Thursday, December 1, 2011

ஸ்ரீலஷ்மிதேவிக்கு வரமருளிய வேட்டீஸ்வரர்



350 -வது பதிவு!


[Laxmiji+ki+wallpaper.jpg]
ஸ்ரீமகாலட்சுமி துதி
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரீ
ஸர்வதுக்க ஹரே தேவீ மஹாலஷ்மி நமோஸ்துதே


ல்லாம் அறிந்தவளே, எல்லா வரங்களையும் கெர்டுப்பவளே,எல்லா தீமைகளையும் அழிப்பவளே, எல்லா துயரங்களையும், நீக்குபவளே,மகாலட்சுமியே உன்னைத் துதிக்கின்றேன்

ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணீ  நமோஸ்துதே!

அகிலத்தின் அன்னை ஸ்ரீமகாலஷ்மி ஸ்ரீமந் நாராயணனை திருமணம் செய்ய பல முயற்சி எடுத்தும் அத்தனை முயற்சியும் சரியான பலன் கிடைக்காததால், தமது விருப்பம் சிவ வழிபாடு செய்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ஒரு செண்பக மலர் காட்டில் சிவபூஜை செய்து தவம் இருந்தாள் ஸ்ரீமகாலஷ்மி. 
Spiritual Pictures Gods Photos Goddess Pictures Hindu Religion
தவத்தையும் வழிபாட்டையும் ஏற்ற சிவபெருமான் 
ஸ்ரீலஷ்மிதேவிக்கு காட்சி தந்து திருமணம வரம் அருளினார். 

இதன் பிறகுதான் ஸ்ரீமகாவிஷ்ணுவை ஸ்ரீமகாலஷ்மி திருமணம் செய்தார்.
இதன் அடிப்படையில் இங்குள்ள ஒரு தூணில் மகாலட்சுமி கைகளில் கலசத்தை வைத்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபடி காட்சி தருகிறாள். 


லிங்க பூஜை செய்யும் லட்சுமி
மகாலட்சுமி, சரஸ்வதியும் மற்றொரு சன்னதியில் அருகருகே இருக்கின்றனர். சரஸ்வதியிடம் வீணை கிடையாது.
உற்சவர் சன்னதி 
[Gal1]
நாயனார் சன்னதி
[Gal1]
ஸ்படிக லிங்கம்

இக்கோயிலுக்கான விநாயகர், எதிரே தனிச்சன்னதியில் இருக்கிறார்.
பக்தர்கள் இவருக்கு தேங்காய் மாலை சாத்தி, 
தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

பிரகாரத்தில் சண்முகர் தனிச்சன்னதியில் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 

ஒவ்வொரு சஷ்டியின்போதும் இவருக்கு 6 மலர்கள், 6 நைவேத்யம்,
 6 வகையான பழங்கள் படைத்து, 6 குருக்கள்
 "சத்ருசம்ஹார திரிசதை' பூஜை செய்வது சிறப்பு.
தேங்காய் விநாயகர்
சிவன், அம்பாள், சண்முகர் என மூவருக்கும், 
மூன்று கொடிமரத்துடன் அமைந்த அருமையான திருத்தலம்
அம்மன் செண்பகாம்பிகை
[Gal1]
தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட அமுதத்தை சாப்பிட அசுரனான ஸ்வர்பானு என்பவன், தேவர்களுடன் அமர்ந்து கொண்டதை சூரியனும், சந்திரனும் திருமாலிடம் காட்டிக் கொடுத்துவிட்டனர். 

திருமால் அமுதம் பரிமாறிய கரண்டியால் ஸவர்பானுவை 
அடிக்கவே தலையும், உடலும் துண்டானது. 

அமுதத்தை சாப்பிட்டதால் உயிர் பிரியவில்லை.

சிவனருளால் தனியே விழுந்த தலையுடன் பாம்பு உடல் சேர்ந்து ராகுவாகவும், மீதி உடலுடன் நாக தலை சேர்ந்து கேதுவாகவும் உருமாறினான்.

அமுதம் உண்டதால் அழியாத்தன்மை பெற்ற அவர்களுக்கு கிரக பதவியும் கிடைத்தது.

தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய சந்திரரை
இவர்கள் ராகு, எமகண்ட நேரத்தில் சக்தியின்றி செய்து விடுவர். 

குறிப்பிட்ட நாட்களில் முழுமையாக விழுங்கி விட்டு, அவர்களின் பணியை தாங்கள் செய்வார்கள். 

இந்த நிகழ்வின் அடிப்படையில் இவர்கள் நாக வடிவில் சூரிய, சந்திரனை விழுங்க முயலும் அமைப்புடன் காட்சி தருகின்றனர்.
சந்திரனை விழுங்கும் கேது
[Gal1]
இந்த கிரகங்கள் சுவாமி சன்னதி எதிரேயுள்ள மண்டபத்தின் மேல் சுவரில் வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. 

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த கிரகங்களுக்குரிய தானியமான உளுந்து, கொள்ளு தானியம், மந்தாரை மற்றும் செவ்வரளி மலரை திருவேட்டீஸ்வரருக்கு படைத்து வழிபடுகிறார்கள்.

சுவாமி சிறப்பு: சிவன் கோயில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பள்ளியறை பூஜையின்போது பெரும்பாலும் சிவனின் பாதமே கொண்டு செல்லப்படும். ஆனால், இங்கு பள்ளியறைக்குள் சிவனே செல்கிறார். இதற்காக சிலை ஒன்று செய்யப்பட்டுள்ளது. இவர் அர்த்த மண்டபத்தில் காட்சி தருகிறார். 
யோக தட்சிணாமூர்த்தி, இடது காலை குத்திட்டு அமர்ந்தபடி காட்சி தருகிறார்.  உற்சவரும் இங்கிருக்கிறார். 

சிவனை, இந்திரன் வழிபட்டதாக ஐதீகம். புரட்டாசியில் இந்திரபூஜை விழா நடக்கிறது. அப்போது, சுவாமி சன்னதி முழுதும் காய்கறி, பழம் மற்றும் இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.

நவக்கிரக பூஜை: இக்கோயிலில் தினமும் காலை (முதல்) பூஜையின்போது மூலவர் அருகில் ஸ்படிக லிங்கத்தையும், அருகில் நவக்கிரகங்களுக்கு உரிய நவரத்தினங்களையும் வைக்கின்றனர்.

பின்பு, ஒவ்வொரு கிரகத்திற்குமான தானியம் மற்றும் மலர்களை படைத்து பூஜை செய்கின்றனர்.

அதன்பிறகு, சூரியனுக்கு வைத்த மலரை, பிரகாரத்திலுள்ள சூரியன் சிலை முன்பு வைத்து தீபாராதனை செய்யப்படுகிறது.

இதன் பின்பே, மூலவருக்குரிய பூஜை நடக்கிறது.

அப்போது சிவனுக்குரிய 300 திருமந்திரங்கள் சொல்லி "ருத்ரதிரிசதை அர்ச்சனை' செய்கின்றனர்.

 இந்நேரத்தில் சிவனை வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

கண்ணப்ப நாயனார்: சிவன் வேடராக வந்தபோது, அர்ஜுனன் அவரை அறியாமல் அடித்துவிட்டதற்கு வருந்தினான்.

அவனே, அடுத்த பிறப்பில் கண்ணப்பன் என்னும் வேடனாக பிறந்தான்.

சிவனுக்கு தன் கண்ணையே கொடுத்து பரிகாரம் தேடிக்கொண்டான்.

சிவனருளால் நாயனாராகவும் அந்தஸ்து பெற்றார்.

அர்ஜுனன் வழிபட்ட தலமென்பதால் இங்கு கண்ணப்ப நாயனார் உற்சவராக இருக்கிறார்.

இவர் தை மிருகசீரிஷத்தில், குருபூஜையின்போது வீதியுலா செல்கிறார். 

பிரகாரத்தில் மனைவி சங்கிலி நாச்சியாருடன் சுந்தரர்
மற்றும் வள்ளலாருக்கு சன்னதி இருக்கிறது.


பூச நட்சத்திரத்தில் வள்ளலாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 

தைப்பூசத்தன்று உற்சவ வள்ளலார் வீதியுலா செல்கிறார். 

உற்சவர் சண்முகர் சன்னதியிலும் வள்ளலார் சிலை உள்ளது.

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட சமயத்தில், ஒரு பன்றியை வேட்டையாடினான்.

சிவபெருமான் வேடன் வடிவில் சென்று, அது தனக்குரியது என்று சொல்லி அவனை சண்டைக்கு இழுத்தார்.

அவருடன் போரிட்ட அர்ஜுனன் அம்பு எய்யவே, சிவனின் தலையை பதம் பார்த்தது. ரத்தம் வழிய நின்ற வேடன், சுயரூபம் காட்டினார்.

வருந்திய அர்ஜுனன் மன்னிப்பு வேண்டினான்.

சிவன் அவனை மன்னித்ததோடு, பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார்.

 அர்ஜுனன் பல இடங்களில் சிவவழிபாடு செய்தான்.

அர்ஜுனன் இங்கும் சுயம்புலிங்கத்தைக் கண்டு வழிபட்டான்.

வேடன் வடிவில் வந்து அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவர் என்பதால்,
சிவன் "திருவேட்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். 

பார்த்தபிரகரலிங்கம்' (பார்த்தன் அர்ஜுனன்) என்றும் 
சிவபெருமானுக்கு பெயர் உண்டு. 

காசிக்கும் காளஹஸ்திக்கும் ஈடானது

மிகப்பழமையும், மாதவனை மணக்க மகாலட்சுமி மாதவம் இருந்த அருமையானதுமான இந்த ஆலயத்தினை ஒருமுறை சுற்றி வந்தால் அனைத்துக் கடவுளர்களையும் கண்டு தரிசிக்கலாம். 

காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் இங்கு ராகு, கேது தோஷங்களுக்கு பரிகாரம் செய்து கொள்ளலாம்.வாழ்வில் நல்ல மாற்றமும் – ஏற்றமும் பெற்லாம்.
Thiruvettishwarar Temple
[Image1]
செண்பக தீர்த்தம்
[Gal1]

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரர் (உள்படம்) கோயிலில் சித்திரை திருவிழாவின் 7-ம் நாள் நடைபெற்ற தேரோட்டம்.



http://www.vallamai.com/archives/10616/


அன்பின் இராஜராஜேஸ்வரி,

தங்களுடைய வேதனை நீக்கும் வேட்டீஸ்வரர் இன்று நம் வல்லமையில் எழுந்தருளியுள்ளார். நன்று. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்./

வல்லமையில் வெளியானதைப் பகிர்கிறேன். நன்றி..


abstract Art imagesabstract Art images

43 comments:

  1. மிகுந்த ஆவலுடன் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த தங்களின் 350 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வழக்கம் போல் அழகழகான படங்களுடனும் கூடிய அருமையான விளக்கங்களுடன் கூடிய மிகவும் லக்ஷ்மிகரமான பதிவு.

    பொறுமையாகப்படித்து விட்டு மீண்டும் வருவேன்.

    350 ஆவது பதிவுக்கும், வல்லமையில் வெளியாகி வெற்றி நடை போட்டு வந்ததற்கும் பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  3. அழகிய பகிர்வைத் தந்த தங்களிடம் இருந்து எனக்கும் ஒரு
    வரம் வேண்டும் சகோ .இந்த சிவனையோ அந்த இலக்குமியையோ
    என் தளத்தில் நிறுவ வேண்டும் .அது எவ்வாறு?..தெரிந்தால்
    சொல்லுங்கள் .மிக்க நன்றி சகோ அருமையான படைப்பிற்கு .
    இரண்டு கவிதைகள் இந்த இரண்டையும் முடிந்தால் பாருங்கள் .
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......

    ReplyDelete
  4. கழுத்தில் போட்டுள்ள நெக்லஸ் போலவே கிரீடத்திலும் மற்றுமொரு நெக்லஸ் தலைகீழாக வைத்தது போல மிர்ரெர் இமேஜ் போல அந்த முதல் பட அம்மனுக்கு அருமை.

    காதுகளில் மின்னிடும் வைரத்தோடுகள்.

    மூக்கினில் புல்லக் வளையம்.

    குழந்தை போன்ற முகமும் அதில் அவளின் அருட் பார்வையும்.

    புன்னகையுடன் சிரிக்கும் சிறிய செவ்விதழ் வாய் + நெற்றியில் வெற்றித் திலகம் அட்டா ;)))))

    முக்கண்ணுடையாள்.

    இருபுறமும் சிவந்த பவழங்கள்+நல் முத்துக்கள் பதித்த பச்சை நிற மாங்கா பார்டரில் ஆப்ரணங்கள் என அனைத்தும் அழகோ அழகு.

    ReplyDelete
  5. 350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ! உங்களது இந்த அரிதான ஆன்மீக தொண்டு மேன்மேலும் வளர மனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  6. ஸ்ரீ மகாலட்சுமி துதியை குறித்து வைத்துக்கொண்டேன்... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. உற்சவர் விக்ரகங்கள், கோபுரங்கள், குளத்தின் அழகு, தேங்காய் பிள்ளையார் என அனைத்து தகவல்களும் படங்களும் மிகச்சிறப்பாகவே கொடுத்துள்ளீர்கள்.

    சிவனுக்குரிய 300 திருமந்திரங்கள் சொல்லி ”ருத்ர திரிசதை அர்ச்சனை” செய்கிறார்கள் அவர்கள்.

    நீங்கள் அதையும் தாண்டி 350 பதிவுகள் கொடுத்தல்லவா எங்களை அர்சித்துள்ளீர்கள்!

    அனைவரும் தினம் தினம் அகமகிழ்ந்து மெய்மறந்தல்லவா போய் இருக்கிறோம்!!

    மிகப்பெரிய சாதனையல்லவா செய்து கொண்டிருக்கிறீர்கள்.!!! ;))))))

    ReplyDelete
  8. சிவ பூஜை செய்து தவம் இருக்கிறாள் மகாலட்சுமி //

    எல்லா கடவுள் பற்றிய செய்திகளிலும் தவம் என்ற சொல் இருக்கிறது. இறை சக்தியே ஒன்றை பெருவதற்கு தவம் இருந்து தான் சாதிக்க முடிகிறது... ஆனால் ஜீவாத்மாவகிய நாம் சாதாரணமாக இறைவனிடம் வணங்கிவிட்டு நகர்ந்து பிறகு நடக்கவில்லை என புலம்புகிறோம்.. தவம் என்ற தியானத்தையே நல் மனதுடன் இறைவனை நினைத்து அழ்மனதை ஒருமுக படுத்தி ஆத்ம சக்தியை உணர பதிவு ஞாபகபடுத்திருக்கிறது...

    ReplyDelete
  9. சஷ்டி அன்று ஆறுமுகனுக்கு அறுவிதமான பூஜை செய்வது பற்றிய செய்தி தெரிந்துகொள்ளமுடிந்தது...

    ReplyDelete
  10. காட்டிக்கொடுத்த சக்திகளை சக்தியில்லாமல் செய்துவிடும் ராகு கேது பற்றிய செய்தி அறியமுடிந்தது...

    ReplyDelete
  11. திருவேட்டிஸ்வரரை வணங்கி அவரின் அருள் பெருவோம்...

    ReplyDelete
  12. 2011 ஆம் ஆண்டு ஆரம்பித்து இன்றுடன் 335 நாட்கள் தான் ஆகின்றன. ஆனால் இன்றுடன் 350 பதிவுகள் கொடுத்துள்ளீர்கள்.

    ஒவ்வொரு பதிவினிலும் உள்ள படங்களோ ஏராளம் ஏராளம்.

    அகல நீள ஆழமுடன் கூடிய தகவல்களோ தாராளம் தாராளம்.

    உங்களின் சாதனையை மிகவும் மெச்சுகிறேன். பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

    தெய்வாம்சம் பொருந்திய தெய்வீகப்பதிவரான தங்களை அந்த தெய்வங்கள் காப்பாற்றட்டும்.

    எங்களுக்கு இதே போல தொடர்ந்து
    தினமும் அமிர்தம் போன்ற ஆன்மீகப் பாலைப்பருக அள்ளி அள்ளித் தந்து கொண்டே இருங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    வாழ்க வாழ்க வாழ்கவே !

    மனமார்ந்த ஆசிகளுடன்

    தங்கள் பிரியமுள்ள vgk

    ReplyDelete
  13. வை.கோபாலகிருஷ்ணன் said.../

    வாழ்த்துகளுக்கும் அருமையான கருத்துரைகளால் பதிவைப் பெருமைப்படுத்திய அத்தனை பின்னூட்டங்களுக்கும்
    மனம் நிறைந்த நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  14. அம்பாளடியாள் said.../

    கருத்துரைக்கு நன்றி...

    இந்த சிவனையோ அந்த இலக்குமியையோ
    என் தளத்தில் நிறுவ வேண்டும் .அது எவ்வாறு?..தெரிந்தால்
    சொல்லுங்கள் //

    எனக்குத்தெரியவில்லை..
    என் பிள்ளைகளிடம் கேட்டு தகவல் த்ர முயற்சிக்கிறேன்..

    ReplyDelete
  15. ஆன்மீக உலகம் said...
    350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ! உங்களது இந்த அரிதான ஆன்மீக தொண்டு மேன்மேலும் வளர மனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோ!//

    வாழ்த்துகளுக்கும் அருமையான கருத்துரைகளால் பதிவைப் பெருமைப்படுத்திய அத்தனை பின்னூட்டங்களுக்கும்
    மனம் நிறைந்த நன்றிகள் மாயஉலகத்தின் ஆன்மீக உலகத்திற்கு!

    ReplyDelete
  16. ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் துணை
    -------------------------------------

    ஸர்வ மங்கல மாங்கல்யே
    சிவே சர்வார்த்த ஸாதகே
    ஸரண்யே த்ரயம்பகே கெளரி
    நாராயணீ நமோஸ்துதே!

    vgk

    ReplyDelete
  17. 350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். தங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ராஜி said...
    350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். தங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்

    வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்!

    ReplyDelete
  19. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    350 வது பதிவிற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - ஆன்மீகத் துறையில் பல பதிவுகள் இட்டு அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் தங்கள் பணி மேன் மேலும் சிறக்க நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    ReplyDelete
  20. லஷ்மிகரமான 350வது பதிவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    "என் பிள்ளைகளிடம் கேட்டு தகவல் தர முயற்சிக்கிறேன்.."
    தங்கள் பிள்ளைகளுக்கு என் அன்பான பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. 350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தங்கள் பணிமேலும் தொடரட்டும்

    ReplyDelete
  22. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    350 வது பதிவிற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - ஆன்மீகத் துறையில் பல பதிவுகள் இட்டு அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் தங்கள் பணி மேன் மேலும் சிறக்க நல்வாழ்த்துகள். நட்புடன் சீன//

    பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் அளித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  23. சந்திர வம்சம் said...
    லஷ்மிகரமான 350வது பதிவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    "என் பிள்ளைகளிடம் கேட்டு தகவல் தர முயற்சிக்கிறேன்.."
    தங்கள் பிள்ளைகளுக்கு என் அன்பான பாராட்டுக்கள்./


    மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு
    மனம் மகிழ்ந்த நன்றிகள்...

    அவர்களிடம் தங்களின்
    அன்பான பாராட்டுகளைச் சேர்ப்பித்துவிட்டேன் நிறைவுடன்...

    ReplyDelete
  24. K.s.s.Rajh said...
    350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தங்கள் பணிமேலும் தொடரட்டும்/


    வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்!

    ReplyDelete
  25. தங்களது 350-வது பதிவுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. வழக்கம்போல் படங்களுடன் கோவில் குறித்த
    அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு
    மிக் மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. 350 தரமான பதிவுகள் தந்து
    எங்களையெல்லாம் அனைத்து புண்ணிய ஸ்தலங்களுக் கெல்லாம்
    அழைத்துச் சென்றமைக்குமனமார்ந்த நன்றி
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. 350 பதிவுக்கு வாழ்த்துக்கள், சாதனை சிகரம் எட்டவும் வாழ்த்துக்கள்

    பரவசமான படங்களுடம்
    பக்திமயமான பதிவு
    நன்றி

    ReplyDelete
  29. 350 பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி..

    சகல சௌபாக்கியம் அருளும் லக்ஷ்மி தேவிக்கே அருளிய
    வேட்டீஸ்வரர் பற்றிய அழகிய கட்டுரை மனதை அள்ளியது..
    படங்கள் வழக்கம் போல அருமை...

    ReplyDelete
  30. 365வது பதிவுக்கும் இன்னும் வரவிருக்கும் பல்லாயிரம் பதிவுகளுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். வழக்கம்போல் ஆன்மீகம் மனதை கொள்ளை கொண்டது. அதிலும் சமுத்திரப் பின்னணியில் சிவன் மனதைக் கொள்ளை கொண்டார்... வெகு பிரமாதம்!

    ReplyDelete
  31. 350 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் மேடம்.

    மேலும் பதிவுகள் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்

    திருவேட்டீஸ்வரர் பற்றிய தகவல்கள்
    அருமை

    ReplyDelete
  32. 350-வது பதிவுக்கு வாழ்த்துகள்... சகோ...

    ReplyDelete
  33. 350க்கு வாழ்த்துகள்.
    நமோ ஹிரண்யபாஹவே நம:! ஸேனான்யே நம:திசாஞ்ச பதயே நம:

    ReplyDelete
  34. 350 வது பதிவிற்கு வாழத்துகள் மேடம்.ஒவ்வொரு பதிவும் புதிய புதிய தகவல்கள்,கருத்துக்கள் அழகிய படங்களுடன் பதிந்து படிப்போர் மனதை மிகவும் ஈர்த்துவிடும்.உங்கள் பதிவின் அசையா படங்களை சற்று கவனித்து பார்ப்பேன்,இந்த படத்தில் எதாவது அனிமேசன் இருக்கிறதா,இல்லையா என்று.

    தங்களின் இந்த பணி மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. 350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்,படங்கள் கலக்கல்.

    ReplyDelete
  36. 350 பதிவிற்கு வாழ்த்துக்கள். முதல் படம் அருமை. கோயில் செய்திகளுக்கு நன்றி.

    ReplyDelete
  37. அன்பின் ராஜேஸ்வரி அவர்களுக்கு,
    தங்களின் அருமையான பதிவுகளுக்கும் , பதிவுகள் சிறப்பாக அமைய உறுதுணையாக இருக்கும் தங்களின் பிள்ளைகளுக்கும் எனது பாராட்டுக்கள் தங்களின் ஆன்மிகப் பணி சிறக்க வாழ்த்தும் ---பத்மா.

    --
    வாழ்க!//

    பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மக்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்..
    மகிழ்ச்சியுடன் கருத்துரைகளுக்கு நன்றி

    ReplyDelete
  38. 350-க்கு மனம் நிறைஞ்ச வாழ்த்துகள்..

    ReplyDelete
  39. வாழ்த்துகள்.
    ஆயிரம் எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
  40. அன்புள்ள இராஜராஜேஸ்வரி,
    சென்னையில் நாங்கள் இருந்த திருவேட்டீச்வரன் பேட்டையில் உறையும், திருவேட்டீச்வரர் பற்றிய தகவல்கள் சிறப்பாக இருந்தன.

    அறுபத்து மூவர் உற்சவமும், அதிகார நந்தி வாகனத்தில் இறைவனை சேவித்ததும் பசுமையான நினைவுகள்.

    பழைய நினைவுகளை மலரச் செய்த உங்களின் 350 வது பதிவுக்கு பாராட்டுக்கள்!

    அன்புடன்,
    ரஞ்ஜனி

    ReplyDelete
  41. 1456+7+1=1464 ;)))))

    லக்ஷ்மிகரமானதோர் பதிலுக்கு நன்றி

    ReplyDelete