ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"
திருமயிலையில் சாம்பலாகிய பெண்ணை உயிர்ப்பிக்க திருஞான சம்பந்தர் பாடிய மயிலையில் கொண்டாடப்படும் பல்வேறு சிறப்பு மிக்க திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று.
ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான்.
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக
ஓருருவம் ஓர் நாமம் இல்லாத சிவ பெருமான் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடுகின்றோம்..
ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது
ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில்
அருள்பாலிப்பார்.
ஆண்டுக்கு ஒரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்..
கும்பகோணத்தில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தைக்கு ராஜாவாகிய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்கின்றனர்.
தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் வந்த நடராஜரும், ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு தங்களுடைய மரியாதையைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகள் நடைபெறும்.
பதிலுக்கு,ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வர ஸ்வாமியும் அந்தந்த கோயிலுக்கு உண்டான ஸ்வாமிக்கு பதில் மரியாதை செய்வார்.
திருமணமான பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஆருத்ரா தரிசனம்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.
"ஆடல்வல்லான்' என்று போற்றப்படும் ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால், மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும்.
சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே. இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என்ற பெயர்கள் உண்டு.
திருவாதிரை நட்சத்திரம் நாள் தில்லை அம்பலத்தரசனுக்கு சிறப்பான விரத நாளாகும்.
திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் செய்து சகல பாவங்கள், தோஷங்கள், தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம் ..
ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக் களி படைக்கும் வழக்கம் உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே தாத்பர்யம்
திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி.
எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.
திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி தின்னாதவர் நரகக்குழி என்பது பழமொழி மூலம் பிரசாதத்தின் மகிமை விளங்கும்.
களி என்றால் ஆனந்தம் என்று ஒரு அர்த்தம் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உண்மையான உள்ளன்புடன் வழி பட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமான மோக்ஷத்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளார்த்தம்.
கோவை பேருரில் எம்பெருமானின் பின்னே பின்னி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜடா முடியையும் நாம் கண்டு ஆனந்தம் பெறலாம்.
சப்த விடங்க ஸ்தலமான திருநள்ளாற்றிலும் அருணோதய காலத்தில் ஒரே சமயம் நடராஜப் பெருமானுக்கும், தியாகராஜப் பெருமானுக்கும் அபிஷேகம் நடப்பதை நாம் கண்டு ஆனந்தம் அடையலாம்.
சுயம்புவாக தோன்றி மிகப்பெரிய திருவுருவமாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்திலும் திருவாதிரைத்திருவிழா பத்து நாள் மாணிக்கவாசகர் விழாவாக கொண்டாடப்படுகின்றது.
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையணைத் தும்நிறைந்து
பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
என்று ஆனந்த சேந்தன் பாடிப் பரவியபடி, திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத் தேரோட்டத்தை காணும் அழகை தரிசிக்கும் திருநாளே திருவாதிரைத்திருநாள் ..
கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் அருட்காட்சி அளித்து ஆனந்தம் பொழியும் அற்புதத்திருநாள் ..!
வணக்கம்,நான் நாத்திகனுமல்ல ஆத்திகனுமல்ல ஆனால் உங்களுடைய ஒவ்வொரு நாளின் அர்ப்பணிப்பும் எனக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.தினமும் தவறாமல் உங்கலால் இதுபோன்ற தகவலை திரட்டி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள தினமும் நல்ல தகவல் தரும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது .
ReplyDeleteநன்றிகள் நண்பரே
ஆருத்ரா தரிசனத்தின் முக்கியத்துவத்தை மகிமையை இப்போதுதான் தெரிந்துக்கொள்கிறேன்,,நன்றி.
ReplyDeleteஆருத்ரா தரிசனம்... நல்ல தகவல்கள்... அருமையான படங்கள்... நன்றி...
ReplyDeleteஅற்புதமான பதிவு.அருமையான தகவல்கள். மிக்க நன்றி.
ReplyDeleteஓம் நம சிவாய
ReplyDeleteதென்னாடுடைய சிவனே போற்றி.
எ ந் நாட்டவற்கும் இறைவா போற்றி.
அரனருள் யாவருக்கும் கிட்டிட
நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்
திருவாதிரை களி தின்போம்
களி கொள்வோம்.
சுப்பு தாத்தா.
திருவாதிரை நன்னாளின் அருமை பெருமைகள் தெரிந்து கொண்டோம். நனறி. வழக்கம் போல படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு
ReplyDeleteஅருமையான விளக்கமுடன் அழகிய படங்களுடன் நல்ல பதிவு.
ReplyDeleteஆனந்த நடமிடும் அம்பலவாணனின் இன்னருள் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி...
மிக அருமை ராஜி.. கண்ணதாசனும் சுப்பு சாரும் சொன்னபடி தங்கள் அர்ப்பணிப்பும் எழுத்தும் அருமை.. இறையருள் பெற்று வாழ்க வளர்க.. அன்புடன் தேனம்மைலெக்ஷ்மணன். :)
ReplyDeleteஆருத்ரா தரிசனம்..என்றால் சிதம்பரம் மட்டுமே எனக்குத் தெரியும் இன்றுதான் பல இடங்களையும் தெரிந்து கொண்டேன்! நன்றி! சகோதரி!
ReplyDeleteAha Ahaha...............
ReplyDeleteI am at Coimbatore, Perur by mind because of you....................
Thanks for the wounderful pictures and post.
viji
wow! great post
ReplyDeleteபல புரிந்தது சில புரியவில்லை இருந்தும் உங்கள் பதிவு என்னை கொள்ளை கொண்டது நன்றிகள் அக்கா
ReplyDelete
ReplyDeleteசிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன விழாவின் போது போவது வழக்கம். ஆருத்ரா தரிசனம் காண வரும்படி அழைப்பு உண்டு. இதுவரை தரிசிக்க சாத்தியப் படவில்லை. சிறுவயதில் கல்பாத்தி கோயிலில் ஆருத்ரா தரிசனம் செய்த நினைவு நிழலாடுகிறது. உத்தரகோச மங்கை சென்றதுண்டு. மரகத நாயகரை தரிசிக்க இயலவில்லை. ஒருநாள்மட்டும்தானா தரிசனம். படங்கள் பிரமாதம்/ எல்லாம் அழகு போங்கள்.!
ஓம் நமோ பகவதே ருத்ராய!
ReplyDeleteஅருமை
திருவாதிரை நன்னாளுக்கு சிவன் கோவில் சென்று, அபிசெகம் கண்டு ஆருத்திர தரிசனம் செய்திருக்கின்றேன்.
ReplyDeleteநுண்ணிய விளக்கம் இன்றுதான் வாசித்தேன். பதிவுக்கு வாழ்த்துகள்.
அடுத்தடுத்து விழாக்கள், பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன. தங்கள் மின்னல் வேக பதிவுகளை வாசிக்க நாங்கள் தயாராக உள்ளோம். வாழ்க !
http://sattaparvai.blogspot.in/2012/12/blog-post_27.html
ReplyDeleteகவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteவணக்கம்,நான் நாத்திகனுமல்ல ஆத்திகனுமல்ல ஆனால் உங்களுடைய ஒவ்வொரு நாளின் அர்ப்பணிப்பும் எனக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.தினமும் தவறாமல் உங்கலால் இதுபோன்ற தகவலை திரட்டி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள தினமும் நல்ல தகவல் தரும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது .
நன்றிகள் நண்பரே..//
சிரத்தையுடன் கருத்துரைகள் அளித்தமைக்கும் ,
திரட்டிகளில் இணைத்தமைக்கும் இனிய நன்றிகள்...
Thava Kumaran said...
ReplyDeleteஆருத்ரா தரிசனத்தின் முக்கியத்துவத்தை மகிமையை இப்போதுதான் தெரிந்துக்கொள்கிறேன்,,நன்றி./
அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள்...
ஸ்கூல் பையன் said...
ReplyDeleteஆருத்ரா தரிசனம்... நல்ல தகவல்கள்... அருமையான படங்கள்... நன்றி.../
அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள்...
Parvathy Ramachandran said...
ReplyDeleteஅற்புதமான பதிவு.அருமையான தகவல்கள். மிக்க நன்றி..//
அருமையான கருத்துரைக்கும்,
வல்லமை மின் இதழிழும் கருத்துரை அளித்தமைக்கும் இனிய நன்றிகள்...
sury Siva said...
ReplyDeleteஓம் நம சிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி.
எ ந் நாட்டவற்கும் இறைவா போற்றி.
அரனருள் யாவருக்கும் கிட்டிட
நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்
திருவாதிரை களி தின்போம்
களி கொள்வோம்.
சுப்பு தாத்தா./
களி கொண்ட கருத்துரைக்கு
இனிய நன்றிகள் ஐயா...
Lakshmi said...
ReplyDeleteதிருவாதிரை நன்னாளின் அருமை பெருமைகள் தெரிந்து கொண்டோம். நனறி. வழக்கம் போல படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு
அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள் அம்மா.
இளமதி said...
ReplyDeleteஅருமையான விளக்கமுடன் அழகிய படங்களுடன் நல்ல பதிவு.
ஆனந்த நடமிடும் அம்பலவாணனின் இன்னருள் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.../
அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள் ..
Thenammai Lakshmanan said...
ReplyDeleteமிக அருமை ராஜி.. கண்ணதாசனும் சுப்பு சாரும் சொன்னபடி தங்கள் அர்ப்பணிப்பும் எழுத்தும் அருமை.. இறையருள் பெற்று வாழ்க வளர்க.. அன்புடன் தேனம்மைலெக்ஷ்மணன். :)/
அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள் ..
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteஆருத்ரா தரிசனம்..என்றால் சிதம்பரம் மட்டுமே எனக்குத் தெரியும் இன்றுதான் பல இடங்களையும் தெரிந்து கொண்டேன்! நன்றி! சகோதரி!//
அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள் ஐயா...
viji said...
ReplyDeleteAha Ahaha...............
I am at Coimbatore, Perur by mind because of you....................
Thanks for the wounderful pictures and post.
viji..//
ஆத்மார்த்தமான கருத்துரைக்கு
இனிய நன்றிகள்..
arul said...
ReplyDeletewow! great post..
கருத்துரைக்கு
இனிய நன்றிகள்
SRH said...
ReplyDeleteபல புரிந்தது சில புரியவில்லை இருந்தும் உங்கள் பதிவு என்னை கொள்ளை கொண்டது நன்றிகள் அக்கா
அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள்
G.M Balasubramaniam said...
ReplyDeleteசிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன விழாவின் போது போவது வழக்கம். ஆருத்ரா தரிசனம் காண வரும்படி அழைப்பு உண்டு. இதுவரை தரிசிக்க சாத்தியப் படவில்லை. சிறுவயதில் கல்பாத்தி கோயிலில் ஆருத்ரா தரிசனம் செய்த நினைவு நிழலாடுகிறது. உத்தரகோச மங்கை சென்றதுண்டு. மரகத நாயகரை தரிசிக்க இயலவில்லை. ஒருநாள்மட்டும்தானா தரிசனம். படங்கள் பிரமாதம்/ எல்லாம் அழகு போங்கள்.! /
அருமையான அழகான கருத்துரைக்கு
இனிய நன்றிகள் ஐயா...
குட்டன் said...
ReplyDeleteஓம் நமோ பகவதே ருத்ராய!
அருமை
அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள்
Advocate P.R.Jayarajan said...
ReplyDeleteதிருவாதிரை நன்னாளுக்கு சிவன் கோவில் சென்று, அபிசெகம் கண்டு ஆருத்திர தரிசனம் செய்திருக்கின்றேன்.
நுண்ணிய விளக்கம் இன்றுதான் வாசித்தேன். பதிவுக்கு வாழ்த்துகள்.
அடுத்தடுத்து விழாக்கள், பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன. தங்கள் மின்னல் வேக பதிவுகளை வாசிக்க நாங்கள் தயாராக உள்ளோம். வாழ்க !
அருமையான அழகான கருத்துரைக்கும் , வாழ்த்துகளுக்கும்
இனிய நன்றிகள் ..
தங்களின் சட்டப்பார்வை பல கருத்துகளை புரியவைக்கும் அற்புத பகிர்வுகள்..மிகவும் பயனுள்ளவை ..
சிறப்பான பாராட்டுக்கள்..
அன்பின் இராஜ ராஜேஸ்வரி
ReplyDeleteஇன்று ஆருத்ரா தரிசனம் காண எங்கள் சொந்த ஊரான ஆத்தங்குடி சிவன் கோவிலுக்குச் செல்ல புறப்ப்ட்டுக் கொண்டிருக்கிறோம். இன்று இரவு தான் மதுரை வருவோம்.
இந்நன்னாளீல், அழகான படங்களுடன் அருமையான விளக்கங்களுடன் விரிவான பதிவிட்டமை நன்று. படித்துப் புண்ணிடம் பெற்றேன்.
எத்தனை தளங்களைப் பற்றிய விளக்கங்களுடன் கூடிய படங்கள். தங்களின் இவ்வரிய பணிக்கு சிவ பெருமானின் கருணை மழை எப்பொழுதும் பரிசாகக் கிடைக்கப் பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா
அற்புதமான படங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
முந்திரிகள் மிதக்கும் களிப்படம் மிகவும் களிப்பூட்டுகிறது.
ReplyDeleteசூடாக சுவைக்கப் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது.
சென்ற ஆண்டு பாக்கியே இன்னும் உள்ளது.
’களி’க்கையால்
காக்கா ஓட்ட
மாட்டீங்களோ?????
எச்சலானாலும் எனக்குப் பரவாயில்லை. பிரஸாதமாக ஏற்றுக்கொள்வேனாக்கும். ;)