

அல்லல் போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல குணமதிகமாம்
அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியைக்
கைதொழுதக் கால்
-‘‘எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை, தீமை போன்றவற்றால் விளையும் வினைகளும் போகும். பிறவி எடுக்கக் காரணமாக உள்ள, அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் இனி இருக்காது. திருவண்ணாமலை எனும் அருணை கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியை தொழுது கும்பிட்டால் போதும்;சகல வினைகளும் தீர்ந்துபோகும். ஞானம் கைமேல் கனியாக வரும்’’
"அதிருங் கழல்பணிந்து னடியேனுன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந்தனிலிருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!
மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் அருமையான திருப்புகழ்ப் பாடல்கள்..

திருவண்ணாமலை கோயிலில் செல்வ கணபதி, சிவகங்கை விநாயகர், ஆனைத் திரை கொண்ட விநாயகர், செந்தூர விநாயகர் எனும் சம்பந்த விநாயகர், க்ஷேத்ர விநாயகர் என்று ஐந்து முக்கிய விநாயகர் சந்நதிகள் உள்ளன. 
திருவண்ணாமலை தலத்திலுள்ள ஆனைமுகனுக்கு அனுமன் போலவே செந்தூரம் பூசுகிறார்கள்.

சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர்.

அசுரனை அழிக்க விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக் கொண்ட
அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும்.
யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.











திருவண்ணாமலை கோயில் நந்தி

கடலோரம் நின் கரிமுகத்தைக்
ReplyDeleteகாட்டியதும் போதுமோ !
வினாயகனே ! எம் வினை எல்லாம் தீர்ப்பவனே !
விருட்டென எழுந்து எங்கள்
வீடிருக்கும் தெருமுனைக்கு வா !!
சுப்பு ரத்தினம்
வித விதமான வி நாயகர் தரிசனங்கள்
ReplyDeleteநன்றி
ReplyDeleteவிதம் விதமான விநாயகர் படங்கள். இசைநயம் கொண்ட நல்ல தமிழ் பாடல்கள். இலக்கியப் பத்திரிகை போன்று தெளிவான புதியதொரு வடிவில் வலைப் பதிவு. எல்லாமே அருமை.
தாழம்பூ விநாயகர் அழகு! இன்று வினாயகரின் தரிசனத்திற்கு மிக்க நன்றி!
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteஅறியாத தகவலுடன் அழகான புகைப்பட பகிர்வு! மிக்க நன்றி!
ReplyDeleteவிதவிதமான விநாயகர் தரிசனத்தில்
ReplyDeleteமனம் குவிந்தது. மிக்க நன்றி.
அழகான பிள்ளையார் படங்களுடன் அருமையான பதிவு.
ReplyDeleteஎல்லாமே அழகான ஓவியங்கள்! அந்த மண்ணில் வடிக்கும் விநாயகர்கூட எத்தனை அழகு! எத்தனை தத்ரூபம்!!
ReplyDeleteசங்கில,ஓலையில,மணல்ல பிள்ளையார்....அழகாயிருக்கிறார் !
ReplyDeleteவிநாயகர் படங்கள் மிக அருமை....பதிவு போன்று.
ReplyDeleteமிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - பிள்ளையாரின் பல்வேறு வடிவங்களையும் விளக்கங்களையும் அளித்தமை நன்று. பிடிச்சு வச்சா பிள்ளையார் என்பது உண்மைதானோ ? எத்தனை வகைப் பிள்ளையார் ? அட்டா அருமையான் படங்களூடன் கூடிய அருமையான பதிவு - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteஅற்புதமான படங்கள் ஒருங்கிணைப்பு.
ReplyDeleteஉங்கள் திறமை வியப்பளிக்கிறது.
மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
அனைத்து விநாயகர்களும் வழக்கம் போல அசத்தலோ அசத்தல்.
ReplyDeleteநந்தி அலங்காரம் நல்லா இருக்கு.
கடற்கரை மணல் சித்திரம் அழகோ அழகு.
செழிப்பு தரும் செந்தூர விநாயகா !
எனக்கு இப்போ மிகவும் டயர்டு ஆக உள்ளதுப்பா.
நாளைக்கு உன்னை மீண்டும் முடிந்தால் வந்து தரிஸிக்கிறேனப்பா!
மறந்துடாதேப்பா. வரட்டுமா!
Bye Bye!!
திருவையாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தனிச்சிறப்புடைய விநாயக வடிவங்களை கண்டு தரிசியுங்கள்.…. For more information Please visit our blog & Facebook
ReplyDeletehttp://thiruvaiyarushivasewasangh.blogspot.in/ & https://www.facebook.com/thiruvaiyarushivasewa.sangh