ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமந் நாராயண
சரணௌ சரணம் ப்ரபத்யே
சரணௌ சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்வதர்மாந் பரித்யஸ்ச்ச மாமேகம் சரணம் வ்ரஜா
அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச
சர்வதர்மாந் பரித்யஸ்ச்ச மாமேகம் சரணம் வ்ரஜா
அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச
“
“சரணௌ’ என்றால், “இரண்டு திருவடிகள்’ – “பிரபத்யே’ என்றால், “சரணடைதல்’ – “நாராயணனின் திருவடிகளில் சரணடைகிறேன்…’
என்பது மந்திரத்தின் பொருள்.
ஆத்மார்த்தமாக பெருமாளிடம் சரணடைகிறவருக்கு எந்த துன்பமும் வாழ்க்கையில் இல்லை.
திருமால் மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அழித்திட வாமன அவதாரம் தரித்து
தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று கேட்டு,
ஓர் அடியை வானத்திலும்; இரண்டாம் அடியை பூமியிலும்; மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து அடக்கியதோடு, அந்த மன்னனின் வேண்டுதலின்படி, ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள் புரிந்ததன்படி,
மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக
மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று ஓணம் பண்டிகை 10 நாள் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் அத்தம் நட்சத்திர தினத்தில்துவங்கும் ஓணம் சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று 10 வது நாள் திருவோணமாக கொண்டாடப்படுகிறது
ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் விருந்தாகும்.
உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர்.
தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும்.
படங்களும் பகிர்வும் அருமை அம்மா...
ReplyDeleteஓணம் பற்றி அறிய அரிய செய்திகள். நன்றி.
ReplyDeleteபுகைப்படங்கள் அழகோ அழகு
ReplyDelete