


கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை `பிருந்தாவன துவாதசி’ என கொண்டாடப்படுகிறது....அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.

பஞ்ச பூதத்தில் அரச மரம் ஆகாயத்தையும்,
வாதராயண மரம். காற்றையும்,
வன்னி மரம் அக்கினியையும்,
நெல்லி மரம். தண்ணீரையும்,
ஆலமரம் மண்ணையும் குறிக்கிறது..

நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம்.
துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரம் என்பது ஐதீகம் ..


சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பது விஷேஷம் ...
கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர்.
வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர்.

கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை, யமபயம் நீங்கும்.











அருமையான தகவல்கள் மற்றும் படங்கள்... பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஹரி ஓம்
ReplyDeleteஅருமையான படங்களோடு கூடிய பதிவு..சில நாட்கள் பிளாக் பக்கம் வர முடியாததால் அடிக்கடி இங்கு வர முடியவில்லை..தொடருங்கள்.நன்றி.
நல்ல தகவல்கள் படங்கள் 50- வருஷம் முன்னே பூனாவில் இருந்தப்போ வருஷா வருஷம் இந்த துளசி பூஜையில் கலந்துண்டிருக்கோம் அனேகமா நம்ம கார்த்த்கிகை விளக்கன்னிக்கே வரும்
ReplyDeleteஅறிந்தோ தெரிந்தோ இராத எத்தனை விஷயங்கள் உங்களிடமிருந்து....
ReplyDeleteஅருமை சகோதரி..மனமார்ந்த நன்றிகள்.
அழகான படங்களும், தகவல்களும்..
ReplyDelete"பிருந்தாவன துளசி" பூஜை அறிந்துகொண்டோம்.
ReplyDeleteமிக மிக அருமையான திருவுருவப் படங்களுடன்
ReplyDeleteஅறியாத பல அரிய விளக்கங்களுடன் அமைந்த பதிவு
மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDelete
ReplyDeleteநல்லது என்று நினைத்துச் சொல்லப் படுபவை இலக்கினை அடைய கதைகள் அவசியம் என்று தோன்றியதால்தானோ ஏகப் பட்ட கதைகள். கதைகளை விடக் கருத்துக்கு முக்கியத்துவம் வேண்டும். வழக்கம்போல் படங்கள் அருமை.
இது பற்றி நானும் ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன்.... விரைவில் வெளியிடுகிறேன்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅறியாத புதிய தேடல்கள் அருமையன பதிவு துளசிக்கும் நெல்லிக்கும் இடையில் எவ்வளவு இரகசியம் மறைந்துள்ளது,என்பதை அறிந்து கொண்டேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அற்புதமான படங்கள்.
ReplyDeleteநன்றி.
ஸ்ரீதுளசி பூஜை பற்றிய தகவலுக்கு நன்றிகள். எங்க வீட்டில் துளசி மாடத் திற்கு அருகிலேயே நெல்லிமரமும் நின்றது. அப்போ இதுபற்றி தெரியவில்லை.
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - துளசி பூஜை அருமை- படங்கள் மனதைக் கவருகின்றன. விளக்கங்களோ மனதைக் கொள்லை கொள்கின்றன. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஸ்ரீ துளஸி பூஜை பற்றிய அத்தனைப் படங்களும் சூப்பர்.
ReplyDeleteவிளக்கங்கள் வெகு ஜோர்.
பஞ்ச பூதங்களைக்குறிக்கும் ஐந்து மரங்களா? அடடா அரிய தகவல்.
அதுவும் நீருக்கு நெல்லியா!
மிகவும் பொருத்தம் தான்.
நீர் நெல்லிக்காய் ஊறுகாயை ஞாபகம் வைத்துக்கொள்வது சுலபம்.
ஒளிரும் நிலா அட்டகாசமான படம்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
ஏதோ துளஸி தளமான என்னுடைய சின்ன பின்னூட்டத்தையும், அம்பாள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு சிறப்பிக்க வேணும்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஸ்ரீ துளஸி பூஜை பற்றிய அத்தனைப் படங்களும் சூப்பர்/
வணக்கம் ஐயா...
மகத்துவம் மிக்க துளசிப்பிரசாதமாக் கிடைத்த அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete**வை.கோபாலகிருஷ்ணன் said...
ஸ்ரீ துளஸி பூஜை பற்றிய அத்தனைப் படங்களும் சூப்பர்**/
//வணக்கம் ஐயா...
மகத்துவம் மிக்க துளசிப்பிரசாதமாக் கிடைத்த அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..//
ஆஹா ... தன்யனானேன். நன்றி.;)