்காக தட்சிணாமூர்த்தி தெற்குநோக்கி அருள் புரிகிறார்.
தட்சிணாமூர்த்தியை வழிபட குரு கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். கல்வி, கேள்வி, ஞானம், புதிய- அரிய கலைகளில் தேர்ச்சி பெறலாம்.
புகழையும் பொருளையும் ஒருசேர அடைய தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறந்தது.
எழுத்தாளர்கள், பத்திரிகைத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள், நீதித்துறையில் உள்ளவர்கள், அதிகார மையத்தில் பணிபுரிபவர்கள் இவரை வழிபட்டால் புகழ், செல்வம், அறிவுத் திறன் மேம்படும்.
நியாயத்திற்கு தட்சிணாமூர்த்தியே தலைவராதலால் இவரை வழிபட வழக்குகளில் நல்ல தீர்ப்பினைப் பெறலாம்.
உடல் வளம் பெறவும், வலுவுடன் திகழவும் தட்சிணாமூர்த்தியின் அருள் அவசியம் தேவையென்று ஆகமங்கள் கூறுகின்றன.
மங்களகரமான மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் அருளிருந்தால் வாழ்நாள் முழுவதும் மங்களம் நிறைந்திருக்கும்;
மனம் ஒருநிலைப்படும்; ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்;
இறையருள் நிறைந்திருக்கும்; மனம் சலனப் படாது.
சிவசொரூபத்தின் ஓர் அங்கமாக விளங்கும் தட்சிணாமூர்த்தி ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பதை தரிசிக்கலாம்...
பொதுவாக, ஆலமர்ச்செல்வன் என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் நான்கு பேர்களுக்கு கல்லால மரத்தடியில் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சிதருவார்.
இதில் சற்று மாறு பட்ட கோலத்திலும் சில தலங்களில் அருள் புரிகிறார்.
தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சில தலங்களில் திசைமாறியும் எழுந்த ருளியுள்ளார். திசைமாறியும், வித்தியாசமான திருக்கோலத்திலும் தட்சிணாமூர்த்தியை வழிபட நினைத்த நல்ல காரியங்கள் உடனே நிறைவேறும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரையடுத்த பட்டமங்கலம் திருத்தலத்தில் வழக்கத்திற்கு மாறாக கிழக்கு திசைநோக்கி அருள்புரிகிறார்.
சந்திரன் தலமான திங்களூரில் கிழக்கு திசை நோக்கி அருள்புரியும் இரண்டு தட்சிணாமூர்த்தியை தனித்தனி சந்நிதியில் தரிசிக்கலாம்.
மேற்கு திசை நோக்கி அருள்புரியும் தட்சிணாமூர்த்தியை செவ்வாய்த்
தல மாகக் கருதப்படும் வைத்தீஸ்வரன் திருக்கோவிலில் தரிசிக்கலாம்.
தல மாகக் கருதப்படும் வைத்தீஸ்வரன் திருக்கோவிலில் தரிசிக்கலாம்.
வடக்கு திசை நோக்கி அருள்புரியும் தட்சிணாமூர்த்தி
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய கோபுர வாசலுக்கு முன்னுள்ள மண்டபத் திற்கு அருகில் ஒன்பது அடி உயரமும் ஐந்தடி அகலம்
கொண்ட பிரம்மாண்ட வடிவில் சிம்ம வாகனத்தில் காட்சிதருகிறார். .
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய கோபுர வாசலுக்கு முன்னுள்ள மண்டபத் திற்கு அருகில் ஒன்பது அடி உயரமும் ஐந்தடி அகலம்
கொண்ட பிரம்மாண்ட வடிவில் சிம்ம வாகனத்தில் காட்சிதருகிறார். .
தட்சிணாமூர்த்தியை எந்தத் திருக்கோலத்தில் தரிசித்து வழிபட்டாலும் கல்வி, கேள்வி, ஞானம் அளித்து சுகமான வாழ்வருள்வார் என்பது நிச்சயம்!
தட்சிணாமூர்த்தி வழிபாடு அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
குரு பகவான் பற்றிய அனைத்து தகவல்களும் சிறப்பு... நன்றி அம்மா...
ReplyDeleteமனம் நிறைந்த தட்சிணாமூர்த்தி வழிபாடு. நன்றி.
ReplyDeleteதட்சிணா மூர்த்தி வழிபாடு பற்றி சிறந்த விளக்கம்! படங்கள் அழகு! நன்றி!
ReplyDeleteமயிலாடுதுறை ஸ்ரீ மேதா தக்ஷினாமூர்த்தியும் சிறப்பு மிக்கவர். பதிவிற்கு நன்றி.
ReplyDeleteகல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதல் கற்ற கேள்வி
ReplyDeleteவல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்து பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
குரவே ஸர்வலோகாநாம் பிஷஜே பவரோகிணாம்
ReplyDeleteநிதயேஸர்வ வித்யாநாம் தக்ஷிணா மூர்த்தயே நம:
அப்ர மேயத் வயாதீத நிர்மல ஜ்ஞான மூர்த்தயே
மநோ கிராம் விதூராய தக்ஷிணா மூர்த்தியே நம:
தட்சிணாமூர்த்தி தரிசனம் கண்டேன். நன்றி.
ReplyDelete