Wednesday, December 26, 2012

வசீகரிக்கும் மீட்பர் கிறிஸ்து சிலை





Christ the Redeemer – High Resolution View of Brazil's Iconic Statue on Corcovado Mountain in Rio de Janeiro

உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் 
துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்"

என்று போதித்த  சுயநலமற்ற அன்பின் சுய உருவம் இயேசு.

நல்ல விதைகள் எப்போதுமே பயன் தராமல் போவதில்லை
நிரந்தர மீட்பைத் மக்களுக்குத் தரவே மீட்பரின் உயிர்ப்பு வரமானது.

மண்ணில் விழுந்து
மனதில் முளைக்கும் விதை.

கேட்கச் செவியுள்ளவன் 
கேட்கட்டும்.


புதிய உலக அதிசயமாகக்கொண்டாடப்படும் பிரம்மாண்டமான இயேசு சிலை பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரே (Rio de Janeiro) என்னுமிடத்தில் அமைந்துள்ளது..

வசீகரிக்கும் பிரம்மாண்டமான சிலையின் உயரம் 130 அடி...இயேசு சிலையின் சிறப்பம்சமே அது ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது என்பது தான்.

வானத்திற்கும் பூமிக்கும் இடையே கம்பீரமாய் நிற்கும் இந்தச் சிலை தரையிலிருந்து 2296 அடி உயரத்தில் கொர்கோவாடோ (Corcovado) மலையில் 1931ம் ஆண்டு கட்டப்பட்டது.. 

எட்டு மீட்டர் உயரமுள்ள பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையில் இரண்டு கைகளின் விரல்களுக்கும் இடையே உள்ள தூரம் 28 மீட்டர்கள் !

சிலையின் அடியில் சுமார் நூற்று ஐம்பது பேர் அமரக்கூடிய வகையில் ஒரு ஆலயமும் அமைந்துள்ளது. 


பெட்ரோ மரியா பாஸ் எனும் பாதிரியார் இந்த மலையின் அழகில் சொக்கிப் போய் இந்த மலையில் ஒரு மிகப்பெரிய நினைவுச் சின்னம் உருவாக்க எண்ணிய சிந்தனையே விதையாக அமைந்தது ..

ரியோ டி ஜெனீரோ கத்தோலிக்க மறைமாவட்டம் சார்பில் இயேசுவின் சிலை ஒன்றை கலை நயத்துடனும், பொருளுடனும், கற்பனை வளத்துடனும் நிறுவும் கனவு நனவானது ...

சிலுவை வடிவிலான இயேசுவின் சிலை கான்கிரீட் கொண்டு  கட்டி சிலையின் வெளிப்பாகம் காலநிலை மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக மார்பிள் கொண்டு வடிவமைக்கலாம் என தீர்மாணிக்கப்பட்டு பிரஞ்ச் சிற்பி பால் லாண்டோஸ்கி  கை வண்னத்தில் எழிலாக உருவாக்கம் கொண்டது ...

சிலை பல பாகங்களாகச் செய்யப்பட்டு மலையுச்சிக்கு ரயில்வே பாதை மூலம் கொண்டு சென்று ஒன்று சேர்க்கப்பட்டு பணி நிறைவுற்றது.
1931 அக்டோபர் 12 சிலை திறப்பு விழா கொண்டாடப்பட்டது ...
அதன் பின் காலமாற்றத்துக்கு ஏற்ப இடமும் எஸ்கலேட்டர்  வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டன.

பத்து கோடிக்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட சுவிட்சர்லாந்திலுள்ள நியூ ஓப்பன் வேர்ல்ட் கார்ப்பரேஷன் எனும் அமைப்பினால் ஜூலை 7, 2007ம் ஆண்டு போர்ச்சுக்கல்லில் அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பில் உலக அதிசயம் எனும் சிறப்பைப் பிடித்திருக்கிறது  இயேசு சிலை



Christ the Redeemer was struck by lightning. 



14 comments:

  1. puthiya thakaval...

    mikka nantri!

    ReplyDelete
  2. இதுவரை தெரிந்திராத தகவல்கள். படங்களும் சிறப்பாக இருக்கு

    ReplyDelete
  3. அருமையான படங்களுடன் அறியாத பல அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. படங்கள் அருமை... எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ... நன்றி...

    ReplyDelete
  5. வணக்கம்
    இராஜராஜேஸ்ரி(அம்மா)

    அறியாத பல தகவல்களை படிப்பதற்காக பதிவிட்டீர்கள் பாரட்டுக்கள்
    படங்கள் உங்கள் ஆக்கத்துக்கு பிரமிக்கவைக்குது,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. //உங்கள் பகைவரிடமும்
    அன்பு கூருங்கள்; உங்களை
    துன்புறுத்துவோருக்காக
    இறைவனிடம் வேண்டுங்கள்//

    இந்த எண்ணம் இன்று யாருக்கு இருக்கிறது ?

    எனினும் இதிலும் ஒரு சந்தோசம் உள்ளது என்பதை உணர்ந்தவர்கள் என்றும் நன்றாகவே வாழ்கின்றனர்.

    பிரசில் மீட்பர் சிலை தகவல்கள்
    மனதில் பதிய வைக்க வேண்டியவை.

    http://sattaparvai.blogspot.in/2012/12/blog-post_26.html

    ReplyDelete
  7. அறிந்திராத தகவல்கள்.சென்னையில் உலக அதிசயங்கள் என்று ஒரு கண்காட்சி போட்டனர்.அதில் மீட்பர் கிருஸ்துவின் சிலையும் இடம் பெற்று இருந்தது.செயற்கைyeபிரமாண்டமாக காட்சி அளித்தது.

    ReplyDelete
  8. அருமையான தகவல்கள்.. நல்ல படங்கள்.. நிறைவான பதிவு.

    ReplyDelete

  9. தகவல்கள் அனைத்தும் புதிது, தெரியாதது. நன்றி, “அர்ச்சிய சிஷ்டைசிலுவை அடையாளங்களினாலே எங்களை ரட்சித்துக் கொள்ளும் , பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்து சாந்துவினுடையவும் நாமத்தினாலே:ஆமென்”

    ReplyDelete
  10. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - பல புதிய அரிய தகவல்கள் - உலக அதிசயம் பற்றிய பதிவு - புள்ளி விபரஙகளைப் பார்க்கும் போது இவ்வளவு பெரிய சிலையினை எப்படி இவ்வளவு பெரிய மலையின் உச்சியில் நிறுவினார்கள் என ஆச்சரியப்ப் அட வைக்கிறது - நவீன வசதிகள் சென்று பார்ப்பதற்கு - ம்ம்ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  12. அருமை.

    பார்த்தேன்,
    படித்தேன்,
    ரஸித்தேன்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete