


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்விதிருக் காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படையோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது.
துவாதசியன்ற மஹாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார்.

அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாக நம்பிக்கை ....

பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து படைக்கலங்களுடன் விசுவரூபத்துடன் தோற்றமளித்து ஆங்காரத்துடன் முரன் அரக்கனை அழித்தாள்.

அரவணையில் துயிலும் அரங்கனின் நாயகியே!
முரன் அரக்கனை அழித்த முகுந்தன் மனம் நாடிட
நீலோற்பவ மலரின விழிமுகத்தாள் நின் நீலவிழிப் பார்வை
எனக்கு சௌபாக்கியத்தை அளிக்கட்டும்







திருமால் மனம் மகிழ்ந்து சக்தியே, அசுரனை அழித்த உனக்கு ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். அரக்கன் முரனை அழித்த இம்மார்கழி மாதத்தில் உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்று கூறினார்.

திருமால் கொடுத்த வரமே ஏகாதசியின் மகிமைக்கு காரணமாயிற்று.
அரக்கனை வென்று சக்தி வெளி வந்த மார்கழி மாதம் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின் சக்திக்கே ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்டது.

தேவர்களும், முனிவர்களும் ஏகாதசியன்று விரதம் இருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும் பெற்றனர்






வைகுந்தவாஸனை வேண்டி இருக்கும் வைகுண்ட ஏகாதசி மகிமையினையும் அரங்கனின் அற்புததோற்றங்களை காட்டும் அழகான படங்களும் மனதுக்கு நிறைந்த பக்திப் பரவச உணர்வினைத் தருகிறது.
ReplyDeleteஸ்ரீரங்க நாதனின் இன்னருள் உங்களுக்கும் கிடைத்திட அவன்தாள் பணிந்து வேண்டுகிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
மிகவும் அருமையான படங்கள். வைகுந்த ஏகாதசிவிழா நேரடியாக கண்டு ஸ்ரீரங்கனை தரிசித்தோம்.
ReplyDeleteஇன்றைய ஏகாதேசி நாளில் எல்லா வளமும் செல்வமும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறேன்
ReplyDeleteஓம் நமோ நாராயணாய
ReplyDeleteஅருமை அம்மா..ஏகாதசியின் பெருமைகளோடு படங்களும் அருமை..தொடருங்கள்.நன்றி.
நல்ல தரிசனம். நன்றி.
ReplyDeleteஅன்பின் இராஜ ராஜேஸ்வரி
ReplyDeleteவைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துக்ள்
இன்று - இத்தனை படங்களுடன் - விளக்கமாக வைகுண்ட ஏகாதசியினைப் பற்றி எழுதிய ப்திவு நன்று. நீண்டதொரு பதிவு - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா
Ungal punniyaththil, niRaiya punniyam enakkum kidaiththathu! romba nanri.
ReplyDelete
ReplyDeleteவழக்கம் படமும் பாடலும் விளக்கமும் கொடுத்துப் பல்லாண்டு பாடிய தாங்கள் பல்லாண்டு வாழ்க!
வைகுண்ட ஏகாதசி அன்றே வைகுண்ட வாசனின் தரிசனமும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.
ReplyDeleteவைகுண்ட வாசனின்
ReplyDeleteதரிசனத்தை தங்கள்
படங்களும் எழுத்தோவியமும்
காட்சிப்படுத்தி பக்திப்
பரசவத்தில் ஆழ்த்தியது.
நன்றி !
ReplyDeleteவைகுண்ட ஏகாதசி பெருமாள் தரிசனம் பல்லாண்டு பாடலுடன் பிரமாதம்.வாழ்த்துக்கள்.
வைகுண்ட ஏகாதசி பற்றி அறிந்தது. மகிழ்ச்சி.
ReplyDeleteமிக்கநன்றி படங்களும் அருமை.
இனிய நத்தார் தின வாழ்த்தும் உரித்தாகுக.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
ரசனை மிக்க படங்கள். மனம் நிறைக்கும் வாழ்த்துகள். இறையின் உலகத்துக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் ராஜராஜேஸ்வரி.மனம் நிறைந்த நன்றிகள்.
ReplyDeleteமகிழ்ச்சி அம்மா.
ReplyDeleteஎங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூரும் உங்கள் பதிவில் வந்திருக்கிற்து.
நன்றி. வாழ்த்துகள்.
wonderful!
ReplyDeleteno words to express
Thanks a lot.
வைகுண்ட ஏகாதஸிக்கான சிறப்பான படங்களும் விளக்கங்களும் அளித்துள்ளீர்கள்.
ReplyDeleteஇந்தப் பதிவென்ற சுவர்க்க வாசல் வழியாக எங்களை சுவர்க்கத்திற்கே அழைத்துச்சென்று விட்டீர்கள்.
சூப்பரான பதிவு. பாராட்டுக்கள்.