ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த
வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம்
க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தத: தேவதேவ
ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
என்னும் சந்தான கோபல மந்திரம் ஜபித்து சந்தான கோபால பூஜை செய்ய புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் ..!
முகப்பேர் ஸ்ரீ சந்தான லஷ்மி ஸ்ரீ னிவாச பெருமாள் கோவில் சென்றிருந்தோம் ....
சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாம் ...முகப்பேர் கிராமத்தலைவர் கனவில் மஹாவிஷ்ணு அருளியபடி தலைவரின் நிலத்தில் புதையுண்டு இருந்த ஒன்பதரை அடி உயரத்துடன் அபயஹஸ்ததுடன் கிடைத்த அருமையான விக்ரஹம் சந்தானஸ்ரீ னிவாசப்பெருமாள் மூலவராக அருள்பாலிக்கிறார் ..
ஐந்து நிலை ராஜகோபுரமும் அழ்கான யானை சிலைகளும் வரவேற்கின்றன்..
புத்திரபாக்கியம் வேண்டி வந்தவர்களுக்கு வேண்டிய வரம் அருளியதால் சந்தான ஸ்ரீனிவாசன் என்ற பெயர் ஏற்பட்டதாம் ...
மூலவர் திருப்பதியை நினைவூட்டும் வகையில் திருக்காட்சி அளிக்கிறார்...
மூலவர் திருப்பதியை நினைவூட்டும் வகையில் திருக்காட்சி அளிக்கிறார்...
மிகச்சிறப்பாக நிர்வகிக்கப்படும் ஆலயம் ..
பலிபீடம் என்பது மூலவருக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை அஷ்டதிக்பாலகர்களும் , தேவர்களும் அமர்ந்து ஏற்கும் இடம் என்வே அங்கு தீபம் ஏற்றக்கூடாது என்று அறிவுப்பு செய்திருக்கிறார்கள்..
துலாபாரம் அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்..
தங்கத்தால் ஆன பெருமாளின்
திருப்பாதங்கள் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன...
திருப்பாதங்கள் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன...
சந்தான விநாயகர் , அனுமன் , சன்னதிகள் உண்டு .. ஸ்ரீ சந்தான ல்ஷ்மிதாயார் மிகுந்த வரப்பிரசாதி ..
ஆண்டாள் சன்னதி அழகுற திகழ்கிறது ..
அனைத்து சன்னதிகளின் தனித்தனி விமானங்களில் சூரியஒளிக் கதிரகள் கிடைக்கும் வகையில் சிறப்புடன் அமைத்திருக்கிறார்கள் ..
அஷ்டலஷ்மிகளும் மேல் விதானத்தில் அழகுற அருள்பாலிக்கிறார்கள்..
நவக்கிரஹ சன்னதி அருமையாக இருக்கிறது ...
Santhana Gopala Pooja will be performed On the days of Pournami(Full Moon Day), and stars Thiruvonam, Punarpoosam, Swathi, Revathi between
morning 6.00 a.m. to 11.00 a.m.
மகப்பேறு என்றால் குழந்தை வரம் என்று பொருள்.முகப்பேர் பகுதியில் உள்ள பெருமாள் குழந்தை வரம் அளிப்பவர் என்பதால் ஏற்பட்ட பெயராம் . மகப்பேறு என்பதே முகப்பேர் என மருவியதாக கருத்து நிலவுகிறது.
ஸ்ரீ சந்தான சீனிவாசப்பெருமாள் ஆலயம் ,
வெள்ளாளர் தெரு , முகப்பேர்
சென்னை 600 037
போன் : 26248117
ஹரி ஓம்
ReplyDeleteகாலையில் ஒரு திவ்ய தரிசனம்..நன்றி.
படங்கள் அருமை அம்மா...
ReplyDeleteநல்லதொரு தகவலுக்கு நன்றி...
நல்ல தரிசனம்....
ReplyDeleteஅழகழகான அற்புதப் படங்களுடன் சந்தான ஸ்ரீனிவாசப் பெருமாளைப்பற்றி அருமையான விளக்கம்.
ReplyDeleteமுகப்பேர் கோவில் முகவரியையும் இணைத்தது மிக்க சந்தோஷமே...
பலிபீடத்தைப் பற்றிய குறிப்பு பொதுவாகவேயா அல்லது இந்தக்கோவிலில் மட்டுமா?
பகிர்வுக்கு மிக்க நன்றி சோதரி...
nice pictures
ReplyDeleteமிகவும் நல்ல தகவல். குழந்தை வேண்டுவோருக்கெல்லாம் இந்த சந்தான லக்ஷ்மியின் அருள் நிறையட்டும்.
ReplyDeleteஅட சந்தானப்பெருமாள் கோயில் அ பற்றிய மிக அற்புதமான விஷயங்கள்பா இராஜேஸ்வரி....
ReplyDeleteஇது எங்க வீட்டுக்கிட்ட தாம்பா இருக்கு... ஊருக்கு போனால் அடிக்கடி இந்த பெருமாள் கோயிலில் போய் உட்கார்ந்துடுவேன்....
அப்படியே திருப்பதி பெருமாளை பார்த்தது போல அத்தனை மன நிம்மதி...
அது மட்டுமில்லாம என்ன வேண்டிக்கிறோமோ அதை நிறைவேற்றுவதில் இந்த பெருமாள் ரொம்ப முதன்மைப்பா...
தம்பிக்கு வேலை கிடைக்க, விசா கிடைக்க, வீடு அமைய, இப்ப தினமும் என் மகனை என் தங்கை கூட்டிட்டுப்போயிண்டிருக்கா பெருமாள் கோயிலுக்கு...
திருப்பதியில் கிடைப்பது போலவே சுவையான பிரசாதங்கள்....
துளசிமாலை....
கூட்டம் இல்லாத நேரத்தில் பகவானை ரொம்ப கிட்டக்க போய் பட்டு அங்கவஸ்த்ரத்தோட பெருமாள் ஜொலிப்பதை ரசிக்கலாம்பா...
இங்கே போகும்போதெல்லாம் திருப்பதி போய் வந்த மனதிருப்தி ஏற்படுகிறது....
கோயிலின் உள்ளே தூய்மையாக இருக்கும்...
விநாயகர்ல தொடங்கி... முருகர்.... லக்ஷ்மி தேவி.... ஐயப்பன், நவக்ரகங்கள்... எல்லாமே மிக அற்புதமாக இருக்கும்பா...
மனம் நிறைகிறது இராஜேஸ்வரி, மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா பகிர்வுக்கு....
திவ்யமான தரிசனம்.....
ReplyDeleteமிக்க நன்றி.
இளமதி said...
ReplyDeleteஅழகழகான அற்புதப் படங்களுடன் சந்தான ஸ்ரீனிவாசப் பெருமாளைப்பற்றி அருமையான விளக்கம்.
முகப்பேர் கோவில் முகவரியையும் இணைத்தது மிக்க சந்தோஷமே...
பலிபீடத்தைப் பற்றிய குறிப்பு பொதுவாகவேயா அல்லது இந்தக்கோவிலில் மட்டுமா?
பகிர்வுக்கு மிக்க நன்றி சோதரி...//
பொதுவாகவே பலிபீடம் என்பது நைவேத்தியம் ஏற்குமிடகாத்தான் சொல்கிறார்கள்..பலிபீடத்தின் மீது விளக்கு ஏற்றுவதை தவிர்க்கச்சொல்கிறார்கள்..
காட்டுப்பகுதியில் அனுமன் ஆலயம் கட்டுவதை அருகிருந்து கவனிக்கும் வாய்ப்பு கிட்டியது ..
அங்கே எட்டு திசையிலிம் எட்டு பலிபீடம் அமைத்த காரணம் கேட்டு அறிந்தேன் ..
பலிபீடம் என்பது மூலவருக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை அஷ்டதிக்பாலகர்களும் அமர்ந்து ஏற்கும் இடம் என்பதை தெரிவித்தார்கள்..
மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteகோவிலுக்குள்ளே நுழைந்த்ததும் எனக்கு எழுந்த என்ணத்தை அப்படியே பிரதிபலித்த கருத்துரைக்கு இனிய ந்ன்றிகள்..
Ranjani Narayanan said...
ReplyDeleteமிகவும் நல்ல தகவல். குழந்தை வேண்டுவோருக்கெல்லாம் இந்த சந்தான லக்ஷ்மியின் அருள் நிறையட்டும்.//
அனைத்து சன்னதிகளின் அர்ச்சகர்களும் தெரிவித்த கருத்து இதுதான் ..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..
Thava Kumaran said...
ReplyDeleteஹரி ஓம்
காலையில் ஒரு திவ்ய தரிசனம்..நன்றி.
திவ்யமான தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..
கோவை2தில்லி said...
ReplyDeleteநல்ல தரிசனம்
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteபடங்கள் அருமை அம்மா...
நல்லதொரு தகவலுக்கு நன்றி...\\
தங்களின் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..
arul said...
ReplyDeletenice pictures
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteதிவ்யமான தரிசனம்.....
மிக்க நன்றி.
திவ்யமான தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..
//ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த
ReplyDeleteவாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம்
க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தத: தேவதேவ
ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
என்னும் சந்தான கோபல மந்திரம் ஜபித்து சந்தான கோபால பூஜை செய்ய புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் ..! //
கேட்கவே சந்தோஷமாக உள்ளது. ;)))))
>>>>>>>
//மகப்பேறு என்றால் குழந்தை வரம் என்று பொருள்.
ReplyDeleteமுகப்பேர் பகுதியில் உள்ள பெருமாள் குழந்தை வரம் அளிப்பவர் என்பதால் ஏற்பட்ட பெயராம்.
மகப்பேறு என்பதே முகப்பேர் என மருவியதாக கருத்து நிலவுகிறது.//
மிகவும் அழகான விளக்கம். படங்களும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ooooo