Wednesday, August 19, 2015

உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில்





அவ்வையார் நோன்பிற்குரிய ஆடி மாதத்திலசிறப்பாகத்தரிசிக்க வேண்டிய திருமணத்தடை நீக்கும் கல்யாண அவ்வையார் சேலம் அருகிலுள்ள
உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அருள்புரிகிறார்.

 சிவதரிசனம் வேண்டி  தவமிருந்த சிறந்த சிவபக்தர்களாக இருந்த ராவணனின் தம்பிகளான கரன், தூஷணன் இருவரும் ஆண்டுகள் பல கடந்ததால் கரதூஷன் மீது புற்று வளர்ந்து, அவனது உருவத்தை மறைத்துக் கொண்டது. அசுரனின் இந்த கடும் தவம் கயிலாயத்தில் எதிரொலிக்க, மகிழ்ந்த சிவபெருமான் கரதூஷனுக்கு காட்சிஅளித்தார். தமது கடும் தவம் பலித்து விட்ட சந்தோஷத்தில் கரதூஷன் தமது ஆயிரம் கரங்களை நீட்டி ஈசனை நோக்கி வரம் வேண்டினார். காட்சி தந்த சிவபெருமான், கரதூஷன் மன்னர் ஆவதற்கு வரம் கொடுத்தருளினார். அதன்பின்னர் இலங்கை சென்ற கரதூஷனை இலங்கை வேந்தன் ராவணன் வரவேற்று யாழ்ப்பாணத்துக்கு அவனை மன்னராக்கினார்.

கரதூஷன் தவம் செய்து சிவபெருமானை தரிசித்த இடத்தில் சுயம்பு மூர்த்தியாக, சிவபெருமான் 'கரபுரநாதர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அதன்பின்னர் அவ்வப்போது கரதூஷன் உத்தமசோழபுரம் வந்து கரபுரநாதரை தொழுது வணங்கி சென்றதாக கோவில் தலவரலாறு கூறுகிறது.
பக்தர்களுக்கு கை (கரம்) கொடுப்பவராக அருளுவதாலும் , கர தூஷணருக்கு அருள்புரிந்ததாலும் சிவன்  , "கரபுரநாதர்' என்ற பெயர் பெற்றார்.

 திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம், திருமூலர் எழுதிய திருமந்திரம், அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் போன்றவற்றிலும் கரபுநாதர் பற்றிய செய்யுள் இடம் பெற்றுள்ளது.

 கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து தங்கி இறை வழிபாடு நடத்தியதற்கான கல் வெட்டு ஆதாரம் உள்ளது. அதனால் தான் சோழன் தங்கிய இடத்தை உத்தமசோழபுரம் என்றும், பாண்டியன் தங்கிய இடத்தை வீரபாண்டி என்றும், சேரன் தங்கிய மலை சேர்வராயன் மலை என்றும் வழங்கப்படுகிறது.கோயில் சண்டிஹோமம், பிரதோஷம் போன்ற வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது.

சேர, சோழ, பாண்டியனுக்கு கோயிலின் அர்த்த மண்டப கல்தூணில் வில், புலி, மீன் கொடி பொறிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை கோவிலில் பூஜை செய்து வந்த அர்ச்சகர் இறந்து விடவே,
16 வயதான அவரது மகன் குணசீலன் அபிஷேகம் செய்வதற்காக கோவிலுக்கு வந்தான். கருவறைக்கு சென்று தான் கொண்டு வந்த அபிஷேக நீரை சாமிக்கு ஊற்றி விட்டு, லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மலர்மாலை போட முடியாமல் மனம் வருந்தி அழுது நிற்க, இறைவன் தன் தலையை சாய்த்து அந்த மாலையை ஏற்றுக்கொண்டார்.   மாலை போட முடியவில்லை.  

கோவிலில் உள்ள லிங்கம் இன்றும் தலை சாய்ந்த நிலையில் நிற்கிறது. கரபுரநாதரை 'முடி சாய்ந்த மன்னர்' என்றே அழைக்கின்றனர்.

மூலஸ்தானம் அமைந்துள்ள மண்டபத்திலேயே தாயார் பெரிய  நாயகி அம்மனாக தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

அம்மன் சன்னதி பக்கத்தில் நடராஜர் காட்சி தருகிறார்.

 கோவில் பிரகாரத்தில் சகட கணபதி, கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் பஞ்சலிங்கங்கள் சன்னதி,
சண்முக சுப்பிரமணியர் சன்னதி, அய்யப்பன் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.

சூரிய பகவான் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் சிறிய சன்னதியில் காட்சி தருகிறார். மேலும் பிரகாரத்தின் ஒரு பகுதியில் காவல்தெய்வமான காலபைரவர் நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.  கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹாரபைரவர், சண்டபைரவர், அசிதாங்க பைரவர், உன்மத்த பைரவர், உருபைரவர் ஆகியோரின் சிற்பங்கள் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டு உள்ளது.

  ஈஸ்வரன் தலத்திற்கு அருகிலேயே ஓடும் திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிக்கு மாலையாக போட்டதாகவும், அந்த ¬முத்துமாலை இன்னும் மீனாட்சி கழுத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
[Image1]
பாரிமகளிர் திருமணம்: பறம்பு நாட்டை ஆண்ட பாரி மன்னனை, எதிரிகள் சூழ்ச்சியால் கொன்று விடவே, அவனது மகள்களான அங்கவை, சங்கவை ஆதரவு இன்றி தவித்தனர்.

பாரியின் நண்பரான கபிலர் அவர்களுக்குத் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால், சேர, சோழ, பாண்டியர் மூவருமே பாரியை எதிரியாக கருதியதால், அவரின் மகள்களை மணந்து கொள்ள அனைவரும் மறுத்தனர்.
கரபுரநாதர் கோவிலுக்கும் தமிழ்பெரும் மூதாட்டி அவ்வையாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

பாரி மகளிரின் நிலை பற்றி கேள்விப்பட்ட அவ்வையார்,
மலைஅரசனான தெய்வீகனின் உதவியை நாடினார்.

மூவேந்தர்களும் ஒத்துக் கொண்டால், பாரி மகளிரை மணம் செய்து கொள்வதாக தெய்வீகன் நிபந்தனை விதித்தான்.

அவ்வையார், மூவேந்தர்களும் திருமணத்திற்கு சம்மதிக்க அருளும்படி விநாயகரிடம் வேண்டினார். 

விநாயகரும் அந்த மன்னர்களுக்கு தாமே கைப்பட திருமண ஓலை எழுதி வரவழைத்தார். இத்தலத்தில் திருமண ஏற்பாடும் நடந்தது.
 ஒருமுறை இறைவனான கரபுரநாதரை தரிசனம் செய்ய இங்கு வந்த அவ்வையார் பாரி வள்ளலின் மகள்களான அங்கவை, அவ்வையார் சங்கவை ஆகிய 2 பேருக்கும் சேர, சோழன், பாண்டிய மன்னர்களை அழைத்து வந்து திருமணத்திற்காக கோவில் முன்பு பனை மரத்தை வெட்டி பந்தல் போட்டு அறுசுவை உணவை படைத்தார். அப்போது அவ்வையார் மூவேந்தர்களையும் பார்த்து, உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அதற்கு மன்னர்கள் பனம்பழம் வேண்டும் என்றனர்.
திருமணத்தன்று மூவேந்தர்களும், காய்ந்த பனை மரத்தை துளிர்க்கச் செய்தால், திருமணத்திற்கு சம்மதிப்பதாகக் கூறினர்
உடனே அவ்வையார் கரபுரநாதரை வேண்டி ஒரு பாடலை பாடிய போது, வெட்டப்பட்ட பனைமரம் தளிர்விட்டு ஒரு பனம்பழம் காய்த்து, மன்னர்கள் முன்பு விழுந்தது. அப்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் பழத்தை தின்று மகிழ்ந்தார் என்பதும் திருமண சாட்சியாக 18 சித்தர்களில் ஒருவரான கரடிசித்தர் இருந்த தாகவும் தலவரலாறு கூறுகிறது.

மூவேந்தர்களின் ஆதரவோடு திருமணம் இனிதே நடந்தது.
இதை உணர்த்தும் வகையில் கோவில் பிரகாரத்தில் கரடி சித்தருக்கு தனி சன்னதி உள்ளது. இதேபோல கோவிலுக்கு வெளியே சுமார் 5 அடி உயரத்தில் அவ்வையாருக்கு கற்சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் நாரதர் கரபுரநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

சிவபெருமானை சித்தர்களான திரு மூலர், கரடிசித்தர் ஆகியோர் வழிபாடு செய்ததால், கரபுரநாதருக்கு சித்தேஸ்வர் என்ற பெயரும் உண்டு. மேலும் திருநாவுக்கரசர், அப்பர், அருணகிரிநாதர், சேக்கிழார், பட்டினத்தார், அவ்வையார் ஆகியோர் இந்த கோவிலை பற்றி பாடல்களை பாடியுள்ளனர். கரபுரநாதர் கோவிலில் 12 மாதங்களும் உற்சவம் நடக்கிறது.

சுக்ரவார வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கோவில் சண்டி ஹோமம், பிரதோஷம் போன்று வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது. பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடு உண்டு. விசேஷ திருவிழாவாக சித்திரை பவுர்ணமி திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

கரபுரநாதர் கோவிலில் தரிசனம் செய்தால் செல்வம் பெரு கும், தோஷம் நீங்கும், திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஜதீகம்.

 திருமணத் தடை போக்கும் கல்யாண அவ்வையார் ராஜ கோபுரம் அருகே வீற்றிருக்கிறார். கன்னிப்பெண்கள் அவரவர் பிறந்த(ஜென்ம) நட்சத்திர நாளில் மூன்று மாலைகள் வாங்கி வந்து, சிவன், அம்பாள், அவ்வையாருக்கு அணிவித்து வழிபடுகின்றனர். திருமணம் நிச்சயமானதும், அழைப்பிதழை வைத்து மீண்டும் வணங்குகின்றனர்.
இருப்பிடம்: சேலம்- ஈரோடு செல்லும் வழியில் 5 கி.மீ.,
சேலத்தில் இருந்து கொண்டலாம்பட்டி வழியாக கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாயில் பூலாவரி பிரிவு ரோட்டிற்கு அருகில் உத்தம சோழ புரத்தில் திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது கரபுரநாதர் கோவில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் உத்தம சோழ புரம் கரபுர நாதர் கோவில் அமைந்துள்ளது
திறக்கும் நேரம்: காலை 7.00- 12.30 மணி, மாலை 4.30- 7.30 மணி




உத்தமசோழபுரத்தில் சாலையோரமாக கிழக்கு நோக்கி அமைந்து.
கம்பீரமான ராஜகோபுரத்துடன் கோவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

11 comments:

  1. உத்தம சோழ புரம் கரபுர நாதர் கோவில் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  2. சமீபத்தில் சென்னையில் நடந்த
    உம்மி டிரை ஆப்ஸ் வெளியீட்டு விழாவுக்குப்
    போயிருந்தேன்
    பதிவர் சுரேஷ் குமார் அவர்கள் செய்ததைப் போல
    தங்கள் பதிவுகளையும் ஒரு ஆப்ஸ் ஆக வெளியிட்டால்
    ஆன்மீக வாதிகளுக்கும் ஆன்மீகப் பயணம்
    மேற்கொள்பவர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக
    இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து

    ஒருவேளை ஆப்ஸ் ஏற்கெனவே வெளியிட்டிருந்தால்
    லின்ங் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. கரபுரநாதர் கோயில் விஷேசங்களை விரிவாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. இக்கோயில் இதுவரை சென்றதில்லை. தங்கள் பதிவின்மூலம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எங்களது கோயில் உலாவின் போது செல்ல முயற்சிக்கின்றோம். நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம்
    அம்மா
    அறியாத தகவல் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. கரபுர நாதர் கோயில் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  7. கரபுரநாதர் கோவில் பற்றி பல விவரங்களை தெரிந்து கொண்டேன். விளக்கமாக பதிவிட்டதற்கு நன்றி அம்மா!

    ReplyDelete
  8. நிறைய தகவல்கல் கரபுநாதரைப் பற்றித் தெரிந்து கொண்டோம் சகோதரி! மிக்க நன்றி

    ReplyDelete
  9. உத்தமசோழபுரம் பற்றிய அருமையான தகவல்களும்,
    பரமசிவனாரின் ஓவியமும் மிக அருமை. இராஜேஸ்வரி வெகு நாட்களுக்கு அப்புறம் உங்கள் பதிவைப் படிப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நன்றி மா.

    ReplyDelete
  10. சிறப்பான தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  11. சிறப்பான தகவல்களை அறியத் தந்தீர்கள் அம்மா...

    ReplyDelete