Sunday, December 25, 2011

கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்..


ChristmasAnimated gifs : Jesus

Christmas
ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய்
அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய்
பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த
நன்நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடும் 
பாலன் யேசு பிறந்த இனிய நாள்..
ChristmasChristmasChristmas


மலரினும் மணம் மிகுந்து....
நிலவினும் ஓளி மிகுந்து...
அமைதியின் சுவை கனிந்து...
.சமாதானமும், சந்தோஷமும் நிரம்பிய நாளாக
 இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் தினத்தில் 
தாய்லாந்தில் கிறிதுமஸ் தாத்தாக்களாக யானைகள் வலம் வருவது கண்கொள்ளாக்காட்சி...
ChristmasChristmasChristmas
யானைகள் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு வீதியுலா அழைத்து வரப்பட்டு. சாகசங்கள் பலவற்றைச் செய்து மகிழ்விக்கும்.. பரிசுப் பொருட்களை தும்பிக்கையால் சிறுவர்களுக்கு வழங்கி மகிழ்விக்கும் இனிய திருநாள்..
விஷேடமாக ஏழைகளுக்கு உதவுவதும் அவர்களுக்கு அன்பு காட்டுவதும் எல்லா இனத்தவரோடும் சமாதானத்தைப் பகிர்ந்து கொள்வதும் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

அர்ப்பணிப்புடன் அயலானை நேசிப்பது என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை அர்த்தம் பெறுகிறது. 

கிறிஸ்தவ எழுத்தாளர்களும் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிடுவார்கள்..



Christmas trees as dinner for elephants
Christmas trees as dinner for elephants (6 pics)
elephant gifFireworks







Elephants Postcard postcard









61 comments:

  1. யானை கட்டிப் போரடிக்கிறார்களா?!
    அருமை!

    ReplyDelete
  2. பேரன் அநிருத்துடன் இப்போது கொஞ்சிக்கொண்டு இருப்பதால், அவன் புறப்பட்ட பிறகு யானைகளை [சற்று நேரம் கழித்து] கொஞ்சி விட்டு மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  3. அனைத்து உறவுகளுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இனிய் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள் - யானை - ம்ம்ம் இத்திஅனை யானைகளா / அடேங்கப்பா -நல்லாவெ இருக்கு - நல்வாழ்த்துகல் - நடுவுல பிள்ளையர் வேறு - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. மின்னும் மெழுகுவர்த்திகள், அருகே
    மின்னும் இயேசுநாதர், அடியில் அழகாக பூக்களால் அலங்கரிப்பட்டு மின்னிடும் சிலுவை அனைத்து அருமை.

    ReplyDelete
  6. வானத்திலும், வனத்திலும், மலைகளிலும் அவர் மறைந்து காட்சியளிப்பதால் தான் மனித சமுதாயத்திற்கே அவர் திருக்கரங்களால் குடிநீர் அருவிகள் மூலம் அனுப்பப்படுகிறதோ!

    ReplyDelete
  7. ஆஹா ஜில்ஜில் தொப்பியைப் பளபளப்பாக அணிந்த மஞ்சள் நட்சத்திர பொம்மையும், கொம்பு முளைத்து மின்னிடும் மற்றொரு நட்சத்திர பொம்மையும் அழகோஅழகாக
    அந்த மின்னிடும் மெரூன் கலர் பச்சை பார்டர் "Merry Christmas" செய்தியை சிரித்த வாயுடன் காட்டும் படம் நல்ல கவர்ச்சியாய் உள்ளது.

    இடது புற வெல்வெட் தொப்பித்தலையர், அசப்பில் என் பேரன் அநிருத் போன்றே எனக்குத் இப்போது தோன்றுகிறார்.

    பனிக்காக அவனுக்கும் இப்போதுதான் குரங்குக்குல்லா ஒன்றை போட்டு விட்டு, பிரியா விடை கொடுத்து டாக்ஸியில் ஏற்றி விட்டு வந்தேன்.

    குல்லாவாம் குல்லாவாம் குரங்குக்குல்லாவாம் ...

    குல்லாவாம் குல்லாவாம் குரங்குக்குல்லாவாம் .. என்று

    நான் பாட்டுப்பாடி, நான் ஒரு கிளிப்பச்சைக்கலர் டார்ச் லைட்டை அடித்துக் காட்டியதும், அவன் கடகடவென்று என்னைப்பார்த்து சிரித்ததும், அடடா! சுகமான அனுபவங்கள் எனக்கு.

    அவனைப் பிரியவும் எனக்கு மனமில்லை.

    இங்கு உங்கள் பதிவுக்கு வந்தால் இந்தப்படமும் குரங்குக்குல்லா அணிந்த அவனையே நினைவு படுத்தி என் மனதை மகிழ்விக்கிறதே! ;)))))

    நான் என் செய்வேன்!

    ஒருவரிடம் அளவுக்கதிகமாக பாசம் வைத்துவிடுகிறேன். பிரிவு என்னால் தாங்க முடிவதில்லை. ;(

    ReplyDelete
  8. ஆஹா! எங்கள் எல்லோரையும் இப்போது தாய்லாந்துக்கே கூட்டிச் சென்று விட்டீர்களே!

    யானைகளே கிறிஸ்மஸ் தாத்தாக்களாக நல்ல அருமையான ஐடியா தான். குழந்தைகளின் மகிழ்ச்சிக்குக் கேட்கவே வேண்டாம்.

    நமக்கே யானையைக் கண்டால் மகிழ்ச்சியில் [தேடி வந்த தேவதைக் கதையில் வரும் மரகதத்தைக் கண்டால் போல]மனம் மகிழுமே!
    மோதமொழங்க ஒரு உருவம் என்றால் சும்மாவா, பின்னே!

    ReplyDelete
  9. அடுத்தபட யானையாருக்கு அந்த தந்தம் எவ்ளோ நீளம். அடி அம்மாடி! சும்மா நாலு அல்லது ஐந்து அடி இருக்கும் போல உள்ளதே!

    கஜக்கோல், கஜக்கோல் பாண்டியன் என்றெல்லாம் இதனால் தான் சொல்லுகிறார்களோ!

    கஜம் என்றால் சமஸ்கிருதத்தில் யானை தானே! அதனால் கேட்டேன்.

    ReplyDelete
  10. ya wooo
    ha ha
    I am enjoying bit by bit Rajeswari.
    Very nice very very nice post.
    viji

    ReplyDelete
  11. விஷேடமாக ஏழைகளுக்கு உதவுவதும், அவ்ர்களுக்கு அன்பு காட்டுவதும், எல்லா இனத்தவரோடும் சமாதானத்தைப் பகிர்ந்து கொள்வதும் பண்டிகையின் முக்கிய நோக்கம். அர்ப்பணிப்புடன் அயலானை நேசிப்பது.

    ஆஹா, மிக அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். சபாஷ்!

    ReplyDelete
  12. ஆஹா! ஒரு படத்தில் குட்டிப்பயலுடன் ஒரு தாய் யானை தலையில் வைக்கோலைப் போட்டுக்கொண்டு நிற்கிறதே. குட்டிப்பயல் கட்டிக்கரும்பு போலல்லவா பார்க்கவே இனிப்பாக இருக்கிறான்! ;)))))

    படுஜோர், பார்த்ததும் பரவஸமானேன். அடுத்த படத்துக்கு நகரவே மனமில்லை, எனக்கு; அது அவ்ளோ அழகு, உங்களின் பதிவுகள் போலவே!!

    ReplyDelete
  13. கிறிஸ்மஸ் தாத்தாவுடன் இருவர் நடனம் நல்லாயிருக்குது.

    அடுத்த படத்தில் மூன்று யானையார். நடுவில் உள்ளவர் தன் கொம்புகளால் செடி கொடிகளை கிழிக்கிறாரோ! ;))))

    அடுத்த படத்தில் கீரைக்கட்டுபோல எதையோ இருவர் தூக்கிச்செல்கின்றனர். இடது பக்கத்தவருக்கு கொம்பு உடைந்துள்ளது. யாராவது நறுக்கி கடத்திப்போய் இருப்பார்களோ!

    வலது பக்கத்தவரின் கொம்பைப் பார்த்தாலே பயமாகவல்லவா உள்ளது. அதில் ஒன்று மேல் நோக்கி வளைந்து மற்றொன்று கீழ்நோக்கி வளைந்தும் அல்லவா உள்ளது.

    இவரைப் பல் டாக்டரிடம் அனுப்பி பற்களை [தந்தங்களை] சமப்படுத்தி சீர் செய்து கொண்டு வர வேண்டுமோ?

    ReplyDelete
  14. அடுத்த அனிமேஷன் யானையார் துதிக்கையையும், வாலையும் ஆட்டுகிறாரே!

    தலையிருக்கும் போது வால் ஆடக்கூடாது என்பார்களே!

    இவருக்குத்தான் தலை உள்ளதே.
    அதை ஆட்டாமல் ஏன் இப்படி வாலாட்டுகிறார்? ; )))))

    இடதுபுற யானையாரில் கம்பீரமான நடையழகு! உங்கள் பதிவுகளில் விளக்கங்கள் கொடுக்கிறீர்களே அந்த எழுத்துக்களின் நடையழகு இவரிடமும் காண்கிறேன்.

    ReplyDelete
  15. மலைக்க வைக்கும் படங்கள்,உங்கள் முயற்சியும் உழைப்பும்தான்.வாழ்த்துகள்!.

    ReplyDelete
  16. அடுத்த படத்தில் கலர்கலர் பொட்டுக்களால் வரையப்பட்ட ட்ரம் அடிக்கும் யானையார் அனிமேஷன் ரொம்ப டாப் செலெக்‌ஷன்.

    படங்களில் உங்கள் கலெக்‌ஷன்களும், செலெக்‌ஷன்களும் பற்றி சொல்லவா வேண்டும். அது தான் உலகப்புகழ் வாய்ந்ததாயிற்றே!

    ReplyDelete
  17. சென்னை பித்தன் said...
    யானை கட்டிப் போரடிக்கிறார்களா?!
    அருமை!

    அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  18. சித்தாரா மகேஷ். said...
    அனைத்து உறவுகளுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்/

    இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. cheena (சீனா) said...
    இனிய் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள் - யானை - ம்ம்ம் இத்திஅனை யானைகளா / அடேங்கப்பா -நல்லாவெ இருக்கு - நல்வாழ்த்துகல் - நடுவுல பிள்ளையர் வேறு - நட்புடன் சீனா/

    இனிய நல்வாழ்த்துகளுக்கு
    இதயம் நிறைந்த நன்றிகள் ஐயா

    ReplyDelete
  20. படங்களும் பகிர்வும் அருமை!..கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
    சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மின்னும் மெழுகுவர்த்திகள், அருகே
    மின்னும் இயேசுநாதர், அடியில் அழகாக பூக்களால் அலங்கரிப்பட்டு மின்னிடும் சிலுவை அனைத்து அருமை.

    மின்னிடும் அருமையான கருத்துரைகளால் பதிவைப்
    பெருமைப் படுத்தியமைக்கு
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  22. சிதறும் வாணவேடிக்கைகளை சிறப்பாகப்பிடித்து நுழைத்துள்ளீர்கள்.

    குழந்தகளுக்கான பரிசுப்பொருட்களுடன் செல்லும் குட்டீஸ் குட்ஸ் வண்டி நல்ல அழகு தான். புகைபோக்கியை வைத்துப்பார்த்தால் வண்டி முன்னோக்கிச் செல்வது போலவும், சக்கரங்களின் சுழற்சியை வைத்துப்பார்த்தால் வண்டி பின்னோக்கிப்போவது போலவும் உள்ளது. இந்த டக்-ஆஃப்-வாரினா ல் தான், வண்டி நகரவே இல்லையோ!;)

    ReplyDelete
  23. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    படங்கள் அழகு /

    அழகிய கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  24. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆஹா! எங்கள் எல்லோரையும் இப்போது தாய்லாந்துக்கே கூட்டிச் சென்று விட்டீர்களே!

    யானைகளே கிறிஸ்மஸ் தாத்தாக்களாக நல்ல அருமையான ஐடியா தான். குழந்தைகளின் மகிழ்ச்சிக்குக் கேட்கவே வேண்டாம்.

    நமக்கே யானையைக் கண்டால் மகிழ்ச்சியில் [தேடி வந்த தேவதைக் கதையில் வரும் மரகதத்தைக் கண்டால் போல]மனம் மகிழுமே!
    மோதமொழங்க ஒரு உருவம் என்றால் சும்மாவா, பின்னே!/

    கருத்துரைகளே யானையைக்கண்ட்மாதிரி மகிழ்ச்சியளிக்கின்றன. நன்றி ஐயா..

    ReplyDelete
  25. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அடுத்தபட யானையாருக்கு அந்த தந்தம் எவ்ளோ நீளம். அடி அம்மாடி! சும்மா நாலு அல்லது ஐந்து அடி இருக்கும் போல உள்ளதே!

    கஜக்கோல், கஜக்கோல் பாண்டியன் என்றெல்லாம் இதனால் தான் சொல்லுகிறார்களோ!

    கஜம் என்றால் சமஸ்கிருதத்தில் யானை தானே! அதனால் கேட்டேன்./

    தங்கள் கருத்துரைகள் கேட்கவே
    தந்தம் இஷ்டத்திற்கு வளர்ந்திருக்குமாயிருக்கும்..

    ReplyDelete
  26. viji said...
    ya wooo
    ha ha
    I am enjoying bit by bit Rajeswari.
    Very nice very very nice post.
    viji/

    அருமையாய் ரசிப்புடன் கருத்துரைகள் வழங்கியமைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  27. அழகான இயற்கைக்காட்சிகளுடன், ஒரே ஒரு முரட்டு யானை மட்டும் நதிக்கரையில் தன் நிழல் நீரில் தெரிய நிற்கிறதே! அந்தப்படம் சூப்பர்.

    தன் அன்புக்குரிய ஜோடியைத் தேடி காத்திருக்கிறதோ! அதுவும் ஒரு பாராமுக யானையோ என்னவோ!!

    இந்த அருமையான போட்டோகிராபி எடுத்தவருக்கும், பகிர்ந்துள்ள தங்களுக்கும் என் தனி பாராட்டுக்கள்.

    ReplyDelete
  28. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கிறிஸ்மஸ் தாத்தாவுடன் இருவர் நடனம் நல்லாயிருக்குது.

    அடுத்த படத்தில் மூன்று யானையார். நடுவில் உள்ளவர் தன் கொம்புகளால் செடி கொடிகளை கிழிக்கிறாரோ! ;))))

    அடுத்த படத்தில் கீரைக்கட்டுபோல எதையோ இருவர் தூக்கிச்செல்கின்றனர். இடது பக்கத்தவருக்கு கொம்பு உடைந்துள்ளது. யாராவது நறுக்கி கடத்திப்போய் இருப்பார்களோ!

    வலது பக்கத்தவரின் கொம்பைப் பார்த்தாலே பயமாகவல்லவா உள்ளது. அதில் ஒன்று மேல் நோக்கி வளைந்து மற்றொன்று கீழ்நோக்கி வளைந்தும் அல்லவா உள்ளது.

    இவரைப் பல் டாக்டரிடம் அனுப்பி பற்களை [தந்தங்களை] சமப்படுத்தி சீர் செய்து கொண்டு வர வேண்டுமோ?/

    தங்கள் பதிவில் ஒரு போலி பல்டாக்டர் பல்லவன் இருந்தாரே அவர் வெளியே வந்துவிட்டாரா தண்டனைக்காலம் முடிந்து???

    யானையாருக்கு இயற்கையாகவே பல் இருந்துவிட்டுப்போகட்டும் ஐயா..

    உங்கள் பல் டாக்டரிடம் யானையார் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்..

    ReplyDelete
  29. கலர் கலர் தொப்பிகள் அணிந்த ஐந்து பூனையாரும் அழகாகத் தலையை மட்டும் ஆட்டுகிறார்களே. மிகவும் அழகானவர்கள் தான்.

    யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வராமலா போய் விடும், என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள், பார்ப்போம்.

    ; )))))

    ReplyDelete
  30. கோகுல் said...
    மலைக்க வைக்கும் படங்கள்,உங்கள் முயற்சியும் உழைப்பும்தான்.வாழ்த்துகள்!./

    கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும்
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  31. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அடுத்த படத்தில் கலர்கலர் பொட்டுக்களால் வரையப்பட்ட ட்ரம் அடிக்கும் யானையார் அனிமேஷன் ரொம்ப டாப் செலெக்‌ஷன்.

    படங்களில் உங்கள் கலெக்‌ஷன்களும், செலெக்‌ஷன்களும் பற்றி சொல்லவா வேண்டும். அது தான் உலகப்புகழ் வாய்ந்ததாயிற்றே!

    அத்தனை அருமையான சிறப்பான கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா,,

    ReplyDelete
  32. அம்பாளடியாள் said...
    படங்களும் பகிர்வும் அருமை!..கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
    சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .../

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    இனிய கிறிஸ்துமஸ் மற்றும்
    புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  33. தும்பிக்கையில் பட்டைபட்டையாக மருதானியும், உடம்பெல்லாம் ஏதேதோ எழுத்துக்களும், நம்பர்களும் எழுதிக்கொண்டு, நெற்றிகளில் விதவிதமான [வடகலை தென்கலை என்ற பிரச்சனைக்குரிய நாமமும் இல்லாமல் பட்டையும் இல்லாமல்] சின்னங்களை தரித்துக்கொண்டு, துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு, செவ்வாடை மனிதர்களையும் சுமந்துகொண்டு பந்தாடப்புறப்பட்டு விட்டார்களே.

    என் மனமும், யானையிடம் உதை வாங்கப்போகும் அந்தப் பந்து போலல்லவா ஆகிவிட்டது, இப்போது.

    யானையை மட்டுமே பார்ப்பவர்களுக்கு பந்தின் பரிதாப நிலை தெரியாது தான்.

    இதுதான் யானைமேல் அமர்ந்து [வெற்றிலைக்கு] சுண்ணாம்பு வாங்கும் கதை என்பதோ?

    ReplyDelete
  34. அடுத்த பட யானைகள் ஹோலி பண்டிகைக்குப் போய் வந்திருக்குமோ!

    நெற்றியிலும் காதுகளிலும் கலர்கலராகக் கோலமிடப்பட்டுள்ளதே! அதன் மேல் ஓர் பெண் பாகள் (பாகனின் பெண் பால்), இந்தப்பெண்கள் பூராதா வேலைகளே கிடையாது என்று ஆகிவிட்டதே! ;)))

    ReplyDelete
  35. அடடா, அடுத்த யானையார் ஸ்கேட்டிங் செய்யப்போகிறாரா? பாவம் மஹா பாவம் அவர் வெயிட் என்ன, அவரின் உடல்வாகென்ன, அவரைப்போய் இப்படி கால்களை குழிகளில் இறக்கி, வேகமாக வழிக்கிச்செல்ல வைத்தால், அவர் மனம் என்ன பாடு படும். நெஞ்சு பதைபதைக்குமே, பாவம்.

    பிறர் நெஞ்சையும் உணர்வுகளையும் பற்றித்தான் ஒருசிலருக்கு எந்தக்கவலையும் இருக்காதே ;(((

    ReplyDelete
  36. அடுத்த படத்தில் குட்டிக்குட்டி யானைகளுடன் தாய் தந்தை யானைகள் அழகாக க்யூவரிசைபோல அணிவகுத்துச்செல்வது நல்ல அழகாக உள்ளது. டிஸ்கவரி சேனல் பார்ப்பது போன்ற சூழலில் காட்டப்பட்டுள்ளது.

    வயல்களும், நீரோட்டமும், மரங்களும் யானைகளுக்கு மகிழ்வளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  37. அடுத்த படத்தில் குறும்பு செய்த தன் குழந்தையை சில தாயார்கள் அடித்து விடுவார்களே; அதுபோல இந்தக் குட்டியானை ஏதாவது குறும்பு செய்ததால் அந்தப்பெரிய தாய் யானைக் காலைத்தூக்கி மிதித்து விடுவேன் படுவா என்று மிரட்டுகிறதோ?

    கோழி மிதித்து குஞ்சு முடமாகாது என்பார்கள்! ஆனால் யானை மிதித்தால் .... ? [ஏற்கனவே மிதிபட்டவர்களை நாம் பேட்டியும் காண முடியாமல் உள்ளதே]

    ReplyDelete
  38. கண்ணாடி அணிந்தவர் நம் தொந்திப்பிள்ளையாரோ!

    கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைப் பார்க்க நம்மைப்போல பார்வையாளராக வந்திருப்பாரோ?

    அடுத்தவர் காது ஷேப் நல்ல ஸ்டைல்.
    ஆப்பிரிக்காக்காரர் போலிருக்கு.

    கையில் என் அன்புத் தோழி ‘இமா’ போல எதையோ வைத்திருக்கிறாரே! கேமராவா அல்லது பைனாகுலரா அல்லது வேறு ஏதாவதா?

    ReplyDelete
  39. அடுத்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப,ரொம்பப் பிடித்தது.

    முத்துமுத்தாக அழகழகான ஜொலிக்கும் கலர்களில் கோர்க்கப்பட்டுள்ள மிகவும் கலாரசனையுடன் ரசிக்க வேண்டிய ஒரு படைப்பு.

    என் கண்ணுக்கினிய காட்சியில் அதை கொண்டு வந்தமைக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். அந்த முத்துக்களின் கோர்வையில் நல்ல ந்ல்ல கலர் காம்பினேஷன்கள். சிறியது முதல் பெரியது வரை பந்துகள் வடிவில் .. எவ்ளோ அழகு தெரியுமா!

    நான் ஹைதராபாத்தில் உள்ள ஒரு முத்து மாலைகள் விற்கும் கடையில் வெகு நேரம் செலவிட்டு, விதவிதமான நகைகளை வாங்கி வந்தேன். அந்த நினைவு வந்தது.

    ReplyDelete
  40. அந்த X-Mas Tree யின் ஜொலிப்பும், அதைக்காணும் ஒரு சில டால்களும் சிறப்பாகவே உள்ளன. அதில் ஒரு குட்டிப்பறவை பொம்மையும் கூடப் பார்த்தீர்களா!

    எனக்கு நம் தொந்திப்பிள்ளையாரைப் பார்த்ததும் தான், வெளிநாட்டிலிருந்து கிளம்பி, நம் ஊருக்கே, நம் வீட்டுக்கே நிம்மதியாகத் திரும்பி வந்தது போல உள்ளது.

    ReplyDelete
  41. ஆஹா, இவ்வளவு யானைகளை ஒரே கூட்டம் கூட்டமாகக் காட்டி அசத்தி விட்டீர்களே!

    நாமெல்லாம் இங்கு நம்மூரில் எருமைகளையும், பன்றிகளையுமே இதுபோலக் கூட்டம் கூட்டமாகப் பார்க்க முடிகிறது. அத்தனை யானைகளுக்கும் பலபதார்த்தங்களை டைனிங் டேபிள் போல அமைத்து அழகாகப் பரிமாறி வைத்துள்ளனரே, பஃப்பே சிஸ்டம் போல் சண்டை சச்சரவே இல்லாமல் வரிசையாக நின்று உண்கின்றனவே! ஆச்சர்யம் தான்.

    ReplyDelete
  42. யானை கட்டிப்போர் அடித்த வம்சம் என்று சிலர் போர் அடிப்பார்களே நம்மிடம்; அதை நிஜம் தான் என்றல்லவா காட்டியுள்ளீர்கள், அந்த அடுத்தப்படத்தில். வரிசையாக சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, அமைதியாக அவர்கள் நின்று கொண்டிருப்பதே அழகு தான். நாங்கள் என்ன மனித இனமா, கட்டுப்பாடின்றி முட்டிமோதி மிருகங்கள் போல நடந்துகொள்ள என்கின்றனவோ!

    ReplyDelete
  43. கடைசிபடம் கண்கொள்ளாக் காட்சி தான். நல்ல கலரில் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    இந்த 2011 ஆம் ஆண்டின், வெற்றிகரமான 374 ஆவது பதிவு, மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

    கண்களுக்கு நல்ல விருந்து தான்.

    பேசாத அந்தப்படங்களை ஏதோ என்னால் முடிந்தவரை பேசும் படங்களாக மாற்றி, மகிழ்வதில் எனக்கோர் சின்ன சந்தோஷம்.

    100 நிமிடமானால் என்ன 200 நிமிடமானால் என்ன, ஏதோ ஒரு ஆத்ம திருப்தியுள்ளதே, எனக்கு மட்டுமாவது. அது போதும்.

    அன்பான வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  44. யானைக்கும் கிறிஸ்துமசுக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளது என்பதை தெரிய வைத்தமைக்கு மிக்க நன்றி.
    தாய்லாந்தில் யானைக்கு தனிச் சிறப்பு இடம் உண்டு என்பதை நான் அங்கு சுற்றுலா சென்ற போது தெரிந்து கொண்ட விவரம்.
    பரிசாக தருவதற்கு பல அளவுகளில் யானைகளை வாங்கி வந்தேன். அந்த பசுமையான நினைவுகள் மீண்டும் வந்து விட்டன, தாங்கள் பதிவை வாசித்த போது. படங்களை தேடி எடுத்து பொருத்தமாக பதிவு செய்துள்ளீர்கள். கிறிஸ்துமஸ் தொடர்பாக நேற்றும் இன்றும் சரியான விருந்துப் பதிவுகள்.. http://jayarajanpr.blogspot.com/2011/12/34.html மாப்பிள்ளையின் முடிவு

    ReplyDelete
  45. யானைப் படங்கள் அழகு. புதிய செய்தி வாழ்த்துக்கள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  46. இந்தப்பதிவுக்காவது, ஒன்றிற்கு மேற்பட்ட என் கருத்துரைகளுக்கு, பெரிய மனது செய்து, மறுமொழியாக ஏதோ தாங்கள் கொஞ்சமாவது [atleast 20%] பதில் கூறியிருப்பது மனதுக்கு சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள். vgk

    ReplyDelete
  47. வணக்கம்!
    கறுப்பு நிற யானைகளைப் பல வண்ணப் படங்களில் தந்து, பாலன் இயேசுவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துப்பாக்கள் பாடியமைக்கு பாராட்டுக்கள்! எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  48. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. Ramani said...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

    மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாக்ட்டும்..

    ReplyDelete
  50. தி.தமிழ் இளங்கோ said...
    வணக்கம்!
    கறுப்பு நிற யானைகளைப் பல வண்ணப் படங்களில் தந்து, பாலன் இயேசுவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துப்பாக்கள் பாடியமைக்கு பாராட்டுக்கள்! எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!/

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    இனிய கிறிஸ்துமஸ் மற்றும்
    புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  51. kovaikkavi said...
    யானைப் படங்கள் அழகு. புதிய செய்தி வாழ்த்துக்கள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்..//

    அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    இனிய கிறிஸ்துமஸ் மற்றும்
    புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  52. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அடடா, அடுத்த யானையார் ஸ்கேட்டிங் செய்யப்போகிறாரா? பாவம் மஹா பாவம் அவர் வெயிட் என்ன, அவரின் உடல்வாகென்ன, அவரைப்போய் இப்படி கால்களை குழிகளில் இறக்கி, வேகமாக வழிக்கிச்செல்ல வைத்தால், அவர் மனம் என்ன பாடு படும். நெஞ்சு பதைபதைக்குமே, பாவம்.

    பிறர் நெஞ்சையும் உணர்வுகளையும் பற்றித்தான் ஒருசிலருக்கு எந்தக்கவலையும் இருக்காதே ;(((/

    அந்தயானையார் எத்த்னை மகிழ்ச்சியுடன் நீர்விளையாட்டுக்கு குடும்பத்திடம் கேட்டு அனுமதி வாங்கியிருக்கிறார்!

    ReplyDelete
  53. வை.கோபாலகிருஷ்ணன் said...
    இந்தப்பதிவுக்காவது, ஒன்றிற்கு மேற்பட்ட என் கருத்துரைகளுக்கு, பெரிய மனது செய்து, மறுமொழியாக ஏதோ தாங்கள் கொஞ்சமாவது [atleast 20%] பதில் கூறியிருப்பது மனதுக்கு சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள். vgk/

    கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  54. இராஜராஜேஸ்வரி said...
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    கிறிஸ்மஸ் தாத்தாவுடன் இருவர் நடனம் நல்லாயிருக்குது.

    அடுத்த படத்தில் மூன்று யானையார். நடுவில் உள்ளவர் தன் கொம்புகளால் செடி கொடிகளை கிழிக்கிறாரோ! ;))))

    அடுத்த படத்தில் கீரைக்கட்டுபோல எதையோ இருவர் தூக்கிச்செல்கின்றனர். இடது பக்கத்தவருக்கு கொம்பு உடைந்துள்ளது. யாராவது நறுக்கி கடத்திப்போய் இருப்பார்களோ!

    வலது பக்கத்தவரின் கொம்பைப் பார்த்தாலே பயமாகவல்லவா உள்ளது. அதில் ஒன்று மேல் நோக்கி வளைந்து மற்றொன்று கீழ்நோக்கி வளைந்தும் அல்லவா உள்ளது.

    இவரைப் பல் டாக்டரிடம் அனுப்பி பற்களை [தந்தங்களை] சமப்படுத்தி சீர் செய்து கொண்டு வர வேண்டுமோ?/

    ***தங்கள் பதிவில் ஒரு போலி பல்டாக்டர் பல்லவன் இருந்தாரே அவர் வெளியே வந்துவிட்டாரா தண்டனைக்காலம் முடிந்து???***

    ஆஹா! நான் எழுதிய நகைச்சுவைக் கதையான “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?” என்ற கதையையும், அதில் வரும் டாக்டர் பெயரையும் நல்லா ஞாபகம் வைத்திருக்கிறீர்களே!

    மிகவும் புத்திக்கூர்மையானவர் நீங்கள் என்பதை மீண்டும் உணரச் செய்து விட்டீர்களே!

    அதற்கு முதலில் என் பாராட்டுக்கள்.

    அந்த போலி டாக்டர் “பல்லவன்” இன்னும் ஜெயிலில் தான் உள்ளார். வெளியே வரவில்லை. வெளியே வரவும் மாட்டார். அவர் தன் பற்களால் அசைபோட ஜெயிலிலேயே ஏதேதோ ஆகாரம் செளகர்யமாகத் தருகிறார்களாம்.

    வெளியே வந்தாரானால், அவரால் பற்கள் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் அங்கத்தினர்கள், அவரை யானையைப்போல மிதித்துக் கொன்றே விடுவார்கள் அல்லவா ....? அதனால் அவர் வரவே மாட்டார்.

    ***யானையாருக்கு இயற்கையாகவே பல் இருந்துவிட்டுப்போகட்டும் ஐயா..***

    ஆஹா, பேஷா இருந்துட்டுப் போகட்டும், மேடம். நமக்கொன்றும் இதில் லாப நஷ்டமே இல்லை.

    ***உங்கள் பல் டாக்டரிடம் யானையார் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்..***

    அடடா! அப்படியா சொன்னார்! இருக்கட்டும் இருக்கட்டும் இப்போதைக்கு!!

    பல்வலி தாங்க முடியாமல் அவரே ஒரு நாள் என்னைத்தேடி வருவார். அப்போ பேசிக்கொள்கிறேன். ;))))

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  55. வை.கோபாலகிருஷ்ணன் said...


    பல்வலி தாங்க முடியாமல் அவரே ஒரு நாள் என்னைத்தேடி வருவார். அப்போ பேசிக்கொள்கிறேன். ;))))//

    அவ்ரென்ன வீகோவஜ்ர தந்தியும் கோல்கேட்டுமா உபயோகிக்கிறார்.. பல்வலிவந்து அவஸ்தைப்பட..

    அதெல்லாம் யானைகள் முகாமில் பத்திரமாக பாதுகாப்பார்கள் பற்களையும் தந்தங்களையும்..

    வீரப்பன் மாதிரி யாராவது வந்து தந்தங்களைக் கட்த்தினால்தான் உண்டு. பாவம்..

    அப்போ வந்து தானே
    தங்களிடம் சொல்வார்
    தன் தந்தக் கதையை பதிவிடுவதற்காக்..

    ReplyDelete
  56. //அவரென்ன வீகோவஜ்ர தந்தியும் கோல்கேட்டுமா உபயோகிக்கிறார்.. பல்வலிவந்து அவஸ்தைப்பட..//

    நல்ல நகைச்சுவைதான்,
    உங்கள் எல்லா பதில்களிலும்.
    ;)))))

    அது எனக்கு ரொம்பப்பிடிச்சிருக்கு.

    //புத்திசாலிப்பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது!!//

    என்று எனக்கொரு பின்னூட்டம் நீங்கள் கொடுத்திருந்தீர்கள் [சுமதி என்றோர் கதாபாத்திரத்தைப்பற்றி]

    அதையே இங்கு நான் ரிப்பீட் செய்ய விரும்புகிறேன், மேடம். OK வா?

    -oOo-

    ReplyDelete
  57. படங்களும் பகிர்வும் சூப்பர். நன்றி

    ReplyDelete
  58. எவ்வளவு தேடல் செய்திருப்பீர்கள்? எவ்வளவு நேரம் செலவளித்திருப்பீர்கள், ஆனால் அதற்கான பலன் உண்டு வாசகர்கிளடமிருந்து.

    இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  59. JAI HANUMAN ;)))))

    VGK

    [ HOW MANY COMMENTS ARE THERE !
    ONCE AGAIN READ & ENJOYED VERY MUCH ;) ]

    ReplyDelete
  60. 1758+29+1*+1=1789 ;)

    மொத்தம் 61ல் சரிபாதி பின்னூட்டங்கள் என்னுடையது மட்டுமே.

    தாங்களும் நிறைய பதில்கள் கொடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. உலக அதிசயமாக 8 தடவை பதில் அளித்துள்ளீர்கள். ;))))))))

    *நான் கொடுத்துள்ள ஒரேயொரு பின்னூட்டம் மட்டும் தங்களால் நீக்கப்பட்டுள்ளது. ;( ஏனோ தெரியவில்லை?

    எனக்குப் ’பின்னூட்டப்புயல்’ என்ற பட்டம் கிடைத்த பதிவல்லவா இது.

    அதனால் இதில் எனக்கோர் ஓர் சிறிய மகிழ்ச்சி. மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    ReplyDelete