


‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்..





வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம் - கூஹூகூவென்று
விண்ணைக் குடையுது காற்று

தத்தட திட தத்தட தட்ட ....
தத்தட திட தத்தட தட்ட ....
என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்
பாட்டுத்திறத்தாலே இவ் வையகத்தை பரிபாலித்திட வந்த பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பா திறமும் பாத்திரப்படைப்பும் வியக்கவைக்கும் திறம் பெற்றவை ...

ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்
கணபதி ராயன் அவனிரு காலைப்பிடித்திடுவோம்
குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடுவோம்


பெறற்கரிய பேறு பெற்றதாய்ப் பெருமையுடன் பாடி நம்க்களிதிருக்கிறார் ..
தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் உயர்ந்த எண்ண நிலையில் அளித்த பாடல்கள் சிறப்பு மிக்கவை ...

பாரதி பாடிய அற்புதமான தீந்தமிழ்ப் பாடல்கள் கண்களிலும்
மனதிலும் கருத்திலும் புத்துணர்வு பூக்கச் செய்யும்...
இசையுடன் இசைந்த பாரதியின் பாடல்கள் காதுகளை
வைகுண்ட வாசலாக்கும் ...
வைகுண்ட வாசலாக்கும் ...

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!
சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்!
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்!
முக்தியென்றொரு நிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா!


பாரதியைப் பற்றிய அருமையான பதிவு. பாட்டுகளுக்கேற்ற படங்களு அருமையாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். உள்ளத்தை அள்ளுகிறது.
ReplyDeleteஇசையுடன் கூடிய பாரதியின் பாடல்கள் காதுகளை வைகுண்ட வாசலாக்கும்...
ReplyDeleteதேவாம்ருதமான வரி!
அட்டகாசமான மார்கழித் தொடக்கம்!
அருமை!...அருமை!....படங்கள் ஒவ்வொன்றும் கண்ணைக்
ReplyDeleteகவர்ந்து செல்கின்றது .பாரதியை முன்னிறுத்தி இன்றைய
படைப்பு மனதைக் கொள்ளை அடித்து விட்டதே !............மிக்க
நன்றி பகிர்வுக்கு....
பாரதி பாடல்கள் என்றுமே இனிமை.
ReplyDeleteஉங்கள் படங்களும்!
அழகழகான வண்ணகளில் அருமையான பதிவுகள்
ReplyDeleteஅத்தனையும் அருமை ,ஐயாவின் பாடலும் இனிமை
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
பாரதியார் பற்றி நல்லதொரு பதிவும் படங்களும்....
ReplyDeleteசொல்லமுடியாத சொல்லத்தெரியாத ஓர் உணர்வு மனத்தில் தோன்றுகிறது சகோதரி...
பகிர்வுக்கு மிக்க நன்றி...
வீரம் எழுகிறது கவி வீரனின் வரிகளை இசை நயத்தோடு உள் வாங்கும் போது.
ReplyDeleteசிறந்த பதிவு. இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
படங்கள் எல்லாம் அழகு. பாரதி பாடல்களுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன நீங்கள் தேர்ந்து எடுத்து போட்ட படங்கள்.
ReplyDeleteபாரதியின் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் பாடல் எனக்கு மிகவும் பிடித்த்து.
வாழ்த்துக்கள்.
அழகான,மனதுக்கிதமான இயற்கைக்காட்சிகள்.மரத்தினூடாக சூரியஒளியின் ஊடுருவல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு. பாரதிபாடல்கள்
ReplyDeleteஎல்லாமே மிக அருமையான பாடல்கள். நல்லதொரு பகிர்வு.
படங்களுகம் பாரதி வரிகளும் சிறப்பு ...எத்தனை எத்தனை இன்பம வைத்தாய்.
ReplyDeleteஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி,
ReplyDeleteஎத்தனை கோடி இன்பம் வைத்தாய் போன்ற பாடல்கள் எங்கள் பள்ளி பிரார்த்தனை பாடல்கள்.
பள்ளி நினைவுகளை தட்டி எழுப்பி விட்டீர்கள் இந்தப் பதிவு மூலம்.
அருமையான பாடல்கள் தேர்வும் அதற்கிணையாக அழகிய படங்களுமாய் அசத்துகிறது பதிவு!!
ReplyDeleteநான் கூட பாரதியின் பாடல்களுக்கு அடிமை.
ReplyDeleteவரிகளுக்கு (visual effects)கொடுத்தன உங்கள் படங்கள்.
அருமையான பகிர்வு.
ராஜி
Manju manju Bharathiyar padalai mananam cheythathum,
ReplyDeletekoodi vattamittu alukkor padalai padi makilthathum.....
Aha ethanai eniya ninaiuvkal.
Thanks Rajeswari..
You bring back my oldendays by this post.
viji
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - பாரதியின் பிறந்த நாளை அவன் பாக்களாலேயே பாவாக்கி இருப்பது நன்று. படங்கள் தேர்ந்தெடுத்துப் போடப் பட்டிருக்கின்றன. பாரதியின் பாடல்களைப் படிக்கும் போது சந்தங்கள் தானே துள்ளி வந்து நம்மைத் துள்ள வைக்கின்றன. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமஹாகவி பாரதி பற்றிய சிறப்புப்பகிர்வு அருமை.
ReplyDeleteஇடிமுழக்க்ம் போலவே பாடல் வரிகளை தீப்பிழம்பான மிகச்சிறந்த படங்களுடன் கொடுத்துள்ளது தனிச்சிறப்பு.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமஹாகவி பாரதி பற்றிய சிறப்புப்பகிர்வு அருமை.
இடிமுழக்க்ம் போலவே பாடல் வரிகளை தீப்பிழம்பான மிகச்சிறந்த படங்களுடன் கொடுத்துள்ளது தனிச்சிறப்பு.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்//
வணக்கம் ஐயா ..
தனிச்சிறப்பான கருத்துரைகள் அளித்து மகிழ்வித்ததற்கு இனிய நன்றிகள் ஐயா..